Posts

Showing posts with the label Index 079 நட்பு

079 நட்பு

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - நட்பு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு குறள் 782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு குறள் 783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு குறள் 784 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு குறள் 785 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் குறள் 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு குறள் 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு குறள் 788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு குறள் 789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை குறள் 790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு பதிவு வரிசை