செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

thirukkural meaning விளக்கம் குறள் 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்
குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
செற்றார் - பகைவர்

எனக் - என்று 

கைவிடல் - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல்

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

நெஞ்சே - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

உற்றால் - அன்பு செலுத்தினாலும்

உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம்

உறாஅதவர் - மீளாதவர் 

முழுப்பொருள்
தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். தலைவன் திரும்பி வரவில்லை. ஆதலால் தலைவனுக்கு தலைவி அன்பு இல்லை என்று நினைக்கிறாள். ஆதலால் தன் நெஞ்சிடம் இப்படி கூறுகிறாள்: "ஓ நெஞ்சே! தலைவன் மேல் நான் அன்புசெலுத்தினேன் ஆனால் பிரிந்துசென்ற அவர் இன்னும் மீளவில்லை என்னிடம் வந்து சேரவில்லை. இது அவர் என்மேல் அன்புசெலுத்தவில்லை என்று தானே காட்டுகிறது. என்னை கைவிட்டவரை நாமும் கைவிடுவதே தானே பதிலாக இருக்கும். ஆதலால் நெஞ்சே இப்படிப்பட்டவரை கைவிடும் மனதிடம் உண்டோ உனக்கு? " தனக்கு அம்மனதிடம் இல்லை என்பதை சொல்லாமல் உரைக்கிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. (உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?. உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain