காதல் அவரிலர் ஆகநீ நோவது

thirukkural meaning விளக்கம் காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல் குறள் 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு
குறள் 1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

இலர் -  who are not

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.

நோவது - நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

பேதைமை - உய்த்துணராமை; மடமை

வாழி - வாழ்கஎன்னும்பொருளில்வரும்வியங்கோள்சொல்; ஓர்அசைச்சொல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து இருக்கும் பொழுது தலைவி வருந்தும் தன் நெஞ்சிடம் கூறுகிறாள் : நீ(நாம்) காதலிக்கும் காதலர் (தலைவன்) அவர் உன்னை விரும்பாத பொழுது (உன்னை விட்டு பிரிந்து இருக்கும் பொழுது) நீ மட்டும் நோவது ஏன் ? அவர் இந்த பிரிவினால் வருந்திருந்தால் இந்நேரம் உன்னிடம் வந்து சேர்ந்திருப்பார். ஆனால் அவர் அப்படி வருந்தவில்லை. நெஞ்சே இப்படிப்பட்டவருக்கு நீ மட்டும் வருந்துவது அறிவிலித்தனம். பயனற்று இருந்தாலும் உன் அன்பில் நீ உண்மையாய் இருக்கிறாயே வாழ்க வாழ்க நீ என் நெஞ்சே.

சற்று உண்ணிப்பாக பார்த்தால், காதலி Devil’s advocate ஆக மாறுகிறாள், உன்னைப்பிரிந்து சென்ற தலைவனுகாக நீ ஏங்குகிறாய் நெஞ்சே. இந்நோய்க்கு அவர் தான் காரணம் என்று கூறுகிறாள். ஆனால் அடுத்த நொடி, இந்த இக்காதலை வாழவைக்க நீ அவரை நினைத்துக்கொண்டே இருப்பதே காரணம். ஆதலால் நீ வாழ்க என்றும் கூறுகிறாள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை. ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain