Thursday, March 17, 2016

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்

குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

தவஞ்செய்வார் - தவம் செய்வார்;  பற்று அற்று வாழ்வோர்கள்

கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில் வேத சம்பந்தமான சடங்கு; தொழில், இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

தங்கருமஞ் - தம் கருமம் - தான் செய்ய வேண்டிய செயல்களை

செய்வார் - செய்வார்கள்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.))

மற் றல்லார் - மற்று அல்லார் - மற்றவர்கள்

அவம்  - வீண்; பயனின்மை; கேடு; ஆணை; அழைப்பு; வேள்வி; ஆகாயத்தாமரை

அவஞ்செய்வார் - அவம் செய்வார்- பயன் அல்லாதவற்றை செய்வார்கள்

ஆசை - வேண்டலுறும்பொருட்கண்செல்லும்விருப்பம்; விருப்பம்; பொருளாசை; காமவிச்சை; அன்பு; பேற்றில்நம்பிக்கை; பொன்; திசை; பொன்னூமத்தை, இச்சை, விருப்பம்

உட்படுதல்  - உள்ளாதல்; கீழாதல் அகப்படுதல் உடன்படுதல் சேர்தல்

ஆசையுட் பட்டு - ஆசையுள் பட்டு -  இச்சையின் பால், விருப்பத்தின் பால், தான் வேண்டியவற்றை/கண்ணுக்கு விருப்பபடுவற்றை கண்மூடிதனமாக அடை முற்ப்படுவது

முழுப்பொருள்
பயன் இல்லாத வற்றை செய்பவர்களை அவம் செய்பவர்கள் என்று கூறுவார்கள். இத்தகையவர்கள் ஒரு பொருளின்மீதோ அல்லது ஒரு செயலின் மீதோ இச்சைக்கொண்டுச் செயலின் பயன் பற்றி ஆராயாமல் இச்சையின் விசையால் சிற்றின்பத்தை நாடி செய்வார்கள். ஒரு வலைக்குள் சிக்கிகொள்வார்கள். அது பயன் அற்றவை ஆகும். இவர்கள் தங்கள் வாழ்வு தனை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கிக்கொண்டு வாழ்வை  ஒரு நெறியில்லாமல் உலகவாழ்வியலில் வீணாக கழிப்பர்

ஆனால் தான் செய்ய வேண்டிய செயல்களை, கடமைகளை அறிந்து அதற்கு ஏற்றார்ப்போல் வாழ்வை நெறியுடன் அமைத்து மற்ற பயன் அல்லாத செயல்/பொருள்களின் மீது பற்று நீக்கி ஒரு வாழ்வை வாழ்பவர்கள் தவம் செய்பவர்கள் போல் ஆவர்.

இக்குறளில் நாம் காண வேண்டியது என்னவென்றால் இங்கே பற்றற்ற பயனுள்ள கர்ம குறிக்கோளுடன் ஒரு இல்லற வாழ்க்கை வாழ்பவன் கூட தவ வாழ்க்கை வாழ்பவனாக கருத படுவர்.

கிட்டதட்ட இதனின் மையப்பொருளில் இல்வாழ்கை அதிகாரத்தில் ஒரு குறளில் கூறியிருப்பார் திருவள்ளுவர்

மேலும்: நன்றி: அஷோக்

ஒப்புமை
“தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்” (முருகு 89)
“தலையாயார் தங்கருமம் செய்வார்” (நாலடி 52)
“வேம்க டங்கள்மெய் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்
வேங்க டத்துறை வார்க்கு நமஎன்னல்
ஆம்கடமை அதுசுமந் தார்கட்கே” (திருவாய் 3.3:6)

“என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன்” (கம்ப.மந்திரப் 15)
“ஈட்டுவார் தவம லான்மற் றீட்டினால் இயைவ தின்மை
காட்டினார் விதியார்” (கம்ப.ஊர்தேடு 104)

"தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிகென் றவன்வயின் உரைத்தபின்” (மணி 7:13-4)

"இழைத்ததீ வினையையும் கடக்க எண்ணுதல்
தழைத்தபே ரருளுடைத் தவத்தி னாகுமேல்
குழைத்ததோ ரமிர்தினைக் கோடல் நீக்கிவே
றழைத்ததீ விடத்தினை அருந்த லாகுமே” (கம்ப.மந்திரப்.25)


“நதியின் விசையை கிளைகளாக, கால்களாக பிரித்து நிறுத்துகிறோம். பசுமையெனப் பொலிகிறது. பொன் என விளைகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். அவரை வெற்றுவிழிகளால் நோக்கினார் விதுரர். “அனைத்து தொல்விசைகளும் அழகென்றும் அறமென்றும் மெய்மையென்றும் உருமாற்றத் தக்கவையே” என்றார் இளைய யாதவர். விதுரர் தலையசைத்தார்.

சற்று நேரம் கழித்து “ஆனால் அதனினும் மறைவானது என் ஆணவம்” என்றார் விதுரர். “ஆம், நான் அஸ்தினபுரியின்மேல் விழைவுகொண்டிருந்தேன். நானே தகுதியானவன் என்று எண்ணினேன். அந்நகருக்கு நிகராக நான் கொண்டிருந்தது அந்த அருமணி. அதை விழியருகே வைத்து உள்ளே நோக்குகையில் நான் கண்டது அடுக்கடுக்கென ஒளிகொண்டு விரியும் எனக்கான நுண்நகரத்தை. என் கோல்நிற்கும் கோட்டை, என் சொல் ஆளும் நிலம்.” சொற்களுக்காகக் கொந்தளித்து பின் மெல்ல அடங்கி “நீங்கள் சொன்னதுதான் யாதவரே, அளிக்கப்படும் உரிமை உரிமையே அல்ல. கொள்ளப்படுவதும் வெல்லப்படுவதுமே மெய்யான உரிமைகள். நான் அன்பாலும் அளியாலும் பேணப்பட்டவன். இன்சொல்லின் நஞ்சுண்டு வளர்ந்தவன். அன்பெனும் சிறுமையில் திளைத்துக்கொண்டிருப்பவன்” என்றார்.

“நான் அவளுக்கு உள்ளிருந்து பிறிதொன்றை எடுக்க கற்பிக்கப்போகிறேன். அரசியென அவள் இருக்கும்போது ஆடல் அவளுடன் உறையாது. அரசியல்லாதாகி அவளென்று எஞ்சும் தனியறைக்குள் ஆடல் மட்டும் அவளுடன் இருக்கும். அதை தடுக்கும் தன்னுணர்வொன்றும் அவளிடம் எஞ்சாது” என்றாள். அவன் நகைத்து “நன்று. அவைநடுவே அரியணை மேடையில் அவ்வாட்டம் எழாதிருக்கும்வரை அனைத்தும் நலமே” என்றான். அவள் நகைத்து “இரண்டாக பகுத்துக்கொள்வதைப்போல் பெருகும் வழி பிறிதொன்றில்லை. அவ்விரண்டில் ஒன்று பெருகி பிறிதொன்றை உண்ணுமென்றால் அமையும் முழுநிலைபோல் சிறந்த தவமும் இல்லை” என்றாள்.



பரிமேலழகர் உரை
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)

மணக்குடவர் உரை
தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
இது தவம்பண்ண வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
வையம் பயனுறச் செய்வதே வாழும்.


Thirukkural - Management - Personality Development - Responsibility
Valluvar, in Kural 266, equates a person who acts according to what he is responsible to a person who does meditation. This similarity is because of the importance of execution of responsibilities. A responsible person responsibly carries out his responsibilities. He knows that he is created to fulfill his purpose of creation, confirms Kural 266.

The penance-doer realizes his self, while those
Caught in yearning's net defeat themselves.

If a person does not focus on his responsibility, he will be diverted by so many other unwanted activities. Let us remember the conversation between a student  and Swami Vivekananda to understand the importance of fulfilling one's responsibilities. A student, when he met Swami Vivekananda,  said, “Swami, I want to serve the society. Kindly tell me what I should do?” Swami asked, “What are you?” The boy replied, “I'm a student.” Swami counseled, “Your only service to the society is to study well.” 

If a student studies well, if a cook cooks well, if a driver drives well and if a leader leads well, the society in which these people live will become a prosperous society. Fulfilling one's responsibility sincerely is equivalent to doing meditation. 

Getting diverted from major responsibility and involving in other activities is similar to an insect that is caught in a spider's web. The caught insect tries to get out of the web and in turn gets itself entangled in the web. A person who does not carry out his responsibilities is caught in the web of desires and that destroys him. There is no freedom when a person does not do what he is responsible to do.

English Meaning - As I taught a kid - Rajesh
Those who do penance do their job (towards their goal Moksha, duties of household, work/career etc) whereas others do all stuffs to satisfy their sensory pleasures. Those who do penance with focus make progress and accomplish it. Whereas those who don't do penance don't achieve anything. So, do anything like you do a penance and stay away from distractions and sensory pleasures

Questions that I ask to the kid
What does people who do penance do and others do? (தவஞ்செய்வார்)

Monday, June 8, 2015

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்

குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற 
படல்ஒல்லா பேதைக்கென் கண்
[காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல்]

பொருள்
மடல் - ஊர்தல் - மடலூர்-தல் - தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல்

யாமம் - நள்ளிரவு; சாமம்; இரவு; இடக்கைமேளம்
யாமத்தும்  - இரவிலும். அதாவது பகல் மட்டும் அல்லாது இரவிலும்

உள்ளுதல் நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளுவேன்  - மனதில் நினைத்துக்கொண்டிருப்பேன்
உள் - உள்ளே - மனதில்
உள்ளு -  உள்கு, III. v. t. think, remember, நினை; 2. intend, எண்ணு; 3. honour, esteem, மதி. உள்ளல், உள்கல், உள்குதல்

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

மன்ற - ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக.
s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி

படல் - ஓர்அடைப்புவகை; மறைப்புத்தட்டி; பூந்தடுக்கு; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக் கட்டையிலுள்ள குழி; உறக்கம்

ஒல்லா - கூடாத / இணங்காத
ஒல்லு - III. v. i. join. combine, கூடு; 2. agree, suit, இணங்கு; 3. be possible practicable, இயலு; 4. happen, take place, சம்பவி; v. t. tolerate, சகி, பொறு; 2. braid as a basket, mend as a net.
ஒல்லாமை, neg. v. n. inability, contempt.
1, friends x ஒல்லார், enemies.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்

என் - என்னுடைய

கண் -  கண்

பொருள்
பேதைக்கென் கண் - பேதையை நினைத்து என் கண்கள்
படல்ஒல்லா பேதைக்கென் கண் - பனையோலையில் படுத்துக்கொண்டிருக்கும் பொழுது இமைமூடாது என் கண்கள் பேதையை நினைத்துக்கொண்டிருந்தது.

மடலூர்தல் யாமத்தும் - மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும் மனதில் நினைத்துக்கொண்டிருப்பேன்
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்  மன்ற மடலூர்தலைப் பற்றி (பகல் அல்லாது) நள்ளிரவிலும் மனதில் தெளிவாக நினைத்துக்கொண்டிருப்பேன்

முழுப்பொருள்
நான் பகல் வேளையில் மடலூர்தலை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பேன் இரவில் நினைக்க மாட்டேன் என்று நினைக்கும் அறிவில்லா பேதையே! நான் நள்ளிரவிலும் இமை மூடாமல் கண்விழித்து உன்னை எண்ணி எண்ணி மிக தெளிவாகவும் உறுதியாகவும் மனதில் நினைத்து கொண்டிருப்பது என்ன தெரியுமா ? (நாளை பகலில்) மடலூர்தலை(உன்னை அடைவதற்காக ஊர் மக்கள் முன்பு வெளிப்படையாக ஒரு குறீயிட்டின் (மன் குதிரையில் ஏறுவது) மூலம் தெரிவிப்பது) பற்றியே!

நம் காதலை இன்னும் சபைக்கு கொண்டுவராத குற்றவுணர்வு உனக்கில்லையா ?

மேலும்: அஷோக் (நன்றி)
பகலில்தானே மடலூர்தல் என்று நினைந்து, இரவுதான் வந்ததே என்று அறியாப் பெண் நினைப்பாளேயாயின், அவளுக்காக தலைமகன் இவ்வாறு கூறுகிறானாம். மடலூர்தல் என்பதைப் பற்றி, காமத்துழன்று தாம் நள்ளிரவிலும் மிகவும் நினைத்து கொண்டிருக்கிறேன் என்று தலைவி அறியவேண்டி கூறுகிறான் தலைவன்.

தன்மேலுள்ள காதலால், பகலில் மடலேறுதல் மட்டுமன்றி இரவிலும் தூக்கமுமற்று, மடலூர்தலையே நினைந்தானே என்று, தலைவியை மேலும் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறான் தலைவன்

ஒப்புமை
குறள் 1164


”காதல் தானும் கடலினும் பெரிதே” (நற் 166:10)
“காமக் கடலகப் பட்டு” (கலி 139:17)
“வேலை யன்ன மாலுள சிந்தை” (கம்ப.உண்டாட்டு.60)


"கண்ணும் வாளற்ற கைவளை சோருமால்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
எண்ணில் காமம் எரிப்பினும் மேல்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல் தில்லையே” (சீவக.998)

“கண்ணிலாம் கவினொளிக் காளை மார்திறத்து
உண்ணிலா எழுதரு காம ஊழ்எரி
வெண்ணிவாச் சுடர்சுட விரிந்து நாண் விடாப்
பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே” (சூளா.குமாரகாலச் 14)

பரிமேலழகர் உரை
('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)

மு.வ உரை
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

சாலமன் பாப்பையா உரை
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

மணக்குடவர் உரை
பேதை பொருட்டு என்கண் உறங்குதலை இசையாது: ஆதலானே மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும் நினைப்பேன்.

இது மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர் என்ற தோழிக்கு என் கண் உறங்காது ஆதலான் மறவேனென்று தலைமகன் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
( மடலூரும் நேரம் இன்றைக்குக் கழிந்துவிட்டதென்ற தோழிக்குச்சொல்லியது .)

பேதைக்கு என் கண் படல் ஒல்லா - பேதைத் தன்மையுள்ள என் தலைவி கரணியமாக எனக்கு இராமுழுதுங் கண்ணடைப்பதேயில்லை ; யாமத்தும் மடல் ஊர்தல் உள்ளுவேன் மன்ற - அதனால் எல்லாரும் உறங்கும் நள்ளிரவிலும் நான் மடலேறக் கருதுவது உறுதி .

இனி , நாளைக் குறைமுடிப்பே னென்று கடத்தி வைக்க வேண்டாமென்பதாம் . ' பேதை ' யென்பது இங்குப் பருவங்குறியாது இளமையும் மடமையுங் குறித்து நின்றது . ' மன்ற ' தேற்றப் பொருளிடைச்சொல் .

பி.கு: இப்பாடலை நான் இன்று எழுத தூண்டிய பாடல் இதோ (சுட்டியைத் தட்டவும்)

Geetha Govind / Astapathi | Song : Rati Sukha Sare | Composer: Sri Jayadev
Singer: Niranjana Srinivasan
Other Details: Chembai Concert 2011 || Guruvayoor

Note: 
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் [Thirukkural Link at the end]: 
Is it time? This weekend I learnt about this song ‘Rati Sukha Sare’ (translation in comments, video in comments) (of Poet Jayadev’s Geeta Govind /Astapathi / Krishna’s Love songs) from my favorite writer Jeyamohan. I found a soulful rendition of that song by Mrs.Niranjana Srinivasan in youtube. When I was wandering in that paradise, thought about getting immersed in the ocean of love (Kammathuppaal of Thirukkural by Thiruvalluvar). When I was neck deep in it wrote a prose of this couplet (meaning in comments) thinking about the charming girl.


இது தான் நேரமோ தெரியவில்லை. பிறந்தநாளிற்கு ஓர் நாள் முன்பு எனது ஆஸ்தான எழுத்தாளர் ஜெயமோகன் மூலமாக (ஜெயதேவ-இன் கீத்கோவிந்தில் / அஷ்டபதியில்) “ரதி சுக சாரே கதம் அபி சாரே” என்ற பாடலை பற்றி அறிந்தேன். பின்பு யூட்யூபில் தேடி கடைசியில் ஸ்ரீமதி நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் ஆத்மாத்மார்த்தமாக நன்கு பாடிய நல்ல அப்பாடலை கேட்டேன். அவ்வின்ப வெள்ளத்தில் தத்தளிக்கும் நான் ஏன் நாம் வள்ளுவனின் இன்பத்துப்பாலில் திளைக்கக்கூடாது என்று என் மங்கல் ராதையை மிகுதியாக உள்ளியதால் ஒரு குறள் எடுத்து எழுத முற்பட்டேன்!

Monday, May 4, 2015

உள்ளியது எய்தல் எளிதுமன்

குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் 
உள்ளியது உள்ளப் பெறின்
[பொருட்பால், அரசியல்,  பொச்சாவாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொச்சா -  பொச்சாப்பு - மறத்தல் - மறதி

பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை

உள்ளி  - மனதில் நினைத்து
உள் - உள்ளே - மனதில்
இ - demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations.
உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.
எய் - எறி (cast, throw)

எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது.

மன் - part. 1. An expletive; ஓர் அசைநிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).2. Affix indicative of (a) future tense; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல். சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா. 1, உரை.): (b) ellipsis;ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல்.சொல். 252, உரை): (c) greatness, abundance;மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்றுமன்னே (புறநா. 75): (d) change or transformation; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காடுமனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252,உரை): (e) prosperity; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291): (f) what ispast and gone; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினேயெமக்கீயு மன்னே (புறநா. 235): (g) permanence;நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) 3. A personalsuffix, as in vaṭamaṉ; ஒரு பெயர்விகதி.- ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)


மன் - n. மன்னு-. 1. King; அரசன்.மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣattriya;warrior; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேதுபு. சேதுபல. 69). 3. Lord, chief; தலைவன்.மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 4.Husband; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 5. The 26thnakṣatra. See உத்தரட்டாதி. (பிங்.) 6. Greatness; பெருமை. (யாழ். அக.) 7. Meanness,inferiority; இழிவு. (சூடா.)

மன்  - n. manu. Mantra; மந்திரம்.(பிங்.)

மற்று - இல்லையென்றால்
part. 1. An expletive; ஓர்அசைநிலை. (தொல். சொல். 264.) 2. A disjunctive;வினைமாற்றுக் குறிப்பு. (நன். 433.) 3. A term meaning other, another; பிறிதுப்பொருட் குறிப்பு. (நன்.433.)--adv. 1. Again; மறுபடியும். (W.) 2.Subsequently, afterwards; பின். 3. See மற்றப்படி.

மற்றந்தான் - மற்ற எண்ணங்களில் கவனச்செலுத்தி கவனச்சிதைவு கொள்வது

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

உள்ளியது - மனதில் நினைத்து

உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

உள்ளப் - உண்மையான,  மனம், ஊக்கம், ஆத்மா,

பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

பெறின் - பெறுவர்

முழுப்பொருள்
நான் இவ்வுயரங்களை அடைந்துவிட்டேன். மேன்மேலும் உயரங்கள் கடினமாக இருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?

மனதில் தான் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவது மிக எளிமையான ஒன்று ஒருவனுக்கு (மன்னனுக்கு, தலைவனுக்கு). எப்படி? நாம் அடைய வேண்டுமென்று ஒரு செயலை உளமாற நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுது மற்ற சிந்தனைகளில் சென்று கவனம் இழந்துவிடுவது நடக்கக்கூடியது. அவ்வாறு இல்லாமல் சிந்தனைக்களையாமல் உள்ளத்தால் அடைய வேண்டி நினைத்தவற்றை மறவாமல் உளமாற பின் தொடர்ந்து சென்றால் தான் எண்ணியவற்றை எளிதாக பெறுமுடியும்.

இங்கு பொச்சாவமை அதிகாரத்தில் இது வருவதால் தான் எடுத்துக்கொண்ட செயலை ஒரு பொழுதும் மறவாமல் இருப்பது சிறந்தது. ஏன் என்றால் ஒரு செயலை துவங்கும் பொழுது ஒரு உத்வேகம் இருக்கும். ஆனால் சில நாட்களுக்குப்பின் அது குறைந்து மற்ற சிந்தனைகளில் மனம் சென்று எடுத்த செயலில் ஊக்கம் குறைந்து மறந்துவிடுவர்.

மேலும் - அஷோக்

பரிமேலழகர் உரை
தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத் தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம், மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். (அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது: மறவி இன்றி அதன்கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மன் தான் உள்ளியது எய்தல் எளிது - அரசன் தான் கருதிய பொருளைத் தான் கருதியவாறே பெறுதல் எளிதாம் ; உள்ளியது மற்றும் உள்ளப் பெறின் - தான் எண்ணியதைப் பின்னும் விடாது எண்ணக் கூடுமாயின்.

உள்ளியதை யுள்ளுதலாவது தான் கருதியதைப் பெறும் வரை மறவாது அது பற்றி முயற்சி செய்தல் . 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது . 'மன்' என்பதை இடைச் சொல்லாகக் கொண்டு , அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின் , 'மன்' ஒழியிசைக் கண் வந்தது ,என்னும் பரிமேலழகர் இலக்கணக் குறிப்பு இவ்விடத்திற்கு ஏற்காமை யுணர்க.


மணக்குடவர் உரை
தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும் அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின். இனிப் பொருளின்கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மறவாமை வேண்டுமென்றார். 

மு.வ உரை
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

Thirukkural - Management - Perseverance
'Be ambitious' has been a stock phrase used by anyone who has achieved some significance in his life. That phrase has meaning and relevance as one must aspire to achieve great things in one's  life. That aspiration will turn out to be a thought. Be determined to realize that thought and put in efforts to accomplish the task, suggests Kural 540.

All aims are easy to achieve
To those that persist.

Napoleon Hill, one of the successful authors of success coaching, says, “Whatever the mind can  conceive and believe, the mind can achieve.” So conceive a thing, believe in what you conceive and achieve that as it is your responsibility to achieve greater things. You can definitely achieve whatever you aspire for, if you just perspire and persevere. Remember Thomas Alva Edison's “Genius is one percent inspiration and ninety nine percent perspiration.”

English Meaning - As I taught a kid - Rajesh
One has to conceive a thing and be ambitious about it. But that is not sufficient. If one believes in his/her conceived/aspired idea/dream/goal and if one perspire and persevere, then one can easily and definitely achieve whatever (and like how) they conceived. aspired.  Be determined to realize that thought and put in efforts to accomplish the task. One should not procrastinate his/her tasks/action, one should not forget his dream.

Thomas Alva Edison's said “Genius is one percent inspiration and ninety nine percent perspiration.”

Questions that I ask to the kid
How one can easily attain his goal/dream?

Saturday, May 2, 2015

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்

குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
[காமத்துப்பால், கற்பியல்,  உறுப்புநலனழிதல்]

பொருள்
சிறுமை - இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை; கழிகாமம்

நமக்கு -  நமக்கு

ஒழிதல் - அழிதல்; சாதல்; நீங்கல்; தவிர்தல்; விடுதல்; வெறுமையாதல்; எஞ்சுதல்; தங்குதல்; ஓய்தல்.

ஒழிய - தவிர;  நீங்க; கெட.

ஒழிய 1. unless (emphatic) [post. + conditional] [2. inf. of ஒழி `cease']

நமக்கொழியச்  - நமக்குக் கிடையாது

சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலையினுச்சி; வானம்; தேவருலகம்; நெடுங்காலம்.

சென்று - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.
சென்றார் - சென்றவர்

சேட்சென்றார் - அகல தொலைவிற்கு சென்றவர்

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

உள்ளி - நினைத்து

நறுமை - நன்மை; நன்மணம்.

நறுமணம்- நல்ல வாசனை,சுகந்தம்,மணப்பு,நறவு,குரவு

நறுமலர் - வாசனை கொண்ட மலர்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணின - நாணுதல், உடல் கூச்சங்கொள்ளுதல், To be influenced unfavorably as some trees or plants by nearness to the cocoa; to be uncongenial, to each other, as the red and white lotus, பிணங்க

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

முழுப்பொருள்
கண்ணே உன் கண்களை காணும் மலர்கள் அனைத்தும் நாணம் கொள்ளும். அவ்வளவு அழகு நீ! அவ்வளவு அழகு உன் கண்கள். ஆனால் காதலர் உன்னைவிட்டுப் பிரிந்து தொலைவாகச் சென்றுவிட்டார். அதனை நினைத்துக்கொண்டு (உள்ளி) இருந்தால் நீ நோய் கொள்வாய் துன்பம் கொள்வாய். ஆதலால் உன் கண்கள் அழகிழக்கும். அதனால் உன்னைப் பார்த்து நாணம் கொண்ட மலர்களைப் பார்த்து நீ நாணம் கொள்ளும் நிலைமை வரும். ஆதலால் அத்தகைய துன்பம்(சிறுமை) நமக்கு (பெண்களுக்கு) தகாது (ஒழிய). ஆதலால் நீ அழலாமோ ? (என்று தோழி கூறுகிறாள்)

முழுப்பொருள்2: இக்குறளுக்கு முன்பு ஒருமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை சற்று தாமதமாகவே கண்டு உள்ளேன். ஆதலால் அதை இங்கே பதிவு செய்து பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

கணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.

அப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை 
(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்). 

அப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன. 

அத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு ?

ஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.

இவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :
இப்படி பெருங்கொடுமை ஆற்றி வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் ?



பரிமேலழகர் உரை
[அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.]

(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

மணக்குடவர் உரை
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

மு.வ உரை
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா உரை
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து


உனை நினைத்து கலங்கிய... 

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய...
கண்கள் அழகிழந்து
விட்டதடா ...!!!

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!

Monday, October 20, 2014

கேட்டினும் உண்டோர் உறுதி

குறள் 796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை 
நீட்டி அளப்பதோர் கோல்
[ பொருட்பால், நட்பியல், நட்பாராய்தல் ]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கேட்டல்செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்

கேட்டினும் - நமக்கு கேடு உண்டாகும் தருணத்திலும் 

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உறுதி - திடம்; திரம்; வலிமை; நன்மை; இலாபம்; கல்வி; மேன்மை; சன்மார்க்கஉபதேசம்; உறுதி; தளராமை; ஆட்சிப்பத்திரம்; பிடிவாதம்; விடாப்பிடி; பற்றுக்கோடு; நல்லறிவு; வழக்கின்திடம்; பயன்.

உண்டோர் உறுதி  - உண்டு ஒரு நன்மை (உறுதியாக தெரிந்து கொள்ளக் கூடிய)

கிளைஞர் - உறவினர்; நட்பினர்; மருதநிலமாக்கள்.

கிளைஞரை - நமது நண்பர்களை 

நீட்டி - நீட்டல் நீட்டுதல்; குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் விகாரவகை; காண்க:நீட்டலளவு(வை); சடையை நீட்டி வளர்த்தல்; பெருங்கொடை

அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம் கொண்டு அறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப் பேசுதல்.

கோல் கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி.

நீட்டி அளப்பதோர் கோல் - (நண்பனின் குணத்தினை) நீட்டி அளப்பதிர்கான கருவி அல்லது தருணம்

முழுப்பொருள்
நமக்கு வரும் கெடும் துன்பங்களும் பொதுவாக கவலை அடைய செய்தாலும் அந்த தருணங்களால் உண்டாகும் சில நன்மைகளும் உண்டு. அது நம் நட்பானவர்கள், சுற்றி உள்ளவர்களின், இயல்பினை சரியாக புரிந்து அளந்து கொள்ள கோலாக உதவும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

அதாவது நம்  வளமான காலங்களில் நம்மை சுற்றி உள்ளவர்கள் இயல்பாகவே இனிமையாக பழகுவர். அப்பொழுது அவர்களின் உண்மையான இயல்புகளை/குணங்களை எடை போடா இயலாது. ஒரு துன்பம் வரும் போது, அவர்கள் நம்மோடு தோள் கொடுத்து தாங்கி பிடிகின்றனரா அல்லது மறைந்து விடுகின்றனரா என்பதை வைத்து அவர்களை எளிதில் எடை போட்டு விடலாம். .
உதாரணமாக கொக்கு நீர் வரத்து நன்றாக உள்ள குளங்களில் தான் தாங்கும். நீர் வரத்து குறைந்த உடன் அந்த குலத்தை விட்டு பறந்து சென்று விடும். இது தீய நட்புக்கு உதாரணமாகும். 

அதே போல் நல்ல நட்பிற்கு, இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத்தில் வரும் சிறு கதையை கூறலாம் (நன்றி: அர்த்தமுள்ள இந்துமதம்)

தர்மர் நட்பை பற்றி பீஷ்மரிடம் வினவ, பீஷ்மர் கீழ்க்கண்ட கதையை கூறுகிறார். 

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.
சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். `திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு, `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.
இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தாய் உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.
இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.
இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும் கேட்கத் தொடங்கினான்.
“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”
அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று.
“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.
வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”
எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்
இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்
சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!
- மகாபாரதம்
இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று சொன்னான்.
அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!
எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.
அப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.
கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.
நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திரலோகத்தை அடைந்தது.

சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து (11-SEP -2023)
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு முந்திச் செல்கிறோமோ இல்லையோ, இறப்புக்கு உடனே சென்று நிற்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு.
மகிழ்வை விட , துக்கம் தான் சட்டென்று கை நீட்டிப் பற்றிக் கொள்ள வேண்டியது.
அமரர் பாரதி மணி அவருடைய புத்தகத்தில் எழுதியவற்றில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது டெல்லியில், இறப்புகளுக்கு அவர் உதவி செய்த அத்தியாயம் தான்.
கஸ்தூர் பா வின் சிதையைச் சரியாக அடுக்காததால், தீப்பற்றிக் கொள்ள நேரமாகிறது. மொரார்ஜி குடும்பத்தினைச் சேர்ந்த சாந்தி குமார், காந்தியின் அனுமதி பெற்று, சிதையைச் சற்று மாற்றிக் குலுக்கி விடுகிறார். தீ வேகமாகப் பிடிக்கிறது.
எப்படி இவ்வளவு இளம் வயதில் இந்த அனுபவம் எனக் காந்தி கேட்க, யார் வீட்டில் இறப்பு என்றாலும் முதலில் சென்று இறுதி வரை அனைத்திற்கும் உடன் நிற்க வேண்டும் எனத் தன் பாட்டி சொல்லித் தந்திருப்பதாக அவர் பதில் தருகிறார்.
காந்தியிடம் இருந்த மிக அழகான பண்புகளில் ஒன்று, அவர் எங்கு பயணம் சென்றாலும், அந்தந்தப் பிரதேச தேசிய போராட்டக்காரர்களின் வீடுகளில் நோய்வாய்ப்பட்டவர் இருந்தால், சிரமம் பார்க்காமல் அவர்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூறிவருவது. அது குறித்து விரிவாகவே எழுதலாம். ❤️
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல் எனச் சும்மாவா சொல்கிறது வள்ளுவம்?

ஒப்புமை
“........நிலையாத நிலையுடையேன் நேய நெஞ்சின்
நலங்காண நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பி னின்றும்
விலங்கானேன் ஆதலினான் விலங்கினேன் இன்னுமுயிர் விட்டிலேனால்” (கம்ப.சடாயுகாண்.22)

பரிமேலழகர் உரை
அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க. ('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.).
மணக்குடவர் உரை
குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க. இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.
மு.வரதராசனார் உரை
நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

English Meaning - As I taught a kid - Rajesh
During the time of pain, grief, distress, there is a gain too because it is a tool to stretch and gauge a friend. During happy times, everyone would love to be around us and it is no wonder they stick to stay around us. But, during difficulties, people would hesitate to be stick around us fearing we might be a burden to them. 

For e.g, Gandhi notices that his associate Bharati mani helping to fasten the the fire of Karturba Gandhi's deceased body. With Gandhi's permission, he tries to alter Kasturba Gandhi's body and fire catches fastly. When Gandhi questions Bharati Mani, he says that his granny has told him to go to any death's house as early as possible and stand till the end helping them wherever possible.
Questions that I ask to the kid
What is the gain during time of distress? Give an example

Monday, October 13, 2014

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது

குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் 
உகாஅமை வல்லதே ஒற்று
[பொருட்பால், அரசியல்,ஒற்றாடல்]

பொருள் :
கடாவுதல் - செலுத்துதல்; ஆணிமுதலியனஅறைதல்; குட்டுதல்; வினாவுதல்; தூண்டுதல்; விடுதல்.

கடாதல் - கடாவுதல், வினாவுதல்.

உருவம் -  வடிவம்; உடல் அழகு நிறம் வேடம் சிலை மந்திரவுரு; கூறு தெய்வத்திருமேனி.

கடாஅ உருவொடு - யாரும் எளிதில் கண்டு பிடிக்க முடியாத உருவோடு 

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.


அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சாது - அஞ்சாமல் 

கண்ணஞ்சாது - சந்தேகிக்கும் எந்த கண்களுக்கும் அஞ்சாமல்


யாண்டும் - எப்பொழுதும் 

உகாஅமை - மனதில்  உள்ளவற்றை வெளியே சொல்லாத உறுதி கொண்டமை 

வல்லது - வலிமையுள்ள; திறமையுள்ள

ஒற்று - மெய்யெழுத்து; தூது; தூதன்; வேவு; வேவுகாரன்; ஒற்றடம்.

வல்லதே ஒற்று - இவ் வலிமைகளே ஒற்று .

முழு விளக்கம்
ஒரு ஒற்றனானவன் எவ்வாறு இருக்க வேண்டுமானால், அவனை யாரும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு உருவம் கொண்டவனாகவும் அப்படியே சந்தேகித்தாலும் சந்தேகிக்கும் கண்களை கண்டு அஞ்சாதவனாகவும் எப்பேர்ப்பட்ட நேரத்திலும் மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லாமல் காக்கும் வலிமை உடையனவாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் வள்ளுவர்.

பண்டைய கால அரசாட்சிகளில் ஒற்று என்பது மிகவும் இன்றி அமையாத ஒன்று. பகை நாடு தனக்கு எதிராக சதி செய்கிறதாயினும் அல்லது பகை நாடுகளில் நிலவும் பொதுநிலவரம், அவர்களின் அப்போதைய படைபலம் ஆகியவற்றை கண்டு அறிவதாயினும், ஒற்றர்கள் மிகப் பெரும் பங்காற்றினர்.

இதனால் தான் ஒற்றர்களை ஐந்தாம் படைஎனக் கூறுவர் (யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை  மற்ற நான்கு படைகள்). 

இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒற்றர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கு உதாரணமாக பொன்னியின் செல்வனில் வரும் ஆழ்வார்க்கடியான்  (ர் ) நம்பி ஐ கூறலாம். ஒரு வைஷ்ணவராக, நாமமும் தடியும் கொண்டு, எவரும் சந்தேகமுறாது, சாதாரண தோற்றத்துடன் வளம் வருவதாக விவரித்து இருப்பார் கல்கி.



ஒப்புமை
”இற்றது காலமாக இலங்கையர் வேந்தன் ஏவ
ஒற்றர் வந் தளவு நோக்கிக் குரங்கென உழல்கின் றாரை” (கம்ப.ஒற்றுக்.24)

“தாயினும் பழகினாரும். தன்னிலை தெரிக்க லாகா
மாயைவல் லுருவத்தான்” (கம்ப.அணிவகுப்பு.3)

பரிமேலழகர் உரை
கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.).

மணக்குடவர் உரை
வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

மு.வரதராசனார் உரை
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

சாலமன் பாப்பையா உரை
பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

Sunday, October 5, 2014

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
[அறத்துப்பால், துறவறவியல், மெய்யுணர்தல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

அல்ல - அல்லாத

பொருளல்ல வற்றைப் - அதாவது மெய்ப்பொருள்  அல்லாத பொருள்களை

பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

என்று - என

பொருளென்று - வாழ்க்கையின் மெய்ப்பொருளாக

உணரும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

மருள் - மயக்கம்; திரிபுணர்ச்சி; வியப்பு; உன்மத்தம்; கள்; குறிஞ்சியாழ்த்திறம்எட்டனுள்ஒன்று; பண்வகை; எச்சம்எட்டனுள்பிறவிமுதல்அறிவின்றிமயங்கியிருக்கும்நிலை; சிறுசெடிவகை; புதர்; பேய்; ஆவேசம்; புல்லுரு

மருளானாம் - மயக்கத்தில் வாழ்கின்ற

மாண் - பெருமை, மாட்சிமை, நிறைதல், மிகுதல்

பிறப்பு -
தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.

மாணாப் பிறப்பு - மாட்சியில்லாத / இன்பமில்லாத / சிறப்பில்லாத ஒரு வாழ்க்கை/பிறப்பு

முழுப்பொருள்
நூற்றாண்டுகளாக மனிதர்கள் தன்னுடைய வேட்கையின் இச்சைப்படிதான் வாழ்ந்தார்கள். அர்த்தமில்லாத கொடூரமான வேட்கைகளையும் உள்ளடக்கிய இச்சைகள்தான் அவர்களை இயக்குன்கின்றன. வாழ்க்கைக்குப் பொருளற்ற பொருள்களை வாழ்வின் மெய்ப்பொருளாக கருதுவது மயக்கம். அதாவது இவ்வுலகில் நிலையில்லாத பொருள்களை பொருளாக கருதும் ஒரு தவறான மயக்க நிலைகள் உண்டு. நம்மவர் ஒரு தவறான மயக்க நிலையில் இருப்பார். அதுப்போல் வீடு, பணம், சமூகத்தில் பொருளாதர நிலை, பொன்(நகை), மகிழூந்து, உயர்தர செல்பேசி வசதிகள், ஆகியவற்றை வாழ்வின் சிறப்பு என தவறாக எண்ணி ஒரு மயக்கத்தில் அதன் பின் சென்று வாழ்தல். உண்மையான மெய்ப்பொருள் என்னவென்று தெரியாமல் வாழ்தல். அப்படி வாழ்கின்ற வாழ்வானது துன்பத்தையே தரும். அது ஒரு சிறப்பில்லாத, பொருளில்லாத, இன்பமில்லாத வாழ்க்கையாகவே முடியும்.

ஆனால் பொருள் அவசியம். ஏனெனில் அறம், பொருள், இன்பம் என்றவற்றில் சமநிலை குலைந்தால் மற்றவையும் குலைந்துப்போகும். குறிப்பாக இன்பம் குலைந்துவிடும். அதனால் தான் “குறள் 751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” மற்றும் ”குறள் 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்”  என்று திருவள்ளுவரே கூறியுள்ளார்.

அப்படியெனில், ஏன் திருவள்ளுவர் ”பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு” இக்குறளை கூறி நம்மை குழப்புகிறார் என்று கேட்டால் அதற்கு பதில், இன்று நமக்கு ஒரு பொருளாக ஒரு பொருட்டாக தெரியும் ஒன்று நாளை ஒரு பொருட்டாக இல்லாமல் போகிவிடவே வாய்ப்புகள் அதிகம். ”வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையான மகிழ்ச்சிகள் வழியாக செல்வோம். ஒவ்வொன்றும் அதன் எல்லையை அடைந்ததும் பொருளிழக்கின்றன. கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான். கடைசிவரை தொடரும் மகிழ்ச்சி என்பது கற்றல்தான். படிக்கிறேன், கற்பிக்கிறேன். அதுதான் வாழ்க்கையில் எஞ்சும் மகிழ்ச்சி” என்று ஜெயமோகன் ஒரு கற்றல் என்ற கடிதத்தில் கூறியது இக்குறளுடன் பொருத்திப்பார்த்தால் நன்று. கற்றலும் கற்பிப்பதும் போன்று பொருளானவற்றை வாழ்வின் அறமாக கொண்டால் வாழ்வு பொருள்கொள்ளும்.

பொருள் அல்லாதவற்றை மட்டும் செய்துக்கொண்டு இருப்பது என்பது ஒரு தேக்கமான பிறப்பை வாழ்வதாககும். மருள் என்றால் இருள். இருள் என்றால் தமஸ். தம்ஸ் என்றால் தேக்கம். தேங்கியிருப்பது இருள். எழுவது ஒளி. விசைகொள்வது, விரைவது, எரிவது, அணைவது, மீண்டும் எழுவது, நெளிவது, துவள்வது, புகைவது, வெடிப்பது, சுழல்வது, அலைகொள்வது, தாவிப்பற்றி ஏறுவது, தொற்றிக்கொள்வது, மின்னுவது, துடிப்பது, பரவுவது, குவிவது. ஒளி அனைத்தையும் நிகழ்த்துகிறது. இருள் எதையும் செய்வதில்லை. அது தேங்கி நின்றுகொண்டிருக்கிறது.

உண்மையான பொருள் எது என்று அறிக என மெய்யுணர்தல் அதிகாரத்தில் முதலிலேயே கூறுகிறார் திருவள்ளுவர்.

சரி, பொருள் அல்லாதவற்றை, பொய்களை எப்படி களைவது? ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்று பொய்களை களையுங்கள்

(நன்றி; அஷோக்)
கம்பர் மாரீச வதைப் படலத்திலே (128),”மருளொடு தெருளுரும் நிலையர் மங்கையர் தெருளுரும் மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே” என்றும், சுந்தரர் ஆருர் (6) தேவாரத்தில், “பொள்ளலிவ் வுடலைப் பொருளென்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி மெள்ள நின்றவர் செய்வனவெல்லாம்” என்றும், பொருள் அல்லாதவற்றை பொருளென்று உணர்தலைப் பற்றிக் குறிக்கின்றனர்.

மேலும்: அஷோக்

"பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றைச் செய்வதைப் போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா?" (வெண்முரசு - 19 - திசைதேர்வெள்ளம் // எழுத்தாளர் ஜெயமோகன்)

“எதிலும் பொருளில்லை என்று உணர்க! நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப் பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.

இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது. ” என்றது.

இளம்குரங்குகள் அதை நோக்கின. கும்போதரன் “முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. “ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. “ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அழிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து “மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. “ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி “ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.

மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன. பீதகர்ணி தொடர்ந்தது “அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் “ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. “அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

“ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. “ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் “மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. “விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.”

“அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.”

சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது “பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி “எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. “இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.”

அதன் குரல் ஓங்கியது. “இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

“அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன். “நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.


எழுத்தாளர் ஜெயமோகனின்’ வெண்முரசு - தீயின் எடை - 5 இல் கீழ்காணும் வரிகள் வருகிறது.
இதோ என் இலக்கை அடைந்துவிட்டேன். எதன்பொருட்டு என் குருதியினரான பாண்டவர்களை உதறி இப்பக்கம் வந்தேனோ அதை அடைந்துவிட்டேன்…”

“ஆனால் இப்போது ஒரு துளியும் என் உள்ளம் மகிழவில்லை. வெறுமை மட்டுமே என்னிடம் எஞ்சியிருக்கிறது. இப்போரின் பொருள் என்ன என எனக்குத் தெரியும். இதை இனி இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் சூதர்கள் பாடுவர். இக்கதை சொல்லப்படாத ஒருநாள் கூட இனி பாரதவர்ஷத்தில் கடந்துசெல்லாது. இங்கு களம்நிற்கும் ஒவ்வொருவரையும் தெய்வங்கள் தொட்டுத்தொட்டு அழிவின்மையை அளிக்கின்றன.” சல்யர் புன்னகை செய்தார். “இந்த வாய்ப்பால் நான் தெய்வமாகிறேன்… என் குடியினரின் ஆலயங்கள் அனைத்திலும் படையலும் பலியும் பெற்று அமர்ந்திருப்பேன்.”

ஆனால் எதற்கும் பொருளில்லை… தெய்வங்கள் நம்மை கூழாங்கற்களாக அளைந்து விளையாடுகின்றன. இவையனைத்தும் வெறும் கனவுகள்…” என்றார் சல்யர். சகுனி “எய்துகையில் வெறுமையென்றாவது உலகியல் வெற்றிகளின் இயல்பு” என்றார். “ஆனால் அதனால் அவை வெற்றிகள் அல்ல என்றாவதில்லை. எய்தியவருக்குத்தான் அவை பொருளற்றவை, எஞ்சியோருக்கு அல்ல. மத்ரரே, நீங்கள் பால்ஹிகக் குடியினரை பாரதவர்ஷத்தின் முன்னிரையில் நிறுத்துகிறீர்கள். ஷத்ரியர் அனைவருக்கும் ஒரு படி மேலாக. அதை நீங்கள் எண்ணினாலும் மறுக்க இயலாது.”


“இங்குள்ள பெட்டிகள் அனைத்தின் மீதும் புழுதி படிந்துள்ளது. அவற்றை நான் தொடுவதில்லை. சில பெட்டிகளின் மீது கை புதையும் அளவுக்கு புழுதி உள்ளது. அப்புழுதி ஒரு காப்பு. அது திரையிட்டு இங்கிருக்கும் பொருட்களை மறைத்துள்ளது. அப்பொருட்களுடன் இணைந்துள்ள தெய்வங்களையும் அதுவே கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இங்குள்ளவை அனைத்தும் புதையல்கள். பூதங்களும் தெய்வங்களும் காவல் காக்காத புதையல்கள் இல்லை என்று அறிந்திருப்பீர்கள்” என்றார்.

அவர் நகைத்தபோது முற்றிலும் அது மானுட ஒலிபோல் தோன்றவில்லை. கன்னங்கள்  குழிந்து உள்ளே போயிருக்க பிதுங்கிய சிறிய விழிகள் அலைமோதின. அவருடைய கையிலிருந்த விளக்கிலிருந்து முகம் மட்டும் இருளிலிருந்து எழுந்து தெரிந்தது. “இத்தகைய அறைகளுக்குள் இருக்கும் இருள் வேறு வகையானது. வானம் இருக்குமிடத்தில் உள்ள இருள் வேறு. அது ஒருவகை ஒளியேதான். ஏனென்றால் எந்நிலையிலும் அங்கே விழிகள் முற்றிலும் இல்லாமல் ஆவதில்லை. ஒவ்வொரு பொருளும் தன்னை தான் கண்டடையும் அளவுக்கு அங்கு வெளிச்சம் இருக்கும். இத்தகைய இருள் மண்ணுக்கு அடியிலுள்ள குகைகளிலும், அனைத்து வழிகளும் முற்றாக மூடப்பட்ட இதுபோன்ற நிலவறைகளிலும் மட்டுமே இயல்வது” என்றார் சவிதர்.

“இது இருளல்ல. இதற்கு வேறு சொல் உள்ளது” என்று அவர் தொடர்ந்தார். “மயர்வு, மயல், மருள்… சரியான சொல் செம்மொழியில் உள்ளது. அவர்கள் இதை தமஸ் என்கிறார்கள். தமஸ் என்றால் இருள் மட்டுமல்ல, செயலின்மையும்கூட. நிலைத்ததன்மையும் ஆகும். இருளென்பது மாறாமை. நிலைத்தன்மை. இன்மை. ஒன்றுபிறிதொன்றாகும் மயக்கவெளி” அவர் எவருடன் பேசுகிறார் எனத் தெரியவில்லை. இருளுக்குள் இருந்து என குரல் ஒலித்துக்கொண்டிருந்தது.

.....
.....
கனகர் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “ஆம், இருள். இதை தமஸ் என்கிறார்கள். அச்சொல்லை எனக்கு பிரகதர் சொன்னதை நினைவுகூர்கிறேன். தமஸ் என்றால் தேக்கமும் கூடத்தான். தேங்கியிருப்பது இருள். எழுவது ஒளி. விசைகொள்வது, விரைவது, எரிவது, அணைவது, மீண்டும் எழுவது, நெளிவது, துவள்வது, புகைவது, வெடிப்பது, சுழல்வது, அலைகொள்வது, தாவிப்பற்றி ஏறுவது, தொற்றிக்கொள்வது, மின்னுவது, துடிப்பது, பரவுவது, குவிவது. ஒளி அனைத்தையும் நிகழ்த்துகிறது. இருள் எதையும் செய்வதில்லை. அது தேங்கி நின்றுகொண்டிருக்கிறது.”

ஏற்ற இறக்கமில்லாமல் ஏதோ தொன்மையான வழிபாட்டுச்சொல்லொழுக்கு என அவர் பேசிக்கொண்டே சென்றார். “இப்புடவி ஒரு மாபெரும் கலம். அதில் இருளை நிரப்பி வைத்திருக்கிறாள் பேராற்றல்வடிவினள். இல்லை, இருள் அதுவே ஒரு கலமாக தன்னைத்தானே தாங்கி புடவியென்று நின்றிருக்கிறது. அது நம்மிடம் கூறுகிறது சர்வ கல்விதமாமேகம் நான்யாஸ்தி சனாதனம்…”

பீமன் அந்தப் பேழையை மீண்டும் பீடத்தின்மேல் வைத்தான். அவர்கள் அனைவரையும் ஒரே தருணத்தில் நோக்கியபடி அது அங்கிருந்தது. சற்றுநேரம் சொல்லின்மை நிலவியது. பீமன் “இதைப்பற்றி சொல்லும்படி நான் கின்னரநாட்டு பாணர்களிடம் உசாவினேன். புதுப்புது பாணர்களை அழைத்துவரச் சொன்னேன். ஒவ்வொருவரும் ஒரு கதை சொன்னார்கள். ஒன்றுடன் ஒன்று பிணைந்து தனிவழி தேரும் கதைகள் அவை. ஒரு கட்டத்தில் அக்கதைகளை அந்தியின் கேளிக்கைகளில் ஒன்றாகவே கொண்டேன்” என்றான்.

“உண்மையில் நான் இந்த விழிமணியை என் அகம் பொருட்படுத்தவில்லை என்றும் ஆகவே அக்கதைகளினூடாக செறிவுபடுத்திக் கொள்வதாகவும் நினைத்துக்கொண்டேன். இப்போது தெரிகிறது, இந்த விழிமணியை என் அகம் பெருஞ்சுமையாகவே எடுத்துக்கொண்டுவிட்டிருந்தது என்று. ஆகவே கதைகள் வழியாக அதை கரைத்தழிக்க, நான் அறிந்த பல்லாயிரம் கதைகளில் ஒன்றாக மாற்றிவிட முயன்றேன் என்று. ஆனால் கதைகள் இதைச் சூழ்ந்து பறந்தன. கதைகளுக்கு அப்பால் இது அவ்வண்ணமே இருந்துகொண்டிருந்தது” என்று பீமன் தொடர்ந்தான். “இதைப்பற்றிய கதைகள் அனைத்துமே ஷம்பாலா என்னும் மறைநகரை சுட்டுபவைதான்.”

ஷம்பாலா மெய்யறிதலின் நகர். இப்புவியில் மானுட உள்ளத்தில் பாலில் நெய் என மெய்மை திகழ்கிறது. சற்றேனும் மெய்மை இல்லாத மானுடகுலமே உலகில் இல்லை. அவை அவர்களின் அச்சங்களால், விழைவுகளால், ஐயங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மெய்மைகள் மெய்மையுடன் போரிடுகின்றன. ஒரு மெய்மை இன்னொன்றை திரிபடையச் செய்கிறது. ஒரு மெய்மை இன்னொன்றை பொய் எனக் காட்டுகிறது. இரு மெய்மைகள் ஒன்றையொன்று நிரப்பி இரண்டுமே பொருளற்றவை என்று ஆகிவிடுகின்றன. மெய்நாடுபவன் நிலைபேறடைய நூறுமடங்கு மெய்யல்லாதவற்றை களையவேண்டியிருக்கிறது. மெய்நாட்டம் என்பது எப்போதும் பொய்யை, திரிபை களைந்து களைந்து ‘ஈதில்லை ஈதில்லை’ என முன் செல்வது மட்டுமே என்றாகியிருக்கிறது.

ஆகவே காலமெல்லாம் மக்கள்திரளால் மெய்மை கடையப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அலைகொள்கிறது, கொந்தளிக்கிறது. அரிதாக சில நிலங்களில், சில மக்கள்திரள்களில், ஒரு வரலாற்றுத் தருணத்தில் திரண்டு எழுகிறது. சற்றே நிலைகொள்கிறது, பிறிதொன்று வந்து அறைய சிதைவுறுகிறது. கரைந்து கலந்து திரிந்து உருமாறி அமைகிறது. அவ்வண்ணம் திரண்ட மெய்மைகள் முற்றாக மறைவதில்லை. மறந்தவை கனவில் திரண்டிருப்பதுபோல அவை எங்கோ ஓர் ஆழத்தில் ஒன்றென ஆகி நிலைகொள்கின்றன. அந்த இடமே ஷம்பாலா. அது மெய்மைகள் மட்டுமே செறிந்து உருவான பெருநகர். மெய்யில் திகழ்வோர் மட்டுமே வாழ்வது. மெய்யே ஒலிப்பது. மெய்யன்றி பிறிதில்லாதது.

ஆகவே அங்கே ஒளி மட்டுமே உள்ளது, இருளோ நிழலோ இல்லை. இன்பம் மட்டுமே உள்ளது, துன்பம் இல்லை. இனிமையும் இசையும் அழகும் மட்டுமே உள்ளன. அதை ஒருதட்டுத் துலா என்கின்றனர் பாணர். அவ்வண்ணம் ஒரு நிலத்தில் காலம் திகழமுடியாது. ஏனென்றால் சென்றும் வந்தும் ஆடுவதனூடாகவே தன்னை நிகழ்த்துவது காலம். அங்கே வாழ்வு நிகழமுடியாது, காலத்தின் ஒரு தோற்றமே வாழ்வு. எனவே அது காலமின்மையில் கனவென உறைவது. நிலைகொண்டது. சென்றடைவோர் மீள முடியாத ஆழத்தில் அமைந்தது. பன்னிரு தூவெண் பனிமலைகளால் மண்ணுக்கு மேல் விண்ணுக்குக் கீழே வெறும்வெளியில் அந்நகர் நிலைநிறுத்தப்படுகிறது.

ஷம்பாலா கனவினூடாக மானுட உள்ளங்களுடன் தொடர்புகொண்டுள்ளது. மானுடரில் ஒருகணமேனும் அதை உணராத எவருமில்லை. அது அகர்த்தம் என்னும் பாதாளப்பாதைகளினூடாக உலகிலுள்ள அனைத்து நகர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அகர்த்தத்தின் வாயில்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன. அதை அறிவது ஊழ்கத்தாலேயே இயலும். அகர்த்தம் முடிவில்லாத படிகளால் ஆன சுரங்கப்பாதை. விசைகொண்ட ஆறுகள் பெருகியோடும் இருண்ட குகை. அவை பின்னிச் சுழன்று சென்றடைவது ஷம்பாலாவையே. ஷம்பாலாவிலிருந்து இனிய குளிர்காற்று அந்த குகைவழிகள் வழியாக வந்து நகர்களில் நிறைவதுண்டு. அந்நகரில் இனிய நிகழ்வொன்று நிறைவுகொள்கையில், அந்நகரில் அனைவருமே கனவிலென மெய்மையின் துளிக்கீற்றொன்றை உணர்கையில். நறுமணம் கொண்ட காற்று அது. அறிந்த எந்த மணமும் அல்ல, எனில் அறிந்த எந்த மணமாகவும் தன்னை காட்டிக்கொள்வது.


எழுத்தாளர் ஜெயமோகன் மாயை என்ற கட்டுரையில் உலகியல் பொய் அல்ல. அதற்கு ஓர் இடம் உண்டு என்று ஆழமாக கூறுகிறார்.
உலகியல் செயல்பாடுகள் பொருளற்றவையா? அவ்வப்போது நமக்குத் தோன்றுவது அது. நமது பெரும்பாலான மனநிறைவுகள் மகிழ்ச்சிகளும் உலகச் செயல்பாடுகளில்தான் உள்ளன. ஒரு நல்ல வேலை கிடைத்தால், பணம் கிடைத்தால், நல்ல பொருள் வாங்கினால் உரியவர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் மகிழ்கிறோம். அம்மகிழ்ச்சி பொய்யானதா என்ன? அவ்வண்ணம் எண்ணியது நிகழாத போது இவை அனைத்தும் பொய் என எண்ணுவோம் எனில் அது நமது உளச்சோர்வுக்கான ஒரு காரணத்தை நாம் கண்டுபிடிப்பது தவிர மெய்யானதல்ல. மகிழ்ச்சி உண்மை, துயரம் மாயை என எண்ணுவீர்கள் என்றால் அது எப்படிப்பட்ட மடமை. உலகியல் என்பது பொய் என்று சொல்லவேண்டும் என்றால் அதன் மகிழ்ச்சிகளும் பொய் என உண்மையாகவே உணரும் மனநிலை இருக்கவேண்டும்.

பாரதி ஒருவேதாந்தியாக நின்று சொன்னதுதான் இது. இவ்வுலகத்திலுள்ள இன்பங்கள், கடமைகள், இலக்குகள் எவையும் பொய்யானவை அல்ல. அவற்றைத் துறந்துவிட்டு நாம் இங்கு வாழவும் இயலாது. உறவுகளும் கடமைகளும் தவிர்க்கக்கூடியவை அல்ல. ஆனால் அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்திருப்பதற்கு இத்தகைய சில தத்துவத் தெளிவுகள் பயன்படும். உலகியல் இலக்குகள் முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவு. ஆனால் அவை  மட்டுமே முக்கியமானவை என உணர்வது ஒரு தெளிவின்மை.

அது ஒரு பொருளுக்கு அதற்கு தகுதியில்லாத பல மடங்கு விலை அளிப்பது போல. நூறு ரூபாய் மதிப்புள்ள சட்டையை நூறு ரூபாய்க்கு வாங்குவதென்பது பொருளுள்ள செயல். முழு வாழ்க்கையையும்  கொடுத்து அந்த சட்டையை ஒருவர் வாங்கினாரென்றால் அது அபத்தமானது. உலகியல் வாழ்க்கைக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மட்டுமே அளிப்பவர் உலகியல் வாழ்க்கை பொருளற்றது என்ற இடத்துக்கு சென்று சேர்வதில்லை. அது அளிக்கும் இன்பங்கள் இவ்வளவுதான் என்பதை உணர்பவர்கள் அது அளிக்கும் துன்பமும் அவ்வளவுதான் என்பதை வகுத்துக்கொள்ள முடியும்.

உங்கள் உறவுகளில் ஒரு நன்று நடந்தால் அது முழு வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் துள்ளிக் கொண்டாடுவீர்கள் என்றால் உங்கள் உறவுகளில் ஒரு தீது நடந்தால் முழு வாழ்க்கையும் அழிந்துவிட்டதென்ற பெருந்துயரை அடைவீர்கள். முழு வாழ்க்கையின் அர்த்தமே உலகியல் சார்ந்ததென்று எண்ணுவீர்கள் என்றால் உலகியலில் அடையும் தோல்வி முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும் என்றும் அறிவீர்கள்.

உலகியல் என்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி. அது மனமயக்கல்ல பொய்யல்ல.  மாயை அல்ல. இங்கு நாம் உடல்கொண்டு இருப்பதனாலேயே வேறு வழியில்லாமலேயே அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்.  உணவுண்டால் தான் பசி தீருமே ஒழிய எந்த தத்துவத்தை வைத்தும் பசியை தீர்க்க முடியாது. பொருளீட்டினால் தான் வாழ்வே ஒழிய உள எழுச்சிகளைக்கொண்டு வாழ்ந்துவிட முடியாது. உணவுக்கும் உலகப்பொருளுக்கும் உகந்ததை இயற்றுவது எவ்வகையிலும் பொய்யல்ல. தேவையற்றதல்ல.

ஆனால் அதற்கப்பால் நமக்குரிய அகக்களங்கள் வேறு .நாம்  இங்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளன. நாம் அடையவேண்டிய நுண்ணிய இன்பங்கள் ,ஆழ்ந்த நிறைவுகள் பல உள்ளன. நமக்குள் அவற்றை நிகழ்த்திக்கொள்வதற்கு உரிய புறத்தை உருவாக்குவதே உலகியலில் நாம் செய்யவேண்டியது. நமது தெய்வத்தை நிலை நிறுத்தும் கல்பீடம் இது என்று கொள்க. இங்கிவற்றை இயற்றும்போது அகத்தை நம்மை ஆக்கிக்கொள்வதற்கான சில நிபந்தனைகளை நிறைவேற்றுகிறோம்.

ஆகவே பொய்யென்றும் வீணென்றும் இவற்றை நினைக்க வேண்டியதில்லை.  உல்கியல் ஒரு சிறிய தெய்வம் இந்த தெய்வத்திற்குரிய படையலையும் பூசையையும் கொடுப்போம். தலை கொடுக்க தகைமை கொண்ட பெருந்தெய்வம் நமக்குள் நமக்காக காத்திருக்கிறது.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியென சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட், இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான்அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை.

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமான புள்ளி.

நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் நட்பும் அன்பும் வெளிப்படும் இடங்கள் முக்கியமானவை.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

சாம்பமூர்த்திராயர் பணத்தை சுமைகளை உதறுவது போல உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்ற தரிசனத்தோடு முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு தைக்க வேண்டிய அல்லது தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில் நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி மனிதவாழ்வின் சாரமான வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம். பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது, பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி நீ செல்ல வேண்டிய இடமே அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை. அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது. பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு. இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். காலத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல படைப்பாளியின் வாழ்வு என்பதால் அந்தக்கண்களை நோக்கி புன்னகைக்கிறேன்.





மைத்ரேயி புன்னகை மாறாமல் “இவற்றை நீங்கள் ஏன் அளிக்கிறீர்கள்?” என்றாள். “ஏனென்றால் இவற்றால் எனக்கு இனி பயனில்லை. நான் இப்பிறப்பில் இனி வாழப்போவதில்லை” என்றார் யாக்ஞவல்கியர். “அப்படியென்றால் இங்கிருந்து பயனுள்ள எதை எடுத்துச்செல்கிறீர்கள்?” என்றாள் மைத்ரேயி. அக்கேள்வியை எதிர்கொண்டதும் அவர் ஒருகணம் திகைத்தார் “நீ கேட்டபின்னரே எண்ணினேன். மானுடன் மறுபிறவிக்கு கொண்டுசெல்லக்கூடியவை இரண்டே, வினைப்பயனும் மெய்யறிவும். வினைப்பயன் தானாக உடன் வரும், மெய்யறிவு எடுத்துச்செல்லப்படவேண்டும்.”

“ஆசிரியரே, பயனுள்ளவற்றை நீங்கள் எடுத்துச்செல்கிறீர்கள் என்றால் பயனற்ற பழையவற்றை எங்களுக்கு விட்டுச்செல்கிறீர்கள் என்றல்லவா பொருள்?” என்றாள் மைத்ரேயி. “நான் அளிப்பவை இப்புவியில் கணவன் மனைவிக்கு அளிக்கக்கூடியவை அனைத்தும் அல்லவா? இவையே இவ்வாழ்வின் பொருள் என்பதனால்தான் பொருளென அழைக்கப்படுகின்றன” என்றார் யாக்ஞவல்கியர். “இவற்றில் என்றுமழியாதவை எவை?” என்று அவள் கேட்டாள். “அழிவதே பொருள்” என்றார் யாக்ஞவல்கியர். “அழிபவை அழியாத ஒன்றை அளிக்க இயலுமா?” என்றாள் மைத்ரேயி. “இல்லை, அவை அளிக்கும் அனைத்தும் அழிபவையே.”

“ஆசிரியரே, அழியக்கூடிய ஒன்று எப்படி நிறைவை அளிக்கமுடியும்? மாறாநிலையே நிறைவு எனப்படுகிறது” என்றாள் மைத்ரேயி. “நிறைவை அளிக்கும் செல்வம் எது?” என்று அவள் மீண்டும் கேட்டாள். “விடுதலை” என்று அவர் சொன்னார். “விடுதலையை அளிப்பது எது?” என்றாள் மைத்ரேயி. “கட்டியிருப்பது அறியாமை. அறிவே விடுதலையாகும்” என்றார் யாக்ஞவல்கியர். “அறிவின் உச்சம் என்ன?” என்றாள். “தன்னை அறிதல்” என்றார் யாக்ஞவல்கியர். “முழுவிடுதலை எப்படி அடையப்பெறும்?” என்றாள் மைத்ரேயி. “அறியும்தோறும் அறிதலே கட்டுகளாகின்றது. அறிவிலிருந்து அடைவதே முழுவிடுதலை” என்றார். “ஆசிரியரே, விடுதலை அடைந்தவன் எப்படி இருப்பான்?” என்றாள். “அறிவழிந்து அறிவென அமைந்திருப்பான்” என்றார் யாக்ஞவல்கியர். “ஆசிரியரே, அந்த மெய்யான செல்வத்தை எங்களுக்கு அருளவேண்டும்” என்று அவள் கோரினாள்.

அப்போதுதான் அவர்களை பெண்கள் என்றே தான் எண்ணியதை யாக்ஞவல்கியர் உணர்ந்தார். மாணவர்களாக அவர்கள் ஏன் ஒருகணமும் விழிகளில் தென்படவில்லை என வியந்தார். அப்போது தன்னுள் ஓடிய உளச்சித்திரங்களில் காத்யாயனியின் விழிகளைக் கண்டபோது அதிலிருந்த தீராத ஏக்கம் எதன்பொருட்டு என்று அறிந்தார். இரு கைகளையும் கூப்பியபடி “பெரும்பிழை செய்துவிட்டேன், இப்போது அறிகிறேன் அனைத்தையும். இங்கு நான் இயற்றிநிறைவுசெய்யாத பெரும்பணி என்பது உங்கள் இருவருக்கும் நானறிந்த மெய்யறிவை முற்றளிப்பதே” என்றார்.

“அருகமர்க!” என அவர்களை அழைத்தார். அவர்களை அணைத்து தலையை சுற்றிப்பற்றி காதில் அவர்களுக்கு மட்டுமேயான குரலில் ஊழ்கச்சொல்லை சொன்னார் “அஹம் பிரம்மாஸ்மி.”

‘அங்கு இறந்துவிழுந்த இளமைந்தரின் குருதியும் இவ்வீணரின் குருதியும் ஒன்றா?’ என்றேன். ‘என்ன ஐயம்? அனைத்துக் குருதியும் ஒன்றே. அம்மைந்தர் வளர்ந்து படைவீரர்களாகி களம்பட்டால் மட்டும் அது அறமென்றாகிவிடுமா?’ என்றார். ‘இவை பொருளற்ற இறப்புகள்’ என்றேன். ‘அனைத்து இறப்பும் பொருளற்றதே. ஏனென்றால் அனைத்து வாழ்வுகளும் பொருளற்றவையே’ என்றார் ஆசிரியர்

ஒப்புமை
”பொள்ள லிவ்வுட லைப்பொரு ளென்று
பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம்” (சுந்தரர்.ஆரூர் 6)

“மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர்
தெருளுறும் மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே” (கம்ப.மாரீசன்.128)

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி உரை
இதே கருத்து 359 வது குறளிலும் விளக்கியிருக்கிறேன். எனினும் சிறிது சிந்திப்போம். 

மனிதப் பிறவியின் பெரு நோக்கம் அறிவில் உயர்ந்து மெய்ப்பொருள் உணர்ந்து அனுமதி பெறுவதாகும்.

சிந்தனை ஆற்றல் பெருகியபோது மனிதனுக்கு அவன் பிறவியின் நோக்கம், நான் யார் ? மெய்ப்பொருள் எனப்படும் தெய்வ நிலை எது ? என்னும் வினாக்கள் எழுகின்றன. நான் என்பது உடலா, உயிரா, மனமா மற்றும் ஏதோ ஒன்றா என்று சிந்திக்கிறான்; எளிதில் முடிவு காண இயலவில்லை. இந்த நிலையில் திகைக்கும் சிந்தனையாளனுக்கு ஒரு குறிப்பு காட்டுகிறார்.

பொருளல்லவற்றைப் பொருள் எனக் கொள்ளும் மயக்கத்தை விடு எனக் கூறுகிறார். அப்படியென்றால் என்ன ? பேரியக்க மண்டலமான பிரபஞ்சத்தில், பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை என இரண்டு உண்டு. அவற்றில் நிகழ்ச்சி நிலையைப் பொருள் என்று கூறுகிறோம். அது சரியல்ல. நிகழ்ச்சிகளுக்கு மூலமான, பிறப்பிடமான அசைவற்ற நிலையே பொருள் என மறைமுகமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். உதாரணமாக ஒரு ரோஜா மலரை கையில் எடுத்துக் கொள்வோம். இது பொருளா, நிகழ்ச்சியா என வினவிக் கொள்வோம். என்ன பதில் ? ரோஜா மலர் ஒரு பொருள்தான் என்று கருதுகிறோம். இது உண்மையல்ல என்பதே வள்ளுவர் எடுத்துக் காட்டு. உண்மையை உணர சிந்திப்போம். 

இந்த மலரை, எரிந்து கொண்டிருக்கும் ஒரு பெரு நெருப்பில்போடுவோம். ரோஜா மலர் என்னவாகும் ? எரிந்து சாம்பலாகி, மலர் காணாமல் போய் விடும். என்ன நிகழ்ந்தது ? நெருப்பின் சூட்டால் மலரில் அடங்கி இருந்த கோடானு கோடி அணுக்கள் இயக்க வேகம் பெற்று பிரிந்து போயின; கூட்டு கலைந்து போய்ற்று; அணுக்கள் அழியவில்லை; பூ என்ற காட்சி மறைந்து விட்டது. அணுக்கள் கூடி இயங்கும் ஒரு தோற்றமாகிய காட்சியை ஒரு நிகழ்ச்சியென்றே கொள்ள வேண்டும். மேலும் சிந்தியுங்கள். எது மலர் எனும் காட்சியாக தோன்றுகிறது எனக் காண வேண்டும்.

மலரில் அடங்கியுள்ள அணு பொருளா ? என வினவுவோம். எது இயங்கிக் கொண்டும் அதன் நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டும் உளதோ அது நிகழ்ச்சி. நிகழ்ச்சியெனும் இயக்கத்தைக் கழித்துவிட்டால் மீதி நிலையான ஒன்று என உணரப் பெறுகிறதோ அதுவே பரமாணு எனும் நுண்பொருள் தற்சுழலோடு விரைவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெளதீகப் பிரிவு. பரமாணுவின் இயக்க விரைவைக் கழித்து விட்டால் மீதி என்ன ? ஒன்றுமே இல்லை. அப்படியெனில் சுத்த வெளியோடு கலந்து விட்டது என்பதே உண்மை. பரமாணுவின் ஆதி நிலையை சுத்த வெளியென்றே கொள்ள வேண்டும். அசைந்தால் அணு. நிலைத்தால் தூயவெளி. எனவே தூயவெளியே பொருள் நிலை; அதன் நுண்ணியக நிலையே பரமாணு.

பரமாணுக்கள் இணைந்த தொடர் நிகழ்ச்சியே இந்த மலர். பிரபஞ்சத்தில் நாம் காணும் தோற்றங்கள் அனைத்தும் நிகழ்ச்சிகளே! நிகழ்ச்சிக்கு மூலம் சுத்தவெளி; இதுவே பொருள்; மொழி வழக்கில் தோற்றங்களைப் பொருள் என்று புலன் மயக்கில் கூறப்பட்டது; சுத்தவெளியே உண்மையான பொருள் என உணர்ந்த பின் அதனை மெய்ப்பொருள் எனக் கூறுகிறோம்.

எனவே, தோன்றும் காட்சிகள் அனைத்தும் நிகழ்ச்சியே; நிகழ்ச்சிகளைப் பொருள் என்று கூறும் மயக்க நிலையைக் கடந்து, உண்மை உணர வேண்டும். மெய்ப்பொருளை உணர்ந்து உய்ய வேண்டும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார். நிகழ்ச்சிகளாகிய இயக்கங்களையே மயக்கத்தால் பொருள் என எண்ணியிருந்த நிலை மாறி, இயங்கும் பொருட்கள் அனைத்திலும் நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து தெளியும் பெரும் பேறு, மெய்விளக்கத் தவத்தால் பெற்ற நுண்ணறிவு ஆராய்ச்சியால் மாத்திரம் பெற முடியும்.

இதன் அவசியத்தை வள்ளுவரும்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
எனக் கூறியுள்ளார்.

இந்தக் குறள் தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்றிணைத்து நோக்கும் அறிவை, ஒளி விடச் செய்கிறது. தத்துவத்தைத் தவிர்த்தால் விஞ்ஞானமில்லை. விஞ்ஞானம் இல்லையெனில் த்த்துவ ஞானத்தால் பயன் இல்லை. பேரியக்க மண்டலத் தோற்றங்கள், இயக்கங்கள், விளைவுகள் எதுவானாலும் தத்துவ ஞானம் விஞ்ஞானம் எனும் இரண்டிணைப்பு அறிவினால்தான் அதனை முழுமையாகவும், தெளிவாகவும் உணர முடியும். எல்லா இயக்கங்களுக்கும் 1. இறைவெளி, 2. விண் என்ற இரு பொருட்களே அடிப்படையாகும். இவற்றில் இறைவெளியென்பது இருப்பு நிலை. "விண்" எனும் நுண்துகள் இயக்க அலை. இருப்பு நிலையில் இல்லாததொன்றும் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளில் இல்லையெனும் உண்மை, மனிதனுடைய சிந்தனையாற்றல் தக்கப் பயிற்சியினால் முழுமையாகப் பூரித்து மலர்ந்தபோதுதான் விளங்குகிறது. அவ்வாறு அடக்கம் பெற்றிருந்த யாவும் விரைவு, அறிவு எனும் பேராக்கத் திறன் இயல்பூகமாக முதலில் விளைந்த மலர்ச்சியே நுண்துகள் எனும் "விண்" விண் என்பது பூரணப் பொருளான இறைவெளியின் ஒரு சிறு பகுதியேயாகும். இந்த நுண்துகள் சுற்றிலும் சூழ்ந்துள்ள இறை வெளியின் சம அழுத்தத்தினால் சுழலியக்கமாகியது. இந்தக் கருத்தைக் கொண்டு இறைவெளியை சிவம் என்றும் விண் துகளைச் சக்தியென்றும் மெய்விளக்கம் பெற்ற பெரியோர்கள் பெயரிட்டு வழங்கினார்கள். விண் துகளின் விரைவான சுழற்சியால் சுற்றிலும் உள்ள இருப்பு நிலையோடு உரசல்(Friction) உண்டாகிறது. இந்த உரசலிலிருந்து எழும் அலையே விரிவு அலை. இந்த அலை தள்ளும் ஆற்றலாகிறது. இறைவெளியான இருப்பு நிலை ஈர்ப்பு ஆற்றலாக உள்ளது. இந்த இரண்டும் இணைந்து இழைந்தியங்கும் பேராற்றலே காந்தம் எனும் அலையாற்றலாகும். புலன் உணர் காட்சியாக விளங்கும் பேரண்ட இயக்கங்கட்கும் புலன்களுக்கும் இயங்கும் பேராற்றல் காந்தம். விண்துகள்தான் பெளதீகப் பொருட்களுடைய முதல்நிலை, ஆகாசம். விண் துகள்களில் கூட்டுச் சேர்க்கையின் திணிவு நிலைகளுக்கேற்ப காற்று, அடர்த்திக் காற்று, நீர், கெட்டிப் பொருள் என்று மேலும் நான்கு பெளதீகப் பிரிவுகள் உண்டாயின.

நாம் தோற்றமாகக் காணும் எல்லாப் பொருட்களுமே விண் துகளின் கூட்டுதான். விண் துகளானது விரைவான தற்சுழற்சியுடைய அலை இயக்கம். எனவே விண் துகள்களுக்கிடையே இறைவெளி நிறைந்துதானே இருக்கிறது. அந்த இறைவெளி விண் துகளிலிருந்து எழுந்த விரிவலையோடு சேர்ந்து ஈர்ப்பு, தள்ளல் என்ற இரட்டை ஆற்றலுடைய காந்தமாகியது. எனவே எல்லாத் தோற்றங்களுக்கும் இடையே ஊடுருவி நிறைந்திருப்பது காந்தமேயாகும். இக்காந்தமானது அணுக்கூட்ட இறுக்க நிலைகளுக்கேற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணமாகி அவை சேர்ந்த அலைகளை ஒவ்வொரு பொருளிலிருந்தும் பரப்பிக் கொண்டே இருக்கிறது. விண் கூட்டால் தோற்றங்கள், பருப்பொருட்களும், அவற்றிடையே அழுத்தமாக (Pressure) இருக்கும் காந்த ஆற்றல் தன் மாற்றத்தால் மின் ஆற்றல் (ஒளியும், ஒலியும்) இரசாயனங்கள் (சுவையும் மணமும்) இவற்றின் பல்வேறு விகிதாச்சார கூட்டுக் குணங்களும் உண்டாகின்றன. இந்த உண்மையினை அடிப்படையாகக் கொண்டு பொருளல்லவற்றைப் பொருளாகக் காணும் மருளானம் மாணப் பிறப்பு எனும் குறளுக்கும், மற்ற மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறள்களும் பொருள் காண வேண்டும்.

மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் வரும் குறளுக்கும் மற்றும் தத்துவம், விஞ்ஞானம் என்ற ஆராய்ச்சிக்கும் உண்மை, மேன்மை எனும் இரண்டினைப்பு நோக்கில் ஆராயவேண்டும். மேன்மை என்பது வெளிப்படையாகப் புலன்களால் அறியக்கூடியது. உண்மை என்பது ஒரு தோற்றத்திற்கு உட்பொருளாக, மறைபொருளாக உள்ள சிறப்பு. இது ஆறாவது அறிவின் கூர்மையால், மறைபொருள் அல்லது காரணம் அறியும் யூக நுட்பத்தால் உணரக்கூடியது.

உதாரணம்; ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம். இப்பழத்தில் நிகழ்ச்சி நிலை (மேன்மை) எது பொருள் நிலை (உண்மை நிலை) எது என்று வினவிக் கொள்வோம்.

ஆப்பிள் பழம் பலப்பல கோடி விண்துகளுடைய கூட்டுத் தோற்றம். எனினும் அதை ஒரு பொருள் என்றே கூறுகிறோம். உண்மையில் அப்பழம் ஒரு பொருள் அல்ல. பலகோடி விண்துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துப் பிடித்துக் கொண்டு கூட்டாக இயங்கும் காட்சியே ஆகும். எனவே பழமானது பொருள் என்பது உண்மையல்ல. இது ஒரு புலன் மயக்கம். பழம் பல விண்துகள்கள் கூடிய ஒரு இயக்கமே. பொருள் அல்லாத ஒன்றை கட்புலன் வரையில் எல்லைகட்டி, விண் துகள்களின் கூட்டு இயக்கத்தைப் பொருள் என மதிப்பது மருள், மயக்கம் என்று கூறுகிறார் வள்ளுவர். இவ்வாறான் பொய்யான கருத்தைத்தான் மாயை என்று கூறுகிறார்கள் வேதாந்திகள். பழம் என்பது மேன்மை என்று அறிந்தோம். உண்மை என்ன ? விண் என்ற நுண் அணுக்களுடைய கூட்டுத்தான் பழம். அவ்வாறெனில் விண் என்பது பொருளா ? பொருளையும் நிகழ்ச்சியையும் பிரித்துப் பார்க்க ஒரு முறை உண்டு. எந்த ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறதோ, தனது இருப்பு நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறதோ அது நிகழ்ச்சி. அசைவையும் மாற்றத்தையும் கழித்துப் பார்த்தால் மீதியாக இருக்கும்ம் நிலை எதுவோ அதுவே பொருள் ஆகும். விண் என்பது அசைவு - இயக்க நிலை. விண்ணிலிருந்து அசைவைத் கழித்தால் விண் என்ற நிலை இறைவெளிதான். இதுவே பொருள் நிலை. பொருள் நிலையான இறைவெளி இயக்க விரைவால் விண்ணாகி, விண் கூட்டுச் சேர்க்கையால் பழமாகக் காட்சியளிக்கிறது. உருவம் (உடல்), விண்(சூக்குமம்) இறைவெளி மெய், இதனை ஆங்கிலத்தில், Physical Body, Astral Body, Causal Body என்றும் வடமொழியில் தூலம், சூக்குமம், காரணம் என்றும் வழங்கப்படுகிறது. இதனையே தமிழில் பருப்பொருள், நுண்ப்பொருள், காந்தம் என்று வழங்குகிறோம்.

இந்த அறிவோடு எப்பொருளையும் நோக்குவோம். தோற்றம் பருப்பொருள், ஆக்கம் விண் துகள் கூட்டு, உட்பொருள் இறைவெளி, இவ்வாறு தோற்றங்களில் அடங்கிய மூன்று நிலைகளையும் அறிந்து தெளிவோடு அதனோடு தொடர்பு கொண்டால் அதுவே விழிப்பு நிலை.

நான் - எனது ஆற்றல்
தெய்வ நிலை பேரறிவு வேறு என்றால்
     திசை மாறும் சிந்தனைக்கு மயக்கம் ஆகும்
தெய்வம் என்றால் பொருள் நிலையாம்ம் அறிவு என்றால்
     தெய்வத்தின் இயக்க நிலையனைத்து மாகும்
தெய்வமே அறிவாக இயங்கும் பேற்றைத்
     திருவிளையாடல் என்றார் தெளிந்த நல்லோர்
தெய்வம் நான் எனதாற்றல் அறிவு என்று
     தெளிந்திடுவாய் மனிதப் பிறப்பெய்தும் முக்தி.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
ஐந்து பிரிவினர்
மூலப்பொருள்களின் எண்ணிக்கைப்பற்றிய கொள்கையையொட்டிப் பிரிப்பதாயின் அறிஞர்களை ஐந்து பிரிவினராகப் பிரிக்கலாம். அடிப்படையில் பொருள் என எதுவும் இல்லை என்பர் ஒரு சாரார். ஒன்றே ஒன்றுதான் மூலப்பொருள் என்பர் இன்னொரு சாரார். மூலப்பொருள் இரண்டு என்பர் பிறிதொரு சாரார். மூலப்பொருள்கள் மூன்று என்பர் மற்றுமொரு சாரார். மூலப் பொருள் மூன்றுக்கு மேற்பட்டன எனக்கொள்வர் வேறொரு சாரார். இதில் மூன்றாம் பிரிவைச் சேர்ந்தோரே சாங்கியர். முதலாம் பிரிவினருக்குப் புத்தரையும், இரண்டாம் பிரிவினருக்கு வேதாந்திகளையும், நான்காம் பிரிவினருக்குச் சைவ சித்தாந்திகளையும், ஐந்தாம் பிரிவினருக்கு நியாய வைசேடிகரையும் உதாரணமாகக் கொள்ளலாம். 

செல்வம் வேண்டும் என்று நாளும் அலைகிறோம் . அதற்குத்தானே இத்தனை ஓட்டமும். அலைச்சலும்.

செல்வம் கிடைத்து விட்டால் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

அப்படி, ஓடி ஆடி அலைந்து செல்வத்தை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?

அது அவர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்திருக்கிறதா ?

பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்க வாசகர். பணமும், அதிகாரமும் தேவைக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதையெல்லாம் பொய் என்கிறார் மணிவாசகர்.

பாடல்

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

பொருள்
பொய்யாய = பொய்யான
செல்வத்தே = செல்வங்களை
புக்கழுந்தி = புக்கு அழுந்தி
நாள்தோறும் = நாள் தோறும்
மெய்யாக் கருதிக் = உண்மைய என்று கருதி
கிடந்தேனை = இருந்தவனை
ஆட்கொண்ட = ஆட்கொண்ட
ஐயா = ஐயா 
என் ஆரூயிரே = ஏன் ஆருயிரே
அம்பலவா  = அம்பலத்தில் ஆடுபவனே
என்றவன்றன் = என்று அவன் தன்
செய்யார் மலரடிக்கே = சிவந்த தாமரை போன்ற மலரடிகளுக்கே
சென்றூதாய் = சென்று ஊதாய் 
கோத்தும்பீ. = கோ+தும்பீ = அரச தும்பியே

செல்வம் நில்லாதது. அதனால் தான் அதற்கு "செல்வம்" ...எப்ப வேண்டுமானாலும் செல்வோம் என்று அது சொல்லாமல் சொல்கிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

என்பது வள்ளுவம்.

பரிமேலழகர் உரை
[அஃதாவது,பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் 'தத்துவ ஞானம்' என்ப. இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றியவாறு உளதாவது ஆகலின்,அக்காரண ஒற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு - இன்பம் இல்லாத பிறப்பு. 
விளக்கம்
(அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும், மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. 'மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவிச்சை' என்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், 'மாணாப் பிறப்பு' என்றார். இதனால், பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருளென்றுணரும் மயக்கவுணர்வினால்; மாணாப் பிறப்பு ஆம்-சிறந்த வீடு பேறின்றி இழிந்த பிறவியே உண்டாம்.

மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி ( நன்ஞானம்) நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடுபேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடுபெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போலுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது

மணக்குடவர் உரை
பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

பொருள்: மாணா(த) பிறப்பு - மாட்சிமை யில்லாத பிறப்பு, பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் மருளான் ஆம் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று அறியும் மயக்கத்தால் உண்டாம்.

அகலம்: பிறப்புப் பல துன்பங்களைப் பொருந்தியிருத்தலானும், இறப்புப் பின்னர் எய்தலானும் அதனை மாணாப் பிறப்பு என்றார். மெய்ப் பொருள் - உண்மையான பொருள் - என்றும் உள்ள பொருள். அழிதல் மாலையனவாகிய உலகப் பொருள்களை அழியாமல் என்றும் நிலை நிற்கும் பொருள்க ளென்று கொள்ளுதல் மயக்க உணர்வு எனவும், அவ்வுணர் வுடைமையால் பிறப்பு உளதாகும் எனவும் கூறினார்.

கருத்து: உலகப் பொருள்களை உள்ள பொருள்களாகக் கருதல் பிறப்புக்குக் காரணம்.

மு. வரதராசன் உரை
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

இந்திய தத்துவ ஞானம் - லட்சுமணன்
உபநிடதம் பற்றிய கட்டுரையில் 
மைத்திரேயியும் யஜ்ஞவல்கியரும்
யஜ்ஞவல்கியர் என்பவர் இல்லறத்தை முடித்துவிட்டுத் துறவறத்தை மேற்கொள்ளப்புறப்படும்போது தம் மனைவி மைத்திரேயி என்பவளைப் பார்த்து, “மேற்கொண்டு நீ வாழ்வதற்கு வேண்டிய செல்வத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு யான்வனம் செல்லக் கருதுகிறேன்” எனக் கூறினார். அதற்கு மைத்திரேயி, “பகவானே, சகல சம்பத்துகளையும் வைத்து இந்தப் புவி முழுவதையும் நீர் எனக்குத் தந்தாலும் அதைக்கொண்டு நான் இறவாமை அடைவேனோ?” என்றாள். யஜ்ஞவல்கியர், “அது எவ்வாறு முடியும்? செல்வத்தினால் என்ன சுகங்கள் ஆஇயலாமோ அவற்றையெல்லாம் நீயும் அடையலாம். இறவாமை எதிர்ப்பாத்தால் கூடாது” என்றார். மைத்திரேயி, “முற்றிதராத செல்வத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? தாங்கள் வனம்போகுமுன் மெய்ஞானத்தை உபதேசித்தருளுவீராக” என்றாள். உடனே அவர் அவளைத்தம் அருகில் உட்காரவைத்து மெய்ப்பொருள்பற்றிய உபதேசத்தை தொடங்கின்றார்

மேலும் கீற்று
மணக்குடவரின் கூற்றிலிருந்து ‘அழியாது நிற்கும் பொருள்’ தான் மெய்யுணர்தலுக்கான அடிப்படை என்பது புலப்படுவதால் அது எதைக் குறிக்கிறது என்பது ஆராயப்படவேண்டியது. ‘அழியாது நிற்கும் பொருள்’ என வள்ளுவம் குறிப்பிடுவதைக் கண்டறிய வேண்டுமானால் அழிகிற பொருள்கள் யாவை என்பதைக் காண வேண்டும். பௌத்த மெய்யியல் குறிப்பிடும் பன்னிரு சார்புகளாக நிற்கும் அனைத்தும் அழியக்கூடிய தன்மையன. இவை அழிந்த பிறகு எஞ்சி நிற்பது நிப்பாணம். எனவே அழியாத பொருளாக விளங்கு பவை பௌத்த அறக்கூறுகளும், அவை அடை விக்கும் நிப்பாணமுமே என்பது வெளிப்படை இதை உணர்தலே மெய்யுணர்தலாகும்.

பௌத்த மெய்யியலின் மையமான கோட் பாடாக விளங்குவது பன்னிரு சார்புக் கோட் பாடாகும். பன்னிரு சார்புகளில் முதன்மையானது அறியாமை; இறுதியானது பிறப்பு, இப்பன்னிரு சார்புகளின்று நீங்குதலே பிறப்பறுத்தலாகும். அவை வருமாறு:

1.     (அவித்தை) பேதைமையல்லது பொய்க் காட்சியிலிருந்து ஏதுக்குத்தக்க ஸ்கந்த சேர்க் கையால் குஸல அகுஸல கன்மங்களாகிய ஸம்ஸ்காரங்கள் (செய்கைகள்) உண்டாகின்றன.

2.     ஸம்ஸ்காரங்கள் செய்கைகளிலிருந்து மறு பிறப்பை யுண்டு செய்ய கற்பந்தரிக்கும் விஞ்ஞானம் (உணர்வு) உண்டாகின்றன.

3.     (விஞ்ஞானம்) உணர்விலிருந்து நாமரூபங் களாகும் அருவுரு உண்டாகின்றன.

4.     (நாமரூபமாகும்) அருவுருவிலிருந்து ஷடாய தனங்களாகும் அறுவகை வாயில்களுண்டா கின்றன.

5.     (ஷடாயதனங்கள்) சப்த, பரிச, ரூப, ரச, கந்த எண்ணங்களாகும் அறுவகை வாயில்களி லிருந்து (பதோ) ஊறு உண்டாகின்றன.

6.     (பதோ) இன்ப துன்பம் ஊறுகளினின்று வேதனை நுகர்வு உண்டாகின்றன.

7.     (வேதனை) நுகர்விலிருந்து தண்ஹா வேட்கை யுண்டாகின்றன.

8.     (தண்ஹா) வேட்கையிலிருந்து உபாதானப் பற்று உண்டாகின்றன.

9.     (உபாதானம்) பற்றிலிருந்து பிறப்புக்கு மூலமான கருமக்கூட்டம் (பவோ) உண்டாகின்றன.

10.    (பவோ) பிறப்புக்கு மூலமாகும் கருமக் கூட்டத்திலிருந்து ஜாத்தி மறுபிறப்பு உண்டாகின்றன.

11.    (ஜாத்தி) மறுபிறப்புண்டாகி அதிலிருந்து ஜய - மூப்பு, மர்ணா - மரணம், ஸோகா - வலியும், பரிதேவா - அழுகையும், துக்கா - துன்பமும், தாம்நாஸே - கவலையும், சம்பாந்தே - ஏக்கமும் ஆகிய துக்கோற்பவ மூலமாம் வினைப் பயன்கள் உண்டாகின்றன. (அயோத்திதாசப் பண்டிதர், க. 1999 : 70-71)

இப்பன்னிரு சார்புகளே மனிதனைப் பிறப்பறுத்தலிலிருந்து தடுத்து துன்பச் சூழலிலே பிறக்க வைக்கிறது. பிறத்தலுக்கு அடிப்படையாக உள்ள இதர பதினொரு சார்புகளுக்கெல்லாம் முதன்மையானதும், இவற்றின் தோற்றங்களுக் கெல்லாம் அடிப்படையானதும் அறியாமையே, இதைத் தெள்ளிதின் உணர்த்துகிறது திருக்குறள். மெய்யுணர்தல் அதிகாரத்தில்,

“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு” (கு. 36 : 1)

என்ற முதல் குறளிலேயே அறியாமை, பிறப்பு இரண்டையும் குறிப்பிட்டுவிடுகிறார் வள்ளுவர். பன்னிரு சார்புகளின் முதலும், இறுதியுமாக விளங்குபவை அறியாமையும், பிறப்புமே ஆகும். இவற்றை வள்ளுவர் தம் குறளில் முறையே மருள், பிறப்பு என்று குறிக்கிறார்.

அறியாமை எத்தன்மைத்து என்பதைப் பற்றிப் புத்தர் கூறுவதாவது:

“இந்த உலகிலோ அல்லது அடுத்த உலகிலோ எந்தத் துன்பங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்திற்கும் வேராக உள்ளது பேதைமை. அவை (அத்துன்பங்கள்) விருப்பம் அல்லது ஆசை காரணமாக எழுபவை” “மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் ஒன்று உண்டு. அறியாமையே முதன்மையான மலம். பிக்குகளே, அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்” (ராமசாமி, ப. 1996 : 24, 25)

இந்த அறியாமை என்கிற வித்துதான் பிறப்பை விளையச் செய்கிறது என்பது பௌத்த மெய்யியல் அடிப்படை.

இதைக் குறள்,

“மருளானாம் மாணாப் பிறப்பு”

என்று அப்படியே வெளிப்படுத்தியிருப்பது வியக்கத் தக்கது. அந்த அறியாமை எப்படிப்பட்டது என்பதை,

“பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்”

என்கிறது வள்ளுவம். வள்ளுவம் கூறும் பொருளல்லவை யாவையென்றால் அறியாமை என்கிற மருளை உருவாக்கும் சிந்தனையோட்டங் களாகும். அதாவது, பிறப்பை உருவாக்குவதற்கான சங்கிலித் தொடர் இயக்க உணர்வுகள் ஆகும். இவற்றினால் உண்டாகும் மறுபிறப்பும் அதன் அளவாய்த் தோன்றும் இதர துன்பச் சுழற்சிக் கூறுகளும் பொருளல்லவை. இவற்றை நற்காட்சியைக் கொண்டு கண்காணிக்கின்றனர். இக்கருத்தை வலியுறுத்தும் பகுதி இதோ:

“தவறில்லாதவற்றைத் தவறானவை என்றும் தவறுள்ளவற்றைத் தவறில்லாதவை என்றும் நினைக்கிறவர்கள், தீக்காட்சியுடையவர்கள். ஆகையினாலே, நரகம் அடைகிறார்கள். தவறானவற்றைத் தவறு என்றும் தவறில்லாத வற்றைத் தவறன்றென்றும் அறிகிறவர்கள், நற்காட்சியுடையவர்கள்; ஆகையினாலே சுவர்க்கம் அடைகிறார்கள்” (சோமானந்தா பிக்கு, 176)

இதே கருத்தின் அடிப்படையைக் கொண்டு விளங்கும் புத்தரின் மற்றொரு கூற்று வருமாறு:

“உண்மையை உண்மையில்லையென யார் எண்ணுகிறார்களோ அவர்களும், உண்மை யின்மையை உண்மையென்று மதிப்பவர்களும் முரணான கோட்பாட்டை மேற்கொள்ளும் கருத்து உடையவராதலால் மெய்யான பயனை அடையவே இயலாது. ஆனால், உண்மையினை உண்மையென்று அறிதலும், பொய்மையைப் பொய்மையெனப் புரிதலுமே நேர்மையான முழு நிறைவையும் மெய்யான பலனையும் தரும்.” (அம்பேத்கர், பி. ஆர். 1994 : 155)

ஆக அறியாமையே பிறப்புக்கான மூலம் என்ற கருத்திலும், அவ்அறியாமை பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் தன்மையது என்ற கருத்திலும் பௌத்த மெய்யியலும், வள்ளுவமும் ஒத்த சிந்தனையோட்டத்தைக் கொண்டிருப்பது உறுதியாகிறது.

பொருளல்லவற்றைப் பொருளென்று உணர்தல் அறியாமை.

“மானுட வாழ்க்கை நிகழ்ந்த அக்கணமே தடமின்றி மறைந்துவிடுகிறது. அதன் ஒரு துளிகூட எங்கும் எஞ்சக்கூடாதென்பதே நெறி. ஏனென்றால் அது பிரம்மலீலை.

English Meaning - As I taught a kid - Rajesh
People who consider/value meaningless things (such as materialism, money, wealth, small pleasures, small time pleasures etc) as meaningful things of life are mundane trivial people. They don't know what is the real meaning of life and what  (moksha) actually gives real happiness. Also remember, this kural doesn't say money is not essential. It only says that money is not the ultimate thing in life

Questions that I ask to the kid
Some people consider many things meaningful. Is it true? Why?
How can you overcome it? (யாதெனின் யாதெனின்)

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...