குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை]
பொருள்
வெருவந்தம் - அச்சம்.
வெருவந்தசெய்யாமை - வெருவந்த செய்யாமை அதிகாரம், ஆள்வோர் தாமும், தம்முடைய அமைச்சர்களும், குடிமக்களும் அஞ்சும்படியான எண்ணங்கள் கொள்ளாமையும், செயல்கள் செய்யாமையும்பற்றி கூறுகிறது
தக்காங்கு - தக்கபடி; நடுவுநிலையாக; takkāṅku adv. தக்க + ஆங்கு 1. Suitably, regularly, in an orderly manner;தக்கபடி. 2. Impartially; நடுவுநிலையாக. தக்காங்குநாடி (குறள், 561).
நாடி - நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு.
நாடி - அவற்றை நோக்கி; ஆராய்ந்து
தலைச்செல்லா - அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல்
வண்ணம் - vaṇṇam s. colour, வருணம்; 2. way, manner, method, விதம்; 3. a poetical verse, melody, metre, இராகம்; 4. beauty, அழகு; 5. all kinds of ointment, சாந்துப்பொது; 6. form, figure, வடிவு; 7. a good, happiness, நன்மை; 8. (in math.) co-efficient; 9. variation of metre.
அவ்வண்ணமாய், அவ்வண்ணமே, so, in that manner, in the same manner.
வண்ணத்தால் - அவ்விதத்தில்
ஒத்தபடி - otta-paṭi adv. id. +. Agreeably, suitably; ஏற்றவாறு
ஒத்தமலங்கொட்டு-தல் ottamalan-koṭṭu-, v. intr. perh. ஒத்து + அவலம் +. To behave improperly, rudely, insolently; இடக்குச்செய்தல். Cg.
ஒத்தாங்கு - ஒப்ப, ஒத்தபடி.
ஒறுப்பு - தண்டிப்பு, தண்டனை; வெறுப்பு; கடிந்துபேசுகை; உடல்வருந்துகை; குறைவு; பொருளின்அருமை; கிராக்கி.
ஒறுப்பது - தண்டனை வழங்குவது
வேந்து - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
முழுப்பொருள்
இவ்வுலகில் பலர் அறிந்தும் அறியாமலும் தவறுகள் செய்வர். சிலர் உணர்ச்சிவசப்பட்டு செய்வர். சில தவறுகள் கொடுங்கூற்றாக இருக்கும். சிலவை திருத்தப்படக்கூடிய தவறாக இருக்கும். சில தவறுகள் வயதில் மிக பெரியவர்களால் செய்யப்பட்டு இருக்கும். சில தவறுகள் பிஞ்சு உள்ளங்களால் கூட அதனுடைய வீரியம் அறியாமல் செய்யப்பட்டு இருக்கும். ஆதலால் ஒவ்வொரு தவறையும் ஒழுங்கே யாரிடத்திலும் சார்பு இல்லாமல் ஆராயவேண்டும். அதற்கான தீர்ப்பை சார்பு இல்லாமல் வழங்க வேண்டும். அத்தகைய தீர்ப்பு மற்றவர்கள் அரசனை பார்த்து அஞ்சும் படியாக இருத்தல் நல்லது கிடையாது. கொடுக்க படும் தீர்ப்பு குற்றவாளிகளும் (மக்களில் உள்ளவர்களும்) அடுத்த முறை செய்ய கூடாதவைக்கான ஒரு தண்டனையாக படிப்பினையாக இருக்க வேண்டும். ஆதலால் குற்றத்திற்கு ஏற்றவார்ப்போல நல் தீர்ப்பினை வழங்க வேண்டும். சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனை தவறு. அதேப்போல பெரிய தவறுகளுக்கு சிறிய தண்டனை மிக தவறாகும். ஏனெனில் அது மற்றவரிடத்தில் அலட்சியத்தை உண்டாக்கும். அக்குற்றங்களை குறைக்க ஏதுவாக இருக்காது. ஆதலால் சார்பு இல்லாமல் ஆராய்ந்து குற்றத்திற்கான தக்க தண்டனையை வழங்குவது (நீதி) அரசரின் கடமையாகும்.
உதாரணமாக: சமிபத்தில் தன்னை தானே கடவுள் என்று கூறிக்கொண்ட ராம் ரஹிம் சிங் (Gurmeet Ram Rahim Singh) என்பர் இருபது வருடங்கள் முன்பு தன் ஆஸ்ரம பெண்களை பலாத்காரம் செய்ததற்கு தற்பொழுது 2017இல் இருபது ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது வரவேற்க்க தக்கது. அந்த நீதிபதிகளும் அதனை விசாரித்த அதிகாரிகளும் பாராட்டிற்கு உரியவர்கள்.
பரிமேலழகர் உரை
[அஃதாவதுகுடிகள் அஞ்சுவதும் , பகுதி அஞ்சுவதும் தான் அஞ்சுவதும் ஆயதொழில்களைச் செய்யாமை . அவை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்படுதலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது.]
'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
(தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.).
மணக்குடவர் உரை
குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.
மு.வரதராசனார் உரை
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை
தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.
best site to get deeper meaning of thirukkural in both language eng & tamil
ReplyDelete