குறள் 685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
[பொருட்பால், அமைச்சியல், தூது]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
தொகுப்பு - தொகை; கூட்டம்; எல்லை
தொகை - கூட்டம்; சேர்க்கை; தொகுத்துக் கூறுகை (சுருக்குதல்) ; கொத்து; மொ)த்தம்; பணம்; எண்; கணக்கு; தொக்குநிற்றல்; திரட்டுநூல்; விலங்குமுதலியவற்றின்திரள்; கூட்டல்; வேற்றுமைத்தொகைமுதலியதொடர்சொற்கள்
சொல்லி - அவைக்கு கூறுதல்
தூவாத - வேண்டாதவை
நீக்கி - நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.
நகச் - நகை - சிரிப்பு; மகிழ்ச்சி; இன்பம்; மதிப்பு; இனிப்பு; இகழ்ச்சி; நட்பு; நயச்சொல்; விளையாட்டு; மலர்; பூவின்மலர்ச்சி; பல்; பல்ல¦று; முத்து; முத்துமாலை; அணிகலன்; ஒப்பு.
சொல்லி - அவைக்கு கூறுதல்
நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.
பயப்பது - விளைதல், உண்டாதல், படைத்தல், பெறுதல்
ஆம் -
தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி.
முழுப்பொருள்
தூது எனப்படுவர் இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு உதவியாக நிற்கும் ஒரு நபர். இத்தகையவர் இரு அரசர்களுக்கு நடுவில் இருப்பர். இன்றைய காலத்தில் இரு வணிக தலைவர்களுக்கு நடுவில் இருப்பர். இரு குடும்பங்களுக்கு நடுவில் இருப்பர். இப்படி தூது செய்வோரின் தூது ஆற்றல் என்று சில உண்டு. அதில் ஒன்று சொல்ல வேண்டிய கருத்துக்களை திரட்டி அதனை பற்றிய முழு புரிதலுடன் தெளிவாக தொகுத்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி, தேவையில்லாதவற்றை விடுவித்து சொற்களை விரயம் செய்யாமல் சொல்லவேண்டும். இதனை நட்புடனும் பரிவுடனும் நயத்தக்க சொற்களில் (ஏனெனில் தகாத சொற்களால் இருவரிடையே ஆன உறவிற்கு பங்கம் வரக்கூடாது) உறவிற்கு நன்மை உண்டாக்கும் கருத்துக்களை(சொற்களை) சொல்பவரே தூது.
மேலும் அஷோக் உரை
அனுமனைச் சொல்லின் சொல்வன் என்று சொல்லி, அவன் சுருங்கப் பேசும் திறனுக்கு, “கண்டேன் சீதையை” என்று அவன் தூது முடிந்து வந்து இராமனைக் கண்டுச் சொல்வதையே எல்லோரும் கூறூகிறார்கள். இது அவன் தூதின் பெருமையைக் காட்டுவதல்ல. அவன் தூது சொன்னதை கம்ப இராமாயணம் பதினேழு பாடல்களில் கூறுகிறது.
கம்பராமாயணம் பிணி வீட்டுப்படலத்தில் தூது செல்லும் அனுமன், இராவணனை வென்ற வாலியின் பெருமை, அவன் இராமனால் கொல்லப்பட்டது என்று பலவும் சொல்லி, அவன் செய்த தீச்செயலால் எப்படி அவன் அழிய நேரும் என்று விளக்கி, சீதையை ஏன் அவன் இராமனிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறான்.
இதில் சுருக்கமாகச் சொல்வதைவிட எவற்றைச் சொல்லவேண்டுமோ, எவ்வாறு சொல்லவேண்டுமோ, இராவணன் அவன் செய்யவேண்டிய முடிவுக்கு என்னவெல்லாம் கேட்கவேண்டுமோ அவற்றையெல்லாம் சொல்லுகிறான். மகாபாரதக்கண்ணனின் தூதும் இதைப்போன்றதே. சுருங்கச் சொல்வதே, தொகுத்து முறைபடச் சொல்வதே தேவையாகும்.
எல்லோரும் மகிழச் சொல்வது என்பது விரும்பத்தக்கதே ஆயினும், அது எப்போதும் நடக்கக் கூடியதல்ல. இதிகாசக் காட்சிகளாயினும், பாரிக்காய் ஔவையார் தூது சென்ற சரித்திர காட்சிகளாயினும் இது நடந்ததில்லை; இன்றும் நடப்பதில்லை.

ஒப்புமை
”வயலைக் கொடியின்.............
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணிகளைந் தனவே” (புறநா.305)
பரிமேலழகர் உரை
தொகச் சொல்லி - வேற்றரசர்க்குப் பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச் சொல்லி - இன்னாத காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூதுஆம் - தன்னரசனுக்கு நன்மையைப் பயப்பவனே தூதனாவான். (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக் காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும் சுருக்கத்தானும் உடம்படுவர், இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை காணாது உடம்படுவராதலின், அவ்விருவாற்றானும் தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம். எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.).
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தொகச் சொல்லி-வேற்றரசரிடம் பல செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கும்; போது மூலவகையாலும் ஒப்புமை வகையாலும் சுருக்கவகையாலும் தொகுத்துச் சொல்லியும் தூவாத நீக்கி நகச்சொல்லி-வெறுப்பான செய்திகளைச் சொல்லும்போது கடுஞ் சொற்களை நீக்கி இனிய சொற்களால் மனமகிழச் சொல்லியும்; நன்றி பயப்பது தூது ஆம்-தன் அரசனுக்கு நன்மை விளைப்பவனே நல்ல தூதனாவன்.
பல செய்திகளை ஒவ்வொன்றாக வேறுபடச்சொல்லின், அவற்றின் பன்மைபற்றியும் நெடுநேரங் கேட்குஞ் சலிப்புப் பற்றியும் அவற்றிற்கு இசையார். ஆயின், அவற்றைத்தொகுத்து ஒரே செய்தியாய்ச்சொல்லின் சுருக்கம்பற்றியும் விளைவறியாதும் இசைவர் என்பதாம். வேற்றரசன் மகளைத் தன்னரசனுக்குப் பெண்கேட்பதும், வேற்று நாட்டில் தன்னாட்டு வணிகக்குழும்பு ஒன்று தங்கி வணிகஞ் செய்ய இடங்கேட்பதும், போன்றவை மூலவகையில் தொகுத்துக் கூறலுக்கும்; சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், சுருங்கைகள் குடைதல் முதலியவற்றைப் போக்குவரத்து வாயிலமைப்பு என்று குறிப்பது, ஒப்புமை வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; கோமுட்டி ஒருவன் தனக்குத் தெய்வங்கொடுத்த ஒரே ஈவைக் கேட்கும் போது, "என் கொட்பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற் கலத்திற் பாற்சோறுண்பதை நான் பார்க்க வேண்டும்." என்று சொன்னதாகக் கதை கூறுவது போன்றது. சுருக்க வகையில் தொகுத்துக் கூறலுக்கும்; எடுத்துக்காட்டாம். இன்சொற்குப் பெரும்பாலார் வயப்படுதல் பற்றியே அது நால்வகை ஆம்புடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.

மணக்குடவர் உரை
சுருங்கச்சொல்லி, விரும்பாத சொற்களை நீக்கி, மகிழுமாறு சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான். இது சொல்லுமாறு கூறிற்று.
மு.வரதராசனார் உரை
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
சாலமன் பாப்பையா உரை
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
English Meaning - As I taught a kid - Rajesh
An emissary is an intermediate person playing a crucial role in helping to communicate message and negotiate. In olden days emissary played role in kingdoms; Today, between governments, between organizations, between groups, between people etc.
An emissary should have following capabilities
1) Being coherent in communicating the message. This comes by understanding the message comprehensively and in depth, creating a structure and exhibiting purpose
2) Avoiding objectionable words. Not giving much information or unnecessary information. Because the purpose is to improve relations, improve the situation, bring positive outcomes, establish win-win situations. Not to deteriorate the situation further nor take it to irreconcilable state nor take it to too difficult to reach to take any step further
3) Evoke smiles - Main purpose is to improve relationships. So, being friendly in terms of words, conduct, body language, facial reactions is very important.
Only the emissary who follows the above three ways would be able to get desired results.
Questions that I ask to the kid
What are the 3 ways through which an emissary get desired results?
No comments:
Post a Comment