Skip to main content

Posts

Showing posts with the label உறுப்புநலனழிதல்

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

  குறள் 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணின் -  கண்ணின் அளவு சிறிதான பசப்போ - பசப்பு -  பசுமைநிறம்; பாசாங்கு; நிறவேறுபாடு; ஈரப்பற்று; சுகநிலை; வளம் பருவரல் - துன்பம்; பொழுது எய்தின்றே - எய்தல் -  அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல் ஒள் - ஒள்ளொளி - மிகுந்தஒளி; oḷ   adj. bright, பிரகாசமான; 2. good, excellent, நல்ல; 3. beautiful, அழ குள்ள; 4. knowing, அறிவுள்ள. In combination the ன் may change into ட் or ண் see ஒட்பம் ஒண்மை etc. நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செய்தது - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். கண்டு -  காணுதல்...

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

  குறள் 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் முயக்கம் - தழுவுதல்; புணர்ச்சி; சம்பந்தம். இடை - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம் நீட்டல்அளவையுள்ஒன்று; துன்பம் இடையீடு தடுக்கை; தசநாடியுள்ஒன்று; பூமி எடை நூறுபலம்; பொழுது நடுவுநிலை வேறுபாடு துறக்கம் பசு வாக்கு ஏழனுருபு. முயக்கிடைத்  -  தழுவுகையில் ஊடாக தண் - குளிர்ச்சி; அருள். வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய்; சிறியகாலவளவுவகை. போழ - போழ்-தல் - pōl-   4 v. intr. [K. pōḻ.] 1.To be cleft, split; to gape; பிளவுபடுதல். (திவ்.இயற். திருவிருத். 87.) 2. To be disunited; பிரிவுபடுதல். (W.)--tr. 1. To split, cleave open;பிளத்தல். கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப(பதிற்றுப். 19, 2). 2. To pass through, crossover; ஊடுருவிச் செல்லுதல். கடற்குட்டம் போழ்வர்கலவர் (நான்மணி. 18). 3. To dispel; to destroy;அழித்தல். நீடிருள் போழு நிலைமைத்து (சீவக. 211...

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

  குறள் 1237 பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத்தம்; படுக்கைநிலை; விழுகை; தூக்கம்; சாவு; கேடு; குறைவு; பூசுகை; மறைவு; நீசராசி; இடம்; பக்கம்; அருகு; ஏழாம்வேற்றுமையுருபு. பெறுதியோ - பெறுதி -peṟuti   n. பெறு-. 1. Gain,profit; இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி.25, 115). 2. That which is sought to be got orreached; goal; அடையத்தகும் பொருள். மறைகளினிறுதி யறுதியிடவரிய பெறுதியை (திருப்பு. 928). 3.See பெறுமதி. பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல் நெஞ்சே - நெஞ்சு -  மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு கொடிய - koṭiya   pollaata பொல்லாத harmful, cruel   கொடியார்க்கு -  கொடியார்  - கொடுமையானவர் ; பொல்லாதவர்  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்...

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்

குறள் 1236 தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் தொடி - வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். தொடியொடு - கைவளையல்களுடன்  தோள் - புயம்; கை; தொளை. நெகிழ - நெகிழ்தல் - குழைதல்; மெலிதல்; பொசிதல்; பொடியாதல்; மலர்தல்; இளகல்; கட்டுத்தளர்தல்; மனமிரங்குதல்; நிலைகுலைதல்; நழுவல்; விட்டுநீங்குதல். நோவல் - நோவு - நோய்; துன்பம்; மகப்பேற்றுவலி; வலி; இரக்கம். அவரை - அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். கொடிது  - கொடியது. தீங்கு விளைவிப்பது. கொடியர் - கொடுமை விளைவிப்பவர். கொடுமையானவர்  எனக் -  என -   என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. கூறல் - கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல். நொந்து - நொந்துதல் - அழிதல்; தூண்டுதல். முழுப்பொருள் பிரிந்து சென்றுள்ளான் தலைவன். அப்பொழுது பிரிவு தந்த காமநோயால் தலைவியின் தோள்கள் மெலிந்து அவள் பூண்டிருந்த தோள்வளையல்கள் கழன்று கீழே விழுந்துவிட்டன. வளையகள் அல்லாத மெலிந்த பொலி...

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

குறள் 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் கொடிய -  koṭiya   pollaata பொல்லாத harmful, cruel   கொடியார் - கொடுமையானவர் ; பொல்லாதவர்  கொடுமை  -  கடுமை; முருட்டுத்தன்மை; தீமை; வளைவு; மனக்கோடடம்; அநீதி; பாவம்; வேண்டாதசொல். உரைக்கும் -   உரைத்தல் -  ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் தொடி -  வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். தொடியொடு - கைவளையல்களுடன்  தொல் - பழைய; இயற்கையான கவின் - அழகு வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல். தோள் - புயம்; கை; தொளை. முழுப்பொருள் தலைவன் தலைவியைவிட்டு வேலை நிமித்தமாகப் பிரிந்துச் சென்றுள்ளான். அப்பிரிவுத் தலைவிக்கு ஆற்றும் துன்பம் எவ்வாறு அவள் உடலையும் வருத்துகிறது என்கின்றது இக்குறள்.  முன்...

