Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

குறள் 985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர்

ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம்

பணிதல் - தாழ்தல்; பெருமிதமின்றிஅடங்குதல்; இறங்குதல்; பரத்தல்; தாழ்ச்சியாதல்; வணங்குதல்; குறைதல்; எளிமையாதல்; உண்ணுதல்.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

சான்றோர் - அறிவொழுக்கங்களால் நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்; அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன்

மாற்றாரை - மற்றவர்களை

மாற்றும் - மாற்றுதல் - வேறுபடுத்துதல்; செம்மைப்படுத்துதல்; நீக்குதல்; கெடுத்தல்; ஓடச்செய்தல்; தடுத்தல்; மறுத்துரைத்தல்; அழித்தல்; ஒடுக்குதல்; மறைத்தல்; நாணயம்மாற்றுதல்; பண்டமாற்றுதல்; இருப்பிடம்வேறுபடுத்துதல்; பெருக்கித்துப்புரவுசெய்தல்; இடைவிடுதல்; ஒழிதல்; தாமதித்தல்; ஓரிடத்துச்சமைத்தஉணவைவேறிடத்துக்குஅனுப்புதல்.

படை - சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை

படை - (வி)உண்டாக்கு; படைஎன்ஏவல்.

முழுப்பொருள்
ஒருசெயலை வெற்றிகரமாக செய்து முடிப்போர் ஆற்றுவார் ஆவர். ஒரு செயலை தனிமனிதனாக செய்து முடிக்க முடியாது. அதற்கு பலரின் பங்கேற்ப்பும் இன்றியமையாததாகும். ஆதலால் இங்கே செயலை செய்வோருக்கு பணிவு இன்றியமையாத குணம்.

பணிவு என்றால் எளிமையாக பழகுதல், ஒத்து வேலை செய்தல், அடக்கி ஆளாமல் நுட்பமாய் பழகி வேலை வாங்குதல் ஆகும். அதுமட்டும் இன்றி வெற்றிகளை எல்லோருக்கும் சமர்ப்பித்து தோல்விகளை பிறர்மீது சுமத்தாத பணிவு வேண்டும்.

இந்தப் பணிவே அரியச்செயல்களை செய்ய ஏதுவாக இருந்து சான்றாண்மையை தந்து சான்றோராக்கும். இந்த பணிவே பகைவரையும் மாற்றக்கூடிய கருவியாக சான்றோருக்கு உதவும்.

அண்ணல் காந்தியடிகளிடம் இந்த பணிவு இருந்ததால் தான் அவரால் பிரிட்டிஷாருடன் பணிவாக பழகி அவர்களின் மனதையும் மாற்றி சுதந்திரத்தை இந்திய நாட்டிற்கு பெற்றுத்தர முடிந்தது.


அதேப்போல ராஜராஜசோழனிடம் இந்த பணிவு இருந்ததால் தான் அவரால் இலங்கையிலும் எல்லோருடன் பணிவாக பழகி அவர்களுக்கு தேவையான பல புத்த மாடங்கள் அமைத்து எல்லோர் மனதையும் வெல்ல முடிந்தது.  ஸ்ரீவிஜய ராஜா ஸ்ரீ மரவிஜயதுங்கவர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜராஜசோழன் புத்த சூடாமணி விஹாரத்தை கட்டி தந்தார்.   

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை


பரிமேலழகர் உரை
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே. (ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.).

மணக்குடவர் உரை
பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்: சான்றோர்தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே.

மு.வரதராசனார் உரை
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who successfully executes and does a work is a doer. A doer's important ability or characteristic is humility. If one has this humbleness, one can even create a dialogue with the opposition, talk to their conscience and get things done by creating a win-win situation. 

Because, it is literally impossible for one person to do all the work. A task needs support from a group of people. Hence, the humbleness that 1) I am only one of the person doing the work, 2) there are many people who make this work possible and successful, 3) success is because of my fellow colleagues 4) taking responsibility of failure and not blaming others is very essential. Only with this humbleness, one can do rare and great things. 

For e.g., Mahatma Gandhi had the humility consult with many leaders and spearhead the freedom movement for India. Gandhi was able to create a dialogue with British empire because he didn't pain British as enemies and he spoke to conscience of the people in Britain.

Questions that I ask to the kid
Why is humbleness is required for a leader? 
What is essential for a leader to convince the opposition?

No comments:

Post a Comment