Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

இன்சொலால் ஈரம் அளை

குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் 
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

இன்சொல் - இனிமையான சொல்; இனிமை பயக்கும் சொல்
இன்சொலால் - இன்சொல் + ஆல் - இனிமையான சொல் என்னவென்றால்
ஆல் - அசைநிலை

ஈரம் - நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி; īram   s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. freshness, greenness, பசுமை.

அளை - தயிர்; மோர் வெண்ணெய் புற்று பொந்து குகை ஏழாம்வேற்றுமையுருபு.
அளை - (வி)துழாவு; கல தழுவு

(அளை + கிறேன், ந்தேன், வேன்) - கலந்து

இப்படிறு - படிறு - வஞ்சனை; பொய்; அடங்காத்தனம்; குறும்பு; களவுப்புணர்ச்சி; கொடுமை.

இலவாம் - இல்லாமல்
இப்படிறு இலவாம் - பொய்மை / வஞ்சனை இல்லமால்; வாய்மையுடன்

செம்பொருள் -  உண்மைப்பொருள்; நேர்பொருள்; சிறந்தபொருள்; முதற்பொருளானகடவுள்; அறம்.
(மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொருள்' எனப்பட்டது.)

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.
கண்டார் - கண்டவர்
செம்பொருள் கண்டார்  - அறத்தினை உணர்ந்தவர்

வாய்ச்சொல் - வாயினின்றுவருஞ்சொல்; வெறுஞ்சொல்; துணைச்சொல்.

முழுப்பொருள்
இன்சொல் என்பது என்னவென்றால் நெஞ்சுடன் அன்பு கலந்த அன்பு வெளிபடுகின்ற வாய்மையுடன் கூடிய வஞ்சனை கலக்காத சொல்லே இனிமையான சொல். இந்த மெய்பொருளை அறிந்த அறம் அறிந்தவர்களின் வாய்ச்சொற்களாக இன்சொல் இருக்கும்.

1) இந்த இன்சொல் எல்லோரிடமும் கொடுக்கபட வேண்டும்.

2) வஞ்சனைகள் இல்லார் அறத்தினை உணர்ந்தாலும், ஒருவருக்கு அன்பு நிறைந்த உள்ளமில்லையானால், அவருடைய வாய்மொழியானது இன்மொழியாயிராது. அதனால் தான் அளை என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

யோசித்துப் பார்ப்போம், நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

3) அதேபோல, அன்பு நிறைந்தவராயிருந்தாலும், சுயநலங்காரணமாக, வஞ்சனைக் கலந்த செயற்பாடு உடையவரானாலும், இனிய சொற்கள் வெறும் மேல் பூச்சாக்க இருக்குமே தவிர உள்ளார்ந்ததாக இராது. அதனால் தான் இப்படிறுஇலவாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர் மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைத்துக் கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. யோசித்துப்பார்த்தால் எத்தனையோப் பேர் மனதில் உண்மையான அன்பில்லாமல் நம்மிடம் அன்பாய் இருப்பது போன்று பாசாங்கு செய்வர். அது தவறு. 

4) இதன் காரணம் பற்றியே இரண்டையும் இணைத்தே கூறியது.

இவ்வதிகாரத்தின் முதற்குறளிலேயே இன்சொல் என்பதன் விளக்கத்தை வள்ளுவர் கூறுவது கவனிக்கத்தக்கது,

மேலும்: அஷோக்

சில கவிதைகள்

ஒருவர்க்கொருவர் நாம்
பரிமாறும் மென் சொற்கள்
பத்திரம் கொள்கின்றன
வானகத்தின் காப்பறையில்.
ஒரு நாள் அவை மழையென
வீழும் வையகத்தில்.
விரியுலகெங்கும் 
துளிர்க்கும் பசுமையாய்.
%
ரூமி

ஒப்புமை
”அன்புடை நன்மொழி அளைஇ” (முருகு 292)
“அன்புடை நன்மொழி இரவலர்க் கீந்த” (சிறுபாண்: 93)
“அன்புடன் அளைஇய அருள்மொழி” (மணி 5:63)



பரிமேலழகர் உரை
[அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.)

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

மு.வரதராசனார் உரை
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வஞ்சனையற்ற அன்பின் ஈரம் தெரிந்தால், இன்சொல்

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: இன்சொல் ஈரம் அளை படிறு இல ஆம் - இனிய சொற்கள் அன்போடு கலந்து குற்றம் இல்லாதன வாம்; செம்பொருள் கண்டார் வாய் சொல் - (அன்றியும்) மெய்ப்பொருள் உணர்ந்தார் வாயினின்று வரும் சொற்களாம்.

அகலம்: இன் சொல் என்பது ‘இலவாம்’, ‘வாய்ச் சொல்’ என்னும் இரண்டு பயனிலைகளைக் கொண்டு நின்றது. தருமர் பாடம் ‘இன்சொலா யீரம்’ ; ‘காண்பார் வாய்ச் சொல்’. மற்றை நால்வர் பாடம் ‘இன் சொலா லீரம்’. இகர அளபெடை இசை நிறைக்க வந்தது. ஆல் என்பது அசை. ‘மாசற்ற நெஞ்சுடையார் வன்சொ லினிது’- நன்னெறி.

கருத்து: அன்போடு கலந்து குற்றமற்றதும், மெய்ப் பொருளுணர்ந்தார் வாயினின்று வருவதும் இனிய சொல்லாம்.

(ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
                                             --- திருமந்திரம்

இதன் பொருள் ---
உண்ணப் புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத்தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.


ஆரம் என்பு புனைந்த ஐயர்தம்
         அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவராயினும்
         நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு, கைகள்
         குவித்து நின்று, செவிப்புலத்து
ஈரம் மென் மதுரப்பதம் பரிவு
         எய்த முன்உரை செய்தபின்.   
                                   --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---
எலும்பினை மாலையாக அணிந்த சிவபெருமானுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப் பொருந்த வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மையான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லிய பின்பு.

அடியவரை வரவேற்கும் சொற்கள் மூவகைப் பண்பினவாய் அமைய வேண்டும். முதலாவதாகக் குளிர்ந்த மொழிகளாக இருத்தல் வேண்டும். ஈண்டுக் குளிர்ச்சி அன்பின் மேலதாம். `ஈரம் அளைஇ` (குறள், 91) என வருவதும் காண்க. இரண்டாவது மென்மையாக இருத்தல் வேண்டும். மூன்றாவது இனிமையை யுடையவாக இருத்தல் வேண்டும். இதுவே ``ஈரமென் மதுரப்பதம்`` எனப்படும்.

Thirukkural - Management - Communication - Pleasant speech
Words spoken by a person of character, discipline, humility, and concern are always pleasant to listen to as those words do not come just from the mouth of that person but they come from the heart of that person, according to Kural 91.

Those are sweet words which men of virtue speak
Mingling t\love with sincerity.

Whatever comes from a person's heart goes to another person's heart. Words that come from the heart not only please the ears of the listeners but also create love and positive feelings in the hearts of the listeners. An emotionally matured person never uses words that are cunning and harmful. So, a person is known not only for what he speaks but also for how he speaks.

English Meaning - As I taught a kid - Rajesh
The words uttered by enlightened scholars will only be kind words that , carry(and display) love in its soul and are honest devoid of any malice /self-interest etc.

Kind words should really have love and compassion displayed because our words should not hurt anyone even for their mistakes. That's why Thiruvalluvar uses 'ஈரம் அளை'  i.e. mixed with love. Even kind words must be honest. It cannot be false words to butter someone. Kind words should not be used to sugar coat self-interests, malicious, cunning thoughts. That's why Thiruvalluvar uses 'இப்படிறு இலவாம்"

Questions that I ask to the kid
How would the words uttered by enlightened scholars be?

4 comments: