துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
குறள் 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின் [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல். துன்னாத் - நம்மை அன்புடன் அணுகாதவர் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தாரை - துறந்தார் - துறந்தவர்கள் நெஞ்சத்து - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு உடையேமா - உடைதல் - கொண்டது, உடைதல், இருக்கும், கொள்வோமாயின் இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும் இழத்தும் - இழ-த்தல் - iḻa- 12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138). கவின் - அழகு முழுப்பொருள் ஏ நெஞ்சமே! நம்மை விரும்பாமல் நம்மை விட்டு பிரிந்து (நம்மை துறந்து) சென்ற தலைவர் நம்மிடம் வந்து இன்னும் சேரவில்லை. நம்மிடம் வந்த அன்பு செலுத்தாமல் கூடாமல் இருக்கிறார். அதனா...