Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

பணிவுடையன் இன்சொலன் ஆதல்

குறள் 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]

பொருள்
பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம்.
பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

உடையன் -பொருளின் சொந்தக்காரர்

இன்சொலன் - இனிமையான சொற்களை பேசுபவன்

ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

ஒருவற்கு - ஒருவர் - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை.

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

அல்ல - இல்லை

மற்றுப் - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
பணிவு என்றால் - தாழ்ந்து அமைதியாக இருப்பது மட்டும் அல்ல. பணிவு என்றால் எளிமையாக இருத்தல் என்பதும் ஆகும். எளிமை என்பது உடையில் மட்டும் அல்ல நமது நடத்தை, பாவனை, சொற்கள், வசிப்பிடம், நமது சேர்க்கை, நமது கேளிக்கைகள், நமது பழக்க வழக்கங்கள், என்று எல்லாவற்றிலும் எளிமை வேண்டும். அதாவது பணிவு வேண்டும்.

அப்படி ஒருவர் பணிவுடன் இருந்து கடுஞ்சொற்களை பயன்படுத்தாது  இனிய சொற்களை பிறரிடம் கூறுவார் என்றால் அதனை விட ஆபரணம் ஒருவருக்கு வேறு என்ன இருக்க போகிறது ?

இதை ஏன் ஆபரணம் என்று சொல்லவேண்டும் ? நமது உள்ளதினால் வரும் இனியசொற்கள் நமக்கு ஒருவிதத்தில் செல்வமே. ஏனெனில் கடுஞ்சொற்கள் நம்மில் வெறுப்பை வளர்க்கும், பகையை வளர்க்கும், உள்ளத்தின் அமைதியை அழிக்கும். ஆதலால் கடுஞ்சொற்களினால் நமது உடலில் சமநிலை குலைந்து மன அழுத்தத்தினால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற கேடுகள் உடலில் உண்டாகும். ஆதலால் இனியசொற்கள் நமக்கு கவசம்/ ஆபரணம்.

அது மட்டுமின்றி நாம் இனிய சொற்களை பேசினால் நம்மிடம் எல்லோரும் நட்புப்பாராட்டி மகிழ்வர். உறவுகளை போல் வாழ்வில் ஈன்ற அணிகலன் வேறு எது  ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

மு.வரதராசனார் உரை
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

சாலமன் பாப்பையா உரை
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Thirukkural - Management - Communication - Pleasant Speech
There is no greater gift or jewel or valuable ornament to a person than being polite, affable, and using pleasant words in his conversations, as found in Kural 95.

Sweet words and humility are one's true jewels;
All else are foreign and none.

In other words, a person may possess all the worldly possessions, material, wealth, jewels but may not use pleasant words. That sort of person, though he has everything, does not have anything. Whereas, a person with humility and humbleness may not have any material possessions but has everything he needs in life because of his pleasant speech.

No comments:

Post a Comment