குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
[காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல்]
பொருள்
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
நோக்கினாள் - பார்த்தால், கவனித்தாள், விரும்பினாள்
நோக்கி - நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு;
ஓர்உவமவுருபு.
இறைஞ்சுதல் - தாழ்தல்; கவிழ்தல் வளைதல் வணங்குதல்
வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.
வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல்.
நுடங்குதல் - அசைதல்; துவளுதல்; தள்ளாடுதல்; ஆடுதல்; வளைதல்; நுட்பமாதல்; அடங்குதல்; ஈடுபடுதல்; மெலிதல்.
இறைஞ்சினாள் - வணங்கினாள்; சூழ்ந்துக்கொண்டாள், ஆடினாள், மெலிந்தாள்
அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி
அவள் - காதலி; தலைவி; அப்பெண்
யாப்பு - கட்டுகை; கட்டு; செய்யுள்; யாழ்ப்பத்தரிற்குறுக்கேவலிவுறச்செய்யுங்கட்டு; சிறப்புப்பாயிரஇலக்கணம்பதினொன்றனுள்இன்னநூல்கேட்டபின்இன்னதுகேட்கத்தக்கதென்னும்தொடர்பு; அன்பு; உறுதி; சூழ்ச்சி; பொருத்தம்; பாம்பு.
யாப்பினுள் - அன்பினுள்; உறுதியுள்
அட்டுதல் - அழித்தல்; குற்றுதல் இடுதல் அள்ளுதல் எடுத்தல் வடிதல் வடித்தல் சமைத்தல் வார்த்தல் சொரிதல் சுவைத்தல் செலுத்துதல் தானசாசனம்அளித்தல்.
வார்த்தல் - மகப்பால்வார்த்தல் - maka-p-pāl-vārttal n. மகப்பால் +. Giving milk to infants, anact of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;முப்பத்திரண்டறங்களுள் அநாதப்பிள்ளைக்குப் பால்வார்த்தலாகிய தருமம். (பிங்.
அட்டிய - வார்த்தல் - aka-p-pāl-vārttal n. மகப்பால் +. Giving milk to infants, anact of charity, one of muppattiraṇṭaṟam, q.v.;
நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
முழுப்பொருள்
நான் பார்த்த இப்பெண் என்னை பார்த்தாள். அவள் என்னை விரும்பினாள். (வெட்கதினால்) அவள் கண் தாழ்ந்தது (நிலத்தை நோக்கியது). அவள் எனக்கு வணக்கம் சொன்னாள். இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அன்பினை வார்க்கும் நீர் போன்றது. எங்கள் அன்பு வளர்ந்தது.
இறைஞ்சுதல் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. அவற்றுள் 1) வணங்குதல் என்ற சொல்லில் நுடங்குதல் என்ற பொருளை எடுத்துக்கொண்டால், அதற்கு ஈடுபடுதல் என்ற பொருளும், மெலிதல் என்ற பொருளும் அடங்கும். இறைஞ்சினாள் - பெண்னை மட்டும் குறிக்கும் சொல் என்பதால், மெலிதல் என்று எடுத்துக்கொள்ளலாம். அப்படி ஆனால் அந்த பெண் காதலினால் மெலிந்தாள்; மெலிதல் என்பது குறிப்புணர்த்துகிறது இங்கே. சற்று யோசித்துப்பார்த்தால், நம்மை நினைத்து ஒரு பெண் மெலிகிறாள் என்றால் அப்பெண்ணுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்று தான் பொருளாக நாம் கொள்வோம். அது அவள் மீது நம்மிடம் இருக்கும் அன்பை வளர்கிறது. ஆக இங்கே இறைஞ்சினாள் என்ற சொல்லுக்கு அன்பினால் வாடி மெலிந்தாள் என்று பொருட்கொண்டால் தகும். 2) வணங்குதல் என்ற சொல்லில் சூழ்ந்துக்கொள்ளுதல் என்ற பொருளை எடுத்துக்கொண்டால், அப்பெண் என்னை (அல்லது பெண்ணின் மனம்) சூழ்ந்துக்கொண்டாள் என்று பொருளாகும். அல்லது அவள் கண்கள் என்னை சூழ்ந்துக்கொண்டது என்ற பொருளும் தகும். அவள் பார்வையினாலேயே என்னை சூழ்ந்து அவளுடைய காதலை என்னிடம் வெளிப்படுத்தினாள்.
ஆக இக்குறளுக்கு என்னுள் தோன்றிய இருப்பொருள்களை கீழ்வருமாறு காணலாம்.
1) இப்பெண் என்னை விரும்பிப் பார்த்தால். பார்த்தப்பின்பு அவளுக்கு என்மீது கொண்ட அன்பினால் அவள் வாடினாள், மெலிந்தாள்; இவளுடைய மெலிதல் இவள் காதலை எனக்கு குறிப்புணர்த்தியது. (நானும் இவளை காதலித்ததால்) இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை வார்க்கும் (வளர்க்கும். தாய் பால் கொடுக்கும் செயல் எப்படி அன்பை வளர்க்கிறதோ) நீராக ஆயிற்று.
2) இப்பெண் என்னை விரும்பிப் பார்த்தால். பார்த்தப்பின்பு அவளுக்கு என்மீது கொண்ட அன்பினால் அவள் பார்வையே என்னை சூழ்ந்துக்கொண்டது. அப்படி இருந்தது அவளுடைய பார்வை. அவளுடைய காதலை என்னிடம் கண்களால் குறிப்புணர்த்தினாள். (நானும் இவளை காதலித்ததால்) இச்செயல் எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பினை வார்க்கும் (வளர்க்கும். தாய் பால் கொடுக்கும் செயல் எப்படி அன்பை வளர்க்கிறதோ) நீராக ஆயிற்று.
அன்பு மிகுந்து காதல்கொண்டோம்.
ஒப்புமை
“வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று” (குறள் 718)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.).
மணக்குடவர் உரை
முற்பட நோக்கினாள், நோக்கினபின்பு நாணினாள். அஃது அவள் நட்புப்பயிர் வளர அதன்கண் வார்த்த நீர். தலைமகள் நாண் போகாமைக்குக் காரணங் கூறியவாறாம்.
மு.வரதராசனார் உரை
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
சாலமன் பாப்பையா உரை
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
No comments:
Post a Comment