குறள் 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
பொருள்
செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல்.
செறு - வயல்; குளம்; பாத்தி; கோபம்
செறுதொழில் - தீச்செயல்.
செறுவார்க்குச் - தீச்செயலை செய்வார்க்கும்
சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.
இக-த்தல் - ika- 12 v. tr. 1. To leap over,jump over; தாண்டுதல் (திவா.) 2. To over-flow, go beyond; கடத்தல் வரம்பிகந்தோடி (கம்பரா. நாட். 9). 3. To transgress, violate, deviatefrom a rule or justice; அதிக்கிரமித்தல். நெறியிகந்து . . . நீரலசெய்யும் (காசிக. சிவசன்மாவாயு. 28).4. To leave behind, go away from; பிரிதல் இகந்துறைவ ரேதிலர் (குறள், 1130). 5. To bear,endure; பொறுத்தல் (பிங்.)--intr. 1. To depart, go away; போதல் (திவா.) 2. To leave,put away, eradicate; நீங்குதல் முனிவிகந் துயர்ந்த(நன். சிறப்புப்.).
இகவா - நீங்காமல்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
இலா - இல்லாத
அஞ்சும் - அஞ்சுதல் - பயப்படுதல்
பகைவர்ப் - காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்எனஆன்மாவின்உட்பகைகளாயுள்ளஆறுகுற்றங்கள்.
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
முழுப்பொருள்
நம்மை அழிக்க வேண்டும் என்ற முனைப்போடும் சினத்தோடும் வரும் பகைவருக்கு வான் உயர மகிழ்ச்சியை தருவது வெற்றியை தருவது எது தெரியுமா? அறிவில்லாமல் / மதியற்று பகைவரை அஞ்சுவோராய் இருத்தலே ஆகும்.
பகைவருக்கு வலிமை /மாட்சி சேர்ப்பது அவரது படைகள் வியூகங்களை விட அவர்களது எதிரிகளின் அறிவற்றத்தனமும் அச்சமும் ஆகும்.
அறிவில்லாத்தனமும் அச்சமும் மாட்சியாகாது. வலிமையை குறைத்துவிடும்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.).
மணக்குடவர் உரை
அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும். அறிவு- காரியவறிவு.
மு.வரதராசனார் உரை
அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா
No comments:
Post a Comment