Skip to main content

Posts

Showing posts with the label சான்றாண்மை

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

  குறள் 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் சான்றவர் - அறிஞர்; சாணார், சான்றோர், அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர். சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில் குன்றின் - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். இரு - பெரிய; கரிய; இரண்டு நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை. தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். தாங்குதல் - சுமத்தல்; புரத்தல்; ஆதரித்தல்; தடுத்தல்; பொறுத்தல்; தோணிதள்ளுதல்; வருந்துதல்; மனத்திற்கொள்ளுதல்; அன்பால்நடத்தல்; தாமதித்தல்; நிறுத்துதல்; குதிரைமுதலியவற்றின்வேகத்தைஅடக்கிச்செலுத்துதல்; நொண்டுதல்; இளைப்பாற்றுதல்; ஏற்றுக்கொள்ளுதல்; அணிதல்; சிற...

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

  குறள் 989 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் ஊழி - முடிவுகாலம்; யுகமுடிவு, கடல்பெருகிஉலகம்அழியும்காலம்; நெடுங்காலம்; பூமி; விதி; முறைமை; வாழ்நாள் பெயரினும் - பெயர்தல் - போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. பெயர்தல் -  போதல்; பிறழ்தல்; மீளுதல்; மாறுதல்; சிதைவுறுதல்; இணைப்புநெகிழ்தல்; கூத்தாடுதல்; சலித்தல்; அசையிடுதல்; இடம்விட்டுமாறுதல்; பிரிதல்; கிளர்தல்; தேய்தல்; நாணயம்வழங்குதல்; வசூலாதல். பெயரார்  - மாறமாட்டார் சான்றாண்மைக்கு-  கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில். ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழ...

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

  குறள் 988 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை அன்று- அல்ல, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். சால்பு - சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில். சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை. உண்டாகப் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல் பெறின் -  பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். முழுப்பொருள் ஒருவற்கு சான்றாண்மை எனப்படும் கல்வி கேள்விகளில் நிறைந்த ஒழுக்கம், பெருந்தன்மை, பொறுமை, மேன்மை, நற்குணம், மன அமைதி ஆகியவற்றில் வலிமையும் உறுதியும் உண்மையும் ...

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

குறள் 987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் இன்னா -   துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு செய்தார்க்கும் - செய்தவர் செய்தல் -   இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் இனியவே  - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக செய்யாக்கால் - செய்யாது இருத்தல் ; இயற்றாமல் இருத்தல் என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு. பயத்ததோ - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல். சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. முழுப்பொருள் வாழ்வில் நமக்கு துன்பங்களை தந்தவர்களுக்கும் வலிகளை தந்தவர்களுக்கும் த்ரோகங்களை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சராசரி மனது கூறும். ஆனால் திருவள்ளுவர் வான்மறை எழுதுகிறார் அல்லவா. துன்பத்தை தந்தவர்களுக்கும் இனியவற்றையும் நல்லவற்றையும் நன்மைகளையும் செய். அதுவே சான்றாண்மை, மேன்மை குணம் கொண்டோரின் ...

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

குறள் 986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சால்பிற்குக் - சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. கட்டளை - அளவு; செங்கலச்சு; உருவங்கள்வார்க்கும்கருவி; ஒன்றைப்போலஅமைக்கும்உரு; உவமை; துலாம்; நிறையறிகருவி; துலாராசி; விதி; முறை; தரம்; கோயில்தருமம்; உரைகல்; ஒழுங்கு; எல்லை; குதிரைக்குப்பூட்டும்கடிவாளம்முதலியன; ஆணை; கட்டுப்பாடு; சமயமூலதத்துவம்உணர்த்தும்நூல் யாது - எது;  எதுவென்றால்; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு. எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். தோல்வி - வெற்றியின்மை துலை - நிறைகோல்; காண்க:துலாதானம்; துலாராசி; கிணற்றிலிருந்துஇறைக்கும்நீர்தங்குமிடம்; ஏற்றமரம்; மடைமுகம்; நூறுபலம்கொண்டநிறை; ஒப்பு ; வெகுதூரம்; தூரப்பிரதேசம்; தோட்டம். அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீ...

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

குறள் 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர் ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல். அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்; அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன் மாற்றாரை - மற்றவர்களை மாற்றும் - மாற்றுதல் - வேறுபடுத்துதல்; செம்மைப்படுத்துதல்; நீக்குதல்; கெடுத்தல்; ஓடச்செய்தல்; தடுத்தல்; மறுத்துரைத்தல்; அழித்தல்; ஒடுக்குதல்; மறைத்தல்; நாணயம்மாற்றுதல்; பண்டமாற்றுதல்; இருப்பிடம்வேறுபடுத்துதல்; பெருக்கித்துப்புரவுசெய்தல்; இடைவிடுதல்; ஒழி...

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

குறள் 984 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் கொலை -  உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல். கொல்லா - எந்தஒரு நோக்கத்திற்காகவும் அல்லது தன்னுடைய சுயநலனுக்காகவும் பிற உயிர்களை மனிதர்களை கொலை செய்யாது இருத்தல்  நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல். நோன்மை - பொறுமை; வலிமை; பெருந்தன்மை; தவம். பிறர் - அயலார் தீமை - கொடுமை; குற்றம்; பாவச்செயல்; குறும்பு; இறப்பு; முதலியன. சொல்லா - சொல்லாமல்  நலத்தது - நலத்தல் , நலமாதல்; விரும்புதல்., சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. முழுப்பொருள் பிறரை கொல்லுவது (கொலை செய்வது) என்பது தீயச்செயல். அது எவ்விதத்திலும் பயனளிக்காது. ஆதலால் பிறரை கொல்லாது இருப்பதே நன்மை பயக்கும். பிறரை கொல்லாமல் உயிருடன் விடுவதற்கு பொறுமையும் பெருந்தன்மையும் வேண்டும். அதுவே வலிமை ஆகும். கொல்வது வலிமைக்கு அறிகுறி அல்ல. ஆதலால் வலிமை, பெருந்தன்மை, தவம்(நோன்மை) என்பது ஓருயிரையும் கொல்லாத அறவாழ்க்கைய...

கடன்என்ப நல்லவை எல்லாம்

குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து  சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] பொருள் கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு. கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி. என்ப -  என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்...

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்

குறள் 983 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம், அருள், கருணை,பக்தி,நேசம்   நாண் - வெட்கம்; மகளிர்க்குரிய கூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம். கண்ணோட்டம் - கண்பார்வை (Glance, look, vision), தாட்சிணியம் (Regard, kindness, partiality,glow of kind feeling towards a friend or even acasual acquaintance, reluctance to deny arequest made by a friend or acquaintance,humanity, fellow-feeling;), இரக்கம், கடைக்கண்பார்வை, அருள்காட்டுதல்; பார்வையிடுதல். வாய்மையொடு - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி. ஐந்து - இவை ஐந்து குணங்களும் சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி. ஊன்றிய - (வி)வேரூன்று; நிறுத்து; நடு; சார்பு, தாங்கு; அழுத்து; நில...

குணநலம் சான்றோர் நலனே

குறள் 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. [பொருட்பால், குடியியல், சான்றாண்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம் குணநலம் - பண்புகளின் / குணங்களின் சிறப்பே, பெருமையே சான்றோர் -  அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர். நலன் -  nalaṉ   s. poetical change of நலம். சான்றோர் நலனே - சான்றோரின் சிறப்பு சான்றோர் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன் பிற - மற்றவை; ஓர்அசைச்சொல். பிறநல -  (குணங்கள் அல்லாது) மற்ற புற அழகெல்லாம், அது அல்லாமல் உறுப்புகளின் அழகு எந்நலத்து...