Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எனைப் -  என்ன; எவ்வளவு; எல்லாம்

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

உற்றாரும் -  உற்றார் உறவினர், சுற்றத்தார்; நண்பர்.

உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்
உய்வர் - உய்வு - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல்

வினைப் - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

வீ-தல் - vī-   4 v. intr. prob. vī. 1. Toperish; to cease; to disappear; அழிதல். வீயாச்சிறப்பின் (புறநா. 15). 2. To die; சாதல். சிலைத்தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 3. To leave;நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும்(குறள், 207). 4. To change; to deviate, as fromone's course; மாறுதல். வானின் வீயாது சுரக்கும்(மலைபடு. 76).

வீயாது - அழியாது

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

சென்று - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 3. To melt; உருக்குதல் அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக. 98). 4. To pound, as rice;குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா. 227). 5. Toconquer, subdue, as the senses, paṣsions;வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக. 1468).6. To trouble, afflict; வருத்துதல் கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு. சூரனமை. 59). 7. Todestroy, consume; அழித்தல் எல்லாப் புவனமும். . . அடுபவர் (கந்தபு. ஏமகூ. 18). 8. To kill;கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா. 36).  

முழுப்பொருள்
எவ்வளவு பெரிய பகையை பெற்றாரும் அப்பகையில் இருந்து தப்பித்து பிழைத்துவிடக்கூடும். ஏனெனில் இரு பகைவர்கள் இணக்கமாக வாய்ப்புகள் உண்டு (மன மாற்றம், மன்னிப்பு, தூது, அரசியல் நெருக்கடிகள், வலிமை, சரண்).   ஆனால் தீவினை செய்து வந்த பகை அழியவே அழியாது. அப்பகை தீவினை செய்தவனை பின்தொடர்ந்து கொல்லும். தப்பித்து பிழைக்கவே முடியாது. ஏனெனில் அதற்கு பரிகாரம் இல்லை. ஆதலால் தீவினை செய்வதால் உனக்கு நீ கேட்டினை விதைக்கிறாய். அதைக் கண்டிப்பாய் அறுவடைசெய்வாய். ஆதலால் தீவினை செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர். 

மஹாபாரதத்தில் தூது செல்கிற பொழுது தருமன் / யுதிஷ்டிரன் கூறுகிறான் "ஒரு எதிரிக்கு நீ கேடு செய்ய புறப்படுகிறாய் என்றால் முதலில் நீ உனக்கு கேடு செய்துகொள்கிறாய் என்றே அர்த்தம்". ஆதலால் தீவினையைச் செய்யாதே. 

வினைப்பகையை வென்றான்” என்று கம்பராமாயணப் பாடல் (ஊர்தேடுபடலம்:166) சொல்லுவதன் மூலம், தீவினையைப் பகையென்று பின்னர் வந்த கம்பரும் சொல்கிறார். சிலப்பதிகாரம், “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” என்றும்,  “ஒழிகென ஒழியாதூட்டும் வல்வினை” என்றும், மணிமேகலை, “ உம்மை விநை வந்துருத்தல் ஒழியாது” என்றும் கூறுவது இக்குறள் கருத்தை ஒட்டித்தான். தேவார மூவருள் ஒருவரான, சுந்தரரும், “முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடும்”,  “முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” என்பார்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“வினைப்பகையை வென்றான்” (கம்ப.ஊர்தேடு.166)

“செய்ததன் பயம்பற்று விடாது” (கலி 59:25)

“சூள்வாய்த்த மனத்தவன் வினைபொய்ப்பின் மற்றவன்
வாள்வாய்நன் றாயினும் அஃ தெரியாது விடாதேகாண்” (கலி 149:10-11)

“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி 103)

“வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது” (நாலடி 109)

“ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்” (சிலப்.பதிகம் 57)

“ஒழிகென ஒழியா தூட்டும் வல்வினை” (சிலப்.பதிகம் 10:171)

“உம்மை வினைவந் துருத்தல் ஒழியாது” (மணி 26:32)

“ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது” (இறை சூ 2 உரை)

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்” (சம்பந்தர்.திருநீலகண்டப் 1)

“முன்ச் செய்வினை யிம்மையில் வந்து மூடும்” (சுந்தரர்.புறம்பயம் 7)

“முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய” (சுந்தரர்.திருவிடைமருதூர் 4)

“அல்லித்தா ளற்ற போது மறாத நூ லதனைப் போலத்
தொல்லைத்தம் முடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப்
புல்லிக் கொண்டுயிரைச் சூழ்ந்து புக்குழிப் புக்குப் பின்னின்
றெல்லையி றுன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்க ளன்றே” (சீவக 2876)

“வெவ்வினை வந்தென வருவர் மீள்வரால்...” (கம்ப.கலன்காண் 30)

“நீயயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தறி வமைந்தாய்
தீவினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தால்
ஏயின வுறத்தகைய இத்துணைய வேயோ” (கம்ப.இராவணன் மந்திரப் 48)

“உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம்போல்” (கல் 10:1-2)

பரிமேலழகர் உரை
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும். அஃதாமாறு பின் கூறப்படும்.

மு.வரதராசனார் உரை
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.

English Meaning - As I taught a kid - Rajesh
We can can escape or end the enmity in the heart. But any bad action/thing that we do to others will always hurt/kill us back badly in some or other because people will never forget what we do them. Hence, we should not do bad things in life.

Questions that I ask to the kid
Can we escape from effects of bad actions?

No comments:

Post a Comment