Tuesday, July 14, 2020

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்
[அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை]

பொருள்
களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

கார் - கருமை; கரியது; மேகம்; மழை; நீர்; கார்ப்பருவம்; கார்நெல்; கருங்குரங்கு; வெள்ளாடு; ஆண்மயிர்; கருங்குட்டம்; இருள்; அறிவுமயக்கம்; ஆறாச்சினம்; பசுமை; அழகு; செவ்வி; எலி; கொழு.

அறிவு - ஞானம்; புத்தி; பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி; ஆன்மா, ஆடூஉக்குணம், உணர்வு, கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு., புரிந்து கொள்ளுதல்.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை 

அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

புரிந்தார் - புரிதல் - விரும்புதல்; தியானித்தல்; செய்தல்; படைத்தல்; ஈனுதல்; கொடுத்தல்; நுகர்தல்; உற்றுப்பார்த்தல்; விசாரணைசெய்தல்; சொல்லுதல்; நடத்துதல்; மேற்கொள்ளுதல்; முறுக்குக்கொள்ளுதல்; திரும்புதல்; மிகுதல்; அசைதல்; விளங்குதல்; பொருள்விளங்குதல்.

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.


முழுப்பொருள்
அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஒளி அறிவு. இரண்டு இருண்ட அறிவு. இருண்ட அறிவு உண்மை அறிவை மறைக்கும் தன்மை வாய்ந்தது. அதனால் தான் கற்க கசடற என்று கூறினார் திருவள்ளுவர்.

அளவு எனில் ஞானம். ஆற்றல் எனில் சக்தி, முயற்சி, வாய்மை, அறிவு, ஆண்மை. 

அளவு அறிந்து (அதாவது எது ஞானம், எது இயற்கையான தன்மை என்று அறிந்து) அதற்கு ஏற்ப தன் அறிவை ஆற்றலைப் பயன்படுத்தி வாழ்வை நேர்மையாக வாழ்வை நடத்துபவர் (வாழ்கின்றவர்) களவு என்னும் இருண்ட அறிவை தன்னிடம் வைத்துக்கொள்ள மாட்டார். இருண்ட அறிவே இல்லாததால் அவர் பிறரின் பொருளை களவு செய்யமாட்டார். 

எண்ணங்களே செயலை தூண்டுகின்றன. தீய எண்ணங்கள் இல்லையேல் தீய செயல்கள் இல்லை. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“களவின் ஆகிய காரறிவு” (சூளா)

பரிமேலழகர் உரை
களவு என்னும் கார் அறிவு ஆண்மை - களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் - உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் - மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் 'களவென்னும் கார் அறிவு ஆண்மை' என்றும், காரணத்தைக் காரியமாக்கி 'அளவு என்னும் ஆற்றல்' என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை. இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

மு.வரதராசனார் உரை
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அளவறிந்து வாழ்பவன் களவாட மாட்டான்.

Monday, July 13, 2020

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

குறள் 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மழித்தலும் - மழித்தல் - மொட்டையடித்துக் கொள்ளுதல்.

நீட்டலும் - நீட்டல் - நீட்டுதல்; குற்றுயிரைநெட்டுயிராகஇசைக்கும்செய்யுள்விகாரவகை; காண்க:நீட்டலளவு(வை); சடையைநீட்டிவளர்த்தல்; பெருங்கொடை.

வேண்டா -வேண்டாம் - vēṇṭām   veeNTaam வேண்டாம் do not want; should not 

உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

பழித்தது - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல்.

ஒழித்து - ஒழித்தல் - நீக்குதல்; முடித்தல்; அழித்தல்; ஒதுக்குதல்; குறைத்தல்; தவிர்த்தல்; தீர்த்தல்; கொல்லுதல்; காலிசெய்தல்

விடின் - விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

முழுப்பொருள்
உலகம் எனப்படும் உயர்ந்தோர் தீது மாசு என ஒதுக்கியவற்றை பழித்தவற்றை முற்றாக துறந்து /ஒழித்துவிட்டவருக்கு குறியிடுகளான மயிரை மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

ஏனெனில் மழித்தலும் நீட்டலும் துறவுக்கான குறியீடுகள்தானே தவிர இக்குறியீடுகளை செய்வதனால் துறவியாகிவிட முடியாது. ஆனால் முற்றாக துறந்தவனுக்கு குறியீடுகள் தேவையில்லை.

ஆதலால் ஒருவர் துறவிகளைப்போல் தாடியை வளர்த்துக்கொள்ளுதலும், ருத்ராட்சர மாலை அணிந்துக்கொள்ளுதலும், ஹரி நாமம் தரித்துக்கொள்ளுதலும், விபூதி பட்டை அடித்துக்கொள்ளுதலும், காவி உடை உடுத்திக்கொள்ளுதலும் அவரை துறவியாக்கிவிடாது. அவர் அகத்தே எல்லா கீழ்மைகளையும் விட்டு எரிந்தால் மட்டுமே அவர் துறவி.

ஆதலால் மழித்தலும் நீட்டலும் வேண்டா.

மேலும்அக்கால வழக்கில் இருந்த சமண, பௌத்தத் துறவிகள் தங்கள் சிகையை முழுவதுமாக் எடுத்து முண்டனம் செய்ததையும், சநாதன மதத்தைச் சேர்ந்த துறவிகள் சடை வளர்த்து, முகத்தில் மீசை, தாடி இவற்றை எடுக்காமலே இருந்ததைக் குறித்து, அவ்வாறு முழுக்க மழிப்பதும், நீண்டு வளர்ப்பதும் தேவையில்லை என்கிறார் வள்ளுவர்.

இந்தத் திருக்குறளை அன்றாட விஷயங்களில் தொடர்புபடுத்துக்கொள்ளலாம் 
1. நான் சிறுவனாக இருந்தபொழுது இனிமேல் நான் நல்ல பயன் ஆகப்போகிறேன் என்று வேலைக்கு குளித்து விபூதி வைத்துக்கொண்டு நல்ல உடைகளை உடுத்துவத்து என்னை மாற்றிவிடும் என்று. காலப்போக்கில் இது அல்ல மாற்றம் என்று உணர்ந்துக்கொண்டேன். அகமாற்றமே உண்மையான மாற்றம். 

2. சபரிமலை 


சபரிமலைக்கு விரதம் இருக்கிறேன் என்று இன்று பல கோடிப்பேர் இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையாக விரதம் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று அந்த ஐயப்பனுக்கு மட்டும் தான் தெரியும். ஏனெனில் இன்றைய காலகட்டங்களில் காலையிலும் மாலையிலும் குளித்து கோவிலுக்கு சென்றுவிட்டு சைவ உணவை மட்டும் உண்டுவிட்டு காலுக்கு செருப்பு போடாமல் நடந்துவிட்டு விரதம் இருந்துவிட்டேன் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இவர்களில் பலரின் தன்மையில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர்களின் கோபம், ஆசை, வஞ்சம், காமம் ஆகியவற்றில் மாற்றங்களே இருக்காது. பணிவும் இருக்காது. மாலைப்போட்டுக்கொண்டு ஆபாச கவர்ச்சி பாடலையும் அவற்றைக்கொண்ட சினிமாக்களை தியேட்டர்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்ப்பது இன்று வாடிக்கையாகிவிட்டது. மனதில் மாசு ஆற்று அவற்றை ஒழித்து இறைவன் ஐயப்பனை மட்டும் நினைத்து விரதம் இருப்போர் மிக குறைவு. 

கீ.வா.ஜ. சீவகசிந்தாமணியில்(1427) இதே கருத்து சொல்லப்படுவதைச் சுட்டுகிறார்.(வீடு வேண்டி விழுச்சடை நீட்டல்.. இன்னவை பீடிலா பிறவிக்கு வித்து என்பவே)

அப்படியெனில் துறவிகள் என் மொட்டையடித்துக்கொண்டு பின்பு மயிரை நீட்டிவளர்க்கிறார்கள்? (சிலர் கிண்டலாக வளரும் மயிரை வெட்டிக்கொள்கிறார்கள் ஆனால் கையை வெட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவர்)
ஏனெனில் துறவறத்தில் தீட்சைபெறும் பொழுது மொட்டையடிப்பது ஒரு குறியீடு. அவ்வளவே. மொட்டையடிப்பதும் நீட்டலும் மட்டுமே துறவு அல்ல. அப்படியெனில் எதற்கு குறியீடு? மாயையும் ஆணவமும் வெட்ட வெட்ட வளரும் தன்மை வாய்ந்தது. மொட்டை அடிப்பது மாயை நீக்குவதற்கான குறியிடு. அதேப்போல் ஆலம் பால் (ஆலமரத்துப்பால்) எடுத்து தலையில் பூசி கட்டிகட்டியாக திரள வைத்துவிடுவார்கள். இது மாயை கட்டுக்குள் வைப்பதற்கான குறியிடு. இவை துறவில் ஒரு முறைமை. ஆனால் முறைமையுடன் நின்றுவிடாதே. ஆதலால் துறவில் தவங்களை ஆற்றி உலகம் பழித்தவற்றை நீக்கி ஆணவத்தை நீக்கி "தன்னுயிர் தான் அற ஒழித்து" நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்ற இறைநிலையை அடையவேண்டும் என்பதை உணர்த்தவே இக்குறியீடு.

லௌகீக வாழ்க்கையில் பார்த்தால் இன்று பலர் வெளிப்புறத்தில் மிடுக்காக ஆடை அணிந்தும் அல்லது எளிமை என்ற பெயரில் சாதாரணமாகவோ ஆடை அணிதும் நறுமண திரவயங்கள் பூசியும், பக்தர்கள் போல் வேடமிட்டும் இருப்பர். ஆனால் அவர்கள் எல்லாம் அப்படி இருப்பதால் நல்லவர்கள் ஆகிவிட முடியாது. அவர்களின் ஒழுக்கதாலேயே அவர் நல்லவரவதும் தீயவராவதும் அடங்கும். 


ஒப்புமை
”வீடு வேண்டி விழுச்சடை நீட்டல் ... இன்னவை
பீடி லாப்பிற் விக்குவித்து என்பவே” (சீவக.1427)

மேலும்: அஷோக் உரை

ஆனால் ஏன் நீங்கள் துறந்துசெல்லமுடியாது என்கிறேன்? பிதாமகரே, வாழ்தல் இயல்பானது. அதற்கு எந்தத் தூண்டுதலும் தேவையில்லை. உயிர்களுக்குள் வாழ்வதற்குரிய ஆணையை பிரம்மன் பொறித்திருக்கிறான். துறத்தல் மானுடர் தேர்வது. அதற்கு அவர்களுக்குள் இருந்து ஆணை எழவேண்டும். அதற்குரிய பயன் என்னவென்று உள்ளம் தெள்ளிதின் அறியவேண்டும்.

“நான் துறப்பதனால் பயன்நிகழாதென்று எண்ணுகிறீரா?” என்று சற்று அடைத்ததுபோல் ஒலித்த குரலில் பீஷ்மர் கேட்டார். “ஆம்” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று பீஷ்மர் கேட்டார். “ஏனென்றால் இங்கு நிறைந்து அங்கு செல்பவர் அல்ல நீங்கள். இங்கு நிகழ்ந்து முடிந்தவரும் அல்ல.” பீஷ்மர் சீற்றத்துடன் “இல்லை, இதை நானே அறிவேன். நான் காடுகளில் ஒருகணம்கூட அஸ்தினபுரியையோ என் குடிகளையோ எண்ணாமல் பல்லாண்டுகாலம் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், அங்கெல்லாம் உங்கள் உள்ளத்திற்குகந்த அஸ்தினபுரி ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

பீஷ்மர் “இது அனைத்துமறிந்ததுபோல் பேசும் வீண்மொழி. அஸ்தினபுரியில் நான் மிகவிரும்பியது என் படைக்கலச்சாலையை. காட்டில் அதற்கிணையாக எதை உருவாக்கினேன்?” என்றார். இளைய யாதவர் “காங்கேயரே, அது நீங்கள் அஸ்தினபுரியில் உருவாக்கிய காடு. காட்டில் நீங்கள் அரசவையை உருவாக்கவில்லை என்று சொல்லமுடியுமா?” என்றார். பீஷ்மர் சிலகணங்கள் இமைக்காமல் நோக்கிவிட்டு விழிதாழ்த்திக்கொண்டார். இளைய யாதவர் “நீங்கள் துறந்து செல்ல இயலும், பிதாமகரே. ஆனால் தொடங்கிய புள்ளிக்கே மீளச்சுழன்று வந்துகொண்டிருப்பீர்கள். பெரும்பயனின்மையே அது” என்றார்.


பரிமேலழகர் உரை
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின். இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

சாலமன் பாப்பையா உரை
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வேஷம் போடாமல், நன்மை செய்து வாழ்க.

English Meaning - As I taught a kid - Rajesh
Don't stop with just shaving and growing your hair (i.e., changes in external appearance). Get rid of the bad qualities, distractions, desires that this world has rejected. Because shaving and growing hair are just a symbolism in the first step of taking a monk journey towards moksha. Shaving and growing mean that ego keeps growing like hair when we cut it. Hence, a paste is applied to control it. Similarly one must always control his sense. Changes in external appearance (be it personal grooming, or house keep/organization) alone doesn't yield any result. Only internal changes purify us and yield results

Questions that I ask to the kid
What does shaving and growing hair signify? 
Change normally starts with external appearance changes. Do you agree that it is sufficient? If not why? Why an external appearance change is also necessary? 

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
மனம் - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு

மனத்ததுமனம் அது

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல்.

மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

ஆடி - கூத்தாடுபவன்; கண்ணாடி பளிங்கு நான்காம்மாதம்; உத்தராடநாள்பகலில்பன்னிரண்டுநாழிகைக்குமேல்இரண்டுநாழிகைகொண்டமுகூர்த்தம்; நாரை ஆணிவகை.

ஆடுதல் - அசைதல்; கூத்தாடுதல் விளையாடுதல் நீராடுதல் பொருதல் சஞ்சரித்தல் முயலுதல் பிறத்தல் சொல்லுதல் செய்தல் அனுபவித்தல் புணர்தல் பூசுதல் அளைதல் தடுமாறுதல் எந்திரமுதலியவற்றில்அரைபடுதல்; விழுதல் செருக்குதல்

மறைந்து - மறைதல் - ஒளிந்துகொள்ளுதல்; தோன்றாமற்போதல்.

ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

மாந்தர்  -  மனிதர்; ஆடவர்; ஊர்காவலர்.

பலர் - அநேகர்; சபை

முழுப்பொருள்
மாட்சிமை பொருந்திய துறவிகள் அகத்தே தூய்மையாக இருப்பவர்கள். அவர்கள் அகத்தூய்மைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை புறத்தூய்மைக்கும் கொடுத்தார்கள். ஆனால் மெய்யான துறவிகளின் புறத்தூய்மையை மட்டும் கண்களால் பார்த்து சிலர் வேளாவேளைக்கு நீராடி புறத்தே தூய்மைப்படுத்திக்கொண்டு அகத்தே தூய்மைப்படுத்துக்கொள்ளமால் இருப்பர். மேலும் தியானம்/ஊழ்கம் போன்றவற்றை ஒரு சடங்காக செய்து அகத்தே ஒரு மேன்மையையும் அடையாதவர்கள். 

இத்தகையோர் அகம் மாசுகளால் நிரம்பியிருக்கும். மாசு எனில் காம வெகுளி மயக்கங்கள். அகத்தே இருட்டுடையோர் எப்படி ஒளி வீசும் துறவியாக முடியும்? இத்தகைய அகத்தே மாசு கொண்டு புறத்தே தூய்மையாக இருந்து உத்தமர்ப்போல் காட்டிக்கொள்ளும் மாந்தர்கள்/மனிதர்கள் இவ்வுலகில் (சிலர் அல்ல) பலர் உள்ளனர். அத்தகையர்களிடம் எச்சரிக்கை வேண்டும். அதுப்போல பொய்யான வேடங்களை நாம் தரிக்கவும் கூடாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.

மு.வரதராசனார் உரை
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

சாலமன் பாப்பையா உரை
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
குப்பை மனத்தார் குளித்துப் பயனில்லை.

மனம் பற்றி
மனம், மனம், மனம். மனத்தைப் பற்றிக் கூறாத மனம் இல்லை. மனத்தின் பரிமாணங்களை இலக்கிய யோக ஞான தத்துவங்கள் எடுத்துரைக்கின்றன. 

மனத்தை அறிந்தவன் பேரறிஞன். மனத்தை அடக்கியவன் மகா ஞானி. மனித வாழ்க்கையின் தோற்றமும் முடிவும் மனத்தினால் உண்டாகும். 

மனம் என்பது, பழைமையான கலைவடிவம். மனம் அவரவர் எண்ணங்களின் தொகுப்பு. எண்ணங்கள் இருந்தால் மனம் இருக்கும். எண்ணங்கள் இல்லாவிட்டால் மனம் இருக்காது. அணுக்களின் தொகுப்பு பொருளாகிறது. அணுக்கள் தனித்தனியே பிரிந்தால் பொருளாவதில்லை. பொருளாகும் அணுக்கள் தனித்தனியே பிரிந்தால் பொருளாவதில்லை. 

பொருளாகும் அணுக்கள் அனைத்தும் ஒரே வகையான அணுக்களாக இருப்பதில்லை. அவற்றுள் பல வகை. அதே போல், மனத்தில் தொகுக்கப்படுகின்ற எண்ணங்கள் ஒரே வகையான எண்ணமாக இருப்பதில்லை. அவை பலவகை. மனதின் தொகுப்பான எண்ணங்களில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்பம், துன்பம், ஈகை, இழிவு, பகை, பாசம், பற்று, காதல், அன்பு, கல்வி, கேள்வி, அச்சம், துணிவு, ஆக்கம், கேடு, ஆணவம், அடக்கம், பரிவு போன்ற எல்லாம் அடங்கும். 

எல்லோர் மனமும் ஒரே வகையான எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை. 
நல்ல எண்ணங்களைத் தொகுத்த மனம், நல்லவனாகிறது. 

தீய எண்ணங்களைத் தொகுத்த மனம், தீயனாகிறது. 

கலை சார்ந்த எண்ணங்களைத் தொகுத்த மனம், கலைஞனாகிறது.

அறிவு சார்ந்த எண்ணங்களைத் தொகுத்த மனம், அறிஞனாகிறது. 

மனம் தனது எண்ணம்போல் செயல்படத் தொடங்கினால், மனித வாழ்க்கை நிலைகொள்ளாது தடம் மாறிப் போய்விடும். 

மனம் தனது எண்ணம்போல் செயல்படுவதை கட்டுப்படுத்திக்கொண்டு வரவேண்டும். தீய எண்ணங்களைச் சிந்திக்கும் மனத்தை அடக்கி வைக்க வேண்டும். அடக்காத மனம் அலைந்து திரியும்.

தீய எண்ணங்களின் அளவு அதிகமாக அதிகமாக அவை மனதைப் பாதிக்கத் தொடங்கும். மனம் பாதித்தால் வாழ்க்கை பாதிக்கும். 

மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களினால் ஞானிகளும் அறிஞர்களும் பாதிப்படைவதில்லை. சராசரி நிலையிலுள்ள பாமரன் பாதிக்கப்படுகிறான். 

ஞானிகளின் மனத்தின் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஞானிகளின் ஏவலைக் கேட்டே அவர்களின் மனமும் இயங்கும். 

பாமரனின் மனத்தின் இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல், மனத்தின் ஆதிக்கம் அதிகமாகி, அவர்களின் தோளின் மீது அமர்ந்துகொண்டு, அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். 

உதாரணமாக, ஒரு பொருளின் மீது அளவற்ற ஆசையை ஏற்படுத்துகின்ற மனம், அப்பொருளை அதிக விலை கொடுத்தாவது வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அப்படி தூண்டச் செய்கின்ற மனம், அப்பொருளை வாங்கிய பின்பு அமைதியாவதில்லை. அப்பொருளை ஒவ்வொரு நிமிடமும் பார்த்துப் பார்த்து புதிய புதிய எண்ணங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. மனம் உருவாக்கும் புதிய எண்ணங்களினால் பாமரன் அலைக்கழிக்கப்படுகிறான். 

இவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாத மனம் மனிதனை புதிய புதிய எண்ணங்களினால் ஆட்சி செய்வதுடன் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. 

மனிதனுக்கு இருக்கின்ற தேவைகளைப் போல, மனத்துக்கும் சில தேவைகள் இருக்கின்றன. 

மனம், தான் நன்றாக இருக்க வேண்டும். தான் எண்ணுகின்ற எண்ணத்தை மற்ற எல்லோரும் கேட்டு நடக்க வேண்டும் என்று விரும்பும். ஒன்று வேண்டும் என்று எண்ணிய அடுத்த நிமிடத்தில் ஒன்று வேண்டாம்! இரண்டு வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

மனத்தை மனிதன் நேசிக்க வேண்டுமென்று, புதிது புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள அலைந்து திரியும். தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ள விரும்பி, பாராட்டுகளைத் தேடும். நான், நான், நான், என்று எப்போதும் சொல்லிக்கொள்ளும். 

பிற மனத்தைத் தன் வயப்படுத்துவதற்காக, அம்மனத்தில் அன்பு விதையை முளையிடச் செய்யும். அன்பு கிடைக்காத மனத்திடமே அன்பைப் பிச்சையாகக் கேட்கும். 

ஒரு காட்சியைக் கண்டவுடன் அதன் தன்மைகளைப் படம் பிடிக்கும். அதைப் பற்றிய கருத்துகளை வருணனை கூறுவது போல எண்ணங்களை அடுக்கிக் கொண்டேயிருக்கும். 

ஒருவரைச் சந்திக்க வேண்டிய நேரம் வருகின்ற போது, அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகும். எவ்வகையிலாவது, அவரைச் சந்திக்காதவாறு சிக்கல்களை உருவாக்கும். அதையும் மீறி சந்திக்க நேர்ந்தால் அவருடன் இணங்காத செயல்களை உருவாக்கும், இணங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிலை தடுமாறுவதுபோல பாசாங்கு செய்யும்.

மனத்தின் இத்தகைய செயல்களுக்கெல்லாம் காரணம் எண்ணவெனில், தன்னைப் பற்றியே மனத்துக்கு ஏற்படும் தவறான எண்ணந்தான். 

மனிதன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று எண்ணும் மனம், மனிதனுக்குக் கட்டுப்படவேண்டும் என எண்ணுவதில்லை. 

மனிதன் தன்னை கைவிட்டு விடுவானோ என்று எண்ணும் அச்சம் மனத்துக்குள் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். இந்த அச்சத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. மனிதனிடம் அகமனம், புறமனம் என இரண்டு மனங்கள் இருக்கின்றன. புறமனத்தின் செயல்களையே இதுவரை கூறிவந்தோம். புற மனத்தின் சேட்டைகளைப் புரிந்து கொள்ளும் வரை, மனித வாழ்க்கையில் இன்பம் என்பது நிலையில்லாமல் இருந்து கொண்டிருக்கும். 

புற மனத்தை அடக்க நினைக்கும்போது, அதுவிசுவரூபம் எடுக்கும். தன்னை அடக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கும், ஒடுக்கும். அதையும் மீறி அடக்க முயன்றால், ஒடுங்கும். 

புறமனம் ஒடுங்கும் வரை அக மனம் வெளியே வராது. 

புறமனத்தின் செயல்கள் எதுவும் அகமனத்தின் பதிவுகளில் இருக்காது.

அகமனம், ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் கொண்டது. உயர்ந்த எண்ணமும், நன்மையும் மட்டுமே செய்யவேண்டும் என்று நினைக்கத்தூண்டக்கூடியது. 

அகமனம் விழித்துக் கொண்ட பின்பு, புற மனத்தின் செயல்கள் எல்லாம் மறைந்துவிடும். அகமனத்தை எழுப்பிவிட்டவர்கள் சான்றோர் வரிசையில் உயர்ந்த புகழைப் பெற்றவர்களாக இருப்பார்கள். 

எவர் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர், அக மனத்தை எழுப்ப முயற்சி செய்ய வேண்டும்.

புற மனத்தின் ஆட்டம் அடங்கும் வரை அகமனத்தை எழுப்ப எடுக்கும் முயற்சியைத் தளர்த்தக் கூடாது. 

அக மனத்தின் விழிப்புக்கு ஒரே வழி, சூழ்நிலை தியானந்தான். 

சூழ்நிலை தியானத்தை நாள்தோறும் செய்யச்செய்ய புறமனத்தின் வீறு குறைந்து கொண்டே வரும். இறுதியில் புறமனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

புறமனம் மறையத் தொடங்கியவுடன், அகமனம் விழித்தெழும்.

அகமன விழிப்புக்குப்பின், ஆனந்தம் நிலைபெறும். மனிதன் தன் தேவைகளை, ஆசைகளை விருப்பங்களை அதனிடம் கூறினால், அது அவற்றை நிறைவேற்றவைக்கும். மனிதனின் தேவைக்கு சேவை செய்யும்.

English Meaning - As I taught a kid - Rajesh
Great sages are internally pure in their thoughts, conscience, behavior etc. They gave importance to internal purity as much as they gave importance to external purity. However, some sages saw only the external purity and took bath every day to cleanse them. And they did meditation as a ritual only. This external purity and and ritualistic meditation didn't yield results because internally they did cleanse their thoughts and get better. Hence, one has to remove Kaamam/Desires, Veguli/Anger, Mayakkam/Distractions in their mind/thoughts/heart. Only by removing darkness in the heart, one can shine and emit light.

Questions that I ask to the kid
Many people who took bath and were clean were not successful. Why?

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து
[அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம்]

பொருள்
புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்; puṟam   s. the side of a thing, பக்கம்; 2. the outside, வெளி; 3. the back, முதுகு; 4. back-biting, புறணி; 5. a tract or part of a country, இடம்; 6. side, party, பட்சம்; 7. a surrounding wall or fortification, சுற்றுமதில்; 8. a form of the 7th case, ஏழனுருபு; 9. valour, bravery, வீரம்.

குன்றி - குன்றிக்கொடி; குன்றிமணி; மனோசிலை

குன்றிமணி - சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி

கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
அனையரேனும்  

அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

குன்றி - குன்றிக்கொடி; குன்றிமணி; மனோசிலை

மூக்கில்  - நாசி; பறவையலகு; யானைத்துதிக்கை; பாண்டத்தின்வாயிலுள்ளமூக்குப்போன்றஉறுப்பு; வண்டிப்பாரின்தலைப்பகுதி; முளைதோன்றும்வித்தின்முனை; இலைக்காம்பு; குறுநொய்; முரட்டுப்பேச்சு.

கரியார் - கருநிறம்உடையார்; கீழ்மக்கள்; சான்றுகூறுவோர்.

உடைத்து - உடைதல், இருக்கும், உண்டு

முழுப்பொருள்

குன்றிமணி
குன்றிமணி


குன்றிமணி என்றென்பது சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை. அதில் எப்படி பெருமளவு சிவப்பாகவும் அதன் மூக்கில் கருப்பாகவும் உள்ளதோ அதுப்போல வெளித்தோற்றத்தில் நல்லவராகவும் துறவு பூணுகின்றவர் போலும் உள்ளே (அகத்தில்) கீழ்குணங்களை கொண்டோராகவும் சில கீழ்மக்கள் இருக்கின்றனர். அவர்களை கீழ்மக்கள் (கரியார்) என்றே திருவள்ளுவர் கூறுகிறார். அவர்கள் தவம் ஆற்றும் துறவிகள் அல்ல. 

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன 
1. ஒருவர் புறத்தே மாற்றங்களை கொள்ளுவதில் அர்த்தம் இல்லை. அகத்தே மாற்றம் நடந்தால் தான் அது மெய்யான மாற்றம் 
2. இக்குன்றிமணி போல் கருமை அதாவது கீழ்க்குணம் கொண்ட பக்கத்தை பல போலி துறவிகள் கொண்டு உள்ளனர். எச்சரிக்ககையாக இருக்க வேண்டும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மந்தரை யுரையெனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது” (கம்ப.தைலமாட்டு 5)

“மைக்கரு மனத்தொரு வஞ்சன்” (கம்ப.கரன் 124)

பரிமேலழகர் உரை
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம் கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு இருப்பாரை உடைத்து உலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மை கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும் அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின் இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும் அது.).

மணக்குடவர் உரை
புறத்தே குன்றி நிறம்போன்ற தூய வேடத்தாராயிருப்பினும், அகத்தே குன்றி மூக்குப் போலக் கரியராயிருப்பாரை உடைத்து இவ்வுலகம். இஃது அறிஞர் தவத்தவரை வடிவு கண்டு நேர்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.

சாலமன் பாப்பையா உரை
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஒளிரும் முகமும் இருண்ட மனமும் உடையோர் பலருண்டு.

Sunday, July 12, 2020

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இலர் -  இல்லை ;  who are not

பலர் - அநேகர்; சபை.

ஆகிய - ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு  

காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று

நோற்பார் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48).

சிலர் - சிலபேர்

நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை.

நோலாதார் - தவம் செய்யாதவர்கள்  

பலர் - அநேகர்; சபை.

முழுப்பொருள்
அருளும் பொருளும் இல்லாமல் இருப்பவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனெனில் தவம் செய்வோர் சிலர் தவம் செய்யாதவர்கள் பலராக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் தவம் செய்கிறவன் இம்மையிலும் இன்பத்தை பெறுவான் மறுமையிலும் இன்பத்தை பெறுவான். தவம் செய்யாதவன் இம்மையிலும் இன்பத்தை பெறமாட்டான் மறுமையிலும் இன்பத்தையும் பெறமாட்டான். 

துறவறத்தில் தவம் அதிகாரத்தில் செல்வத்தை /பொருளை பற்றி கூறினாரா? திருவள்ளுவர் அருளை தான் கூறினார் என்றாலும், அது பொருளுக்கும் பொருந்தும். உழைத்தால் தானே ஊதியம். எவர் ஒருவர் தன்னுடைய தொழிலையும் தவம் போல் செய்கிறாரோ அவர் தொழிலில் சிறந்து விளங்குகிறார். அதன் பயனாக புகழையும் பொருளையும் பெறுகிறார். 

இது அறிவுக்கும் பொருந்தும். அறிவாளிகள் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் கற்பதை ஒரு தவமாக செய்யமாட்டார்கள். ஆனால் அறிவாளிகள் சிலராக இருப்பதற்கு காரணம் சிலரே அறிவை தவமாக செய்கிறார்கள் என்பதாகும். 

பொதுவாக சொன்னால் ஒரு தொழிலிலோ துறையிலோ செயலிலோ இல்லாமல் போனவர்கள் பலர். அதற்கு காரணம் என்ன தெரியுமா? இது தான் வேலை, இது தான் செயல் என்று அதனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் சிலர் தான். மற்றவர்கள் ஏதோ வந்தோ போனோம் என்று இருப்பவர்கள்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னைப் பற்றிய ஒரு நேர்காணலிலோ அல்லது ஒரு மேடைப் பேச்சிலோ கூறுவார், நீங்கள் செய்யும் தொழிலில் தவம் செய்யுங்கள் என்று. அப்பொழுது தான் செயல்திறனும் செயலதரமும் கூடும் என்று. அது இங்கு நன்கு பொருந்தும்.

நாலடியார் பாடலொன்றும் இலர் பலராகிய காரணத்தை இவ்வாறு கூறுகிறது: “புறங்கடைப் பற்றி மிகத்தாம் வருந்தியிருப்பரே மேலைத் தவத்தால் தவம் செய்யாதவர்” (நாலடியார்:31)

மேலும்: அஷோக் உரை

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு-மாமலர் -49 இல் ஒரு வரி இப்படி வருகிறது
 “தவம் செய்க… தவத்தால் அடைவதே அரிதென்றாகும்.”

அப்பால் மெல்லிய சரடொன்றில் இறங்கிவந்த சிலந்தி “அதனினும் பெரிய விடுதலை நாம் பின்னிய வலையில் நாமே மாட்டியிருப்பது. ஒவ்வொரு கணமும் நெய்துகொண்டிருப்பதை நிறுத்தியபின் என் கால்கைகளை தூக்கி பார்த்தேன். இவற்றால் நான் என்னென்ன செய்யமுடியும் என எண்ண எண்ண என் உள்ளம் கிளர்ந்தெழுகிறது” என்றது. “காலைமுதல் வெறுமனே சரடில் தாவிக்கொண்டிருக்கிறேன். நேற்றுவரை என் குலம் செய்துவந்த செயல்கள்தான் இவை. ஆனால் வேட்டைக்கென அன்றி விளையாட்டென செய்கையில் இவற்றிலிருந்து எதிர்பார்ப்பும் பதற்றமும் அச்சமும் அகன்றுவிட்டன, தூய உவகை பெருகுகிறது.”


