குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]
பொருள்
அரும் - அரிய
கேடன் - கெட்டவன், கேடுடையவன்; அழிப்பவன்.
அருங்கேடன் - கேடுகள் தன்னைச் சூழாதவன் என்பவன் (அரும் கேடன் – கேடுகளுக்கு அரியவன், அவை இல்லாதவன்)
என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )
அறிக - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்
மருங்கு - பக்கம்; விலாப்பக்கம்; இடை; வடிவு; எல்லை; இடம்; சுவடு; சுற்றம்; குலம்; ஒழுங்கு; செல்வம்; நூல்.
ஓடித் - ōṭu- 5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. To be dismantled; குலைதல் (பிங்.) 11. To pass, as inthe mind; எண்ணஞ் செல்லுதல் திருவுள்ளத்தில்ஓடுகிறதறியாதே (திவ். இயற். திருவிருத். 99, வ்யா.).12. To hasten; விரைதல் அவன் எதைச் செய்யத்/
தீவினை - பாவம்; கொடுஞ்செயல்; அக்கினிகாரியம்; தீவழிபாடு.
செய்யான் - ceyyāṉ n. id. 1. See செய்யவன், 1. செய்யானை வெண்ணீ றணிந்தானை (திருவாச.8, 13). 2. Red, venomous centipede; செம்பூரான் Loc. ; சிவந்தவன்; ஒருபூரான்வகை.
செய்யான் - செய்யமாட்டான்
எனின் -என்றால், என்றுசொல்லின்; என்கையால்.
முழுப்பொருள்
அரும் என்றால் அரிய /அரிதான என்று பொருள். ஆதலால் மிக அரிதாக கேடு சூழப்பட்டவன் (அல்லது கேடே சூழாத) ஒருவன் இருப்பான் என்றால் அவன் யார்? நெறிநூல்கள் படி வாழ்ந்து யாதொரு தீதும் (தீவினையும்) செய்யாத ஒருவன் என்று பொருள். ஏனெனில் தீவினை செய்தவனுக்கு கேடுகள் அவனை சூழும். ஆதலால் கேடுகள் சூழாதவனை தீவினை செய்யாதவன் என்று பொருள் கொள்ளலாம்.
முற்பிறவியில் தீவினை செய்யாது இருந்திருந்தால் இம்மையில் கேடுகள் இருக்காது. இம்மையில் தீவினை செய்யாது இருந்தால் இம்மையிலும் கேடுகள் இருக்காது மறுமையிலும் கேடுகள் இருக்காது.
முற்பிறவியில் செய்த தீவினையின் பயனை அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்கு பரிகாரம் இல்லை. ஆனால் இம்மையில் தீவினை செய்யாமல் இருந்தால் இம்மையிலும் மறுமையிலும் கேடுகள் சூழாதிருக்க செய்ய முடியும்.
ஆதலால் எப்பொழுதும் தீவினை செய்யாதே. தீவினை செய்தால் அதன் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்' (அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவதில்லை யென்று தானே யறிக. இது கேடில்லை யென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையா உரை
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
No comments:
Post a Comment