Sunday, March 8, 2020

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

குறள் 394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
உவப்பத் - உவப்பு - மகிழ்ச்சி; களிப்பு; பொலிவு; விருப்பம்; உயரம்; விளையாட்டு; மேடு

தலைக்கூடி - தலைக்கூடுதல் - ஒன்றுசேர்தல்; நிறைவேறுதல்

உள்ளப் - உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

அனைத்தே - அனைத்து - அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம்

புலவர் - புலமையோர்; பாவாணர்; ஞானிகள்; தேவர்; குறுநிலமன்னர்; கூத்தர்; கம்மியர்; ஓவியம்முதலியகலைவல்லார்; சாளுக்கியர்; ஒருவகைச்சாதியார்; சிலஇனத்தவரின்பட்டப்பெயர்

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு

முழுப்பொருள்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது அவ்வையாரின் மூதுரைப்பாடல். அதுவும் நற்றாமரைக் குளத்தில் நல்ல அன்னப்பறவை வந்து சேருவது போல. யாரோடு யார் சேர்வர் என்பதைச் சொல்லும் அழகான பாடல்

“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

விளம்பிநாகனாரின் நான்மணிக் கடிகைப் பாடலொன்று, “கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்” என்கிறது. அதாவது கல்வி அறிவை உடையவர்களை விரும்பிச் சேர்பவர்களும் கற்றவர்களே.

ஞானிகளின் புலவர்களின் புலமைபெற்றவர்களின் செயல் அல்லது அவர்களின் பெருமையென்ன?
மற்றவர்கள் கூடி வரும் பொழுது அவர்கள் உள்ளம்  மகிழுமளவு கலந்து பேச வேண்டும். உள்ளம் எப்பொழுது மகிழும்? இருவரும் ஒருவருக்கொருவர் தாங்கள் கற்றதையும் பெற்றதையும் பகிர்ந்துக்கொள்ளும் பொழுது ஏற்படும். அது கற்பதனால் ஏற்படும். இப்படி கலந்து பேசி உள்ளம் உவகையில் இருக்கும் பொழுது பிரிய நேரிடும். அப்போது மீண்டும் இவரை  எப்பொழுது சந்திப்போம் என்று ஏங்க வேண்டும். அத்தன்மைவாய்ந்ததே புலவரின் பெருமையாகும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தவலரும் தொல்கேள்வித் தன்மை யுடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ
நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்
தும்பர் உறைவார் பதி” (நாலடி 137)

பரிமேலழகர் உரை
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.

மு.வரதராசனார் உரை
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
காட்சிக்கு - பார்வை; காணல்; தோற்றம்; தரிசனம்; கண்காட்சி; வியத்தகுகாட்சி; காட்சியளவை; அறிவு; தலைமகளைத்தலைமகன்முதலில்காணுதலைக்கூறும்கைக்கிளைத்துறை; வீரர்வீரபத்தினியர்க்குஏற்றநடுகல்லைஆராய்ந்துகாணும்புறத்துறை; நடுகல்லைவீரர்தரிசித்தலைக்கூறும்புறத்துறை; அழகு; தன்மை; நூல்.

எளியன் - வறியவன்; இலகுவாய்அடையப்படுபவன்; வலியில்லாதவன்; அறிவில்லாதவன்; குணத்தில்தாழ்ந்தவன்.

கடுஞ்  - கடுமை - கொடுமை; கண்டிப்பு; கடினம்; வன்மை; மிகுதி; விரைவு; வெம்மை; மூர்க்கம்; சினம்.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அன் - ஆண்பால்வினைவிகுதி; தன்மையொருமைவிகுதி; ஆண்பால்பெயர்விகுதி; ஆண்பால்வினையாலணையும்பெயர்விகுதி; சாரியை எதிர்மறைகாட்டும்வடமொழிமுனனொட்டுத்திரிபுசொல்.

அல்லனேல் - இல்லையென்றால் 

மீக்கூறு - புகழ்.
மீக்கூற்றம் - புகழ்; மேலாகமதிக்கப்படுஞ்சொல்.
மீக்கூறு-தல் - mī-k-kūṟu-   v. tr. மீ² +.To praise; உயர்த்துக்கூறுதல். மீக்கூறு மன்னனிலம் (குறள், 386).

மீக்கூறும் - புகழ் பேசப்படும்

மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

முழுப்பொருள்
அரசனிடம் அல்லது அரசனின் அமைச்சர்களிடம் அல்லது அரசாங்க அலுவலகத்திடம் நீதிக்கோ உதவிக்கோ வந்தால் வருபவர் காண்பதற்கு தோற்றத்தால் அறிவினால் வறியவராக (எளியவராக, அறிவில்லாதவராக) தோன்றினால் அவரிடம் மனம் வருந்தக்கூடிய கடுமையான வன்மையான சொற்களை பேசாது சினத்தை காண்பிக்காது இருந்தால் அவ்வரசரையும் அந்த அரசையும் அந்த நாட்டையும் போற்றி புகழ் பாடும் இவ்வுலகமும் இந்நாட்டு மக்களும்.

புறநானூற்றுச் செய்தியொன்று சங்கக்காலத்து சேரமன்னனான இரும்பொறை நாட்டினை இவ்வாறுப் போற்றுகிறது.
“மாந்தரல் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே 
புத்தேளுலுகத் தற்றெனக் கேட்டுவந்து” (புறம் 22:34-5).

ஆள்பவர்கள் காட்சிக்கு எளியராயும், இனியமொழி உடையராகவும் இருத்தலை, கீழ்காணும் புறநானூற்று வரிகள் தெரிவிக்கின்றன.
“முறைவேண்டும் பொழுதில் பதன் எளியேன்”, (புறம்: 35:15)
“இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும”  (புறம்: 40:9)

“காட்சிக்கெளியானும் ஆம்” (அப்பர்.கருகாவூர்.4)

“நகுதக் கனரே நாடுமீக்கூறுநர்” (புறநா.72:1)

மேலும்: அஷோக் உரை

‘ராஜாதி ராஜ வேஷா ராஜனுத லலித பாஷா” என்கிறார் தியாகராஜர். அரசனுக்கரசனாக தோற்றமளிப்பவன். அரசனுக்குரிய எளிமையான பேச்சு கொண்டவன்” ராமன் ஒரு கனவு. ஓர் இலட்சியம்.

பரிமேலழகர் உரை
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .
(முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.).

மணக்குடவர் உரை
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா உரை
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)

Thirukkural - Management - Leadership
People admire, appreicate, follow, and respect a leader who is: 1) easy to access by the people, that is., approachable and there are no barriers, physical and psychological, around him and 2) he never uses harsh and intimidating words, that is., he is always soft spoken irrespective of conditions and situations.

That King is to be extolled
Who is easy of access and soft-spoken.

When a leader practices these two principles with respect to the people he leads, he will make his institution, organization, society or nation prosperous. 


நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நல்லவை  - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

எல்லாஅம் -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.

தீய - தீமையான; போலியான

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

தீயவும் -  தீமையான; போலியான

நல்ல நன்மையான; மிக்க; கடுமையான.

ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

செயற்கு - செய்வதற்கு

முழுப்பொருள்
நற்செயல்கள் செய்வதற்கும் செல்வம் ஈட்டுவதற்கும் எல்லா சூழ்நிலைகளும் (அதாவது திட்டம், இடம், காலம், மனித வளம் போன்ற சூழ்நிலைகள்)  சரியாக அமைந்தாலும் ஊழ் தீயதாக அமைந்திருந்தால் அச்செயலில் வெற்றிகொள்ளவோ அல்லது செல்வம் ஈட்டவோ முடியாது. அதேப்போல் நம்முடைய சூழ்நிலைகள் சரியாக இல்லையென்றாலும் ஊழ் நமக்கு சாதகமா இருந்தால் நமக்கு அச்செயலில் வெற்றியும் செல்வமும் கிட்டும். அதுவே ஊழின் வலிமையாகும்.

ஊழானது நாம் செய்யும் கர்மத்தின் (காரியத்தால்) பலன்களால் வரும். இப்பிறவியில் செய்யும் கர்மம் இப்பிறவியிலேயே பலனை காண்பிக்கும் அல்லது அடுத்தபிறவியிலும் ஊழாக வரும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஊழ்வினை உறுத்து வந்தூட்டலை” நினைவு கொள்ளவேண்டும்.

பி.கு: எனக்கு இன்னொரு அர்த்தமும் தோன்றுகிறது. நமக்கு நடக்கும் நல்லவையெல்லாம் நன்மைக்கு என்று அர்த்தமில்லை. அது ஒரு விதத்தில் தோல்வியை தள்ளிப்போடுகிறது. அதனை அப்பொழுது எதிர்க்கொள்வது கடினமாகக்கூட இருக்கும். அந்நிலையில் செல்வம் ஈட்டுவது கடினமாக இருக்கும். அதலால் அது தீதே. ஆதலால் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருக்காது என்று உணர்ந்து உழைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுப்போல் இன்று நமக்கு வரும் தீயவை நமக்கு பல துன்பங்களை தரலாம் ஆனால் அவையெல்லாம் நன்மைக்கே. அந்தக் கடினமான காலங்களை கற்பதற்கான பக்குவமடைவதற்கான காலமாக உணர்ந்து உழைத்தால் நன்மைகள் வரும்பொழுது அது நெடுங்காலம் நிலைத்து நிற்க ஏதுவாக இருக்கும். நல்லவைப்பின் தீதும், தீயவற்றின் பின் நன்மையும் ஒருவரின் தலைவிதி அல்லது ஊழ் என்று ஒருவர் உணரவேண்டும். ஊழை மதித்து வெற்றியில் மமதை கொள்ளாமல் தோல்வியில் சோர்வு கொள்ளாமல் செயல்லாற்றவேண்டும்

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நன்மையும் தீமையன்றோ நாசம்வந்துற்ற போது” (கம்ப.மாரீசன்.202)

பரிமேலழகர் உரை
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு, நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை' 'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற் பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.

மணக்குடவர் உரை
செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

மு.வரதராசனார் உரை
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா உரை
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

Thirukkural - Management - Fate
When your fate is against you, all positive intentions, behavior, and efforts will result in negative consequences. However, when your fate is favorable to you even negative intentions, behavior, and efforts will result in positive consequences, reveals Kural 375. When you reflect on this Kural, you will have many personal incidents to prove the validity of the thought in the Kural.

Favorable means prove adverse, adverse help
When fate intervenes.

When your fate is unfavorable to you, that will make you lose all your wealth and knowledge and prevent you from putting in sincere efforts. Whereas, when your fate is favorable to you that will make you gain more wealth, knowledge, and help you put in sincere efforts. 

English Meaning - As I taught a kid - Rajesh
When we want to do good work, earn money even if all the circumstances (i.e., plan, place, time, resources, human resources etc.) happens correctly, if the fate is bad, we might not be successful or earn the money. At the same time, some times even if our circumstances doesn't happen correctly, we might still succeed in our task and earn money. That is because of fate.

Fate comes because of our karma. Karma can show its effect in this birth itself or in next birth.

Also, one has to understand that if we are continuously succeeding it doesn't mean it is because of us/you (so don't have the ego that it is because of you), our fate could just be postponing our failure. So, we need to be humble and do our work sincerely in the present and future. if one is failing it can be because of us and it can be because of fate too. So, don't get bogged down. Do your work sincerely. Your efforts will succeed one day.

Questions that I ask to the kid
Even if circumstances are favourable, it turned out harmful? Why? How should I react?
Even if circumstances are not favorable, it turned out beneficial? Why? How should I react?

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
உய்தி - ஈடேற்றம், உயிர்வாழ்தல், தப்பிப்பிழைத்தல், நீங்குகை
உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல்

தூ - ஓர்உயிர்மெய்யெழுத்து(த்+ஊ); தூயது; தூய்மை; வெண்மை; பற்றுக்கோடு; வலிமை; பகை; இறைச்சி; பறவையின்இறகு; இகழ்ச்சிக்குறிப்பு.

உய்மை - உயிர்வாழ்தல்

என்பது - என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

மற்று -  ஓர்அசைநிலை; மற்றவை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு

வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி
வாய்மை - உண்மை ; மெய்ப்பொருள்

வேண்ட - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வரும் - வரும் ; வந்து சேரும் 

முழுப்பொருள்
தூ என்றால் தூய்மை அதாவது மனத்தூய்மை என்று பொருள். மனத்தூய்மை என்பது ஆசையில்லாமல் இருப்பதால் வரும். ஆசையில்லாமல் இருப்பது உண்மைப்பொருளாம் மெய்ப்பொருளை வேண்டுவதால் வரும். பொருள் அல்லாதவற்றை விரும்பாது பொருளுள்ள மெய்ப்பொருளை வேண்டினால் மனத்தூய்மை வரும்.  வாழும்போது தூய்மையும், உயர் மெய்ப்பொருளைத் தேடி அடைவதும், மீண்டும் பிறவாது வீடுபேறினை அடைவதற்கான வழிகள்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

மு.வரதராசனார் உரை
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

Saturday, March 7, 2020

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

குறள் 355
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

எப்பொருள் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும்

எத் - எந்த 

தன்மைத்து - தன்மை -  குணம்; இயல்பு; நிலைமை; முறை; பெருமை; ஆற்றல்; நன்மை; மெய்ம்மை; தன்னைக்குறிக்குமிடம்; ஒரணி.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

அப்பொருள் - அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... )

மெய்ப்பொருள் - உண்மை, உண்மையான நிலையான மெய்ப்பொருள் என்னவென்று

காண்பது - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
தன்மை என்றால் குணம், இயல்பு, நிலைமை, முறை, பெருமை, ஆற்றல், நன்மை, மெய்ம்மை என்று பொருள்கள்/அர்த்தங்கள் உண்டு. 

ஆதலால் பொருள் எனப்படும் சொற்பொருள், செய்கை, தத்துவம், அறிவு, அறம், வீடுபேறு, தலைமை ஆகிய எதுவாயினும் அவை எத்தன்மைத்தாயினும் (அதாவது அதன் குணம் (நற்குணம், தீ குணம்), இயல்பு, நன்மை/தீமை என்று எத்தகையதாயினும்)  அப்பொருளின் உண்மையான நிலையான மெய்ப்பொருள் அதாவது உண்மை என்னவென்று ஆராய்ந்து அறிந்து காண்பதே அறிவு எனப்படும் ஞானம், கல்வி ஆகும்.

இதற்கு முன்பு இதேப்போன்ற சொற்தொடர் கொண்ட ஒரு குறள் "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று அறிந்தோம். அதில் யார் சொல்லி கேட்டாலும் மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராயவேண்டும் என்று கூறியிருந்தார். இக்குறளில் எப்படிப்பட்ட தன்மையுடைய தாயினும் அதனுடைய மெய்ப்பொருளை நாம் தான் அறிந்து ஆராய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழியைச் நாம் அறிவோம். ஒரு பொருள் (கருத்துக்கூட) ஒளிரும் பொருளாய் தோற்றமளித்தாலும், அப்பொருளின் உண்மைத்தன்மையை அறிவதே உண்மையான ஞானம் செய்யும் செயல் ஆகும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது. (பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால் , காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான்,இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினதுஇலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம். மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.

மு.வரதராசனார் உரை
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

சாலமன் பாப்பையா உரை
எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

Thirukkural - Management - Truthfulness
True knowledge is the ability to understand the truth behind people, things and events, according to Kural 355.

The mark of wisdom is to see the reality 
Behind each appearance.

Checking for truth in others' advice, ideas and suggestions is a challenge, but the challenge is a 
very fruitful effort. If we do not verify the validity and listen to everything that others say, we will lead someone's life instead of our own.

Accepting things without analyzing the truth in them and implementing them may lead to negative consequences. Do not accept the statements made by others at the superficial level. Go deep into the ideas, advice and suggestions, analyze them, understand them, and accept them. Analyzing the information, understanding the meaning and accepting the fact will help you gain profound knowledge.

Friday, March 6, 2020

Kural 0345 - ⚖️ உடல் எனும் பாத்திரமே சுமை - The body itself is a burden.

💡 குறளின் குறிக்கோள் – A Glimpse into Timeless Wisdom

Key Questions

  • Universal: How can I truly be free from suffering and the cycle of life and death?

  • Universal: Is renouncing material things enough, or is there something deeper I must let go?

  • Universal: Why do relationships and social ties bind me if I seek freedom?

  • Aristotle (Ethics & Cause): What is the ultimate cause that sustains human suffering and prevents eudaimonia (true flourishing)?

  • Socrates (Self-Knowledge & Examined Life): How must one examine and detach from the illusions of self to achieve the examined life and true wisdom?

  • Heidegger (Existential Being & Authenticity): What must one confront to transcend the ‘thrownness’ of existence and live authentically?

  • Buddhist Scholars (Dukkha & Non-Self): What is the ultimate form of attachment that fuels samsara, and how can one uproot it

  • Religious Mystics (Christian, Sufi, Vedantic): How do I surrender the ego and worldly ties to unite with the Divine?
  • Psychologists (Identity & Attachment): What psychological constructs sustain the ego’s attachment and cause suffering?

Key Insight

Thiruvalluvar: True liberation comes only when one severs not just desires, but the very identification with the body itself—the root source of all attachments, suffering, and rebirth.


📜 திருக்குறள் – The Kural — Core Text & Translation

குறள் 0345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

English Translation

What use are bonds or ties to one who severs birth itself
Even the body, to such a one, is excess.

Purpose of This Kural

To reveal that true liberation demands total detachment—even from one’s own body. It urges the seeker to recognize the body not as a vessel, but as a source of bondage. The Kural challenges the aspirant to go beyond superficial renunciation to the root of identity.

Relevance / Need in Today’s Context

This Kural is vital for those nearing spiritual maturity, yet subtly attached to self and relationships. It exposes how even noble aspects like family and form can entangle the soul. In a world driven by identity and attachment, this insight remains profoundly timeless


🔤📚🧭 சொற்களின் பொருளும் அமைப்பும் சூழலும் – Meaning, Composition, & Context


(Building blocks of the verse)

சொற்களின் பொருளுரைகள் — Word Meanings in Tamil

மற்றும் - மேலும்; மீண்டும் தொடர்ப்பாடு - தொடர்ச்சி; பற்று; காமநுகர்ச்சி. எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. எவன்கொல்? - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும் பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம். அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல் கல் - kl --கல்லு, கிறேன், கல்லினேன், கல்லுவேன், கல்ல, v. a. To work away earth, pebbles, &c., gradually, அகழ. 2. To dig out by little and little--as a hole, a tank, &c., to hollow, தோண்ட. 3. To scoop out --as a nut, துருவ. 4. To wash away earth, &c., by little and little-as following water, நீர்கல்ல. 5. To eat away--as caustic, அரிக்க. 6. [prov.] To catch and tear up the fibre in an ola when writing--as a style by being too sharp. எழுத்தாணிக்கூர்கல்ல. இக்காரங்கல்லிக்கல்லியெடுத்துப்போடும். This caustic will eat away (the proud flesh). மலைகல்லியெலிபிடிக்க. To excavate a moun tain to catch a rat; i. e. to take great pains or be at great expense for little profit. அறுக்கல் - அறுத்தலை செய்தல் உற்றார்க்கு - உறவினர், சுற்றத்தார்; நண்பர். உடம்பும் - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி மிகை - மிகுதி; சிறந்தபொருள்; மேன்மை; பெருமை; தேவையற்றது; வேண்டுமளவின்மிக்கதென்னுங்குற்றம்; மிகுதிப்பொருள்; அதிகப்படியானது; செருக்கு; தீச்செயல்; தவறு; தண்டனை; வேதனைசெய்கை; வருத்தம்; துன்பம்; கேடு.

Unpacking Each Word - Its Meaning and Impact

மற்றும் (maṟṟum) – also; even that 👉 Extends the idea of renunciation. It's not just outer things—even what remains within must be let go. Nothing is exempt. தொடர்ப்பாடு (toṭaṟpāṭu) – sensual attachment; craving 👉 This is the subtle glue of rebirth. It’s not just action, but the urge behind it—the desire that keeps the wheel spinning. எவன்கொல் (evaṉkol) – who indeed? (wonder/admiration) 👉 A pause of awe. It reflects the poet’s marvel: who can truly go this far? It's rare, hard, and heroic. பிறப்பு (piṟappu) – birth; worldly existence 👉 Not just physical birth—but the entry into suffering, form, identity. It’s the doorway to all entanglements. அறுத்தல் (aṟuttal) – cutting off; severing 👉 This is the sharp act of release. Not soft letting-go—but a conscious, fearless break from the root. கல் (kal) – to dig; pierce; erode gradually 👉 Suggests both effort and penetration. Liberation isn't always instant—it requires deep, precise work over time. அறுக்கல் (aṟukkal) – the act of cutting (noun form) 👉 Reinforces the prior verb. Like a final blow after steady digging—this is the irreversible cut. உற்றாருக்கு (uṟṟārukku) – to relatives; connected ones 👉 Our social ties arise from embodiment. Without the body, who are your people? Relationships too are constructs. உடம்பும் (uṭampum) – even the body 👉 What we call “I” is just a form. Even this must be seen as not mine, not me. The root illusion. மிகை (migai) – excess; burden; fault 👉 Declares the final verdict: the body is not just irrelevant—it’s an obstacle. Shedding it is freedom.

🧭 Contextual Understanding — Why, Where, What, When, How


🟡 Why is this Kural said? (Purpose behind it)

This Kural is said to challenge the depth of one’s renunciation. Not just physical detachment, but existential detachment—even from the body and the relationships it brings. It's aimed at the aspirant who may have let go of external things, but not yet severed identity itself. It is an invitation to examine if one’s detachment is still only skin-deep.


🟢 Where does it belong contextually? (Placement in the text and inner journey)

It belongs in the Thuravaram (Renunciation) chapter, just after Kurals discussing detachment from pleasures, desires, and external attachments. It appears toward the climax of that arc—when renunciation turns inward, addressing subtler attachments like self-image and bodily identity. The placement shows a progressive stripping away, with this Kural being near-total dissolution.



🔵 What is the Kural actually revealing? (Essence & core message)

It reveals that the body and its byproducts (desire, relations) are the last and heaviest weights on the path to liberation. These are often mistaken as "natural" or "inevitable", but the sage sees them as obstacles. The Kural points out that even the body, far from being a neutral vessel, is a cause of entanglement. Relationships arise only because of bodily identity, making both body and relations a ‘migai’ (burden).


🟣 When does this truth apply? (Spiritual maturity context)

This applies when a seeker has ripened—when the longing for freedom outweighs all other desires. It’s not for the beginner renunciant, but for the one who has already let go of outer attachments and now confronts the core illusion: “I am this body.” This Kural is for the final stage, before crossing over to liberation.


🟠 How does the Kural work? (Poetic structure, repetition, order)

  • The word "மற்றும்" signals continuation, as if to say "even beyond all that I’ve said..."

  • "தொடர்ப்பாடு" and "பிறப்பு" build the theme of cyclic attachment.

  • The repetition of அறு in "அறுத்தல்" and "அறுக்கல்" emphasizes finality, like two axe-strokes—first insight, then action.

  • "உடம்பும் மிகை" is the climax: the body is not neutral—it is too much.

  • The order from desire → birth → cutting → body → relatives → burden is intentional, representing the progression from cause to consequence.

  • The exclamatory "எவன்கொல்" sits at the heart, adding emotional pause and marvel, honoring the rare soul who achieves this.


🔚 Summary:


This Kural operates like a spiritual blade, finely slicing through every illusion a seeker holds. Its structure, word choices, and rhythm mirror the process of detachment—from outer desire to the inner self. It reflects the inner climax of the renunciate’s journey, where even the very notion of “me” is exposed as the final bondage.


📝 பொருள் விளக்கம் – Meanings and Interpretations

முழுப்பொருள் — Full Meaning in Tamil

பிறவி இறப்பு பிறவி இறப்பு என்ற தொடர் சங்கிலி வேண்டாம் அது தருகிற துன்பங்கள் வேண்டாம் என்று இப்பிறப்பு சங்கிலியை அறுக்க ஒருவன் முற்படுவான் என்றால் அதற்காக துறவறம் பூணுவான் என்றால் அவனுக்கு இந்த உடம்பே ஒரு சுமை அல்லது தண்டனை எனலாம். ஏனெனில் இவ்வுடம்பினில் ஐந்து புலன்களால் ஏற்படும் பல ஆசைகள் வரும். அது மனிதனை அலைக்கழித்து அவனை படுத்தும் பாடு எல்லா துன்பங்களுக்கும் வேர். மேலும் இவ்வுடம்பு இருந்தால் அவனுக்கு உற்றார் உறவினர் என்று உறவுகள் தொடர்பு ஏற்படும். பிறவி வேண்டாம் என்கிறவனுக்கு உறவுகள் மட்டும் ஏன் ? இவ்வுடம்பு இருப்பதால் தான் அவர்கள் இவனை அடையாளம் கண்டுகொண்டு இணங்குகின்றனர். ஆதலால் இவ்வுடம்பே சுமை எனலாம். 


மேலும்: அஷோக் உரை

மற்ற உரைகள் — Interpretations by Other Tamil Commentators

பரிமேலழகர் உரை

பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை

பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.

மு.வரதராசனார் உரை

பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.


சாலமன் பாப்பையா உரை

இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை

எதையும் தூக்கிச் சுமக்காதே.

Comprehensive English Meaning & Poetic Rendering

The one who truly seeks to break free from the cycle of birth and death must not only abandon desires and pleasures, but also sever the deepest root of all bondage — the sense of “I” tied to the body. Even the faintest craving or attachment to identity, when left uncut, becomes a seed for rebirth. Relationships, affections, and societal roles arise only because of bodily existence. Without the body, there is no recognition, no attachment, no “mine” or “yours.” For the one who wishes to end all becoming, even the body itself is no longer neutral — it becomes a weight, an excess, a burden. This Kural stands in awe of the rare soul who dares such a total severance. With sharp insight and fierce detachment, they dig deep, cut clean, and walk free — beyond name, form, and kin. To such a one, renunciation is not loss, but the only true liberation. Poetic Rendering
Not this… not that…
Even the bond of flesh — let it fall.
The chain of births — break it all.
Who cuts the root, must cut it whole.
Even the body is weight to the soul. No name… no kin…
All ties arise from this form within.
To end all pain, to cross the fire —
Let go the form… let go desire.

📚🔭 சிந்தனையின் பரந்த வெளி – Expanding the Lens — Interdisciplinary Connections Across Time & Thought

தமிழ் இலக்கியச் செல்வம் - ஒப்புமை — Parallels in Other Tamil Literary Works:

சடாயு உயிர் நீத்த படலத்தில், கம்பர் இக்குறளின் கருத்தின் போக்கிலே எழுதிய வரிகள் இவை: “உடலமும் மிகையென்றெண்ணுவீர்” (கம்ப.சடாயு உயிர்நீத்த 51) என்றும், “உடற் பொறை துறந்துயர் பதம் புக்க” (கம்ப.மராமர.50).


வளையாபதியின் ஆசிரியர், முற்றுக்கருத்தையும் திருக்குறளையே மேற்கோள் காட்டி, 

மற்றுந் தொடர்பாடெவன் கொல் பிறப்பருக்கல் 
உற்றார் குடம்பும் மிகை இசையுள் வழி” என்று பாடியிருப்பார்.

Parallels from World Thought:

  • Advaita Vedanta (Tamil: ஆத்வைத வேதாந்தம்)
Transliteration: Ātma and body are separate; true self (ātman) is beyond the physical form.
Teaching: “Tat tvam asi” (That thou art) — the self is not the body but pure consciousness beyond it.
  • Buddhism (Tamil: புத்த மதம், Puttu Madham)
Transliteration: Anattā — no-self; the body and mind are impermanent and not the true self.
Teaching: Attachment to the body fuels suffering and rebirth; liberation (nirvāṇa) is by letting go of all clinging.
  • Stoicism (Ancient Greek Philosophy)
Teaching: Control what is within your power—your judgments and desires—rather than external things including your bodily states; true freedom arises from inner detachment.
  • Christian Mysticism
Teaching: “Deny the flesh” to live in the spirit; renounce worldly attachments to unite with God.
  • Sufism (Islamic Mysticism)
Teaching: The ego (nafs) is a veil; spiritual progress requires transcending the self’s attachments including bodily desires.
  • Tamil Siddha Tradition (Tamil: சித்தர் சமயம், Sittar Samayam)
உடல் என்பது ஆன்மாவின் பாத்திரம்; உடம்பை மறந்து எம்மையும் அடைய வேண்டும். (Udal enbadhu āṉmāviṉ pāttiram; uṭampai maṟanthu emmai yuṭaiya vēṇṭum.)
Meaning: The body is a vessel for the soul; one must transcend the body to attain the Self.
Teaching: The body is a vessel for the soul; liberation is attained by transcending bodily identification and realizing the eternal self.

🧠 அகப் பயணம் – உரையாடலும் சிந்தனையும் – Dialogue & Reflection — Inner Exploration

Scholar’s Questions — Valluvar’s Answers

  • Universal: How can I truly be free from suffering and the cycle of life and death?
    Thiruvalluvar: To break birth’s chain, sever the root—the body and all that binds it—thus ends suffering.
  • Universal: Is renouncing material things enough, or is there something deeper I must let go?
    Thiruvalluvar: Beyond possessions, one must cut the body’s hold, for true release lies there.
  • Universal: Why do relationships and social ties bind me if I seek freedom?
    Thiruvalluvar: Bonds arise from the body’s presence; to be free, even the body must be shed.
  • Aristotle (Ethics & Cause): What is the ultimate cause that sustains human suffering and prevents eudaimonia (true flourishing)?
    Thiruvalluvar: The self tied to form and kin enslaves the soul, blocking true flourishing.
  • Socrates (Self-Knowledge & Examined Life): How must one examine and detach from the illusions of self to achieve the examined life and true wisdom?
    Thiruvalluvar: Know that body and kin are but excess; detach to find the unchanging truth within.
  • Heidegger (Existential Being & Authenticity): What must one confront to transcend the ‘thrownness’ of existence and live authentically?
    Thiruvalluvar: Confront and cut the body’s claims, the root of thrownness and false belonging.
  • Buddhist Scholars (Dukkha & Non-Self): What is the ultimate form of attachment that fuels samsara, and how can one uproot it?
    Thiruvalluvar: The body’s claim feeds suffering; uproot it to end the cycle of rebirth.
  • Religious Mystics (Christian, Sufi, Vedantic): How do I surrender the ego and worldly ties to unite with the Divine?
    Thiruvalluvar: Cast off even the body’s weight; only then merge wholly with the Divine.
  • Psychologists (Identity & Attachment): What psychological constructs sustain the ego’s attachment and cause suffering?
    Thiruvalluvar: The ego clings to bodily form and kinship—cut these to heal and be free.

🧠 Think With Me — Questions for Curious Young Minds (Ages 13–21)

  • If you think of your body as something you own or are, how does that affect your feelings and actions?
    (This helps you notice how much your sense of “self” shapes your thoughts and choices.)
  • Why do you think saying “no” to just things around you might not be enough to feel truly free?
    (This builds awareness that freedom isn’t just about outside things, but also what’s inside.)
  • Can you imagine what it means to let go of even your own body and identity? How would that change how you see yourself and others?
    (This turns reflection toward deeper questions about who you really are beyond the body.)

🌿 வாழ்வில் குறள் – Everyday Resonance — Living the Kural

Story : The Weight of the Stone

Once, there was a traveler carrying a heavy stone tied to his back. Everywhere he went, the stone slowed him down and made every step painful. He tried to ignore it, hoping it would feel lighter, but it never did.
One day, a wise old man asked him, “Why do you carry that stone?” The traveler said, “It’s part of me now—I can’t imagine being without it.” The old man smiled gently, “If you want to reach your true destination free and fast, you must untie the stone and leave it behind. Only then will your journey be easy.” The traveler hesitated but finally loosened the rope and dropped the stone. Immediately, he felt lighter, freer, and more alive. Then the old man said, “The stone is like your body and all your attachments. To truly be free, sometimes you must let go of what feels most a part of you.”


Moral (Essence of the Story)

Sometimes, the heaviest burdens are those we carry because we think they are part of ourselves; true freedom comes when we let go of even these deepest attachments.

Connection to Everyday Life

Just like the traveler, we often hold on tightly to our worries, fears, or even our own self-image, which slows us down—learning to release these can help us live more freely and peacefully every day.

🛠️Practical Tools for Daily Reflection

  • Body Awareness Meditation:
    Spend a few minutes daily observing your body without judgment—notice sensations as separate from “you,” helping reduce over-identification with the physical self. 
  • Mindful Letting Go:
    When feeling attached to things, people, or outcomes, pause and ask, “Is this truly part of who I am?” Practice consciously releasing what causes stress or clings too tightly
  • Digital Detox Moments:
    Regularly unplug from social media and devices to lessen external attachments and reconnect with your inner self beyond virtual identities.
  • Journaling Inner vs. Outer Self:
    Write about experiences or emotions that feel “heavy” and explore whether they come from your body/ego or your deeper, calm awareness—this clarifies what to release.

Deeper Practice Method: “Severing the Root” Practice

  • Settle in Quietness: Find a calm place and sit comfortably, eyes closed or softly focused.
  • Body Scan with Detachment: Slowly scan your body from head to toe, noticing sensations without labeling them as “mine” or “I am this.” Imagine observing your body as a neutral witness, like watching clouds pass by.
  • Witness Attachments: Bring to mind attachments—relationships, desires, fears—and notice how they arise from your bodily sensations or egoic identity. Observe without judgment.
  • Mentally “Cut the Thread”: Visualize a strong thread connecting you to these attachments and the body. Imagine gently but firmly cutting this thread, releasing the hold.
  • Rest in the Space Beyond: After release, rest in the feeling of lightness, spaciousness, and freedom beyond body and ego.
  • Reflect: Slowly open your eyes and journal your experience—what it feels like to step beyond the body’s weight.
This method deepens your awareness of the body as a source of bondage and cultivates experiential freedom. Regular practice can gradually loosen your identification with physical and emotional burdens, embodying the Kural’s essence.
🌾 வாழ்க குறள் – May the Kural Live in You

The Kural speaks — if we stay still enough to listen.


கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று
[அறத்துப்பால், துறவறவியல், கொல்லாமை]

பொருள்
கொல்லாமை -   - kollāmai   n. கொல்- +ஆ neg. Abstinence from killing, as a virtue உயிர்க்கொலை செய்யாமை

மேற்கொண்டு - மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

ஒழுகுவான் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.

வாழ்நாள்  - ஆயுட்காலம்

மேல் -  மேலிடம்; அதிகப்படி; வானம்; மேற்கு; தலை; தலைமை; மேன்மை; உயர்ந்தோர்; உடம்பு; இடம்; மேலெழுந்தவாரியானது; முன்புள்ளது; பின்புள்ளது; அதிகமாக; முன்; பற்றி; அப்பால்; இனி; ஒருமுன்னொட்டு; ஏழனுருபு.

செல்லாது - சொல்லாமல் - கூறாமல்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

கூற்று -  கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன்

முழுப்பொருள்
உயிர்களை கொல்லாததை ஓர் விரதமாக நினைந்து வாழ்நாள் முழுதும் மேற்கொண்டு ஒருவர் வாழ்வார் என்றால் அவர் ஆயுட்காலம் முழுவதும் ஆயுளிற்கு பிறகும் அவர் மேல் உயிரை உண்ட கொலைகாரன் என்ற கூற்று/பழி வராது. அவன் குடும்பமும் அப்பழியைச் சுமக்க நேரிடாது. உதாரணமாக பல லட்ச உயிர்களை கொன்று குவித்த ஹிட்லர் இன்றும் கொடியவராக கருதப்படுகிறார்.

மேலும் கொல்லாமையை வாழ்நாள் முழுவதும் பழகினால் அவர் அவருக்கு விதிக்கப்பட்ட முழு ஆயுளை அனுபவிக்க குறுக்கே எந்த ஒரு கூற்றும் (காலன்/யமன்) வராது. கொலை மிக பெரிய பாவம். அதனுடைய வினைப்பயனை அந்தப் பிறவியிலேயே விதிக்கப்பட்டதற்கு முன்பே அனுபவித்து இறப்பர்.

ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட நீண்ட / முழு ஆயுளை வாழ்வார் என்றால் அவர் வாழ்வில் ஞானம் எய்த ஏதுவாக இருக்கும். ஆயுள் கூடினால் அனுபவம் கூடும். மேலும் விடுபட்டு விடுபட்டு ஒவ்வொன்றாக துறந்து துறந்து ஒருவர் ஞானம் அடைகிறார். ஞானம் அடைந்தால் வீடுபேறு கிட்டும். ஆதலால் ஒருவர் கொலை செய்தால் அவர் ஞானம் அடைவதற்குத் தடையாக கூற்று(காலன்/யமன்) முன்பே வந்து அமைந்துவிடும்.

கம்பராமாயண நாட்டுப்படலத்தில், “கூற்றம் இல்லையோர் குற்றம் இலாமையால்” (79) என்று கோசல நாட்டு மக்களின் நிலையைச் சொல்லியிருப்பார். குற்றங்கள் இல்லாமையால், அந்நாட்டினருக்கு மரண பயம் இல்லையாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்பது விவிலியத்தின் வாக்கு. இந்திய சமயச் சிந்தனையில், பிறந்திறந்து பண்படுபவதே ஒவ்வொரு ஆத்மாவுக்கும் விதிக்கப்படுவது.

”வேள்விவாய்க் கண்படுத்தும் வெவ்வினைசெய் ஆடவர்கை
வாளின்வாய்க் கண்படுத்தும் வாரணத்தின் ஈருரிபோல்
கோளிமிழ்ப்பு நீள்வலைவாய்க் கண்படுத்தும் இன்னணமே
நாளுலப்பித் திட்டார் நமரலா தார்எல்லாம்” (சீவக 2787)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

சாலமன் பாப்பையா உரை
கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அஹிம்சையைக் கடைப்பிடிப்பவனுக்குத் துர்மரணம் நேராது.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...