"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.


அங்கரே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக்குழப்பம். நீங்கள் எளியோர் என துயர் கொள்கிறீர்கள். அறிந்தோர் போல் பேசுகிறீர்கள். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும். இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர்.

ஒருநோக்கில் ஒருதருணத்தில் ஒருவருக்கென நிகழ்வது மெய்யல்ல என்று உணர்க. அனைத்துநோக்கில் காலப்பெருக்கில் எவருக்குமென நிகழ்வதே மெய்மை. ஒருவர் அதை அறிந்துணர வழி ஒன்றே. அறிந்தவற்றை தொகுத்தல். முரண்கொள்வனவற்றை இணைத்தல். ஒன்றென்றாக்கி மேலேறிச்செல்லுதல். இணைப்பறிவே யோகம் எனப்படும்.

தனக்கென ஒருவர் அறிவதும் அனைவருக்கென அனைவரும் அறிவதும் ஒன்றென்று அமையும் நிலையே யோகம். இணைத்தறிக! தனித்திருந்தறிக! யோகம் எதிரெதிர் நிற்கும் இருமுனையிலும் ஒன்றே நிலைகொள்வது.

யோகமென்று அறிந்தவை மட்டுமே மெய்யென்று அமையும். ஆகவே அங்கரே, யோகம் புரிக. யோகத்தமைக. யோகமில்லாதவருக்கு மெய்மையும் உளமேன்மையும் இல்லை. அமைதியும் மகிழ்வும் அவரிடம் அமைவதில்லை.

ஒவ்வொன்றும் வகுக்கப்பட்டே மானுடனுக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவன் உடல் வடிவம் வகுக்கப்பட்டுள்ளது. அவன் உள்ளமும் எல்லை வகுக்கப்பட்டது. அவனுக்கான களமும் வாய்ப்புகளும் மட்டும் வகுக்கப்படாதமையவேண்டும் என்று எப்படி கோரமுடியும்?

வகுக்கப்பட்ட களத்தையே சாமானியம் என்றனர். அங்கே நிகழும் எல்லைக்குட்பட்ட மெய்மையை சாமானிய ஞானம் என்றனர். அது உங்களுக்கு மட்டுமே உரியது. உங்கள் கிணற்றில் ஊறும் கடல். துளியும் கடலே.

வகுக்கப்படாத வெளியில் திகழ்வது விசேஷ ஞானம். முடிவிலியில் நீள்வது அது. இயல்வெளியும் தனிவெளியும் என இவை அறியப்படுகின்றன. இயல்வெளியில் திரள்வது தனிவெளி. தனிவெளியின் மெய்மையின் ஒரு துளித்தோற்றமே இயல்வெளியின் உண்மை.

இயல்உலகின் வினாக்களுக்கு தனிமெய்மையை விடையெனக் கொண்டு இங்கு பேசினீர்கள். அலகிலா தனிமெய்மையை உங்களுக்கான இயலுண்மை என மயங்கியதே உங்கள் முதற்பிழை. அறிக, மெய்யறிதலில் முதற்பிழை நிகழ்ந்தால் வாயில்கள் அங்கேயே மூடிவிடுகின்றன. பிறகெப்போதும் அவை திறப்பதே இல்லை.

உங்களுக்கு வகுக்கப்பட்ட களம் உங்களுக்கான வாய்ப்பென்று கொள்க. உங்களுக்கு  அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும். உங்கள் எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பீர்கள்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவீர்கள்.

உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே வெற்றியும் தோல்வியுமில்லை. ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை.

வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உங்களுக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உங்கள் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க!

உங்களுக்கு எதிரான ஒவ்வொரு சொல்லும் உங்கள் பெருமையின் விளைவாக எழுந்தவைதான். உங்களை நோக்கிவரும் அத்தனை அம்புகளும் உங்கள் புகழ்ச்சொற்களாக மறுபிறப்பு கொள்ளவிருக்கின்றன. அளிக்கப்பட்டுள்ளது உங்கள் களம் என்பதன் பொருள் அனைத்தும் அளந்தமைக்கப்பட்டுள்ளன என்பதே.

வெல்க, வெல்லும்பொருட்டு களம்நின்று பொருதுக! இழப்பதனால், வீழ்வதனால் எவரும் தோற்பதில்லை, முற்றாக வெளிப்படாமையால் மட்டுமே தோற்கிறார்கள் என்று உணர்க!

கொல்லாதொழியும் எவரும் வெல்லாதொழிவர். உயிர்க்கொலை ஒன்றே கொலையல்ல. உணர்வுக்கொலை, ஆணவக்கொலை, கருத்துக்கொலையென கொலைநிகழா கணமே இங்கில்லை. அங்கரே, உங்கள் உறவுகளைக் கொல்வதை எண்ணி கலங்குகிறீர்களா? அன்புடையோனுக்கு இவ்வுலகே உறவு அல்லவா? அறத்தோனுக்கு அனைத்துயிரும் நிகரல்லவா?

நீங்கள் காப்பவருக்காக எதிர்ப்பவரை கொல்கிறீர்கள் என்றால் கடமையை செய்தவராகிறீர். நீங்களும் கொல்லப்படக்கூடும் களம் என்றால் அறத்தையே இழைத்தவராகிறீர். ஒருகணமும் திரும்பி எண்ணி வருந்தமாட்டீர் என்றால் நற்செயலையே இயற்றுகிறீர்கள்.

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள்?

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை.

அங்கரே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழுவிசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை.

வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.

விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதனால் செயலாற்றுக! தசைகளில் உள்ளது தோளின் செயல். கால்களில் உள்ளது நடத்தல். பிறிதொன்றுக்காக அவை இங்கு எழவில்லை. அவற்றுக்குரிய விசையை அளிப்பதே நம் உள்ளத்தின் அறம்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் தனக்கென்று ஓர் செயல்வழியும் இலக்கும் கொண்டுள்ளது. அதுவே அதன் தன்னறம். அதிலேயே அதன் முழுவிசையும் வெளிப்படுகிறது. அதன் ஒவ்வொரு அணுவும் அப்போது மட்டுமே செயல்படுகிறது. அதை இயற்றுகையிலேயே நிறைவடைகிறது. நிறைவுக்கு மறுபெயர் மகிழ்வு.

அங்கரே, உங்கள் தன்னறம் எங்கு உங்கள் தோள்களும் விழிகளும் நெஞ்சமும் பிறிதொன்று தேராது நின்றிருக்குமோ அங்கு உள்ளது. தன்னறத்தை ஆற்றுபவர் தன்னில் மகிழ்கிறார். அறிக, மகிழ்வென்பது வெளியே எதிலிருந்தும் எழவியலாது! தன்னுள் தான் முற்றிலும் நிறைவதே மகிழ்வென்று உணரப்படுகிறது.

இல்லத்தில் தொலைத்ததை பள்ளிச்சாலையில் தேடுகிறீர்கள். இங்கு, இப்பொழுதில் உள்ளது உங்கள் இடர் என்றால் பிறிதெங்கு நோக்குகிறீர்கள்? இயல்தளத்தில் நிலைகொள்பவர் நீங்கள். உங்கள் மெய்மையும் இங்கு எழுவதாகவே அமையலாகும்.

தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.

இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.

பேதைகளே கட்டுண்டிருக்கிறார்கள். மெய்யுணர்ந்தோர் ஒவ்வொரு கணமும் விடுதலையை நாடுகிறார்கள். அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும்.

அங்கரே, அறிவில் தீயது, பயனற்றது என்றொன்றில்லை. அறியப்படாத அறிவுகளே பயனற்றவை. குறையாக அறியப்பட்டவையே தீங்கிழைப்பவை. அவை அறிவென கொள்ளப்படுவதில்லை.

விலங்கு நிலையிலிருந்து மானுடரை விடுதலை செய்தது என் முன்னோடிகளின் அறிவு. இருபாற்பிரிவு நோக்கிலிருந்து விடுதலை செய்வது என் அறிவு. நாளை எழும் அறிவோ இன்மையும் இருப்பும் ஒன்றென்று எழும் பேரறிவாகும். அதை கல்கி என்றும் மைத்ரேயர் என்றும் உரைப்பர் நூலோர்.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இன்னும் மானுடர் எஞ்சியிருக்கிறார்கள். இன்னமும் வினாவும் விடையுமென அறம் ஆராயப்படுகிறது. அங்கரே, மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு இடங்களில் உருவுகளில் கண்டடையப்படுகிறது.

இங்கு திகழ்வது அறமென்பதனால்தான் இங்கு ஒவ்வொன்றும் நிலைகொள்கின்றன. மானுடர் இணையாமல் எதுவும் எழுந்து வளர்ந்து நீடிக்காதென்று அறிக! அறத்தின்பொருட்டன்றி எதன்பொருட்டும் மானுடர் இன்றுவரை ஒருங்குதிரண்டதில்லை. அறமென்பது அவர்கள் ஒருங்குதிரட்டுவதே. அவர்கள் ஒவ்வொருவரிலும் வாழ்வது அது.

அழிக்கப்படுகையில், கைவிடப்படுகையில், சிறுமைகொள்கையில் பிறிதொன்றை நோக்கி உதவிகோருபவன் தன்னை அறியாதவன். அழைக்கப்படாத தெய்வமொன்று இருண்ட ஆலயத்தில் துயருடன் அவனுக்காக காத்திருக்கிறது.

இவ்வறம் அவ்வறம் என்று நோக்குவோர் அறத்தை காண்பதில்லை. முழுதும் காணப்படாத அறம் மறமென்று தோன்றலாகும். முழுதறத்தை உணர்ந்தவர் மறமும் அறத்தின் கருவியென்றே உணர்வர். எங்கும் திகழும் ஒன்றின் ஆடலை எதிலும் நோக்குபவரே யோகத்தமர்ந்து அறிந்தவர்.

முன்பொருமுறை இனிய புலரியில் குடில்விட்டு வெளியே வந்த தொல்வியாசர் குருவியின் மென்குஞ்சை தன் கூரலகால் கிழித்து உண்டுகொண்டிருந்த கழுகொன்றை கண்டார். புவிபேணும் பசியெனும் தெய்வத்தின் பேருருவைக் கண்டவராக மகிழ்ந்து கைகூப்பினார்.

பிறிதொருநாள் காட்டில் செல்கையில் கௌதமர் என்னும் முனிவர் தன் குருளையைக் கொன்று தின்றுகொண்டிருந்த அன்னைப் பெரும்பன்றியை கண்டார். அதன் முலைகளை முட்டிக்குடித்துக்கொண்டிருந்தன பிற குட்டிகள். அன்னையே, எத்தனை கனிந்திருந்தால் தன்னையே உண்டு உருக்கி உணவாக்குவாய் நீ என்று அவர் உவகையில் கண்ணீர் விட்டார்.

பறவைச் சிறகெரித்து புழுக்குலம் அழித்து மரங்களில் நாசுழற்றி மூண்டு எரிந்தெழும் காட்டுத்தீயைக் கண்டு தொல்முனிவராகிய காசியபர் கூறியதை அறிக! அனலவனே, மென்மையான புதிய பசுந்தளிர் புற்களின் காவலனே, உன் அருளுக்கு வணக்கம் என்றார் அவர்.

பற்றுகொண்டோன் நோக்குகையில் அனைத்தும் பற்றினாலேயே பொருள்கொள்ளப்படும். இருள்விழைவோன் இருளை அடைகிறான். மருள்விழைவோனை அதுவே அணைகிறது. ஒளிநாடும் புட்கள் மட்டுமே புலரியை அறிகின்றன. வணங்கும் வடிவில் வந்தணைகிறது தெய்வம்.

முற்றிலும் பற்றறுத்த முனிவருக்கே முழுமை புலனாகும். குந்தியின் மைந்தரே, முனிவரிலும் முழுதமைந்த தவம்கொண்டோர் சிலரே. முழுமையறிவு உலகவாழ்வுக்கு எவ்வகையிலும் பயனற்றது என்பதனால் முழுதறிந்த பின்னரும் அதை சிறிதாக்கிக்கொள்பவரும் முனிவருள் உண்டு.

இப்புவியில், விழைவுகளுடன் நிற்பவர்களுக்கு அக்களத்திற்குள் அமையும் உண்மையே உகந்ததாகும். அது பசிக்கையில் உணவென்றும், அஞ்சுகையில் அரண் என்றும், போரில் படைக்கலமென்றும், தனிமையில் துணையென்றும், துயரில் உறவென்றும் வந்தமையவேண்டும். அதை நாடுக!

உணவில் பகிர்தலாக, இடரில் நட்பாக, எளியோர் முன் அளியாக, அவையில் நெறியாக, போரில் சினமாக, நோக்கில் நடுநிலையாக, குடிகளுக்குமேல் ஆணையாக, குலங்களுக்குமேல் நம்பிக்கையாக, விண்ணவருக்கு முன் அறமாக அது வந்தமைக! அதை அடைபவர் வெல்வர்.

ஒவ்வொருவருக்கும் அது தன் முகம் காட்டுகிறது. எதன்பொருட்டு வந்தீர்களோ அதை முழுதியற்றுக! கைவிரல்களைக் கண்டவன் அவற்றின் செயலென்ன என்று அறிந்துகொள்வான். தன்னை நோக்குபவன் தன் இலக்கென்ன என்று தெளிவுகொள்வான்.

அவ்வறிதலை செயலென்றாக்குக! செயல்கள் ஒவ்வொன்றும் மறுசெயல்களால் ஆனவை. செயலாற்றுக, விளைவை கொள்க! அறிக, செயல் விடுதலையென்றாகவேண்டும்! கட்டுறுத்தும் செயல் அரைச்செயலே. முழுமை நம்மை அதை கடந்துசெல்ல வைக்கும்.

வெல்லுங்கள், ஆனால் வென்றவருக்கு அருள்கையிலேயே கடந்துசெல்கிறீர்கள். கொள்க, எனில் கொடுக்கையில்தான் நிறைவுறுகிறீர்கள்! சினம் கொள்க, ஆயின் கனியும்போது மட்டுமே முழுமை அமைகிறது!

அங்கரே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே.

நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.

எழுக! உங்கள் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உங்கள் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவீர்கள். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவீர்கள். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும்.

இறுதிமூச்சையும் இசையாக்கிய பின்னரே குயில் வானில் முழுதெழுகிறது . எச்சமின்றி விட்டுச்செல்வதன் விடுதலை உங்களுக்கு அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!


அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.

அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.

பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.

செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!

செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.

இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.

அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.

தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.

ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.

ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!


சிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”

இந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.

தழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.

எது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.

முழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.

வணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க! உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.

ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.

விடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.

புறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.

அறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.

பாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.

“அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”


அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

“அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர்


திரௌபதி குவளைகளில் ஊற்றி அவர்களுக்கு அளித்தாள். அதைச் சுவைத்தபடி “எங்கெல்லாம் சென்றீர்கள், மூத்தவரே?” என்றான் சகதேவன். “நான்கு திசைகளிலும் நெடுந்தொலைவு” என்றான் அர்ஜுனன். “மேற்கே நிலைக்கடல் முதல் கிழக்கே பறக்கும் மலைகள் வரை. திசைத்தேவர்களை வென்று நிகரற்ற படைக்கலங்களுடன் வந்துள்ளேன்.” அறைவாயிலில் தோன்றிய தருமன் “உன்னை வென்றாயா?” என்றார். அர்ஜுனன் தெளிந்த விழிகளுடன் அவரை ஏறிட்டுநோக்கி “ஆம்” என்றான். அவர் “நன்று” என்றார். கைகளைக் கட்டியபடி நின்று அர்ஜுனனை கூர்ந்து நோக்கினார். “நன்கு மெலிந்துள்ளாய்.”


அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
‘உலகத்தை உய்விக்க வந்தவர்கள்’ என்று மாமனிதர்களை அடையாளங் காண்கிறோம். மனிதராகப் பிறப்பெடுத்தவர்கள் மற்றவர்கள் படும் இன்னல்களைத் தம்முடையதாகக் கருதி அவற்றைக் களையும் வழியில் நடக்கத் தலைப்பட்டவர்கள். 

அரண்மனையில் யுவராஜனாக வாழ்ந்த சித்தார்த்தன் உலகத் துயர்களைக் காணாமல் வளர்ந்தவன். நகர்வலத்தின்போது அவன் கண்களில்பட்ட மனித அவலங்கள் மூன்று அவனை நிலைகுலையச் செய்தன. ஒருவர் தீர்க்கவியலாப் பிணியுற்றிருந்ததைக் கண்டான். மற்றொருவர் மூப்படைந்து குற்றுயிராகக் கிடந்தார். இன்னோரிடத்தில் சவ ஊர்வலத்தைக் காண நேர்ந்தது. பிணி மூப்பு சாக்காடு என்னும் மூன்று கொடுமைகளைக் கண்டான் சித்தார்த்தன். அதற்குமேல் இளவரசனாய் இன்ப வாழ்வில் ஈடுபடமுடியவில்லை. எந்நேரமும் தாம் கண்டவை குறித்துச் சிந்தித்தான். அவற்றுக்குத் தீர்வு காணும் முகத்தான் நள்ளிரவில் மாளிகையைவிட்டு வெளியேறுகிறான். பெரும் தேடலின் முடிவில் போதி மரத்தடியில் துன்பங்களுக்குக் காரணம் என்னவென்று புலப்பட்டது. தான் உற்றுணர்ந்ததை புத்தனாக உலகோர்க்குச் சொல்கிறான். பேரரசர்கள் மண்ணாசை தணிந்து போர்த்தொழில் துறந்து புத்தர் வழியில் அன்பு வழிக்குத் திரும்பினார்கள் என்பது வரலாறு.

அவர் எளிமையான வக்கீல். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியரான அப்துல்லா என்னும் வணிகரின் சிறு வழக்குகளை எடுத்து நடத்த அந்நாட்டுக்கு வந்தவர். முதல் முறையாகத் தமக்குக் கிடைத்த வழக்கில் ஆஜராகி, நீதிமன்றத்தில் நீதிபதிமுன் நின்றபோது பேச்சே வராமல் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, பேந்த பேந்த விழித்த அப்பாவி மனிதர். இப்போது புகைவண்டி ஒன்றில் முதல் வகுப்பிற்கான பயணச் சீட்டு பெற்று பயணம் செய்துகொண்டிருக்கிறார். அங்கே வந்த சக பயணியான ஆங்கிலேயன் ஒருவன் ‘கறுப்பனே... இங்கே என்ன செய்கிறாய் ? உன் மூன்றாம் வகுப்புக்குப் போடா’ என்று கத்துகிறான்.

பயந்து பணிந்து வாழ்ந்தே பழக்கப்பட்ட நம் வக்கீல் ‘ஐயா... நான் இந்த வகுப்பில் பயணிக்க உரிய பயணச்சீட்டு பெற்றுள்ளேன்’ என்று விளக்குகிறார். ‘ஓ... உங்களைப் போன்ற ஆள்கள் முதல் வகுப்புச் சீட்டு வாங்குமளவுக்குத் துணிந்துவிட்டீர்களா...?’ என்று சீறியவன் அவர் கழுத்தைப் பிடித்துத் தூக்குகிறான். புகைவண்டியில் இருக்கும் பரிசோதகரும் வெள்ளையர். பயணிக்கு உதவ மறுத்ததோடு மட்டுமன்றி அவரும் நம் வக்கீலைத் தள்ளுமுள்ளுவுக்கு ஆட்படுத்தி மூர்க்கமாக வெளியேற்றத் துணிகிறார். 

செயின்ட் மாரிட்ஸ்பர்க் என்னும் நிலையத்தில் ஓர் அழுக்குத் துணியைப்போல் வண்டியிலிருந்து கழித்தெறியப்படுகிறார் அந்த இளம் வக்கீல். பெட்டி

படுக்கைகள் அவர்மீது வன்மத்தோடு வீசியெறியப்படுகின்றன. நிலைகுலைந்து விழுகிறார். ராஜ்கோட் சமஸ்தானத்தில் அமைச்சருக்கு நிகரான பதவியில் இருந்தவர் அவர் தந்தை. குடும்பத்தில் செல்லப் பிள்ளை. தாய்ச்சொல் மீறாதவர். தமையன்கள்மீது தலைநிமிராப் பாசமும் அன்பும் மிக்கவர். 

தந்தையின் எதிர்பாராத மரணத்தால் குடும்பம் வறுமைக்காளானது. குடும்பத்தை நிமிர்த்த, தாம் கல்வி பயின்று கடமையாற்றுவதே வழியென்று முடிவெடுத்து, இலண்டன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து நாள்தோறும் எட்டு மைல்கள் நடந்து சென்று படித்தவர். தென்னாப்பிரிக்காவில் ஒரு நிலையத்தில், விலங்கைப்போல் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்டு, அவமானத்தின் அத்தனை கத்திகளையும் மார்பில் ஏந்தியவராய் நிற்கிறார். அங்கே அவர் நோற்றார் ‘இன்று நான் உற்ற இப்பேரிழிவை இனியொருவர் - என் தேசத்தவர் - உற அனுமதியேன். இதற்கெதிராய் என் இறுதி மூச்சுள்ளவரை போராடுவேன். என் அனைத்தையும் அர்ப்பணிப்பேன். பிறழேன்’ என்று. அந்த நினைப்பும் சூளுரையும் நோற்பும் ஈந்த கனியைத்தான் நாம் ‘அரசியல் விடுதலை’ என்ற பெயரில் உண்கிறோம். அதற்குப் பிறகு அவர் புகைவண்டிகளில் மூன்றாம் வகுப்பில் மட்டுமே பயணித்தார். முப்பத்தெட்டு வயதில் இந்தியாவுக்குத் திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை எப்படி எதிர்த்து வென்றார் என்பதை அறிவோம். 
 
நம் காலத்தில் இத்தகைய மனிதர்களைத்தாம் காண முடியவில்லை. அடுத்தவர் துன்பங்கண்டு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஈக வாழ்க்கைக்கு இங்கே யாராவது தயாராயிருக்கிறார்களா என்று தேடுகிறோம். குறைந்தபட்சம் ‘நீ படும் துன்பத்திற்கு இதுதான் காரணம்’ என்று யாரேனும் சுட்டிக்காட்டுகிறார்களா ? ஒருவர் எங்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சர்வநிவாரணம் பெறலாம் என்கிறார். மற்றொருவர் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் மாறும் என்கிறார். திரும்பிய திசையெங்கும் பித்தலாட்டம். என் நிலை என்னவென்று, அதைப்போக்குவதற்கு இது வழிமுறையென்று - என்னை ஊன்றிக் கவனித்த ஒருவர் எடுத்துரைத்தால் எத்தனை உதவியாக இருக்கும் ? அதைச் செய்ய இன்று ஆளில்லை. 

புலவர்களும் அறிஞர்களும் தாம் வாழும் காலத்து மாந்தர்களுக்கு ஒரு விடிவைச் சொல்லவேண்டும். ஒரு கண்திறப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த உண்மை எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பது அதை எழுதியவரின் மேதைமைக்குச் சான்று. 

சனங்கள் படுகின்ற துன்பத்திற்கு என்ன காரணம் ? நோற்பு இல்லை. நோற்பு என்றால் தவம் செய்தல்.

ஒன்றைத் தவம்போல் எண்ணிச் செய்கின்ற எல்லாமே நோற்புதான். தவம் என்றால் பற்று நீங்கியவராய், எடுத்த செயலில் நூல்கனத்தளவும் பிறழாமல் ஆற்றும் பெருஞ்செயல். அதற்கு லௌகீகத்தில் ஓர் அர்த்தம். ஆன்மீகத்தில் வேறு அர்த்தம். 

நாட்டில் இல்லாமை அதிகமிருக்கிறது. கல்வி இல்லை, அறிவு இல்லை, ஞாபகம் இல்லை, கையில் செல்வமில்லை, ஊக்கம் இல்லை, என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு கூட இல்லை. 

இப்படி இல்லாதப்பட்டவர்கள் பலர் பலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ? இருக்கப்பட்டவர்கள் வெகு சிலராக இருக்கிறார்களே, என்ன காரணம் ?

வள்ளுவர் தெள்ளத் தெளிவாக அடிக்கிறார். 
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் 
சிலர்பலர் நோலா தவர்.
 (அதிகாரம் 27 : தவம், குறள் எண் ; 270) 
இலர் பலர் ஆகிய காரணம் = இல்லாதவர்கள் பலர் என்று பல்கிப் பெருகி ஆனதற்குக் காரணம் 

நோற்பார் சிலர் = தவம்போல் கருதிச் செயலாற்றுகின்றவர்கள் சிலர் மட்டுமே 

பலர் நோலாதவர் = இல்லாமல் இன்மையில் உழலும் அந்தப் பலர் ஒன்றையும் நோற்றுச் செய்யாதவர்.

சோம்பித் திரிபவர். தம்மை வருத்திப் பாடுபடாதவர். நோலாதவர். 
இல்லாதவர்கள் உலகில் பல்கியிருக்கக் காரணம் எதையும் தவமெனக் கருதித் தம்மை வருத்திக்கொள்பவர்கள் சிலராக இருப்பதுதான். பலர் தம்மை வருத்திக்கொள்ளாதவர்கள். 
இலர் பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர் ; பலர் நோலாதவர்.

பரிமேலழகர் உரை
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

மு.வரதராசனார் உரை
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தவம் குறைந்தால் வறுமை மிகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The reason why there is high number of people who started penance towards moksha ended up attaining nothing is because the people who truly did the penance the way penance has to be done is very less whereas the people who didn't do penance is high.  The same applies not just for penance But also for the number of people who are successful in this work, profession and life as such. The people who do a stuff a like a penance for long term grow and attain its peak. Since the number of people who do that are small, the number of people who attain the peak is also small. vice versa.

Questions that I ask to the kid
Why the people who reach Moksha or high achievers or being rich are low in number? Why poor or mediocrity is high in number? Because people who do Tapas or who do their work/mission as a tapas are less.


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

குறள் 0269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல்.

குதித்தலும்  - குதி-த்தல் - kuti-   11 v. [K. gudi, M. kuti.]intr. 1. To jump, leap, spring, bound; பாய்தல் (திவா.) 2. To splash, as water; to spurtout; நீர்முதலியன எழும்பிவிழுதல். மலர் தேன்குதிக்க(தஞ்சைவா. 67). 3. To dance with joy, frolic;கூத்தாடுதல். 4. To be haughty, arrogant;செருக்குக்கொள்ளுதல். அதிகமாகக் குதிக்கிறான்.--tr.To leap over; overcome, escape from; கடந்துவிடுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள், 269).  

கைகூடும் - கைகூடுதல் - சித்தியாதல்; கிட்டுதல்

நோற்றலின் - பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

தலைப்பட்டவர்க்கு - தலைப்படு-தல் - talai-p-paṭu-   v. id. +.tr. 1. To unite, be in communion with; ஒன்றுகூடுதல் சிவனைத் தலைப்பட்டுச் சென்றொடுங்கும்ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet,cross; எதிர்ப்படுதல் ஓர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 3. [T. talapaḍu.] To under-take, enter upon; மேற்கொள்ளுதல் ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா 2). 4. To obtain, attain;பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள்,1289).--intr. 1. To advance; to improve incircumstances; முன்னேறுதல் 2. To be noble,exalted; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 3. To enter, asa character on the stage; புகுதல் கூரிய பல்லினையுடையாள் தலைப்பட்டாள் (பு. வெ 10, பொதுவி. 5,உரை). 4. To follow; வழிப்படுதல் தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப்.2). 5. To commence; தொடங்குதல் அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.  

முழுப்பொருள்
தவத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் தவம் செய்தால் எல்லா உயிர்களின் உயிரை வாங்குவதை தர்மமாக கொண்ட யமனையும் வெல்லும் ஆற்றல் கைகூடும். பிறந்தால் இறப்பது என்பது இயற்கை நியதி. ஆனால் இறப்பையே ஒருவரால் வெல்ல முடியும் என்றால் அவரால் தவத்தினால் பல உயரிய நிலைகளை அடைய முடியும். வீடுபேற்றினை அடையமுடியும். ஆதலால் தவத்தின் சிறப்பறிந்துணர்ந்து தவம் செய்க என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

தவத்தால் யமனை வென்ற புராண கதையே மார்க்கண்டேயன் கதை. அதைக்  கீழே காணலாம். 

மேலும்: அஷோக் உரை 

ஒப்புமை
”கூற்றம் குதித்துய்ந்தார்” (நாலடி 6)
“கூற்றம் குதித்துய்ந் தறிவாரோ இல்” (பழமொழி 183)
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளா.துறவு 18)
“கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே” (திருமந் 172)

“சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழும் முதுகுன் றடைவோமே” (சம்பந்தர்.முதுகுன்றம் 6)

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!


பக்த மார்க்கண்டேயன் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருக்கடவூர் திருத்தலம்தான். காலனை உதைத்த கோலத்தில்,  கால சம்ஹாரமூர்த்தியாக ஈஸ்வரன் அருளும் இந்தத் தலத்தில்தான், மார்க்கண்டேயனுக்கு சிரஞ்ஜீவி வரமும் கிடைத்தது என்பதை அறிவோம்.

ஆனால், பக்த மார்க்கண்டேயனுக்கு அபயமளித்து, அவன் சிவனருளைப் பெற வழிகாட்டிய திருத்தலங்கள் குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது. மகத்தான அந்த க்ஷேத்திரங்களைப் பற்றி தெரிந்துகொள்வோமா?!

மார்க்கண்டேயன் ஆலயம்

சிவபக்தரான மிருகண்டு மகரிஷி தம்பதியினர் நீண்ட காலமாகக் குழந்தையில்லாமல் ஏங்கி, குழந்தைப்பேறு வேண்டி இறைவனைத் தினமும் மனமுருகி வணங்கி வந்தனர்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
பல நாள்கள் அவர்கள்  மனம் உருக பிரார்த்தித்து வந்ததைத் தொடர்ந்து ஒரு நாள் நேரில் தோன்றிய இறைவன், ‘‘உங்களுக்கு 16 ஆண்டுகள் மட்டுமே ஆயுளுடன் இருக்கும் அழகும் அறிவும் நிறைந்த குழந்தை வேண்டுமா, தீய பண்புகளுடன் தீர்க்காயுள் உள்ள குழந்தை வேண்டுமா?’’ என்று கேட்க...

‘கொஞ்சநாள் இருந்தாலும், கொஞ்சி மகிழ அழகும் அறிவும் கொண்ட குழந்தையே வேண்டும்’ என்று கூறினர். இறைவனும் அங்ஙனமே அருள்பாலித்து மறைந்தார். அதன் பலனாக அந்தத் தம்பதிக்குக் குழந்தையாக மார்க்கண்டேயன் பிறந்தான்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
மார்க்கண்டேயன் பிறந்து வளர்ந்தது திருக்கடையூர் அருகேயுள்ள தி.மணல்மேடு பகுதியில். இன்றைக்கும் இந்தக் கிராமத்தில் மார்க்கண்டேயனுக்கு தனிக்கோயில் உள்ளது. திருக்கடையூரில் ஆயுஷ் ஹோம பூஜைகள் செய்பவர்கள் இந்தக் கோயிலுக்கும் தவறாமல் வந்து செல்கின்றனர்.

கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயில்

மார்க்கண்டேயனுக்கு 16 வயது பூர்த்தியானவுடன் பாசக்கயிற்றுடன் யமன் நெருங்க, மார்க்கண்டேயன் உயிர்பிழைக்க முதலில் சென்றது மயிலாடுதுறை அருகேயுள்ள கதிராமங்கலம் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி கோயிலுக்குத்தான்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
இந்த அம்பிகையைத் தன் தாயாகவே எண்ணி அனுதினமும் வழிபடுவானாம் மார்க்கண்டேயன். பதினாறு வயது பூர்த்தியடைந்ததும் காலன் அவனைத் தேடிவந்தபோது மார்க்கண்டேயன் இந்த அம்பிகையின் சந்நிதிக்கு ஓடினான்.

‘‘அம்மா நான் இன்று காலனிடம் சிக்கி உயிரை விடவேண்டியதுதானா? உயிர் பிழைக்க வழியேயில்லையா?” என்று மன்றாடினான்.அவனுக்குக் கதிராமங்கலம் அம்பிகை ஒரு வழிகாட்டினாள்... ‘‘அபயம் என்று வருவோருக்கு அடைக்கலம் தருபவள், மயிலாடுதுறை மயூரநாதருடன் அருளும் அபயாம்பிகை. அவளிடம் செல். உனக்கு நல்வழியைச் சொல்வாள்” என்று அருள்பாலித்தாள் ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி. அதன்படியே மயூரநாதர் ஆலயத்துக்குச் சென்றான் மார்க்கண்டேயன். நாமும் அவனுடன் சேர்ந்து பயணிப்போம்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில்

மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோயில் குருக்களான பாலாமணி குருக்களிடம், மார்க்கண்டேயன் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்தது குறித்து விவரம் கேட்டோம்.

“அபயாம்பாளிடம் அபயம் கேட்டுவந்த மார்க்கண்டேயனுக்கு, ‘நீ உடனே ஆக்கூர் சென்று அங்கு அருளும் தான்தோன்றீஸ்வரரிடம் சரணடைந்து விடு. நீ ஈசனைச் சென்றடையும் வரை, வழியெங்கும் உனக்குப் பாதுகாப்பு இருக்கும் கவலைப்படாதே’ என்று அம்பாள் சொல்கிறாள். மார்க்கண்டேயனுக்கு, இந்தச் செய்தி பெரும் ஆறுதலாக இருந்தது.

‘‘கிழக்கு வாசலில் யமதர்மன் நிற்கிறாரே அம்மா! நான் என்ன செய்வது? எப்படிச் செல்வது?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ வடக்கு வாசல் வழியாகச் செல்வாயாக என்று உத்தரவிட்டாள் அபயாம்பாள்’’ என்றார் பாலாமணி குருக்கள்.

அதன்படியே அங்கிருந்து வெளியேறி ஆக்கூர் சென்றான் மார்க்கண்டேயன். வழியில் காளஹஸ்தினாபுரம், மாத்தூர் தலங்களிலும் சிவானுக்ரஹத்தால் காலதேவனிடம் இருந்து தப்பித்தான் மார்க்கண்டேயன்.

காளஹஸ்தினாபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில்

இவ்வூரில் சிவனார் அருள்புரிந்த அற்புதத்தை நிகழ்ந்த அற்புதச் சம்பவங்களை மாத்தூர் மகாலிங்க குருக்கள் விவரித்தார்:

‘‘காளை கத்திய புரம்தான், தற்போது காளஹஸ்தினாபுரம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயனை யமதர்மன் விரட்டிவரும் பாதையின் குறுக்கே, ஆயிரக்கணக்கான காளை மாடுகளை அனுப்பிவைத்தார் ஈசன். இதனால்,  காலதேவனின் வேகம் தடைப்பட்டது. அதற்குள் மார்க்கண்டேயன் மாத்தூரைத் தாண்டிச் சென்றுவிட்டான்’’ - இவ்வூருக்கு அடுத்தபடியாக மாத்தூரை அடைந்தான் மார்க்கண்டேயன்.

மாத்தூர் ஸ்ரீசத்யவாசகர் கோயில்

‘சத்யவாசகர் பெயரே விசேஷமாக உள்ளதே’ என்ற கேள்வியோடு  இக்கோயிலின் மகாலிங்க குருக்களைச் சந்தித்தோம். அவர் கூறிய விவரம் நம்மைச் சிலிர்க்க வைத்தது.

“மார்க்கண்டேயனுக்கு ‘சத்ய வாசகம்’ கூறி அனுப்பிய ஸ்ரீ சத்ய வாசகர், ‘இந்தப் பக்கம் வந்த சிறுவன் எவ்வழி சென்றான்?’ என்று கேட்ட யமனுக்கு, வழியை மாற்றிச் சொன்னார். அதனால், இவ்வூருக்கு மாற்று ஊர் என்று பெயர் ஏற்பட்டு, பின்னர் அதுவே தற்போது ‘மாத்தூர்’ என்றாகி விட்டது’’ என்று புன்னகைத்தார் மகாலிங்க குருக்கள். அடுத்ததாக மார்க்கண்டேயனின் வழியில் ஆக்கூருக்குப் புறப்பட்டோம்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்

ஆக்கூர், தான்தோன்றீஸ்வரர் கோயில் குருக்களான வைத்தியநாத குருக்கள், தான்தோன்றீஸ்வரர் காலனை சம்ஹாரம் செய்த நிகழ்வை விவரித்தார்.

‘‘இக்கோயிலுக்கு விரைந்து வந்த மார்க்கண்டேயன் தல விருட்ச மான கொன்றை மலரைப் பறித்துச் சமர்ப்பித்து, ‘இறைவா! என்னை யமனிடமிருந்து காப்பாற்று’ என்ற விண்ணதிர அபயக்குரல் எழுப்பினான். உடன், லிங்க மூர்த்தத்தின் பாணம் பிளந்து கொன்றைப்பூவின் உருவம்கொள்ள, அதேநேரத்தில் யமன் மார்க்கண்டேயனை நோக்கிப் பாசக்கயிற்றை வீசினான். அந்தக் கயிறு, மார்க்கண்டேயன்மீது மட்டுமின்றி சிவனாரின்மீதும் சேர்ந்து விழுந்தது. இதனால் கடும்கோபம் கொண்ட ஈசன், காலனைக் காலால் உதைத்து வைத்தார். இன்றைக்கும் இக்கோயிலில் லிங்க பாணம் பிளந்த நிலையில் இருப்பதைக் காணலாம். இதற்குச் சான்றாகத் திருநாவுக்கரசர் தமது தேவாரத்தில், ‘காலனைக் காலால் கடந்தார் போலும்’ என்றும், திருஞானசம்பந்தர் ‘கொங்குசேர் தன் கொன்றை மாலையினான் கூடற்றடரப் பொங்கினான்’ என்றும் பாடியுள்ளனர். யமனின் தலைவிழுந்த இடம் அருகிலுள்ள ‘தலைச்சங்காடு’ என்பது செவிவழிச் செய்தி’’ என்றார்.

மார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்!
திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

நிறைவாக திருக்கடவூர் சென்றோம். அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கணேச குருக்கள் அற்புதமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘யமனைச் சம்ஹாரம் செய்ததால் பூவுலகில் மரணங்கள் சம்பவிக்கவில்லை. உயிர்கள் பெருகின. பாரம் தாங்கமுடியாத பூமாதேவி சிவனாரைச் சரணடைந்தாள். அவளின் வேண்டுகோளை ஏற்று காலனை உயிர்ப்பித்தார் சிவனார். யமனை உயிர்ப்பித்து எழுப்பியதால் ‘எழுப்பிவிட்டான் சேரி’ என்று அழைக்கப்பட்ட ஊர், தற்போது ‘எருக்கட்டாஞ்சேரி’ என்ற பெயரில் (திருக்கடவூர் அருகிலுள்ளது) திகழ்கிறது.
மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் பதினாறு’ என சிரஞ்ஜீவி வரம் அளித்து, கால சம்ஹார மூர்த்தியாக சிவனார் அருளும் தலமாதலால்,  ஆயுளை நீடிக்கும் ஆயுஷ் ஹோமத் திருமணங்கள் இக்கோயிலில் தினந்தோறும் நடைபெறுகின்றன’’ என்றார் கணேச குருக்கள்.

மிக அற்புதமான பயணம் இனிதே நிறை வடைந்தது. திருக்கடவூர் அபிராமியம்மையையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்தத் திருத்தலங்களையும் அவசியம் தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்விலும் யம பயம் நீங்கும்; ஆரோக்கியம் செழிக்கும்!

பரிமேலழகர் உரை
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு. இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.

மு.வரதராசனார் உரை
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தவம் கூடினால் மரணத்தையும் வெல்லலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Death is an inevitable thing. Lord Yama carries out death execution for all living organisms. Yet, by penance/tapas to Lord Shiva, there are people like Marakendeyan who have crossed over death. So, by understanding the power of Tapas/penance, if one does penance towards his goal or moksha, then one can attain his goal / moksha. Sincerity, consistency, perseverance is the key. 

Questions that I ask to the kid
What do you know about the power of Tapas?

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் 
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு..

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

அறப் -  aṟa   adv. அறு¹-. 1. Wholly, entirely,quite; முழுதும் வகையறச் சூழாது (குறள், 465). 2.Intensely, excessively; மிகவும் அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 3. Clearly; தெளிவாக அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224). 4. Tho-roughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.  

பெற்றானை - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

தான்  அறப்பெற்றானை - தான்  என்னும் அகங்காரம் அறவே பெறாதவனை 

ஏனைய - ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன்.

மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா

உயிர்  - - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

எல்லாம் - முழுதும்

தொழும் - தொழுதல் - வணங்கல்

முழுப்பொருள்
தனது, தான், நான், தனது/எனது உயிர் என்று அகங்காரத்தை அறவே பெறாதவனை பெறுதல் மிக கடினம். ஏனெனில் அகங்காரத்தை உதிர்த்து வாழவேண்டும் என்றால் தவம் (குறிப்பாக மனதார) செய்தால் மட்டுமே முடியும். ஆனால் தவத்தை ஆற்றி தான் தனது எனது அகங்காரம் அற்றவனை இவ்வுலகத்தில் உள்ள மற்ற எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். 

ஏனெனில் இந்திய மரபுகளில் முதலில் ஆன்ம தரிசனம். அதன்பின்பே இறை தரிசனம். இவ்விரண்டும் ஒருசேரவே அமையும். அதை பெற்றவன் இறைவனாகவே கருதப்படுவான். அதனால் தான் எல்லா உயிர்களும் அவனை தொழுகின்றன. இக்குறள் எனக்கு "அஹம் பிரம்மாஸ்மி" / "நான் கடவுள்" என்ற வேதாந்த வரிகளை ஒட்டியே இருக்கின்றன. மேலும் இவற்றை பற்றி கீழே எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் "நான் கடவுள்" பற்றிய கட்டுரையின் பகுதியில் காணலாம். 

இக்குறளுக்கான மாற்றுக்குறள் எழுதும்போது அருணகிரியாரின் கந்தர் அநுபூதிப் பாடல்,
“மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே” என்னும் வரிகள் கீற்றாகத்தோன்றி, தமிழ்க்கடவுளே வந்து நின்று வரிகள் தந்தாற் போன்று தோன்றியது.
தவத்தோடு தொடர்புடைய பாடலாகத்தான் தோன்றுகிறது.  எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நம்புலன்களை மறைக்கும் திரைகளை அகற்றிட வல்லோனான முருகனை (உயர் இறைப்பொருளை என்றே பொதுவாகக்கொள்வோம்), அவனுடைய ஆறுமுகங்களால் மாயையை அகற்றும் வழிகளை மொழிந்தும், அவை ஒழியாமல், மூவாசைகளாகிய மண், பொன், பெண் என்றிவற்றில் அமிழ்ந்து இவ்வுலகென்னும் மாயையில் நின்று தாம் உழலுவதை அருணகிரியார் சொல்லி அலமருகிறார்.

