குறள் 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
பொருள்
பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.
மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு
நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல்.
நீங்கான் - நீங்காதவன் ; விலகாதவன்
வெகுளி - சினம்; வெறுப்பு; கபடமற்றவர்
நிறை - பூர்த்தி; எண்வகைப்பாடற்பயன்களுள்ஒன்று; அடுத்தடுத்துவரும்சுரம்; இரண்டுதாக்குடையதாளவகை; நிறுக்கை; தராசு; துலாராசி; எடை; நூறுபலம்கொணடஅளவு; வரையறை; நிறுத்துகை; வைத்துஅமைக்கை; கற்புவழிநிற்றல்; ஆடூஉக்குணம்நான்கனுள்காப்பனகாத்துக்கடிவனகடியும்திண்மை; மனவடக்கம்; கற்பு; சூளுரை; வலி; அறிவு; மறைபிறரறியாமை; அழிவின்மை; மாட்சிமை; நீதி; மிகுதி; கவனம்; நீர்ச்சால்
இலன் - இல்லை என்று
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
யாங்கணும் - எங்கும்
யார்க்கும் - எல்லோருக்கும் ; எவருக்கும்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.
முழுப்பொருள்
பகைமாட்சி என்றால் பகையின் இயல்பு என்று இங்கு பொருள்கொள்ள வேண்டும். இங்கே திருவள்ளுவர் பகை கொள்வதால் ஏற்படும் விளைவுகளை குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறேன் .
வெகுளி நீங்கான் என்றால் சினம் வெறுப்பு நீங்காதவன் என்று பொருள். நிறை இலன் என்றால் மனவடக்கம் இல்லாதவன் என்று பொருள். (நிறை என்றால் மனவடக்கம் என்ற பொருளும் உண்டு). ஆதலால் வெறுப்பு நீங்காதவனையும் மனவடக்கம் இல்லாதவனையும் வெல்லுதல் பகைவர் உட்பட எவர்க்கும் எப்பொழுதும் மிக சுலபமான எளிமையான செயல்.
சினத்துடன் இருப்பவர்கள் சரியான மனநிலையில் இருக்க மாட்டார்கள். சினத்துடன் இருக்கும் பொழுது தீர்க்கமாக யோசிக்கமுடியாது. அப்பொழுது தவறான சிந்தனைகள் வரும். தவறான சிந்தனைகள் தவறான முடிவுகளை எடுக்கச்செய்யும். தவறான விளைவுகள் ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவரை வெல்வது எவர்க்கும் எளிது.
மனவடக்கம் இல்லாதவர்கள் நிதானமாக இருக்க மாட்டார்கள். ஆதலால் அவர்களால் நல்ல முடிவுகளை எடுக்கமுடியாது. அது தவறுக்கு வழி வகுக்கும். ஆதலால் அவர்களை வெல்வது மிக எளிது.
இதனால் தான் காந்தி அடிகள் மக்களிடம் வெறுப்பை பகையை வளர்க்காமல் அடக்கத்தை வளர்க்க அஹிம்சை முறையில் மக்களைப் போராடிச் செய்து வெள்ளையரிடம் இருந்து விடுதலை பெற்றுத்தந்தார். வெள்ளையரிடம் வெறுப்பை வளர்த்து இருந்தால் கட்டுக்கடங்காத கலவரங்கள் நாட்டில் நடந்திருக்கும். இதனை காரணம் காட்டி வெள்ளையர்கள் நமக்கு விடுதலை அளித்திருக்கமாட்டார்கள். அதாவது நாம் அடக்கத்துடன் இல்லாமல் சினம் கொண்டு இருந்திருந்தால் நம்மை வெள்ளையர்கள் எளிதாக வென்றிருப்பார்கள். நமக்கு விடுதலையும் கிடைத்திருக்காது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை
வெகுளியின் நின்று நீங்கானாய் நிறையுடைமை இலனாயின் அவனை வெல்லுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் யாவர்க்கும் எளிது. இஃது இவையிரண்டு முடையவ னெல்லார்க்குந் தோற்கு மென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
சாலமன் பாப்பையா உரை
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

No comments:
Post a Comment