Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_010

இனிய உளவாக இன்னாத கூறல்

குறள் 100 இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இனிய - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக  இனிமை - இனிப்பு, தித்திப்பு இன்பம் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. உளவாக -  உளதாதல் -  உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல் இன்னாது - தீது; துன்பு இன்னாத - இன்னாதா-தல் - துன்புறுதல் கூறல்  -   கூறுதல் - சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல் கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம். இருப்பு - இருக்கை; மலவாய்; இருப்பிடம் குடியிருப்பு நிலை கையிருப்பு பொருண்முதல். இருப்ப - இருத்தல்  காய் - முதிர்ந்துபழுக்காதமரஞ்செடிகளின்பலன்; மூவகைச்சீரின்இறுதியிலுள்ளநேரசை, காய்ச்சீர்; பழுக்காதபுண்கட்டி; முதிராதுவிழுங்கரு; பயனின்மை; வஞ்சனைவிதை; சொக்கட்டான்காய்; பக்குவப்படாதவிளைபொருள்கள். கவர்...

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

குறள் 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். இன்சொல் - இனிமையான சொல் இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக ஈன்றல் - ஈனல்; உண்டாதல் காண்பான் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். எவன் கொலோ - எதனைக் கருதி? வன்சொல் -  கடுஞ்சொல்; மிலேச்சமொழி. வழங்குவது - வழங்குதல் - இயங்குதல்; உலாவுதல்; நடைபெறுதல்; அசைந்தாடுதல்; கூத்தாடுதல்; நிலைபெறுதல்; பயிற்சிபெறுதல்; கொண்டாடப்படுதல்; தகுதியுடையதாதல்; பயன்படுத்தல்; கொடுத்தல்; செய்துபார்த்தல்; ச...

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

குறள் 98 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் சிறுமையுள் -  சிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. நீங்கிய - நீங்குதல் - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல். இன்சொல்  - இனிமையான சொல்  மறுமையும் - மறுபிறவி; மறுவுலகம். இம்மையும் - இப்பிறப்பு; இவ்வுலகவாழ்வு இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. தரும் - கொடுக்கும்  முழுப்பொருள் இழிவான பிறருக்கு துன்பம் தரக்கூடிய சொற்கள் சிறுமை வாய்ந்த சொற்கள். அத்தகைய சிறுமையான சொற்களை நேரடியாகவோ அல்லது சொற்களின் உள் அல்லது சொற்களை கூறும் முறையில் பொதிந்தோ ...

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

குறள் 97 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி. நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.) நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை. ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத...

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் அல்லவை - தீயவை; பயனின்மை. தேய - தேய்தல் - உரைசுதல்; குறைதல்; மெலிதல்; வலிகுன்றல்; கழிதல்; அழிதல்; சாதல். அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல். நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. இனிய - இன்பம் தருவது சொலின் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ...

பணிவுடையன் இன்சொலன் ஆதல்

குறள் 95 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம். பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல். உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. உடையன் -பொருளின் சொந்தக்காரர் இன்சொலன் - இனிமையான சொற்களை பேசுபவன் ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஒருவற்கு - ஒருவர் - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை. அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு. அல்ல - இல்லை மற்றுப் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். முழுப்பொருள் பணிவு என்றால்...

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

குறள் 94 துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் உறு - uṟu   adj. உறு-. Much, abundant,copious; மிக்க உறு . . . மிகுதி செய்யும் பொருள் (தொல். சொல் 301).   துன்புறூஉம் -  துன்பத்தை மிகுவிக்கும்; துன்பத்தை அதிகரிக்கும் துவ்வாமை - tuvvāmai   n. id. + id. +. 1.Non-eating, non-enjoyment; நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 2. Poverty, indigence; வறுமை துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும்(குறள், 94). 3. Absence of desire; வேண்டாமை (அக. நி ) 4. Disgust, dislike; வெறுப்பு (W.)   இல்லாகும் - இல்லாமல் போகும்; இல்லாதொழியும் யார்மாட்டும் - யாரிடத்திலும் (பரிமேலழகர்: வலியார், ஒப்பார், எளியார்) இன்பம் - iṉpam   n. இனி-மை. [M. inbam.]1. Delight, joy, happiness; அகமகிழ்ச்சி (திவா.)2. Sweetness, pleasantness; இனிமை (மதுரைக். 16.) 3. Sensual enjoyment, sexual love;காமம். அறம் பொருளின்பம் (குறள், 501). 4. Marriage; கலியாணம் கொம்பனையாளையும்...

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

குறள் 93 முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்  இன்சொ லினதே அறம் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் முகத்தான் - முகத்து + ஆன் முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம் ஆன் - அவ்விடம், இக்கணம் அமர்ந்து - அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம் இனிது - இனி-மை, இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல் அகத்தான் - அகம் + ஆன் அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு, உள் மனம் , அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன...

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே

குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] பொருள் அகன்  அமர்ந்து - உள்ளம் குளிர்ந்து; உள்ளத்தின் உவப்புடன் ஈதலின் - தானம் செய்தல் நன்றே -   அதனை விட   நன்று முகன்  அமர்ந்து - முக மலர்ச்சியுடன் ஒருவர் முன் இன்சொலன் -  இனிய மனதிற்கு இதமான சொல்லை ஆகப்பெறின் -  கூறுபவராக இருந்தால் முழுப்பொருள் உலகலில் தானம் செய்வது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, எவ்வளவு நன்மை பயக்க கூடியது என்று எல்லோரும் அறிவோம். அதுவும் மனமுவந்து தானம் செய்வது சிறப்பானது. அதனினும் சிறப்பு என்று ஒன்று உண்டோ? இருக்கிறது. மற்றவர்களிடம் பேசும் பொழுது முக மலர்ச்சியுடன் கனிவாக பேசுவது.  ஏன் இதை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்று எண்ணினேன். நாம் அன்றாடம் பல இன்னல்களை சந்திக்கிறோம் இவ்வுலகில். நமது கோவங்களையும் விரத்திகளையும் மற்றவரிடம் காட்டினால் இவ்வுலகம் நரகம் ஆகிவிடும். நமக்கு அது தீமையே விளைவிக்கும். நம்மை விட்டு மக்கள் விலகுவர். அது நமக்கு நல்லது அல்ல. எவ்வளவு தானம் (கோயிலில் அன்னதானம் செய்வதில் தொட...

இன்சொலால் ஈரம் அளை

குறள் 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்  செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்  [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். இன்சொல் - இனிமையான சொல்; இனிமை பயக்கும் சொல் இன்சொலால் - இன்சொல் + ஆல் - இனிமையான சொல் என்னவென்றால் ஆல் - அசைநிலை ஈரம் -  நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி; īram   s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. fr...