061 மடியின்மை
பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - மடியின்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் குறள் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் குறள் 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து குறள் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது குறள் 607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் குறள் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் குறள் 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும் குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு பதிவு வரிசை