Posts

Showing posts with the label W - வைக்கம் முகம்மது பஷீர்

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

குறள் 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும் [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் நல்குரவு - வறுமை என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் இடும்பையுள் - துன்பம்; தீமை; நோய்; வறுமை; அச்சம். பல் - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு. குரைத் - ஒலி; பெருமை; பரப்பு; அசைநிலை; இசைநிறை; குதிரை துன்பங்கள் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. சென்று - செல்லும்  ; செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரி...

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும் [பொருட்பால், குடியியல், நல்குரவு] பொருள் இற்பிறப்பு - நல்லகுடியிற்பிறத்தல்; உயர்குடிப்பிறப்பு இற்பிறந்தார் - நல்ல குடியில் ; உயர்குடியில் பிறந்தவர்கள்  கண்ணேயும் - இடத்தே கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. இளிவந்த - இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை சொற் - சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். பிறக்கும் - பிறத்தல் - தோற்ற...