Skip to main content

Posts

Showing posts from March, 2017

ஊழிற் பெருவலி யாவுள

குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. ஊழின் - தலைவிதியின் வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. பெருவலி -  மிகு வலிமையுடையது; பெருநோவு. உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல். யா - யாவை உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் மற்று -  மற்றப்படி ஒன்று - மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; மற்று  ஒன்று - வேறு ஒன்றும் சூழினும் -  சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல். தான்  -  ...

கண்ணின் துனித்தே கலங்கினாள்

குறள் 1290 கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்  என்னினும் தான்விதுப் புற்று. [காமத்துப்பால், கற்பியல்,  புணர்ச்சிவிதும்பல்] பொருள் கண்ணின்  - கண்ணின் அளவு சிறிதான துனித்தே  - துனி - வெறுப்பு (ஊடல்); சினம்; புலவிநீட்டம்; பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. கலங்கினாள்  - கலங்குதல் - நீர் முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல். புல்லுதல்  - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல். என்னினும்  - என்றாலும் தான்  - தான் விதுப்பு  - நடுக்கம்; விரைவு; பரபரப்பு; வேட்கை (Desire, longing). உற்று  - uṟṟu   part. உறு-. A sign of comparison; ஓர் உவமவாசகம் தோளுற்றோர் தெய்வம்(சீவக. 10).   விதுப்புற்று  - விரைந்து வேட்கை தீர்த்துக்கொண்டாள் முழுப்பொருள் தலைவனும் தலைவியும் சில காரணங்களால் பிணக்குக்கொண்டு ஊடலில் தவிக்கின்றனர். தலைவியின் ஊடலோ கண்ணின் அளவு மிக மிக மிக சிறிதா...

தனியே இருந்து நினைத்தக்கால்

குறள் 1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்  தினிய இருந்ததென் நெஞ்சு. [காமத்துப்பால், கற்பியல்,  நெஞ்சொடுபுலத்தல்] பொருள் தனியே - தன்னந்தனியே - taṉṉantaṉiyē   adv. quite alone தனி - ஒற்றை; தனிமை; ஒப்பின்மை; உரிமை; கலப்பின்மை; உதவியின்மை; சீட்டாட்டத்தில்ஒருவனேஎல்லாச்சீட்டையும்பிடிக்கை; தேர்நெம்புந்தடி. தனி-த்தல் - taṉi-   11 v. intr. தனி¹. 1.To be alone, single, solitary; ஒன்றியாதல்.(W.) 2. To be separate, detached from company; ஏகாந்தமாதமல். தனித்தே யொழிய (கலித். 114).3. To have no equal or match; நிகரற்றிருத்தல்.4. To be deserted, forsaken, helpless, as by thedeparture or death of friends; உதவியற்றிருத்தல்.(W.) இருந்து - இருந்துக்கொண்டு நினைத்தக்கால் - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். என்னைத் - என்னை தினிய - தின்றுக்கொன்று இருக்கிறது தினிசு - tiṉicu   தினுசு, தினுசவாரி, s. kind, sort, வகை. தீ தீ , s. fire, நெருப்பு; 2. the elementary principle of f...

ஊடலில் தோற்றவர் வென்றார்

குறள் 1327 ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். [காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை] பொருள் ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். தோற்றவர் - தோற்றல் - தோன்றுகை; வலிமை; புகழ்; தோல்வி; வீண்எண்ணம்; வெற்றியின்மை வென்றார் - வெற்றி - வென்றி; வாகைசூடுதல், வெல்-. Victory, success,conquest, triumph; செயம். அது - அஃதானது மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல். மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து கூடலின் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு. காணப்படும் - உணரலாம் முழுப்பொருள் ஊடல் என்பது தலைவன் தலைவியின் இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ...

உப்பமைந் தற்றால் புலவி

குறள் 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது  மிக்கற்றால் நீள விடல். [காமத்துப்பால், கற்பியல்,  புலவி] பொருள் உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல், இனிமை, பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு அமைந்து -  அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. (கந்தபு.உருத்திரர்கே. 6.)--v. Is like, of the same kind,impers. sing. finite appellative verb; அதுபோன்றது.--part. An adverbial word of comparison; ஒர் உவமவுருபு (தொல். பொ 286, உரை ) அமைந்தற்றால் - உணவின் அளவிற்கேற்ப / சுவைக்கேற்ப அமைவது போன்றது புலவி - ஊடல்; வெறுப்பு; பிணக்கு அது - அதானது சிறிது - சிறிய அளவு,சிறுமை, சின்ன மிக்க - மிகுந்த; உயர்ந்த. மிக்கற்றால் நீள - நெடுந் தொலைவாக; நெடுங் காலமாக; வெகு தொலைவில். விடல் -  முற்றும் நீங்குகை (Leaving;renunciation) ; ஊற்றுகை; குற்றம். முழுப்பொருள் நாம் அன்றாடும் வாழ்வதற்கு உணவை உண்ணுகிறோம். உண...

கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

குறள் 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்  உரைக்கல் உறுவதொன் றுண்டு. [காமத்துப்பால், கற்பியல்,  குறிப்பறிவுறுத்தல்] பொருள் கரப்பினும் - கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி. கையிகந்து - கையிக-த்தல் - அளவுக்கு மேற்படுதல், மீறுதல் ஒல்லல் - ஒல்லுதல்; இயலுதல்; பொருந்துதல்; இசைதல்; ஊடல்; தீர்க்கை ஒல்லா - இயல முடியவில்லை என்றால் நின் - உன்னுடைய உண்கண் - மைதீட்டியகண் உரைக்கல் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் உறுவது - வரற்பாலது; இலாபம்; ஒப்பது (That which resembles); தருவது. ஒன்று - ஒன்று உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினை முற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் முழுப்பொருள் நீ என்னிடம் சொல்ல கூடாது என்று நினைக்கும் அந்த சொற்களை மறைக்க முற்படுகிறாய். ஆனால் அன்பின் ஆழத்தில் இருந்து வரும் அந்த சொற்கள் அன்பின் மிகுதியால் மறைக்கமுடியாது போகிறது. ...

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

குறள் 1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. [காமத்துப்பால், கற்பியல்,  அவர்வயின்விதும்பல்] பொருள் அவர்வயின்விதும்பல் - பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்லவிரைதல் காண்க - பார்க்கும்படி செய்தல். மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை ; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு காண்கமன் - வருங்காலத்தில் காணும் பொழுது கொண்கனைக் - கொண்கன் - கணவன் -  [கூடிய கொண்கன் குறுக (பு. வெ. பெண்பாற். 12, 11)], ஆவியின் இனிய கொண்கர் (கம்பரா. வரைக்காட்சி) - உயிரினும் இனியரான கணவர் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஆர - A sign of comparison; ஓர் உவமச்சொல் (தொல். பொ 286, உரை )--adv. [T. āra...

மாலையோ அல்லை மணந்தார்

குறள் 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. [காமத்துப்பால், கற்பியல்,  பொழுதுகண்டிரங்கல்] பொருள் மாலையோ அல்லை - அல்லிக்கொடி; தாய்; அல்லி. Water-lily;அல்லி; மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல். மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர் உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல் வேலை - தொழில்; செயல்; வேலைப்பாடு; காண்க:வேலைத்திறன்; உத்தியோகம்; காலம்; கடற்கரை; கடல்; அலை; கானல்; கரும்பு; வெண்காரம். நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர். வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல்; ஓர்அசைச்சொல். பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் முழுப்பொருள் ஒரு நாளில் பல பொழுதுகள் உண்டு - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்...

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. [காமத்துப்பால், கற்பியல்,  தனிப்படர்மிகுதி] பொருள் தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை வாழ்தல் - இருத்தல், சீவித்தல் (ஜீவித்தல்), செழித்திருத்தல், மகிழ்தல், வாழ்வார்க்கு  - உலகில் வாழ்பவர்க்கு வானம்  -  விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை ; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு. பயந்து -  பயம், அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம் ; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை. அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. பயந்தற்றால்- வீழ் - வீழு (விழு), ஆசி, வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு) வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்) அளிக்கும் - அளித்தல் -  காத்தல் ; கொடுத்தல்; செறித்தல் ;  சொல்லுதல் ;சிருட்டித்தல். ; அருள்செய்தல். ; விருப்பமுண்டாக்குதல். ; சோர்வை நீக்குதல் அளி -  அன்பு; அருள் ஆசை வ...

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்

குறள் 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. [காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை ] பொருள் பிரிவு -  பிரிகை, பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம்; இறப்பு. உரைக்கும் - உரை -  ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் வன்கண்ணர் -  வன்கண் - கொடும்பார்வை, பொறாமை, கொடுமை, வீரத்தன்மை ஆயின் -   ஆனால் அரிது -   அரியது, அருமை; பசுமை அவர் நல்குதல் -   கொடுத்தல், விரும்புதல், படைத்தல், To show deep love -> தலையளி செய்தல் [தலையளி - ideal love - உத்தம அன்பு],  To rejoice -> உவத்தல் நல்குவர் - தலையான அன்பிற்கு பாத்திரமானவர் - விருப்பதிற்கு உரியவர் என்னும் - என்கிற நசை -  ஆசை; அன்பு; நம்பிக்கை ; எள்ளல்; குற்றம்; ஈரம் . முழுப்பொருள் வேலை நிமித்தமாகவோ, போரின் நிமித்தமாகவோ நான் உன்னை பிரியப்போகிறேன் என்று மணந்துக்கூடிய என்னிடம் கூறக்கூடிய கொடுமையான நெஞ்சத்தினை கொண்டவர் என்றால் அருமையான அவர் தன்னுடைய தலையா...

மதியும் மடந்தை முகனும்

குறள் 1116 மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்] பொருள் மதியும் - மதி -  சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை. மடந்தை -  பெண்; பதினான்கு முதல் பத்தொன்பது வயது வரையுள்ள பெண்; பருவமாகாத பெண்; சேம்புவகை முகனும் -  முகன் - முகம், தோற்றம், வதனம் அறி-தல் - புதிதாய்க் கண்டுபிடித்தல் அறியா பதியின் - பதி -  நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள். பதிகன் - வழிப்போக்கன் கலங்கிய -  கலங்குதல் -  நீர்முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல் மீன் -  நீர்வாழ் உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நி...

இன்பம் ஒருவற்கு இரத்தல்

குறள் 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். [பொருட்பால், குடியியல், இரவு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. ஒருவற்கு - ஒரு மனிதருக்கு இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இரந்தவை - இரந்து பெற்ற பொருள்; துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. உறாஅ  - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம் வரின் - வரும் முழுப்பொருள் இரப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல. ஒருவருக்கு மிகுந்த மனவருத்ததை கொடுக்க கூடியது. ஏனெனில் நாம் இரந்தால் அதற்கு பலர் கேள்வி கேட்பர். தேவையில்லாமல் பல விஷயங்களில் மூக்கை நுழைப்பர். ஏளனம் செய்வர். அது இல்லாமல் நமது குடிக்கும் நமக்கும் இழிவும் கூட. ஆனால் இரந்தால் நாம் இரந்தது மிக எளிதாக நமக்கும் பிறருக்கும் எந்த ஒரு மனவருத்ததையும் தராமல் வந்து சேர்ந்தால் அது சிறந்தது. அப்படி...

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி

குறள் 995 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.. [பொருட்பால், குடியியல், பண்புடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நகையுள்ளும் -  நகை -   சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு. இன்னாது - தீது; துன்பு இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு பகையுள்ளும் - பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை. உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி பாடு - உண்டாகை; நிகழ்ச்சி; அனுபவம்; முறைமை; நிலைமை; செவ்வி; கடமை; கூறு; பயன்; உலகவொழுக்கம்; குணம்; பெருமை; அகலம்; ஓசை; உடல்; உழைப்பு; தொழில்; வருத...

தொகச்சொல்லித் தூவாத நீக்கி

குறள் 685 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. [பொருட்பால், அமைச்சியல், தூது] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தொகுப்பு - தொகை; கூட்டம்; எல்லை தொகை - கூட்டம்; சேர்க்கை; தொகுத்துக் கூறுகை (சுருக்குதல்)  ;  கொத்து; மொ)த்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள் சொல்லி - அவைக்கு கூறுதல் தூவாத -  வேண்டாதவை நீக்கி - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். நகச் - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு. சொல்லி - அவைக்கு கூறுதல் நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். பயப்பது - விளைதல், உண்டாதல், படைத்தல், பெறுதல் ஆம் - தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒ...