குறள் 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் [பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை ] பொருள் செரு - போர்; ஊடல். வந்த - வருதல் போழ்தில் - பொழுது; நல்வேளை; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன். சிறை - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று. செய்யா - செய்யாமல் வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன். வெரு - அச்சம்; பயம் வெருவந்து - அச்சம் வந்து வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம். கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். முழுப்பொருள் போர் மற்றும் வெள்ளம் வறட்சி தொற்று நோய் நிதி நெருக்கடி போன்ற காலகட்டங்கள் வந்தால் எப்படி...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.