குறள் 1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் துப்புரவு - தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு இல்லார் - இல்லாதவர் துவரத் - துவர - மிக; முழுதும். துறவு - விடுதல்; இரகசியம்; வாய்ப்பானநிலை; வெளியிடம்; சன்னியாசம்; துறவியருக்குவிதித்துள்ளஅறம். துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறவாமை - எல்லாவாற்றையும் துறக்காமல் இருத்தல் (மானத்தை மட்டும் துறந்து) உப்பிற்கும் - உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல் இனிமை பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு காடிக்கும் - காடி - புளித்தகஞ்சி; புளித்தகள்; சோறு; கஞ்சி; புளித்தபழரசம்; ஊறுகாய்; ஒருவகைவண்டி; ஒருமருந்து; கழுத்து; நெய்; அகழி; கோட்டையடுப்பு; மாட்டுக்கொட்டில்; மரவேலையின்பொளிவாய். கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். முழுப்பொருள் அன்றாடம் ஒருவர் அடிப்படையாக நுகரும் பொருட்களான உணவு உடை ஆகியவைக்கூட இல்லாமல் வறியவராக இருப்பவர்கள் இல்லறத்தை முழுவது...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.