Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

கடன்என்ப நல்லவை எல்லாம்

குறள் 981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து 
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி.

என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல்.

நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.

எல்லாம் - ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின.  

கடன் - முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.
கடன் - kaṭaṉ   s. a debt, loan of money or goods, இருணம்; 2. duty, கடமை; 3. nature, natural attribute, இயல்பு; "கடனென்ப நல்லவையெல்லாம்" குறள்; 4. order, plan, system, முறைமை; 5. observances such as the daily ablutions and other devotional exercises enjoined by religion, வைதிகக்கிரியை; 6. honour, மானம்; 7. measure, definite quantity அளவை; 8. tribute, tax, கப்பம், வரி.

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.

மேற்கொள்(ளு)-தல் - mēṟ-koḷ-   v. tr. id. +. 1. To mount, as a horse; மேலேறுதல்.பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3). 2.To gain prominence; to overcome, surpass; torise above; மேம்படுதல். அவனை நான் மேற்கொண்டுவிட்டேன். (W.) 3. (Log.) To assert, as a proposition; பிரதிஞ்ஞைசெய்தல். பிரபஞ்சம் உற்பத்திதிதிநாச முடைத்தென மேற்கொண்டது (சி. போ.பா. 1, பக். 43). 4. To embrace, as a doctrine;to accept; ஏற்றுக்கொள்ளுதல். அந்தக் கொள்கையைஅவன் மேற்கொண்டவன். 5. To undertake,attempt; முயலுதல். அவமதனை யஃதிலார் மேற்கொள்வது (குறள், 262). 6. To assume the responsibility of; பொறுப்புவகித்தல். அரசியலை மேற்கொண்டான். 7. To make a vow; to asseverate;வஞ்சினமுரைத்தல்.

மேற்கொள்பவர்க்கு - மேம்படுபவர், முயலுபவர்

முழுப்பொருள்
எது முறைமை, மானம், இயல்பு, கடமை என்றால் எது எது நல்லவை என்று நற்செயல்கள் எல்லாவற்றைம் அறிந்துக்கொண்டு அதனைப்பற்றி தெளிந்துத்தெரிந்துக்கொண்டு அதனை தன்னுடைய கடமையாக ஆற்றிக்கொள்ளுதல். அத்தகைய பண்பு சான்றான்மை (பெருந்தன்மை) அடைய முயலுபவரிடம் இருக்கும் குணம் ஆகும்.

எது நற்செயல்கள்? உண்மை அறிய முற்படும் தேடலே என்று சொல்லலாம். அறிவு, ஒழுக்கம் முதலிய உயரிய குணங்களே நல்லவை.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , பல குணங்களானும் நிறைந்து அவற்றை ஆள்தல் தன்மை. ' பல குணங்களானும் ' என்பது , சாலுதல் தொழிலால் பெறப்படுதலின் ' அவற்றை ' என்பது , வருவிக்கப்பட்டது . பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக் கொண்டு நிற்றலின் , இஃது அதன் பின் வைக்கப்பட்டது.]

கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நமக்குத் தகுவது இதுவென்றறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு நல்லனவாய குணங்களெல்லாம் இயல்பாயிருக்குமென்று சொல்லுவர் நூலோர்.

மு.வரதராசனார் உரை
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

No comments:

Post a Comment