குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
பொருள்
நயம் - nayam n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.
இல - இல்லை , இல்லாதவற்றை
சொல்லினும் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சொல்லுக - நாம் எதை பேச வேண்டும் என்றால் ; சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல்.
சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.
இல - இல்லை , இல்லாதவற்றை
சொல்லாமை - சொல்லாது இருத்தல்
நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.
முழுப்பொருள்
சான்றோன்: ஒருவனின் உயர்வை பல நிலைகளில் கூறலாம். வரிசையாக சொன்னால் மனிதன், கற்றவன், அறிஞன், புலவர், கவிஞன், சான்றோன் என்று கூறலாம். சான்றோர் எனப்படுவது உயர்ந்தபட்ச அளவுகோலாகும்.
சான்றோன் எனப்படுபவர் மிக உயர்ந்த இடத்தில வைக்கப்பட்டு இருக்கும் நபர். அவர் பல தகுதி நிலைகளை கடந்தே அந்நிலையை அடைந்தார். சான்றோர் மேன்மையின் உருவகமாவே பார்க்கப்படுவார். அத்தகையவரின் நாவில் இருந்து நயம் அற்ற சொற்கள் அதாவது மேன்மையற்ற சொற்கள், இனிமையற்ற சொற்கள், அன்பு அல்லாத சொற்கள், நீதி அற்ற சொற்களை பேசமாட்டார். அப்படி பேசினால் அவர் சான்றோர் அல்ல.
ஆயினும் (அரிதான ஒரு சந்தர்ப்பத்தில்) சான்றோர் நயம் அல்லாத சொற்களை பேசினாலும் பேசாலும்/பேசக்கூடும் ஆனால் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசாது இருப்பது நன்று. நன்மை பயக்கும்.
அப்படியெனில் சான்றோர் நயம் அற்ற சொற்களை பேசலாமா? பேசக்கூடாது என்பதே பொதுவான விதி. பயனற்ற சொற்களை நயமற்ற சொற்களைவிடவும் கீழான ஒன்று என்பதை அழுத்திச்சொல்லவே திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் சான்றோரும் சினம் கொள்ள அரிதாக வாய்ப்பு உண்டு. அப்படி சினம் கொண்ட நேரங்களில் நயம் இல்லாத சொற்களை பேசக்கூடும். ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் பயனற்ற சொற்களை சான்றோர்கள் பேசக்கூடாது. (அது தேவையற்ற பிழையான முன்னுதாரணமாய் ஆகம்).
சான்றோர் பயனற்ற சொற்களை பேசக்கூடாது. பயனற்ற சொற்களை பேசுவோர் சான்றோர் ஆக முடியாது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.).
மணக்குடவர் உரை
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது
மு.வரதராசனார் உரை
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
No comments:
Post a Comment