110 குறிப்பறிதல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - காமத்துப்பால் இயல் - களவியல் அதிகாரம் - குறிப்பறிதல்
பால் - காமத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் - குறிப்பறிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

குறள் 1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்