குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
பொருள்
நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி.
நயம் - nayam n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.)
நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை.
ஈன்று - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
பயக்கும் - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.
பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர்.

பண்பின் - பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை
பிரியாச் - பிரியாமல், நீங்காமல்; நினைக்காத;
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
முழுப்பொருள்
நயன்
நயன் என்ற சொல்லுக்கு நயம் என்று பொருள். நயம் என்ற சொல்லுக்கு பயன் என்ற பொருள் இருந்தால் பின்பு இதே குறளில் பயன் ஈன்று என்று கூறியமையால் இங்கு நயன் என்ற சொல்லுக்கு நீதி / அறம், மேன்மை, ஒற்றுமை/உறவு ஆகிய பொருள்கள் பொருந்தும்.
"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை நயந்து, வேறு" என்று கம்பராமாயணத்தின் கும்பகருணன் வதைப் படலத்திலும் என்று கூறப்பட்டுள்ளது. அது நயம் என்பது நீதி/அறம் என்று பொருள் கொள்கிறது. அதுபோல் மணிமேகலையிலும் "ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை" என்று கூறப்பட்டுள்ளதால் ஒற்றுமை / உறவு ஆகிய பொருளும் நயன் என்ற சொல்லுக்கு பொருந்தும்
குறளின் பொருள்
இங்கே சொற்கள் பேச்சு என்ற அர்த்தத்தில் மட்டும் வராது. ஒரு கடிதம், ஒரு செய்தித்தாளின் கட்டுரை என்று சொற்களை பயன்படுத்தும் எல்லா தளத்திற்கும் பொருந்தும் என்பதை முன்னரே கூறிக்கொள்கிறேன்.
ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது ஒரு விவாதம் என்று வரும் பொழுது நாம் பலரை சந்திக்கிறோம். அப்போது உரையாடல் என்று வருகிறது. அப்பொழுது சொற்களின் தேர்ச்சி மிக அவசியம். சொற்களின் சிறப்பு சொற்களின் மேன்மையில் இருக்கிறது. ஆதலால் ஒருவர் உரையாடும் பொழுது சொற்களின் பண்பு அறிந்து அதன் அளவு அறிந்து அதன் சிறப்பு நீங்காமல் (அதாவது தீய சொற்களையும், தீங்கு விளைவிக்க கூடிய சொற்களையும் தவிர்த்து) பேசினால், அவருக்கு நீதியும்/அறமும், வினையின் பயனும், நன்மையும் கிடைக்கும். அவ்வாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவதால் யாருக்கும் அநியாயமான இழப்பு இல்லையென்பதால் உறவுகளுக்கு சேதம் இல்லை. அவ்வாறு கையாள்வதால் ஒருவருக்கு மேன்மையும் கிட்டிற்று.
அப்படி பார்க்கையில் மகாத்மா காந்தி இனிய சொற்களுக்கு சொந்தக்காரர். அவர் ஆங்கிலேயருடன் மிகவும் கனிவாகவே பேசினார். அதன் விளைவாக பெருத்த உயிர் சேதம் இல்லாமல் இந்திய நாடு பயன் பெற்றது. சுதந்திரம் உரிமை என்பதை தாண்டி அது நீதி என்பதை காந்தி ஆங்கிலேயரின் மனசாட்சிக்கு மிகவும் பக்குவமாக உரைத்தார். காந்தி கோபப்படாமல் தீய சொற்களை பயன்படுத்தாமல் ஆவேசப்பேச்சுகளை தவிர்த்ததால் உண்மையை பேசியதால் அவருடன் எதிர்வாதம் செய்ய ஆங்கிலேயர்கள் தயங்கினர். அது மட்டும் இன்றி காந்தியின் பேச்சை எல்லோரும் செவிகொடுத்தும் உள்ளம் கொடுத்ததும் கேட்டனர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை

தலைப் - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு.
பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.
முழுப்பொருள்
நயன்
நயன் என்ற சொல்லுக்கு நயம் என்று பொருள். நயம் என்ற சொல்லுக்கு பயன் என்ற பொருள் இருந்தால் பின்பு இதே குறளில் பயன் ஈன்று என்று கூறியமையால் இங்கு நயன் என்ற சொல்லுக்கு நீதி / அறம், மேன்மை, ஒற்றுமை/உறவு ஆகிய பொருள்கள் பொருந்தும்.
"நன்றி ஈது" என்று கொண்டால், நயத்தினை நயந்து, வேறு" என்று கம்பராமாயணத்தின் கும்பகருணன் வதைப் படலத்திலும் என்று கூறப்பட்டுள்ளது. அது நயம் என்பது நீதி/அறம் என்று பொருள் கொள்கிறது. அதுபோல் மணிமேகலையிலும் "ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை" என்று கூறப்பட்டுள்ளதால் ஒற்றுமை / உறவு ஆகிய பொருளும் நயன் என்ற சொல்லுக்கு பொருந்தும்
குறளின் பொருள்
இங்கே சொற்கள் பேச்சு என்ற அர்த்தத்தில் மட்டும் வராது. ஒரு கடிதம், ஒரு செய்தித்தாளின் கட்டுரை என்று சொற்களை பயன்படுத்தும் எல்லா தளத்திற்கும் பொருந்தும் என்பதை முன்னரே கூறிக்கொள்கிறேன்.
ஒரு செயலை செய்யும் பொழுது அல்லது ஒரு விவாதம் என்று வரும் பொழுது நாம் பலரை சந்திக்கிறோம். அப்போது உரையாடல் என்று வருகிறது. அப்பொழுது சொற்களின் தேர்ச்சி மிக அவசியம். சொற்களின் சிறப்பு சொற்களின் மேன்மையில் இருக்கிறது. ஆதலால் ஒருவர் உரையாடும் பொழுது சொற்களின் பண்பு அறிந்து அதன் அளவு அறிந்து அதன் சிறப்பு நீங்காமல் (அதாவது தீய சொற்களையும், தீங்கு விளைவிக்க கூடிய சொற்களையும் தவிர்த்து) பேசினால், அவருக்கு நீதியும்/அறமும், வினையின் பயனும், நன்மையும் கிடைக்கும். அவ்வாறு சொற்களை தேர்ந்தெடுத்து பேசுவதால் யாருக்கும் அநியாயமான இழப்பு இல்லையென்பதால் உறவுகளுக்கு சேதம் இல்லை. அவ்வாறு கையாள்வதால் ஒருவருக்கு மேன்மையும் கிட்டிற்று.
அப்படி பார்க்கையில் மகாத்மா காந்தி இனிய சொற்களுக்கு சொந்தக்காரர். அவர் ஆங்கிலேயருடன் மிகவும் கனிவாகவே பேசினார். அதன் விளைவாக பெருத்த உயிர் சேதம் இல்லாமல் இந்திய நாடு பயன் பெற்றது. சுதந்திரம் உரிமை என்பதை தாண்டி அது நீதி என்பதை காந்தி ஆங்கிலேயரின் மனசாட்சிக்கு மிகவும் பக்குவமாக உரைத்தார். காந்தி கோபப்படாமல் தீய சொற்களை பயன்படுத்தாமல் ஆவேசப்பேச்சுகளை தவிர்த்ததால் உண்மையை பேசியதால் அவருடன் எதிர்வாதம் செய்ய ஆங்கிலேயர்கள் தயங்கினர். அது மட்டும் இன்றி காந்தியின் பேச்சை எல்லோரும் செவிகொடுத்தும் உள்ளம் கொடுத்ததும் கேட்டனர்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
குறள் 45
பரிமேலழகர் உரை
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.).
மணக்குடவர் உரை
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்
மு.வரதராசனார் உரை
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
பண்பு குன்றாச் சொற்கள் மேன்மை சேர்க்கும்.

No comments:
Post a Comment