குறள் 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி [பொருட்பால், நட்பியல், பகைமாட்சி] பொருள் கல்லான் - கல்வியில்லாதவன்; கற்காதவன்; கல்லாத மூடன் வெகுளும் - வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல் சிறு - சிறிய - ciṟiya சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று. பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும் ஒல்லானை - ஒல்லாதவர் - பகைவர் ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல். ஒல்லாது - பொருந்தாது ; உடன்படாது; தகாது, இயலாது, ஆற்றாது ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்;...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.