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

குறள் 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் பணை - பருமை; பெருமை; மரக்கொம்பு; மூங்கில்; அரசமரம்; மருதநிலம்; வயல்; நீர்நிலை; குதிரையானைகள்தங்குமிடம்; விலங்கின்படுக்கை; முரசு; வாத்தியம்; மருதநிலப்பறை; உயரம்; பரண்; தவறுகை; ஐந்துஆண்டுகொண்டகாலவளவு; சாணைக்கல்; உலைக்களத்துப்பட்டடை; யானைத்தந்தம். நீங்கிப்  - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல். பைந்தொடி - பொன்வளையல்; பெண் சோரும் - சோர்தல் - தளர்தல்; மனம்தளர்தல்; மூர்ச்சித்தல்; நழுவுதல்; கண்ணீர்முதலியனவடிதல்; கசிதல்; கழலுதல்; வாடுதல்; தள்ளாடுதல்; தடுமாறுதல்; இறத்தல்; விட்டொழிதல்; துயரப்படுதல்; உடலின்தைலம்முதலியனஇறங்குதல். துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). நீங்கித் -  நீங்குதல் -  ...

தணந்தமை சால அறிவிப்ப

குறள் 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள் [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் தண-த்தல் - taṇa-   12 v. intr. 1. To depart,go away; நீங்குதல் தங்குதீமல நாளுந் தணந்திடும்(பிரமோத். 10, 38). 2. To go; to pass; போதல் --tr. 1. To put away, remove; நீக்குதல் மெலிவைத்தணப்பான் (தணிகைப்பு. கள 340). 2. To leave,separate from; பிரிதல் தணந்தமை சால வறிவிப்பபோலும் (குறள், 1233). தமை - tamai   n. T. tami. Passion,desire; ஆசை அவனுக்கு அதிகத் தமையிருக்கிறது.  தணந்தமை - அவர் நீங்கியதை சால - மிகவும் அறிவிப்ப - அறிவிக்கை, அறிவிப்பு , விளம்பரம் போலும் - ஓர்அசைச்சொல்; ஐயப்பாட்டைக்குறிக்குஞ்சொல். மண-த்தல் -   maṇa-   12 v. intr. 1. To beunited, mingled; கலத்தல். அறையும் பொறையுமணந்த தலைய (புறநா. 118). 2. To come together;வந்து கூடுதல். நிரை மணந்த காலையே (சீவக. 418).3. To happen; நேர்தல். மருவுற மணந்த நட்பு (கலித்.46). 4. To be fixed, attached; பொருந்துதல்.மத்தகத் தருவியின் மணந...

நயந்தவர் நல்காமை சொல்லுவ

குறள் 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண் [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை. நயந்தவர் - நயந்தோர் -nayantōr   n. id. (பிங்.) 1.Friends, companions; மித்திரர். 2. Husband,as one who loves; கணவர் நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல். ஆமை - கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய் ; மணம் நல்காமை - விரும்பாதவர் சொல்லுவ - colluvāṉ-kuṟippu   n. சொல்¹- +. Speaker's aim or intention;கூறுவோன் கருத்து போலும் - போன்று பசந்து - pacantu   n. U. pasand. 1.Elegance; beauty; attractiveness; fineness;நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2). 2.A superior ki...

முயங்கிய கைகளை ஊக்கப்

குறள் 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். [காமத்துப்பால், கற்பியல், உறுப்புநலனழிதல்] பொருள் முயங்கிய  - முயக்கம் -  muyakkam   n. முயங்கு-. 1.Embrace; தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913). 2. Copulation; புணர்ச்சி.முயக்கம் பெற்றவழி (ஐங்குறு. 93, உரை). 3. Connection; uniting, joining; சம்பந்தம். ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110). கைகளை - கைகள் தனை ஊக்க - ஊக்குதல் - ஆட்டுதல்; நெகிழ்த்துதல்; தப்புதல்; ஆர்வமூட்டுதல்; முயலுதல்; கற்பித்தல்; நினைத்தல்; ஏறுதல்; நோக்குதல். பசந்தது - பசத்தல் - பசுமையாதல்; காமத்தால்மேனிபசலைநிறமாதல்; ஒளிமங்குதல்; மங்கிப்போதல்; பொன்னிறங்கொள்ளுதல். பை - ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ); நிறம்; அழகு; பசுமை; இளமை; உடல்வலி; துணி, தோல்முதலியவற்றால்அமைந்தகொள்கலம்; பாம்புப்படம்; குடல், மூத்திரப்பைமுதலியஉடல்உறுப்பு; நாணயவகை. தொடி -  toṭi   n. தொடு²-. 1. Curve, bend;வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2.Bracelet; கைவளை (பிங்.) குறுந்தொடி கழித்தகைச்...

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

குறள் 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். [காமத்துப்பால், கற்பியல்,  உறுப்புநலனழிதல்] பொருள் சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம் நமக்கு -   நமக்கு ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல். ஒழிய - தவிர;  நீங்க; கெட. ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease'] நமக்கொழியச்  - நமக்குக் கிடையாது சேண் -  அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம். சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். சென்றார் - சென்றவர் சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர் உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல...