Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Tuesday, July 7, 2020

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

குறள் 218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] 

பொருள்
இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன்

இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.
இல் - இல்லை 

பருவத்தும் பருவம்  - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை.

ஒப்புரவிற்கு - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம்.

ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல்.

ஒல்கார் - தளராதவர், அசையாதவர், மனமுடையாதவர்

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.

அறி - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
பிறருக்கு தானம் கொடுக்க முடியாத வறுமையான காலத்திலும் ஒப்புரவு (பிறருக்கு உதவி) செய்ய மனம் தளரமாட்டார்கள் உண்மையான ஒப்புரவாளார்கள். அவர்கள் வாழ்வின் முறையான கடன்களை அறிந்தவர்கள். ஆதலால் வறுமையிலும் பிறருக்கு உதவி செய்வது தனது கடமை என்று உணர்ந்தவர்கள். தன்னால் இயன்றதை கண்டிப்பாக உதவுவார்கள்.

செல்வம் இருக்கும் பொழுது உதவுவது நல்ல காரியம் தான். ஆயினும் கொடுத்து உதவ இல்லாத பொழுதும் உதவு முற்பட்டு உதவுவது மேலும் சிறப்பு. அப்பொழுது தான் ஒருவருடைய உண்மை பெருமை நமக்கு தெரியவருகிறது. ஒருவரின் கொடுத்து உதவும் இயல்பு தெரிகிறது.

பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்”, என்பார் பரிமேலழகர். அவர் “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்ற வழக்குக்கு முற்பட்டவராய் இருந்திருக்க வேண்டும்.

இத்தகு பண்பினரைப் பற்றிய நாலடியார் பாடல்கள்:
இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 91)                           

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு, பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் பண்பினருக்கு வானோரில்லத்து கதவு அடைபடாது, திறந்தே இருக்கும்.
எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். (நாலடியார் 150)

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர். 

“உறைப்பருங் காலத்து மூற்றுநீர்க் கேணி
இறைத்துணினு மூராற்று மென்பர் - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியோர்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணு மரிது” (நாலடி184)

“உறுபுன றந்துல கூட்டி யறுமிடத்தும்
கல்லூற் றழியூறு மாறேபோற் செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை” (நாலடி 185)

இதேபோன்று பழமொழிப் பாடல்களும் இத்தகுப் பண்பினரைப் பற்றி இவ்வாறு கூறுகின்றன: “ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைபிறந்த சான்றவன்” (பழமொழி 217). “கூஉய்க் கொடுப்பதொன்று இல்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்” (பழமொழி 162)

”செல்வ மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு மெய்யினால்
அல்லல் நல்குர வான போதிலும் வல்லர்” (பெரிய.இளையான்குடி 6)

“வெள்ளநெடு வாரியற வீசியுள வேனும்
கிள்ள வெழு கின்ற புனல் கேளிரின் விரும்பித்
தெள்ளுபுன லாறுசிறி தேயுதவு கின்ற
உள்ளது மறாதுதவும் வள்ளலையு மொத்த” (கம்ப.வரைக் காட்சி 23)

“தாமுத லோடுங் கெட்டா லொழிவரோ வண்மை தக்கோர்” (கம்ப.சேதுபந்தனப் 18)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார், கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
செல்வம் விரிவற்ற காலத்திலும் ஒப்புரவிற்குத் தளரார்: ஒப்புரவை யறியும் அறிவுடையார். இது செல்வம் விரிவில்லாத காலத்தினும் செய்யவேண்டு மென்றது

மு.வரதராசனார் உரை
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
உதவும் குணத்துக்கு வறுமை தடையாகாது.

Monday, July 6, 2020

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
அரும் - அரிய
கேடன் - கெட்டவன், கேடுடையவன்; அழிப்பவன்.
அருங்கேடன் - கேடுகள் தன்னைச் சூழாதவன் என்பவன் (அரும் கேடன் – கேடுகளுக்கு அரியவன், அவை இல்லாதவன்)

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்

மருங்கு - பக்கம்; விலாப்பக்கம்; இடை; வடிவு; எல்லை; இடம்; சுவடு; சுற்றம்; குலம்; ஒழுங்கு; செல்வம்; நூல்.

ஓடித்  - ōṭu-   5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல் (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல் திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல் அவன் எதைச் செய்யத்/  

தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.

செய்யான் - ceyyāṉ   n. id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான் Loc.  ; சிவந்தவன்; ஒருபூரான்வகை.

செய்யான்  - செய்யமாட்டான்

எனின் -என்றால், என்றுசொல்லின்; என்கையால்.

முழுப்பொருள்
அரும் என்றால் அரிய /அரிதான என்று பொருள். ஆதலால் மிக அரிதாக கேடு சூழப்பட்டவன் (அல்லது கேடே சூழாத) ஒருவன் இருப்பான் என்றால் அவன் யார்? நெறிநூல்கள் படி வாழ்ந்து யாதொரு தீதும் (தீவினையும்) செய்யாத ஒருவன் என்று பொருள். ஏனெனில் தீவினை செய்தவனுக்கு கேடுகள் அவனை சூழும். ஆதலால் கேடுகள் சூழாதவனை தீவினை செய்யாதவன் என்று பொருள் கொள்ளலாம். 

முற்பிறவியில் தீவினை செய்யாது இருந்திருந்தால் இம்மையில் கேடுகள் இருக்காது. இம்மையில் தீவினை செய்யாது இருந்தால் இம்மையிலும் கேடுகள் இருக்காது மறுமையிலும் கேடுகள் இருக்காது. 

முற்பிறவியில் செய்த தீவினையின் பயனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்கு பரிகாரம் இல்லை. ஆனால் இம்மையில் தீவினை செய்யாமல் இருந்தால் இம்மையிலும் மறுமையிலும் கேடுகள் சூழாதிருக்க செய்ய முடியும். 

ஆதலால் எப்பொழுதும் தீவினை செய்யாதே. தீவினை செய்தால் அதன் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.).
 
மணக்குடவர் உரை
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

சாலமன் பாப்பையா உரை
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தீங்கிழைக்காதவனைத் தீமை அண்டாது.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீயவை - தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

செய்தார் - செய்தவர்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

நிழல் - சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்

தன்னை - தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது 

அடி – அவருடைய அடியை ஒற்றியே

அடி – பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை

உறைந்து - உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
ஒருவன் தீவினை செய்தால் முதலில் அவன் அவனுக்கே கேடு செய்துக்கொள்கிறான். அவன் செய்த தீவினை நிழல்ப்போல அவனை பின்தொடர்ந்து அவனை கொல்லும்/தண்டிக்கும். நிழலின் அளவு நேரத்திற்கு ஏற்ப வெளிச்சத்திற்கு ஏற்ப வெளிச்சத்தின் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆதலால் நிழல் பெரிதாகி தொலைவில் இருப்பது போலக்கூட தோன்றும். சில சமயம் மழுப்புவது போலவும் தோன்றும். ஆனால் எல்லா நிழலும் ஒருவனின் காலடியில் தான் தங்குகிறது.  அதுப்போல ஒருவன் செய்த வினை அவன் உள்ளே தான் தங்கும். ஆதலால் தீவினை செய்தால் அக்கேட்டை செய்த குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. 

என்ற குறளையும் இங்கு தொடர்புபடுத்திக்கொள்ளலாம்.

ஒப்புமை
அகநானூற்று (49:15) வரியான, “செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழற் போல” என்பதும்,  கலித்தொகை (61:8-9)  பாடல் வரியான் “நிழல்போற்றிரி தருவாய் என்னீ பெறாததீதென்”  என்பதும் நிழல் நம்மைத் தொடர்ந்து வருதலை குறிப்பதாகிய அறிவியல் உண்மையை உணர்த்தும் சங்கப்பாடல்கள். முழுக்கருத்தையும் சொல்லும் பாடலாக , “செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே” சுந்தரரின் தேவாராப்பாடலைச் (4) சொல்லலாம். 

”நீலமா மணிநிற நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான்விளை
காலமோர்ந் துடனுறை கடிய நோயனாள்” (கம்ப.சூர்ப்பனகை.8)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.).

மணக்குடவர் உரை
தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும். மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

மு.வரதராசனார் உரை
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
தீமையின் பலன் செய்பவனின் நிழல்.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனைப் -  என்ன; எவ்வளவு; எல்லாம்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

உற்றாரும் -  உற்றார் உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உய்வர் - உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

வினைப் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சென்று - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

முழுப்பொருள்
எவ்வளவு பெரிய பகையை பெற்றாரும் அப்பகையில் இருந்து தப்பித்து பிழைத்துவிடக்கூடும். ஏனெனில் இரு பகைவர்கள் இணக்கமாக வாய்ப்புகள் உண்டு (மன மாற்றம், மன்னிப்பு, தூது, அரசியல் நெருக்கடிகள், வலிமை, சரண்).   ஆனால் தீவினை செய்து வந்த பகை அழியவே அழியாது. அப்பகை தீவினை செய்தவனை பின்தொடர்ந்து கொல்லும். தப்பித்து பிழைக்கவே முடியாது. ஏனெனில் அதற்கு பரிகாரம் இல்லை. ஆதலால் தீவினை செய்வதால் உனக்கு நீ கேட்டினை விதைக்கிறாய். அதைக் கண்டிப்பாய் அறுவடைசெய்வாய். ஆதலால் தீவினை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மஹாபாரதத்தில் தூது செல்கிற பொழுது தருமன் / யுதிஷ்டிரன் கூறுகிறான் "ஒரு எதிரிக்கு நீ கேடு செய்ய புறப்படுகிறாய் என்றால் முதலில் நீ உனக்கு கேடு செய்துகொள்கிறாய் என்றே அர்த்தம்". ஆதலால் தீவினையைச் செய்யாதே. 

வினைப்பகையை வென்றான்” என்று கம்பராமாயணப் பாடல் (ஊர்தேடுபடலம்:166) சொல்லுவதன் மூலம், தீவினையைப் பகையென்று பின்னர் வந்த கம்பரும் சொல்கிறார். சிலப்பதிகாரம், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” என்றும்,  “ஒழிகென ஒழியாதூட்டும் வல்வினை” என்றும், மணிமேகலை, “ உம்மை விநை வந்துருத்தல் ஒழியாது” என்றும் கூறுவது இக்குறள் கருத்தை ஒட்டித்தான். தேவார மூவருள் ஒருவரான, சுந்தரரும், “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்”,  “முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வினைப்பகையை வென்றான்” (கம்ப.ஊர்தேடு.166)

“செய்ததன் பயம்பற்று விடாது” (கலி 59:25)

“சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன்
வாள்வாய்நன் றாயினும் அஃ தெரியாது விடாதேகாண்” (கலி 149:10-11)

“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி 103)

“வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது” (நாலடி 109)

“ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்” (சிலப்.பதிகம் 57)

“ஒழிகென ஒழியா தூட்டும் வல்வினை” (சிலப்.பதிகம் 10:171)

“உம்மை வினைவந் துருத்தல் ஒழியாது” (மணி 26:32)

“ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது” (இறை சூ 2 உரை)

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்” (சம்பந்தர்.திருநீலகண்டப் 1)

“முன்ச் செய்வினை யிம்மையில் வந்து மூடும்” (சுந்தரர்.புறம்பயம் 7)

“முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” (சுந்தரர்.திருவிடைமருதூர் 4)

“அல்லித்தா ளற்ற போது மறாத நூ லதனைப் போலத்
தொல்லைத்தம் முடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக் கொண்டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்
றெல்லையி றுன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்க ளன்றே” (சீவக 2876)

“வெவ்வினை வந்தென வருவர் மீள்வரால்...” (கம்ப.கலன்காண் 30)

“நீயயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறி வமைந்தாய்
தீவினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தால்
ஏயின வுறத்தகைய இத்துணைய வேயோ” (கம்ப.இராவணன் மந்திரப் 48)

“உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம்போல்” (கல் 10:1-2)

பரிமேலழகர் உரை
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எதிரிகளிடம் தப்பிக்கலாம். செய்யும் கெட்டகாரியங்கள் விடாது.

English Meaning - As I taught a kid - Rajesh
We can can escape or end the enmity in the heart. But any bad action/thing that we do to others will always hurt/kill us back badly in some or other because people will never forget what we do them. Hence, we should not do bad things in life.

Questions that I ask to the kid
Can we escape from effects of bad actions?

Sunday, July 5, 2020

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

தீர்ந்த -  தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை

பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).

சொல்லார் - சொல்லமாட்டார்கள் 

மருள் -  மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு

தீர்ந்த -  தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.

மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.

அறு - aṟu   II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu   IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu   VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.

அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

அவர்க்கு - அவருக்கு

முழுப்பொருள்
மயக்கம் போக்கி /அழித்து அழுக்கு குற்றம் தீமை ஆகியவற்றை அறுத்து மெய்/உண்மை தரிசனத்தை அடைந்தவர் அறிவுடையோர். அத்தகைய அறிவுடையோர் ஒருபொழுதும் மறந்தும் கூட பொருளற்ற சொற்களை பயனற்ற சொற்களை அறமற்ற சொற்களை சொல்லமாட்டார்கள். 

ஆதலால் பயனற்ற சொற்களை பேசுவோர் அறிவுடையோர் அல்லர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”......................மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” (குறள் 352)

பரிமேலழகர் உரை
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது). 

மணக்குடவர் உரை
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

மு.வரதராசனார் உரை
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அறிவு தெளிந்தோர் உளற மாட்டார்.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அரும் - அருமை - அபூர்வம், மேன்மை, வருத்தம், இன்மை,

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

ஆயும் - ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல்

அறிவினார் - அறிவு உடையவர்கள்

சொல்லார் - சொல்லமாட்டார்கள் 

பெரும் - பெரிதான; மூத்த; இன்றியமையாத, பெருமை

பயன்  - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல்லாத - இல்லை, வறுமை

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.    

முழுப்பொருள்
மேன்மையைத் தரக்கூடியச் சொற்களை அரிதானப் பயனை தரக்கூடிய சொற்களை நுணுகி அசைப்போட்டு ஆராய்வோர் அறிவுடையோர்கள். அத்தகைய அறிவுடையோர் பெரிய பயன்களை விளைவிக்கும் சொற்களையே பேசுவார்கள். சிறிய சராசரியான பயனை விளைவிக்கும் சொற்களைக்கூட பேசமாட்டார்கள். சிறிய பயனை விளைவிக்கும் சொற்களையே பேசமாட்டார்கள் பேசக்கூடாது என்றால் அவர்கள் பயனற்ற சொற்களை பேசவே கூடாது பேசவும் மாட்டார்கள். 

மேலும், ”அரும்பயன் ஆயும் அறிவினார்” - அதாவது அறிவினார் அரும்பயன் தரக்கூடியவற்றை ஆய்வர் என்றே கூறப்பட்டுள்ளது. அதவாது அரும்பயன் தரக்கூடியவற்றை தனது மனதில் சிந்திப்பர், அதையே தியானித்து செயல்படுத்தி வெற்றிக்கண்டு பயனை அறுவடை செய்வர். ஆதலால் அவர்கள் பேசினால் அரும்பயன் தரக்கூடியவற்றையே பேசுவர். அத்தகையோர் பெரும்பயன் அல்லாதவற்றை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.

ஒருவிதத்தில் பார்த்தால் அவர்களுடைய ஆக்க சக்தியை ஆன்ம சக்தியை அவர்கள் சேமித்து வைத்துக்கொள்ள இது உதவும். பெரிய செயல்கள் நம்மை கைவிடாது. சிறிய செயல்கள் நம்மை கைவிடும். அதுபோலவே சொற்களும். பெரும் பயன் தரும் சொற்களை கண்டடைந்தால் அது நமக்கு நன்மையை  தரும். அதுவே சிறியபயன் தரும் சொற்களையும் பயனற்ற சொற்களையும் பேசிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையை சதா ஓடிக்கொண்டு தொலைப்பதுப்போல தொலைத்துவிடுவோம். 

"குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்" என்ற குறளுடன் இக்குறளைத் தொடர்புக் கொண்டு பார்த்தால் பெரியோர்கள் பெரும் பயன் தரும் சொற்களைப் பேசுவார்கள் ஆனால் சிறியோர் பேசும் சிறிய பயன் தரும் அல்லது பயன் தராத சொற்களை தவிர வேறு ஏதையும் பேசமாட்டார்கள்.  ஒரு வேளை பேசினாலும் செயல்படுத்தமாட்டார்கள்

சமீபத்தில் பாவண்ணன் எழுதிய ”பேச்சு கூட எவ்வளவு போதை தரக்கூடியது என்பதை அன்று நான் புரிந்துக்கொண்டேன்” என்ற ஒரு வரியை வாசித்தேன். அவ்வார்த்தை என்னிடம் ஒரு சிறு அசைவை ஏற்படுத்தியது. எவ்வளவு உண்மை. நானே பல நூறு என்ன சில ஆயிர மணி நேரங்கள் போனில் பேசி வீண் செய்து இருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன் இங்கு. நண்பர்களுடன் வீணான பல அரட்டைகளை என் இருபதுகளில் செய்து இருக்கிறேன். ஒரு தடவை 2008இல், என் நண்பரின் அண்ணனிடம் உரையாடலில் அவர் வருடத்திற்கு ஒரு தடவை தான் ரூபாய் மூவாயிரத்துக்கு தனது போனை ரீசார்ஜ் செய்வார் என்று கூறினார். ஆனால் அதில் ஐநூறு ரூபாய்க்கு கூட பேச மாட்டேன் என்றார். நான் அதிசயமாக, ஏன்? என்று அவரிடம் கேட்டேன். இருக்கு என்பதற்காக பேசுவதா? அவசியமில்லை. நேரமுமில்லை. நண்பர்களுக்கு 5-6 மாதங்களுக்கு ஒரு தடவை பேசினால் போதாதா என்று சொன்னார். சரி, நீ எவ்வளவு ரீசார்ஜ் செய்வாய் என்று கேட்டார். நான் சொன்னேன் 300 ரூபாய் மாதம் என்றேன். எவ்ளோ பேசுவ? என்று வினவினார். 300ரூபாயும் தீர்த்துவிடுவேன். நான் வெட்கும்படியாக ஏளனமாக என்னைப் பார்த்து சிரித்தார். அவர் ஏன் ஒரு நல்ல மருத்துவராக வளர்ந்து இருக்கிறார் என்று அப்பொழுது புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர் தனது ஆத்மசக்தியை செயலிலும் கற்றலிலும் பெற்றார். வீண் பேச்சுப் பேசி தன் நேரத்தையும் ஆத்மசக்தியையும் வீண் செய்யவில்லை.

மேலும், ஜெயமோகனின் வான்கீழ் சிறுகதையில் இவ்வரிகளை படிக்கும் பொழுதும் இக்குறள் எனக்கு நினைவிற்கு வந்தது


உதாரணம் 
குழந்தை பரதனோடு துஷ்யந்தன் அரண்மனை வந்தார் சகுந்தலை. ஏதும் அறியாதவன் போல துஷ்யந்தன் கீழ்வரும் வினாக்களைக் கேட்டான்:

” பெண்ணே நீ யார்? உன் கணவன் யார்? இந்தப் பையன் யார்? இங்கு ஏன் வந்தாய்?”

சகுந்தலை கூறினாள், “” மகனே! பரதா! உன் தந்தையை வணங்கு!”

அவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில்.

இடைச்செருகல்:
செவிக்கு நாம் கொடுப்பது செல்வம் என்று நினைத்து நாம் செவிக்கு செல்வத்தை கொடுத்தால் நாம் எவ்வளவு மேன்மை அடைய முடியும் என்பதை உணரமுடியும். ஆதலால் நாம் கேட்கும் நிகழ்ச்சிகள், காணொளிகள், youtube காணொளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கேட்போம். 

கேட்போர்க்கு ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்று கூறியதால் தான் பேசுவோர்/சொல்வோர்க்கு ‘குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் ’ என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். 

மேலும், மேடை என்பது ஏதோ ஒருவகையில் அறிவை (செல்வத்தை) கொடுக்கும் இடம் ஏனெனில் மற்றவர் செவிகளை நம்மிடம் ஒரு 30-60 நிமிடங்கள் கொடுக்கின்றனர். அதனை உணர்ந்து மேடையில் இருப்போர் பேசவேண்டும். மேடைகளை நகைச்சுவை மன்றம்போல், whatsapp பல்கலைகழக ஒலிபெருக்கிகள் போல் ஆக்கிவிட கூடாது. 


மேலும்: அஷோக் உரை

ஒரு கவிதை
நான் சொற்களை விதைப்பவன் அல்லன்
மேலும் விளைவிப்பவனும் அல்லன்
கனவான்களே
எனக்கு சொற்களை செரைக்க மட்டுமே தெரியும்
-- கவிஞர் சாமான்யன் (கவிதைத் தொகுப்பு: மயிர் வெட்டி)


பரிமேலழகர் உரை
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

மு.வரதராசனார் உரை
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சிந்திக்கத் தெரிந்தோர் வீண்பேச்சைத் தவிர்ப்பர்.

English Meaning - As I taught a kid - Rajesh
Wise and knowledgable people will  will always think about stuffs that will yield great valuable results that will benefit the society. Such persons will never utter or communicate words that doesn't yield results. That means they will never indulge in trivial talks, insignificant talks, gossips, meaningless debates etc. It is because they conserve their energy for greater things and also not to get distracted in silly things. Mouth is one of sense, apart from mindless eating, mindless futile speaking also should be controlled

Questions that I ask to the kid
what does knowledgble people think about ? (think about great useful things) and what they don't speak? (Trivial things, gossip)?
What does speaking trivial / gossip take away from you ? (energy. focus away from great things. it is a distraction.)

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]

பொருள்
நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)

நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.

இல  - இல்லை , இல்லாதவற்றை

சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சொல்லுக - நாம் எதை பேச வேண்டும் என்றால் ; சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.

சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

இல - இல்லை , இல்லாதவற்றை

சொல்லாமை - சொல்லாது இருத்தல் 

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.

முழுப்பொருள்
சான்றோன்: ஒருவனின் உயர்வை பல நிலைகளில் கூறலாம். வரிசையாக சொன்னால் மனிதன், கற்றவன், அறிஞன், புலவர், கவிஞன், சான்றோன் என்று கூறலாம். சான்றோர் எனப்படுவது உயர்ந்தபட்ச அளவுகோலாகும். 

சான்றோன் எனப்படுபவர் மிக உயர்ந்த இடத்தில வைக்கப்பட்டு இருக்கும் நபர். அவர் பல தகுதி நிலைகளை கடந்தே அந்நிலையை அடைந்தார். சான்றோர் மேன்மையின் உருவகமாவே பார்க்கப்படுவார். அத்தகையவரின் நாவில் இருந்து நயம் அற்ற சொற்கள் அதாவது மேன்மையற்ற சொற்கள், இனிமையற்ற சொற்கள், அன்பு அல்லாத சொற்கள், நீதி அற்ற சொற்களை பேசமாட்டார். அப்படி பேசினால் அவர் சான்றோர் அல்ல. 

ஆயினும் (அரிதான ஒரு சந்தர்ப்பத்தில்) சான்றோர் நயம் அல்லாத சொற்களை பேசினாலும் பேசாலும்/பேசக்கூடும் ஆனால் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசாது இருப்பது நன்று. நன்மை பயக்கும். 

அப்படியெனில் சான்றோர் நயம் அற்ற சொற்களை பேசலாமா? பேசக்கூடாது என்பதே பொதுவான விதி. பயனற்ற சொற்களை நயமற்ற சொற்களைவிடவும்  கீழான ஒன்று என்பதை அழுத்திச்சொல்லவே திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சான்றோரும் சினம் கொள்ள அரிதாக வாய்ப்பு உண்டு. அப்படி சினம் கொண்ட நேரங்களில் நயம் இல்லாத சொற்களை பேசக்கூடும். ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசக்கூடாது. (அது தேவையற்ற பிழையான முன்னுதாரணமாய் ஆகம்).

சான்றோர் பயனற்ற சொற்களை பேசக்கூடாது. பயனற்ற சொற்களை பேசுவோர் சான்றோர் ஆக முடியாது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.).

மணக்குடவர் உரை
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது

மு.வரதராசனார் உரை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நல்லதைப் பேசாவிடினும் பிழையில்லை. வெட்டிப்பேச்சு வேண்டாம்.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...