Disclaimar

This blog is entirely non-commercial and created solely for learning and educational purposes. The Tamil meanings are written by me, and where English meanings, stories, practice tools, or parallels from other literature are included, I’ve thoughtfully used AI assistance to enrich and interpret the ideas—not through copy-paste, but through careful curation and reflection. Many snippets and references are drawn from freely available Thirukkural blogs and books online, with no intent to plagiarize or profit. (To date, I have not earned even a single rupee or cent from this work.) Wherever possible, I have provided due credit and source links. If you are the creator of any content used here and would like it removed, or would prefer a different form of attribution, please feel free to let me know in the comment section of any post. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

Tuesday, June 2, 2020

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
நல்குரவு - வறுமை

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

இடும்பையுள் - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம்.

பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.

குரைத் - ஒலி; பெருமை; பரப்பு; அசைநிலை; இசைநிறை; குதிரை

துன்பங்கள் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

சென்று - செல்லும்  ; செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.

முழுப்பொருள்
வறுமை எத்தகையது தெரியுமா? வறுமை என்பது துன்ப நிலை மட்டும் அன்று. வறுமை என்பது பல வேறு வகையான துன்பங்கள் அனைத்தும் வந்து சேர்ந்து மேலும் துன்பத்தை தரக்கூடியது. பல வேறு வகையான துன்பங்கள் என்றால் மனவருத்தம், உடல் வருத்தம், நோய், இகழ்ச்சி, சோர்வு என்று இன்னும் பல வேறு கேடுகள் உள்ளடங்கும். குற்றங்கள் செய்ய தூண்டுவது. குற்றம் புரிந்தால் அதற்கு தண்டனையும் உண்டு. அதுவும் துன்பமே.

ஆதலால் வறுமை வரமால் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வறுமை நிலை அடைந்தால் அதில் இருந்து விரைவில் வெளியே வர ஆவனவற்றை செய்யவேண்டும்.  வறுமையில் இருப்போர் வெளியே வர தன் கையினை கொடுத்து உதவ வேண்டும்.

வறுமை ஒரு கொடிய வியாதி. அது, உடம்பையும், மனதையும், ஆத்மாவையும் நலிந்து போகச் செய்துவிடுகிறது” என்று வைக்கம் முகம்மது பஷீர் கூறுகிறார்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும். (குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும். இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.

மு.வரதராசனார் உரை
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

சாலமன் பாப்பையா உரை
இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

குறள் 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
[பொருட்பால், குடியியல், உழவு]

பொருள்
பல - ஒன்றுக்குமேற்பட்டவை

குடை - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

நீழலும் - நிழல்; காற்று; சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

குடைக் - கவிகை; அரசாட்சி; குடைக்கூத்து; பாதக்குறட்டின்குமிழ்; நீருண்ணும்ஒலைப்பட்டை; குடைவேல்; உட்டுளைப்பொருள்

கீழ்க் - கீழிடம்; கிழக்கு; பள்ளம்; முற்காலம்; குற்றம்; கயமை; இழிந்தவன்; கீழே; ஏழனுருபு; மறதி; கடிவாளம்.

காண்பர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அலகு - எண்; அளவு அளவுகருவி பலகறை மகிழம்விதை; நென்மணி பயிர்க்கதிர்; ஆயுதம் ஆயுதத்தினலகு; கூர்மை பறவைமூக்கு; தாடை உயிர்களின்கொடிறு; கைம்மரம் நூற்பாவின்அலகு; துடைப்பம் பொன்னாங்காணி அறுகு நுளம்பு இலட்சம்பாக்கு; ஆண்பனை அகலம் குற்றம்

உடை - ஆடை; செல்வம் உடைமை குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உடை - (வி)ஒடி, தகர், உடைஎன்னும்ஏவல்.

நீழலவர்- உலகையே புரக்கும் கருணை நிழலை வழங்கும் உழவர் பெருமக்கள்.

முழுப்பொருள்
உலக மக்கள் எத்தகைய மன்னனின் ஆட்சியின் கீழ் அல்லது எத்தகைய நாட்டில் வாழ ஆசைப்படுவார்கள்?  எந்த நாட்டில் விவாசாயம் செழித்து விவசாயிகளும் செழிப்பாக இருக்கிறார்களோ அந்நாடு வளமான நாடு. விவசாயம் செழிப்பாக இருந்தால் மக்கள் பசி இன்றி இருப்பர். வறுமை இருக்காது. பசியும் வறுமையும் இல்லை என்றால் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருக்கும். ஆதலால் அத்தகைய நாட்டில் அத்தகைய மன்னனின் கீழ் நடைபெறும் ஆட்சியில் மற்ற நாட்டு மக்களும் வாழ விரும்புவர்.

ஆதலால் ஒரு அரசரின் முதன்மையான பணிகளில் உழவு மேலாண்மை இருத்தல் வேண்டும். அதற்கு தேவையான நீர்வள மேம்பாடு (அதாவது ஏரி, குளம், ஆறு ஆகியவற்றை நிர்வகிப்பதும், மழையும் ஆறும் உண்டாக காரணமாக அமையும் காடுகளை நிர்வகிப்பதும் அடங்கும்),  (உழவு பிரியும்) மனித வள மேம்பாடு, விதைகள் மேம்பாடு, பூச்சிகள் மேம்பாடு, மரங்கள் மேம்பாடு, உணவு தானிய பங்கிட்டு மேம்பாடு, உணவு தானிய சேமிப்பு மேம்பாடு, உணவு தானிய வர்த்தக மேம்பாடு என்று எல்லாவற்றையும் அரசர் செவ்வென நிர்வகிக்க வேண்டும். அந்த உணவில் கலப்படங்கள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மக்களின் இதயத்தில் ஒரு நாட்டின் உண்மையான மதிப்பிடு உணவை உற்பத்தி செய்யும் உழவில் தானுள்ளது. மாட மாளிகைகளிக்கும், ஆடம்பர களியாட்டங்களும், பிரம்மாண்டமான பாதுக்காப்பு அரணும் படைக்கலன்களும், விண்வெளியில் ஆராய்ச்சியும், வணிகமும்  (மற்றும் பல) ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அல்ல.  ஏனெனில் இவை யாவும் அறிவு சார்ந்தது. ஒரு விதத்தில் அகங்காரம் சார்ந்தது. தேவைக்கு அதிகமாவே வளர்த்து எடுக்கப்படுவது. அதுவே விவசாயம் அப்படிப்பட்டது அல்ல. அது இதயபூர்வமானது ஆகும், லாப நஷ்டங்களை பார்க்காது செய்யப்படுவது. மக்களின் பசியை ஆற்றுவதை ஒரு வேள்வியாக / விரதமாக / தபஸாக செய்யப்படுவது. தேவைக்கு அதிகமாக செய்யப்படவும் மாட்டாது ஏனெனில் தேவைக்கு உற்பத்தி செய்யப்படும் உணவு உண்ணப்படாமல் அழிக்கப்படும். உற்பத்தி செய்கிறவன் அழிக்க ஒப்பமாட்டான். ஆதலால் அழிக்க தேவையில்லாத நிலையை விரும்புவான் அதாவது தேவையானவற்றை மட்டுமே உற்பத்தி செய்வான். 

உண்மையாக, வல்லரசு என்று நாடுகள் சொல்லிக்கொள்வதில் ஒன்றும் பலனில்லை. இயல்பாகவே மக்கள் சொல்ல வேண்டும் எது நல்ல நாடு என்று. அது உழவின் அடிப்படையிலேயே. வேறேதுமில்லை. 

அலகு என்ற சொல் நெற்கதிரைக் குறிப்பதாம். “பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகளும், இக்குறளின் கருத்தை உணர்த்துவதைக் காணலாம்.

“ஏரோட்டம் நின்னுபோனா உங்க காரோட்டம் என்னவாகும்” என்று பாமர மொழியிலே கேட்ட அண்மைக்கால கவிஞரை நினைவுறுத்தும் குறள். 

மேலும்: அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்-பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகு-கதிர், அ`ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித் 'தங்குடை' என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர். 'ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே' (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், 'இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்' (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.).

மணக்குடவர் உரை
பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்-கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்).

மு.வரதராசனார் உரை
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

குறள் 1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
நல் - நல்ல; வறுமை.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை

என்பது - என்று அறியப்படுவதெல்லாம்; என்று என்பது; eṉpatu   n. என்-. 1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )

ஒருவற்குத் - ஒரு மனிதனுக்கு

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்

பிறந்த -  பிறவி; பிறப்பு; பாவம்; துன்பம்; பிறந்தகம்; இயல்பு.

இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை 

ஆக்கிக் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல்

கொளல் - அதனை கொள்ள வேண்டும்

முழுப்பொருள்
ஒரு நல்ல ஆளும் தன்மை என்பது எது தெரியுமா? தான் பிறந்த குடியை ஆளும் தன்மையை வலிமையை தான் முதலில் வளர்த்துக்கொண்டு அக்குடியை வழிநடத்தி அக்குடியில் உள்ளோரையும் அக்குடியையும் உயர்த்துவது நல்லாண்மை ஆகும். 

இங்கே குடி என்பது தான், தன்னுடைய குடும்பம், நண்பர்கள், குழு, நிர்வாகம், நாடு என்னும் அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். 

முதலில் தன்னை ஆள தெரிந்தவனே பிறரை ஆள முடியும். அடுத்து தன் குழு, குடியை ஆள தெரிந்தவனே பிற குழுவை குடும்பங்களை ஆள முடியும். 

தம்மைச் சார்ந்தவரையே தம் ஆளுமைக்கு உட்படுத்த முடியாதவரை ஆளுமை உடையவராகக் கொள்வது எங்கனம்? குடியினரை உயர்த்துவதாலேயே அது நல்லாண்மை என்றும் கூறப்படுகிறது.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் - தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல். (போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினையாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச்செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக் கோடல். ஆளுதலுடைமை- குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே இது குடியோம்புதல் வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

குறள் 1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
[பொருட்பால், குடியியல், நாணுடைமை] 
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிறர் -  piṟar   n. id. Outsiders, strangers;அன்னியர். பிறர்க் கின்னா முற்பகற் செய்யின் (குறள்,319).

பழியும் - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

பழியும்  - பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன்.

நாணுவார் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

நாணுக்கு - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்

உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.

பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள்.
உறைபதி - உறைவிடம், இருப்பிடம்.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
தனக்கு வந்த பழிக்கு நாணுவது இயல்பானது. ஆனால் பிறருக்கு வரும் பழியையும் தன் பழிப்போல் நினைத்து நாணுவார் என்றால் அவரிடத்திலே  இவ்வுலகத்தில் நாணம் உள்ளது என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  

ஏனெனில் தனக்கு பழி வந்தால் மட்டும் நாணுவது ஒருவித சுயநல மனப்பான்மை. அவன் பிரச்சனை அவனது என்று இருப்பது பொறுப்பை தட்டிக்கழிப்பது போன்று ஆகும். 

பிறர் தவறு செய்தால் அறிந்தோ அறியாமலோ தானும் அதற்கு ஏதோ ஒரு வகையில் ஒரு காரணம் என்று உணர்வதே அறிவு. உதாரணமாக ஒரு குடும்பத்திலோ அல்லது ஒரு நிர்வாகத்திலோ அல்லது குழுவிலோ ஒருவர் தவறு செய்தால் அதற்கு நாமும் ஒருவகையில் காரணமே. ஏனெனில் அந்தச் சுற்றத்தில் நாமும் இருந்தோம். நாம் தேவையான அளவு சரியான பாதையில் அவர்களை வழிநடத்தவில்லை. நாம் சரியாக வழிநடத்தி இருந்தால் அவ்வப்போது அவர்கள் செய்வதை அவர்களிடம் இருந்தோ பிறரிடம் இருந்தோ கேட்டு அறிந்து ஆராய்ந்து சரிபார்த்து இருந்தால் தவறின் வேர்களை அறிந்து அவை வளரும் முன்பே களையலாம். குறைந்த பட்சம் நடந்த தவறுக்கு பரிகாரமாக தவறின் வேர்களை ஆராய்ந்து அவற்றை அறுக்க வேண்டும். மீண்டும் நடக்காமல் இருக்க தவறுகளில் இருந்து மீள தேவையானவற்றை செய்ய வேண்டும். 

இதனை தார்மீக தலைமைப் பண்பு என்பர் நிர்வாக மேலாண்மையில். அதாவது Ethical Leadership. இன்னொரு வகையில் Ownership அல்லது பொறுப்பேற்பு எனலாம். 

ஒருவர் வெற்றிபெற்றால் அவர் நமது சொந்தம் என்றும் நண்பர் என்றும் உறவு கொண்டாடுகிறோம் அல்லவா? அப்படி என்றால் அவர் தவறு செய்தால் அதற்கும் நாம் பங்கெடுக்க வேண்டும் அல்லவா? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை

பரிமேலழகர் உரை
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர். (ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல். அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப்போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார். இது தம்பழிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who feels ashamed for not just his mistakes but also for other mistakes (for e.g., siblings, family members, friends, etc. ) is the place where greatness lies in this world. Only because of them the thing call shame still exists. Only because of those people wrong doings are reduced not just self but also the people around them making the world a better places. hence, we say greatness lies in them in this world. For e.g., there are many leaders in the world (e.g., Gandhi, Martin Luther King etc.) who feel ashamed of the untouchability, racial discrimination etc that exited in the world and exists in the world. Only because of them it gained more attention and slowly those are reduced. Hence, we can say greatness lies in them.

Questions that I ask to the kid
Where does greatness lies in this world?
Why are people who are ashamed of their mistakes and the mistakes of others so important to this world?

Monday, June 1, 2020

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
கொடுப்பதூஉம் - கொடுத்தல் -  ஈதல்; பெற்றெடுத்தல்; பங்காடுதல்; விற்றல்; உடன்படுதல்; சாகக்கொடுத்தல்; திட்டுதல்; அடித்தல்; ஒருதுணைவினை.

துய்ப்பு - நுகர்ச்சி.
துய்ப்பதூஉம் - துய்த்தல் - துய்த்தல் - புலன்களால்நுகர்தல்; உண்ணுதல்; நூல்நூற்றல்; நாடகச்சந்திஐந்தனுள்இறுதியானது.

இல்லார்க்கு - இல்லாதவர்
அடுக்கிய - அடுக்கு - அடுக்கப்பட்டது; ஒழுங்கு, வரிசை, அடுக்குச்சொல்.
அடுக்குதல் - அடுக்கல்; ஒன்றன்மேல்ஒன்றாகவைத்தல்; வரிசைப்படவைத்தல்.

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உண்டாயினும் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

இல் - இல்லை 

முழுப்பொருள்
ஒருவருக்கு தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பிறருக்கு கொடுத்து உதவும் மனம் வேண்டும் அல்லது அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் நுகரும் மனம் வேண்டும். செல்வத்தை பிறருக்கு கொடுத்து உதவ மனம் அல்லாதவரும் நல்வழியில் நுகராதவரும் உயிர்வாழ்ந்தால் என்ன வாழாவிட்டால் என்ன? அத்தகையவர் உயிர்வாழ்வதாகவே கருதப்பட மாட்டார். அத்தகையவரிடம் எவ்வளவு பூர்வீக சொத்துக்கள் வரிசையாக அடுக்கப்பட்டாலும் அதனால் பயன் என்ன? 

மேலும் ஒரு விவசாயி தான் உழுது ஈண்ட உணவு பொருட்களையெல்லாம் தானே உண்டால் என்ன ஆகும்? வயிறு வெடித்தோ அல்லது அதீத உணவினால் நோய்வாய்ப்பட்டோ உயிர் இழப்பான். அவ்விவசாயி உழைத்ததனால் தான் உணவு விளைவிக்க முடிந்தது. ஆனால் இயற்கையும் உலகமும் அதற்கு உதவியது. ஆதலால் இவ்வுலகிற்கு தான் உழுது ஈட்டிய உணவில் தனக்கு தேவையானவற்றை நுகர்ந்து மீதம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். இல்லையேல் அவன் உயிர் வாழ்ந்தோ அல்லது சொத்து சேர்த்தோ என்ன பயன்? 

செல்வம் ஈட்டுதலே பிறர்க்கு கொடுத்தலுக்கும் தான் நுகர்தலுக்கும் தான். சேமித்து சேமித்து பொருளற்றதாக ஆக்க அல்ல. செல்வம் நிலையில்லாதது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பழமொழி  பாடல் இதை அழகாகச் சொல்லும்.

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப  அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்  
– பழமொழி 216

பொருள்
ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !

மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம்  நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”

நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.

கருமிகள் எனப்படும் லோபிகளும் இதுபோன்றவர்களே.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.).

மணக்குடவர் உரை
பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

மு.வரதராசனார் உரை
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

குறள் 996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

பொருள்
பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை

உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

பட்டு - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உலகம் -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.; atu   atu அது it, that, that thing  

இன்றேல் - இல்லை என்றால்

மண் -  நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

புக்கு - pukku   n. Paper-tree; பிராய். (பிங்.); pirāy   n. Paper-tree, s. tr., Streblusasper; மரவகை.
பிராயச்சித்தசமுச்சயம் pirāyaccitta-camuccayam, n. A Tamil work on pirāyaccit-tam, 17th C.; பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிராயச்சித்தங்களைக்கூறும் தமிழ் நூல்.

புகுதல் - அடைதல்; தொடங்குதல்; உட்செல்லுதல்; தாழ்நிலையடைதல்; ஆயுளடைதல்; ஏறுதல்; நிகழ்தல்; உட்படுதல்; அகப்படுதல்

மாய்வது - மாய்தல் - மறைதல்; அழிதல்; சாதல்; ஒளிமழுங்குதல்; கவலைமிகுதியால்வருந்துதல; அறப்பாடுபடுதல்; மறத்தல்.

மன் - ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள்
நற்பண்புகளை உடையோர் இவ்வுலகில் தோன்றி இருப்பதால் தான் இவ்வுலகமும் இவ்வுலக மக்களும் வாழ்கின்றனர். பண்புடையோர் இல்லையென்றால் இவ்வுலகத்தில் உள்ள மக்கள் அழிந்து மண்ணுக்கு இரையாகி மடிந்து இருப்பார்கள். ஆதலால் இவ்வுலகம் நிலைக்க காரணமாக இருக்க வேண்டுமா அல்லது அழிய காரணமாக வேண்டுமா என்பதை முடிவெடுத்து நாம் பண்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அவரவர் கையிலே. இக்குறளை நன்கு அவதானித்து விட்டு முடிவெடுத்தால் நன்று. 

இதனால் தான் என்னவோ யுகபுருஷர்களான இராமன், கிருஷ்ணன் ஆகியோர் நற்பண்புகளுக்கு உதாரணமாக திகழுகிறார்கள். அதுவே இராவணன், கம்சன் போன்றோர் அழிவுக்கு உதாரணமாக இருந்திருக்கிறார்கள். 

கீழ் காணும் புறநானூற்றுப் பாடலில் (புறம்: 182) இளம் பெரும்வழுதி என்னும் புலவர் இக்கருத்தை இவ்வாறு கூறுகிறார்:

உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர், 
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் 
தமியர் உண்டலும் இலரே. முனிவிலர் 
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழியெனின் 
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; 
அன்ன மாட்சி அனைய ராகித், 
தமக்கென முயலா நோன்தாள், 
பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறநா.182)

இப்பாடலின் பொருள்: தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள். இவர்கள் உண்ணும் உணவு அமிழ்தம். இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே இவர்களுக்குச் சாவு இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். எந்தச் சூழலிலும் சினம் கொள்ளமாட்டார்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள். பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக் கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய மாட்டார்கள். இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம் படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது. பண்புடையாரைக் கொண்டே இவ்வுலகம் வாழ்கிறது என்று சங்க இலக்கியப் பாடலும் வலியுறுத்துகிறது.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” 

என்ற ஒளவையாரின் “மூதுரைப்” பாடல் வரிகளின் உள்ளுரைக் கருத்தும் இதேயாம். இக்குறள் நம்பிக்கையை இழக்காமல், ஒருவர் பண்புடையாராக இருப்பினும் மழையாவது பொழியும், உயிர்கள் தழைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மழையின்றி, மன்னுயிர் ஏது? மன்னுயிரின்றி இவ்வுலகம்தான் நிலை பெறுதல் எங்கனம்.?


“ஓய்ந்துளண் வீரன் என்னின் உலகமோ ரேழும் ஏழும்
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமே தெய்வம் என்னாம்
வீய்ந்துறும் எண்க ணான்முன் னுயிரெலாம் வெருவல் அன்னை
ஆய்ந்தவை யுள்ள போதே அவருளர் அறமும் உண்டால் (கம்ப.பிராட்டிகளங்காண் 26)
மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். ('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர்.மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பண்புடையார்கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்று முண்டாய் வாராநின்றது: ஆண்டுப் படுதலில்லையாயின் அது மண்ணின்கட்புக்கு மாய்ந்து போவதாம்.

மு.வரதராசனார் உரை
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.

Thirukkural - Management - Relationship
The world has been revolving around because of the presence of people who are polite, courteous, supportive, and encouraging. There are workshops, talks, seminars, and conferences on the importance of and practice of ‘Compassion.' The world needs compassionate people. The world would have disappeared by now but for the presence of compassionate people, confirms Kural 996. People need people to progress. Therefore, relationships sustain this world.

The world goes on because of good men
Else it will turn to dust.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

குறள் 987
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
இன்னா -  துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தார்க்கும் - செய்தவர்
செய்தல் -   இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

இனியவே  - இனிது - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

செய்யாக்கால் - செய்யாது இருத்தல் ; இயற்றாமல் இருத்தல்

என்ன - யாது; என்னபயன்; ஓர்உவமவுருபு.

பயத்ததோ - பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

முழுப்பொருள்
வாழ்வில் நமக்கு துன்பங்களை தந்தவர்களுக்கும் வலிகளை தந்தவர்களுக்கும் த்ரோகங்களை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றே சராசரி மனது கூறும். ஆனால் திருவள்ளுவர் வான்மறை எழுதுகிறார் அல்லவா. துன்பத்தை தந்தவர்களுக்கும் இனியவற்றையும் நல்லவற்றையும் நன்மைகளையும் செய். அதுவே சான்றாண்மை, மேன்மை குணம் கொண்டோரின் பண்பாகும். மேன்மையான குணங்கள் கொண்டும் துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்ய முடியவில்லையென்றால் தன்னுடைய குணத்தினால் என்ன பயன் ?

சால்பு என்ற சொல்லுக்கு கல்வி என்ற பொருளும் உண்டு. ஆதலால் கல்வியின் பயனே துன்பம் கொடுத்தவருக்கு உட்பட பிறருக்கு தீங்கு நினைக்காது நன்மை நினைப்பது ஆகும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

குறிப்பு: துன்பம் செய்தவர்களுக்கு நன்மை செய் என்று தான் சொல்கிறார். அவர்களுடன் இயைந்து இரு என்றெல்லாம் திருவள்ளுவர் கூறவில்லை. இயைந்து இருக்க வேண்டும் என்றால் அவருடைய குணங்களிலும் நல்மாற்றங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும். இருவரும் இயைந்து நடக்க கூடிய சூழலும் இருக்க வேண்டும். 

நெல்சன் மண்டேலா (Nelson  Mandela) அவர்கள் தென்னாபிரிக்க நாட்டின் தலைவராக பொறுப்பு ஏற்கும் பொழுது  அவ்விழாவிற்கு அவர் சிறையில் இருந்த பொழுது அவரை தரக்குறைவாக நடத்திய காவலர்களை அழைக்கிறார். உங்களை தரக்குறைவாக நடத்தியவர்களை ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நெல்சன் மண்டேலா கூறுகிறார் நான் அவர்களை மன்னிக்கவில்லை என்றால் நான் (பகை என்னும்) சிறையில் அகப்பட்டு கொள்கிறேன் என்று தான் அர்த்தம். அவர்களை மன்னித்து என் நண்பர்களாக ஏற்றால் தான் நான் அதை கடந்து மனதளவில் சுதந்திரம் பெற்று இருக்க முடியும் என்று கூறுகிறார். 

நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம்செய்வ தல்லால், தவற்றினால் தீங்கூக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல். (நாலடி 69)

தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

அதாவது, தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

இப்போது பாரதியின் அருமையான ஒரு பாடலை முழுமையாகப் பார்த்துவிடலாம்.

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய்

புகை நடுவினில் தீ இருப்பதைப்
பூமியில் கண்டோமே – நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே
பகை நடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கின்றான் – நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் (பகை)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ? – நன்னெஞ்சே
செய்தி அறியாயோ?
குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்திக்
கொடி வளராதோ? – நன்னெஞ்சே
கொடி வளராதோ? (பகை)

உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே
உள்ளம் நிறைவாமோ?
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும்
சேர்த்த பின் தேனாமோ? – நன்னெஞ்சே
சேர்த்த பின் தேனாமோ? (பகை)

வாழ்வை நினைத்த பின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? – நன்னெஞ்சே
வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ? – நன்னெஞ்சே
சாத்திரம் கேளாயோ? (பகை)

போருக்கு வந்து அங்கு எதிர்த்த கவுரவர்
போல வந்தானும் அவன் – நன்னெஞ்சே
போல வந்தானும் அவன்
நேருக்கு அருச்சுனன் தேரில் கசை கொண்டு
நின்றதும் கண்ணன் அன்றோ? – நன்னெஞ்சே
நின்றதும் கண்ணன் அன்றோ? (பகை)

தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் – நன்னெஞ்சே
சிந்தையில் போற்றிடுவாய்
அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள்
அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே
அவளைக் கும்பிடுவாய் (பகை)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து? (சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கின்னாதவற்றைச் செய்தார்க்குஞ் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின் அச்சால்பு வேறென்ன பயனை யுடைத்து.

மு.வரதராசனார் உரை
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை
தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?.

Thirukkural - Management - Not Hurting Others
Valluvar goes a step ahead to advice us on the importance of proactive action in turn to a destructive action, Kural 987.

What good is that good which does not return 
Good for evil?

Even if someone hurts you, harms you, or damages you, you in turn do a good deed, a pleasant act, and a beneficial act to him. The intention of doing that is not to insult, humiliate, or make him feel ashamed of what he did but to show him that you are a person of humility.

Responding positively to an insulting act is to satisfy your own self and make the other person know that you are a humble and wise person.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...