குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
[அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை]
பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.
தீர்ந்த - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.
பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை
பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā- 12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).
சொல்லார் - சொல்லமாட்டார்கள்
மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு
தீர்ந்த - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல்.
தீர்தல் - உள்ளதுஒழிதல்; முற்றுப்பெறுதல்; உரிமையாதல்; இல்லையாதல்; அழிதல்; கழிதல்; செலவாய்ப்போதல்.
மாசு - அழுக்கு; குற்றம்; மறு; மாறுபாடு; கருமை; இருள்; மேகம்; பாவம்; தீமை; தூளி; புழுதி; புன்மை; பால்வீதிமண்டலம்; மெய்ம்மலம்; நஞ்சுக்கொடி; பித்தநீர்; கோழை; கண்ணின்காசபடலம்; வலைவடம்; குழப்பினமா.
அறு - aṟu II. v. i. break as a rope does be cut asunder; அறுக்கப்படு; 2. be decided, be ended, தீர்க்கப்படு., aṟu IV. v. i. cease, end, தீரு; 2. vanish, become extinct, இல்லாமல் போ, aṟu VI. v. t. cut off, part asunder, வெட்டு; 2. kill by cutting the throat; 3. reap, அரி; 4. root out; 5. distribute, பகிர், 6. tease, worry, வருத்து; v. i. become a widow.
அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்
காட்சி -பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.
அவர்க்கு - அவருக்கு
முழுப்பொருள்
மயக்கம் போக்கி /அழித்து அழுக்கு குற்றம் தீமை ஆகியவற்றை அறுத்து மெய்/உண்மை தரிசனத்தை அடைந்தவர் அறிவுடையோர். அத்தகைய அறிவுடையோர் ஒருபொழுதும் மறந்தும் கூட பொருளற்ற சொற்களை பயனற்ற சொற்களை அறமற்ற சொற்களை சொல்லமாட்டார்கள்.
ஆதலால் பயனற்ற சொற்களை பேசுவோர் அறிவுடையோர் அல்லர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”......................மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” (குறள் 352)
பரிமேலழகர் உரை
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது).
மணக்குடவர் உரை
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.
மு.வரதராசனார் உரை
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
No comments:
Post a Comment