குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
[காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்]

பொருள்
மதியும் - மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.
மடந்தை - பெண்; பதினான்கு முதல் பத்தொன்பது வயது வரையுள்ள பெண்; பருவமாகாத பெண்; சேம்புவகை
முகனும் - முகன் - முகம், தோற்றம், வதனம்
அறி-தல் - புதிதாய்க் கண்டுபிடித்தல்
அறியா
பதியின் - பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.
பதிகன் - வழிப்போக்கன்
கலங்கிய - கலங்குதல் - நீர்முதலியன குழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்
மீன் - நீர்வாழ் உயிரி; விண்மீன்; சித்திரைநாள்; அத்தநாள்; மீனராசி; சுறா; நெய்தல்நிலப்பறை.
முழுப்பொருள்
விண்மீன்கள் (நட்ச்சத்திரங்கள்) எல்லாம் மனங்குழம்பி போய் உள்ளன. ஏனெனில் விண்மீன்களுக்கு நிலவே இந்த ப்ரபஞ்சத்தில் மிகுந்த அழகான ஒன்றாக இருந்தது. ஆனால் என் தலைவியின் பேரழகான முகத்தை பார்த்த உடன் நிலவு அழகா? இவள் முகம் அழகா? என்று குழம்பி போய் உள்ளன.
மனிதர்கள் ஆகிய நாம் நிலவை பற்றி அறிந்த ஒன்று இரவின் இருட்டில் வெளிச்சமாய் நிலவு அழகாய் தெரியும். அது மட்டும் இன்றி மாதத்தில் ஒரு சில நாட்களே (இரண்டு அல்லது மூன்று) முழுமதி இருக்கும். பொதுவாக 15 நாட்களுக்கு மட்டுமே தோன்றும்.
அது மட்டும் இன்றி இவளின் முகம் அடர்ந்த இருளில் ஒளியின் அழகு போல் அல்லாமல் வெளிச்சத்திலும் ப்ரகாசமாய் அழகாய் உள்ளது. அவளை சுற்றி உள்ள உலகின் வண்ணமயமான அழகு நிறைந்த இயற்கையின் (மரம், செடி, கொடி, பூக்கள், மலைகள், ஆறுகள்) மத்தியிலும் இவள் அழகாய் தோன்றுகிறாள்.
சில மணிநேங்கள் மட்டுமே பார்க்கும் நட்சத்திரமே இவளை கண்டு மயங்குகிறதே, இவளை அனேக நேரமும் பார்க்கும் நான் எவ்வளவு மயங்கி இருப்பேன். இந்த மயக்கத்தில் இந்த நட்சத்திரங்கள் எல்லாம் இவளை சுற்றி சுற்றி வருகின்றன.

மேலும் அஷோக் உரை
பரிமேலழகர் உரை
(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இரவுக் குறிக்கண் நிலாவைக் கண்டு சொல்லியது )
மீன் - விண்மீன்கள் ; மதியும் மடந்தை முகனும் அறியா - தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாயிருந்தும் அதனை அறிய மாட்டாது ; பதியின் கலங்கிய - மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன .
இரவுக்குறியாவது , பாங்கியிற் கூட்டக் காலத்தில் தலைமகனுந் தலைமகளும் இரவிற் கூடுதற்குக் குறித்த இடம் . ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்பற்றிப் ' பதியிற் கலங்கிய ' என்றான் . இதற்கு மதிமுக வேறுபாடறியாமைக் கரணியங் காட்டியது தற்குறிப் பேற்றம் . இக்குறட்கு "இனி இரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியு மல்லது கலங்கின மீன்களறியாவென்றுரைப்பினு மமையும் ". என்று பரிமேலழகர் கூறிய மற்றோருரை அத்துணைச் சிறந்ததன்று .

மணக்குடவர் உரை
மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.
மு.வரதராசனார் உரை
விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.
No comments:
Post a Comment