Posts

Showing posts with the label Health_Counsel_for_Individuals

அற்றால் அளவறிந்து உண்க

Image
குறள் 943 அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - (உணவின்) தன்மை அறிந்து அளவு - பரிமாணம்; தருக்கஅளவை; தாளத்தில்மூன்றுமாத்திரைக்காலம்; மாத்திரை நிலஅளவு; சமயம் தன்மை ஞானம் மட்டும் தொடங்கி அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். உண்க -  உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி உடம்பு - உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி பெறுதல்  - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெற்றான் - பெறுவான் நெடிது - நீண்டது; தாமதம். உய்க்கும் - உய் - uy   II. v. i. live, subsist, சீவி; 2. prosper, flourish, தழை; 3. escape from danger, தப்பு; 4. obtain heavenly bli...

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

குறள் 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் பிணி - நோய்; கட்டுகை (Fastening,binding); கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.  பிணிக்கு - நோயிற்கு மருந்து - maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.) பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டு...

மிகினும் குறையினும் நோய்செய்யும்

Image
குறள் 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மிகினும் - மிகுதல் - அதிகமாதல்; பெருகுதல்; மிஞ்சுதல்; பொங்குதல்; எழுத்துஅதிகரித்தல்; நெருங்குதல்; சிறத்தல்; ஒன்றின்மேம்படுதல்; செருக்கடைதல்; எஞ்சுதல்; தீமையாதல். குறையினும் - குறைதல் - சிறுகுதல்; இடம்பொருள்ஏவல்முதலியவற்றால்தாழ்தல்; பற்றாமற்போதல்; அரைகுறையாதல்; விலையேறும்படிபண்டம்அருகுதல்; எழுத்துக்கெடுதல்; வருந்திஉயிரொடுங்குதல்; குறைவுற்றுவருந்துதல்; ஊக்கங்குன்றுதல்; தோல்வியுறுதல்; அழிதல். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். நூலோர் - நூலாசிரியர்; கற்றோர்; அமைச்சர்; பார்ப்பனர். வளி - காற்று; சுழல்காற்று; உடல்வாதம்; அண்டவாதநோய் குடலிறக்கம், விரைவாதம்) (cf. balin. Hernia); சிறியகாலவளவுவகை; வாதமாகிய வாயு முதலாகிய முதலா - முதல் எண்ணிய - எண்ணிக்கை மூன்று -...

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்

குறள் 946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இழிவு - தாழ்வு; இகழ்ச்சி, நிந்தை குறைவு குற்றம் கேடு பள்ளம் தீட்டு அறிந்து - தெரிந்து, உணர்ந்து, நினைத்து, மதித்து உண்(ணு)-தல் -- சாப்பிடுதல், உட்கொள்ளுதல், அனுபவித்தல் உண்பான்கண் - சாப்பிடுகின்றவனுக்கு இன்பம்போல் - இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. நிற்கும் - நிலைத்திணைப் பொருள், எஞ்சுதல் கழி - கழி - கோல், மரக்கொம்பு; கடலடுத்தஉவர்நீர்ப்பரப்பு; நுகத்துளையில்இடுங்கழி; ஆயுதக்காம்பு; யாழின்இசையெழுப்புங்கருவி; வரிச்சல்; நூற்சுருள்; மிகுதி; ஊன்; கயிறு கழி-தல் - இயலுதல்,  மிகுதல், அழிதல், ஒழிதல், சாதல், வருந்துதல் பேர் - பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு. பேர்தல் - சிதைதல்; பிரிதல்; போதல்; அழிதல்; பிறழ்தல்; அசைதல்; குறைதல்; பின்வாங்குதல்; நிலைமாறுதல்; முறைபிறழ்தல். இரை - ஒலி; பறவை, விலங்குமுதலியவற்றின்உணவு;...

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

குறள் 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது  அற்றது போற்றி உணின். [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மருந்து -  அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை. என -   என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. மருந்தென - ஒருவனுக்கு மருந்து என்று எதுவும் வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாவாம் - தேவையிருக்காது யாக்கை - கட்டுகை; உடம்பு. யாக்கைக்கு - ஒருவனது உடல் / உடம்பு அருந்துதல் - உண்ணுதல்; குடித்தல் விழுங்குதல் அனுபவித்தல் அருந்தியது - உண்ட உணவை அற்றது - அறுத்தல் - அரிதல், ஊடறுத்தல், செங்கல்அறுத்தல், தாலியறுத்தல், இடைவிடுதல் பங்கிட்டுக்கொடுத்தல்; முடிவுசெய்தல்; வளைதோண்டல்; வருத்துதல் நீக்குதல் இல்லாமற்செய்தல்; வெல்லுதல் செரித்தல் அற்றது - செரித்த பின் / சீரணமானப் பின் போற்றி - போற்றுதல் -  வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வள...