குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
[காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்]
பொருள்
பிணி - நோய்; கட்டுகை (Fastening,binding); கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.
பிணி - நோய்; கட்டுகை (Fastening,binding); கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை.
பிணிக்கு - நோயிற்கு
மருந்து - maruntu n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)
பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.
மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.
பிறமன் - மற்ற மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து (மந்திரம்)
அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.
இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல்

அணியிழை - aṇi-y-iḻai n. id. +.Woman, as adorned with jewels; பெண். அணியிழை தந்நோய்க்குத் தானே மருந்து (குறள், 1102).
தன்நோய்க்குத் - தன்னுடைய நோயிற்கு
தானே - தானே
மருந்து - maruntu n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.)
முழுப்பொருள்
அணியிழைக்கு - அணிகள் சூடிக்கொண்ட பெண் என்ற புறவயமான அழகை திருவள்ளுவர் கூறியிருக்க மாட்டார். இழை என்றால் நெருங்கிபழகுதல், கூடுதல், மனம் பொருந்துதல். ஆதலால் இவர்கள் மனம் அழகாக பொருந்தியது என்ற பொருளே சரி என்று நான் நினைக்கிறேன்.
இவ்வுலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மருந்துகளை மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உடலில் உள்ள நோய்க்கு (அதாவது புறவயமான நோய்க்கு) மருந்து உண்டு.
ஆனால் அழகாக நெருங்கிப்பழகி உள்ளம் நெகிழ்ந்து மனம் பொருந்தி உண்டான காதலினால் நாங்கள் படும் ஆசைநோய்க்கு இவ்வுலகில் யாராவது மருந்து கண்டுப்பிடித்து உள்ளனரா? இல்லை. முடியவும் முடியாது. தன்னால் ஆன நோய்க்கு தானே மருந்து. இவர்கள் ஒன்றுக்கூடி காதலை பெருக்கிக்கொள்வதே இவர்களுக்கு மருந்தாகும்.
கலித்தொகை 89 பாடலில்? "மருந்து இன்று - மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த இன் நகை! தீதோ இலேன்;" என்ற வரிகளுக்கு அர்த்தம் மன்னவன் சினந்தால் அதனைப் போக்கும் மருந்து உண்டா? என்னிடம் தவறு உண்டோ? நீ உன் இனிய புன்னகையால் என்னைக் கட்டிப் போட்டவள் ஆயிற்றே! நான் குற்றமற்றவன்.
ஆதலால் காதலில் ஒரு பிரிவு, சினம், ஊடல் அல்லது வேறு எதனாலும் நோய்வந்தால் அதற்கு மருந்து என்பது அவர்களே ஆவார்.
இதை நற்றிணைப் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.

“பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே” ! (நற் 80:8-9)
“அருந்துயர் அவலம் தீர்க்கும்
மருந்துபிறி தில்லயான் உற்ற நோக்கே” (நற் 140:10-11)
“களைநர் இல் நோய்செய்யும் கவின்” (கலி 58:9)
“நின்முகம் தான்பெறின் அல்லது கொன்னே
மருந்து பிறிதியாதும் இல்லேன்” (கலி 60-20-21)
”மென்பனி எரிந்த தென்றால் இவனிலை விளம்ப லாமோ
அன்பெனும் விடமுண் டாரை ஆற்றலாம் மருந்து முண்டோ” (கம்ப.மாரீசன் 100)
மாயாசனகப் படலத்தில் வரும் கம்பனின் பாடல் வரிகள் இன்னும் அழகானவை!
“மந்திரம் இல்லை, வேறு ஓர் மருந்து இல்லை, மையல் நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால் அமுதச் சொல்லீர்! (கம்ப.மாயாசனகப்.16)
கம்பராமயணத்தில் மிதிலையில் ஆசை நோய்க்கு மருந்தும் உண்டோ என்று கேட்கப்படுகிறது.
வாச மென் கலவைக் களி வாரி, மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
வீச வீச வெதும்பினள், மென் முலை;-
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.).
மணக்குடவர் உரை
நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம். இது புணர்வதன் முன்னின்ற வேட்கை
மு.வரதராசனார் உரை
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை
நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.
உலகெங்கும் நோய்களுக்கு மருந்து கண்டார்
ஊர் போற்ற வாழுகின்றார் உண்மை உண்மை
பலமான அவர் அறிவு கண்டு போற்றி
பணிந்தவரைக் கேட்டு நின்றேன் எந்தன் நோய்க்கு
சரியான மருந்து எது என்று அவர்
சலிக்காமல் சிரிக்கின்றார் என்ன என்றேன்
விரிகின்ற விழியாளின் வழியாய் வந்த
வெம்மை நோய்க்கு அவள் தானேமருந்து என்றார்
Thirukkural - Management - Health - Counsel for Individuals
There are medicines, cures and treatments for external or physical injuries and diseases. But, the treatments, cures, and medicines for the diseases of the mind are found in the mind itself. Diseases are classified as psychosomatic and Soma psychic. Psyche means mind and Soma means body. Psychosomatic diseases are mind induced. Soma psychic diseases are body caused.
Though Valluvar has written Kural 1102 to refer to love sickness, the Kural can also be referred to diseases that are caused by one's own mind. A ladylove says that the disease caused by her lover can be cured only by her lover. So, the source of a disease has the cure in it.
Medicine differ from ills, their enemies
But this my jewel is both disease and cure
It has been proved by many research works that 90% of the diseases is psychosomatic, that is., the diseases caused by mind. Cures for the diseases caused by the mind are found in the same mind. Mind can either make or mar our health. There is a popular saying in Tamil that one fourth of the cure for a disease is found in medicine and three fourth of the cure for a disease is found in one's mind. So, one's mind is both creator and destroyer of diseases.
No comments:
Post a Comment