”மானுடவாழ்வென்பது நேற்றிருந்தோரின் நீட்சி. நாளைவருபவர்களின் தொடக்கம். அதை அறிந்து வாழ்பவர்களே முழுமையாக வாழ்கிறார்கள். தானென்று எண்ணித் தன்னதென்று இவ்வாழ்வைக் காண்பவன் துயரை அன்றிப் பிறிதை அடைவதில்லை


நான் கடவுள் என்பது வேதாந்தத்தின் அடிப்படை மந்திரங்களில் ஒன்று. ரிக்வேதத்தின் பத்தாம் மண்டிலத்தில் குறிப்பாக அதில் உள்ள சிருஷ்டி கீதத்தில் மானுட இருப்பு பிரபஞ்ச சாரம் ஆகியவற்றைப்பற்றிய அடிப்படைவினாக்கள் எழுப்பபட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து எழுந்த மேலதிக தத்துவ விவாதங்களே உபநிதடங்கள் ஆயின. அவற்றை வேதந்ங்களின் முடிவு என்ற அர்த்ததில் வேதாந்தம் என்று சொன்னார்கள். வேதாந்தம் என்பது அடிப்படையில் பிரம்மத்தைப்பற்றிய ஞானம். பிரம்மம் என்று வேதங்கள்  முழுக்க அறிந்துவிடமுடியாத- வகுத்துரைக்க முடியாத முழுமுதலான பிரபஞ்சசாரத்தை குறிப்பிடுகின்றன. அதைப்பபற்றிய உள்ளுணர்வுகளும் தத்துவங்களும்தான் வேதாந்தம்.

வேதாந்தத்தின் அடிப்படை சூத்திரங்களை இவ்வாறு வகுத்துக்கூறலாம் ‘நேதி நேதி நேதி’ [இதுவல்ல இதுவல்ல இதுவல்ல] நம் முன் நாம் அறியும் இவையெல்லாம் உண்மையானவை அல்லது முழுமுற்றானவை அல்ல என்ற தரிசனமே முதலானது. ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ [பிரக்ஞையே பிரம்மம்] என்ற அறிதல் அடுத்தது.  இவையனைத்தையும் அறியும் நம் பிரக்ஞையே பிரபஞ்ச சாரமாக உள்ள பிரம்மம். அதில் இருந்து அடுத்த நிலை ‘அஹம் பிரம்மாஸ்மி” நானே பிரம்மம். நானும் பிரம்மமே என்ற உணர்வின் முதிர்நிலை இது. கடல்மீன் கடலேதான் என உணர்வதைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான தன்னுணர்வு இது.
அதன் அடுத்த நிலை என ‘ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஆப்த வாக்கியத்தைச் சொல்லலாம். ‘இவையனைத்திலும் ஈசா உறைகிறது’ நான் கடவுள் என உணர்ந்ததுமே இவையெல்லாமே கடவுள் என்றாகிவிடுகிறது. கடவுளே பிரபஞ்சம் , கடவுளன்றி எதுவுமே இல்லை என்ற நிலை. அந்நிலையின் உச்சமே ‘தத்வமஸி’ [அது நீதான்] அது ஒரு இறுதித்தன்னிலை.

வேதாந்த்ததின் இந்த கொள்கையை பாலில் நெய் போல இந்துஞானமரபின் எல்லாப் பிரிவுகளிலும் நாம் காணலாம். உள்ளூர் மாரியம்மன் கோயிலின் பூசைப்பாட்டிலும்கூட ‘ஒளிக்கெல்லாம் ஒளி தருபவள் நீ’ ‘வானமாக ஆனவள் நீ ‘என்றெல்லாம் பல்வேறு வரிகளில் இந்த கருத்து ஒலிக்கும். இந்துமதத்தில் உருவ வழிபாடு இல்லை என்று ஒருவர் சொன்னால் அந்த வரியை நம்மால் மறுத்துவிடமுடியாது. ஏனென்றால் கண்ணில் தென்பட்டு கைக்குச் சிக்கும் உருவங்களில் கண்ணுக்கும் கருத்துக்கும் அகப்படாத அருவ வடிவமான பிரம்மத்தை  உருவகித்து வழிபடுவதுதான் இந்து மத மரபு. கல்மேல் கல் ஏற்றி வைத்து கும்பிடும் சிறு தெய்வத்தைக்கூட கல்வடிவமானவனே என்று எவரும் வழிபடுவதில்லை, எண்ணங்களால் எட்டப்பட முடியாதவனே என்றுதான் வழிபடுகிறார்கள். அனைத்துமானவனே என்றுதான் தொழுகிறார்கள். அனைத்துமானவன் இந்தக் கல்லும் ஆனவனே என்ற ஞானமே அதன் அடிப்படை.

ஓஷோ சம்பந்தப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி. ஓஷோவிடம் ஒருவர் கேட்டார் ”ஓஷோ பகவான் என்றான் என்ன அர்த்தம்?” ”கடவுள்” என்றார் ஓஷோ. ” அப்படியானால் நீங்கள் என்ன கடவுளா?” ”ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் ஓஷோ கண்ணிமைக்காமல். அயர்ந்துபோன அந்த பேட்டியாளர் பின்பு சற்று கோபத்துடன் ” அப்படியானால் நாங்களெல்லாம் யார்? நாங்கள் மட்டும் கடவுள்கள் இல்லையா?” ”இல்லை” என்றார் ஓஷோ. ”ஏன்?” ”நீங்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லையே” கடவுள் என்று உணர்ந்தவன் கடவுள்தான். ஏசு மனிதகுமாரன் ஏனென்றால் அவர் அதை உணர்ந்தார். அப்படி உணர்ந்தவர்கள் அனைவருமே பிதாவால் மண்ணுக்கு அனுப்பபட்ட அவரது பிரியத்துக்குரிய குமாரர்களே.

கடவுள், பரம்பொருள் , பல்வேறு இறைவடிவங்கள் போன்ற கருத்துக்களால் மறைக்கப்படாமலிருந்தால் ஒருவேளை ஒருவரால் மிகமிக எளிதாகப்புரிந்துகொள்ளத்தக்க ஆன்மீகக் கருத்தே ‘நான் கடவுள்’தான். இயற்கையின் பிரம்மாண்டத்தின்முன், மானுடவாழ்க்கையின் உச்சகட்ட தருணங்களில் சற்றே நுண்ணுணர்வுள்ள அனைவருமே தன்னிலை அழிந்து ஒரு பிரம்மாண்டமான பெருநிலையை தான் என உணர்ந்திருப்பார்கள். இவையெல்லாம் நானே என்றும் நானே இவையனைத்தும் என்றும் உணரும் கணம் அது. இந்தப்பிரம்மாண்டவெளியின் ஒரு துளி நான் என்ற உணர்வில் இருந்து பிரம்மாண்டமே நான் என்று அறியும் ஒரு உச்சம். அந்த உச்சத்தின் தத்துவ விளக்கமே இவ்வரி.

ஆனால் தமிழ்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் முதன்மையான தத்துவசிந்தனையான சைவ சித்தாந்தம் வேதாந்தத்தின் இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதல்ல. பசு பதி பாசம் என்று மூன்று அடிப்படை உருவகங்களை அது முன்வைக்கிறது. ஜீவாத்மா பரமாத்மா மாயை என்ற மூன்று கருத்துக்களுக்கு தோராயமாக நிகரானது அது. அதில் பசு தன் பாசத்தை அறுத்து பதியின் பாதங்களை அடைகிறதே ஒழிய ஒருபோதும் தன்னை பதி என உணர்வதில்லை. அதேபோல தமிழகத்தின் இரண்டாவது பெரிய சமய தத்துவமான ராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் பெருமாளின் பாதங்களில் சென்றடையும் முக்தியையே முன்வைக்கிறது. ஆகவே வேதாந்தக்கருத்துக்கள் தமிழகத்தில் மெல்லமெல்ல மறைந்தன.

இவ்விரு தத்துவங்களும் பக்தி சார்ந்தவை என்பதைக் காணலாம். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இங்கே உருவாகி வளர்ந்த பக்தி இயக்கங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் இவை. பக்தி இயக்கங்களால் நிலைநாட்டப்பட்ட பெருமதங்களான சைவ, வைணவ மதங்களின் சாராம்சங்கள். வேதாந்தம் அடிப்படையில் பக்திக்கு எதிரானது. எப்போதும் தனிமனிதனை நோக்கிப் பேசுவதென்பதனால் அது பெருமதங்களுக்கும் எதிரானது. உண்மையில் வேதாந்தம் அதன் தூயநுலையில் ஒரு கலகக்குரலாகவே ஒலிக்க முடியும். அஹம் பிரம்மாஸ்மி என்று உணர்பவன் அதன் பின் மண்ணில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை மத- சமூக அமைப்புகள் கையாள்வது கடினம்.

வேதாந்தம் இந்திய மறுமலர்ச்சிக்காலத்தில் ஒரு மாபெரும் சீர்திருத்தக்கருத்தாகவே முன்வைக்கப்பட்டது என்பதை இப்போது நினைவுகூரலாம். அடிமைத்தனமும் சாதிபேதமும் சூழ்ந்திருந்த ஒரு காலகட்டத்தில் வேதாந்தத்தின் ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் ‘என்ற குரல் சமத்துவத்துக்கான குரலாகவே ஒலித்தது. அமைப்புகள் மனிதனை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பது தனிமனித விடுதலைக்கான அறைகூவலாக எழுந்தது. அறியாமை சூழ்ந்திருந்த காலத்தில் ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’ என்பது கல்விக்கான கோரிக்கையாக எழுந்தது.

இங்குள்ள எல்லாமே அதுதான் [ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்] அதை அறியும் நம் பிரக்ஞையும் அதுவே [பிரக்ஞானம் பிரம்மாஸ்மி] அறிதலும் அறிபடுபொருளும் அறிவுமாக இருக்கும் நாமே அதுதான் [தத்வமஸி]   அதை உணர்வுபூர்வமாக உள்ளறிந்து அதுவே தான் என அறிந்து இருப்பதே முழுமை நிலை [அகம் பிரம்மாஸ்மி]

தனிமை எப்போதும் அத்தனை முழுமை கொண்டிருந்ததில்லை என்றுணர்ந்தான். தான் என்னும் உணர்தல் ஒருபோதும் அத்தனை நிறைவளித்ததில்லை. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.).

மணக்குடவர் உரை
தன்னுயிரானது தானென்று கருதுங் கருத்து அறப்பெற்றவனை, ஒழிந்தனவாகிய நிலைபெற்ற உயிர்களெல்லாம் தொழும். உயிரென்றது சலிப்பற்ற அறிவை; தானென்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்கார மறுதல்.

மு.வரதராசனார் உரை
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

சாலமன் பாப்பையா உரை
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உயிரையும் பொருட்படுத்தாமல் செயலாற்றுவோனை உலகம் போற்றும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The One who get rids of thought of possessive feeling of my life, my body, mine and his/her ego (i.e., I) from his mind and enters a state of no-ego will be worshipped by all living organisms in this world.

Questions that I ask to the kid
Whom and Why does the living organisms in the world respect and worship?

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...