Skip to main content

Posts

Showing posts with the label புலவி

நீரும் நிழலது இனிதே புலவியும்

  குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நீரும் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை. நிழலது - நிழல் -  சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய். இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு. வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.) வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால் வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே - இடத்தே இனிது -  இனிமை  - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் (வெயிலின்...

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

  குறள் 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. நொந்து-தல் - nontu-   5 v. intr. நந்து¹-.[K. nondu.] To perish; அழிதல் நூறு கோடிபிரமர்க ணொந்தினார் (தேவா. 1218, 3).  ;; 5 v. tr. நந்து²-.cf. நுந்து-. To trim; தூண்டுதல் நொந்தாத செந்தீ(பதினோ. காரை திருவிரட். 13).   நொந்தார் - பகைவர் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அறியும் - அறிதல் -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். காதலர் - கணவன், தோழன், மகன் ...

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

  குறள் 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை. ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி. துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. புணர்வது - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள். நீடுவது - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல். அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்...

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

குறள் 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் துனியும் - துனி -  வெறுப்பு; சினம்; புலவிநீட்டம் (ஊடல்மிகுதி); பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை. புலவியும் -  புலவி -  ஊடல்; வெறுப்பு. இல்லாயின் - இல்லையானால் காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. கனியும் - கனி -  பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம். கருக்காயும் - கருக்காய் - பிஞ்சு; பதர்நெல்; எள்ளுகொள்ளுமுதலியவற்றின்மாறு. அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை முழுப்பொருள் மிகுதியான ஊடலான துனியும், செல்லமான சிறிய ஊடலான புலவியும் காதலில் இல்லாமல் போனால் காமத்தில் (புணர்தலில் /கூடற்கின்பம்) அளவுக்கு மிகுதியாய் பழுத்து புளிக்கும் கனியை போன்றும் துவர்கும்  பிஞ்சை  (இளங்காய்) போன்றும் பயனற்றதாக இனிய/நற் சுவையற்றதாக ஆகிவிடும்.  ஒப்புமை ”இன்ன துனியும் புலவியும...

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

குறள் 1305 நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் தகை -  அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. நல் - நல்ல; nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச). நலத்தகை - மிகுந்த அழகும் குணமும் அன்பும் பொருத்தமும் உடைய நல்லவர்க்கு - நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்; காண்க:நல்லபாம்பு. ஏஎர் - அழகு புலத் -  pula   VII. v. i. be bashful towards the husband, feign dislike, பிணங்கு; 2. utter ravings as a delirious lover, ஊடு. புலத்தகை - ஊடல் கொள்ளும் பண்பு பூ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலை...

ஊடி யவரை உணராமை வாடிய

குறள் 1304 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் ஊடல் -   ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல் ஊடியவரை - ஊடல் செய்த தலைவன் உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல் ; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் உணராமை - அறியாமல் வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல். வள்ளி - கொடிவகை; நிலப்பூசணி; தண்டு; கொடிபோன்றுதொடர்ந்திருப்பது; கைவளை; தொய்யிற்கொடி; காண்க:வள்ளித்தண்டை; முருகக்கடவுளின்தேவி; குறிஞ்சிநிலப்பெண்; முருகக்கடவுட்குமகளிர்மனநெகிழ்ந்துவெறியாடுதலைக்கூறும்புறத்துறை; குறிஞ்சிமகளிர்கூத்துவகை; சந்திரன். முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்...

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்

குறள் 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் புலவி - pulavi   n. புல¹-. 1. Sulks;bouderie; ஊடல். புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378). 2. Displeasure; dislike;வெறுப்பு. அலந்தை -  துன்பம்; நீர்நிலை அலந்தாரை - துன்பம் தந்தவர் அல்லல் - துன்பம் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய்து  - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் -  தன்மை அறிந்து தம்மைப் - தம் - ஒருசாரியைஇடைச்சொல்; புல -  pul   க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To decline a husband's embraces through bashfulness, or feigned displeasure, பிண ங்க. 2. To be displeased, and keep apart, for a time, as a husband and wife, மனை வியுங்கொழுநனும்வேறுபட. 3. To complain of, to utter ravings, as a delirious lover, ஊட. புலந்தாரைப்...

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

குறள் 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் புலவி - ஊடல்; வெறுப்பு புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல். புல்லாது - தழுவாது, புணராது, பொருந்தாது, வரவேற்றாது, நட்புச்செயாது இரா - இரவு அப் - அந்த புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல். புலத்தை - அந்த மன வேறுபாட்டை; ஊடலை, துன்புறுத்தலை அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல். உறும் - கொள்ளும் அல்லல் - allal   n. prob. அல்லு-. [T. allari,K. alla, M. allal.] Affliction, distress, evil, misfortune, privation; துன்பம் அழிவின்க ணல்லலுழப்பதா நட்பு (குறள், 787). நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. காண்கம் - காண்போதும் சிறிது - சிறிது காலம்; ciṟitu   n. சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது.இறப்பச் சிறிதென்னாது (நால...

உப்பமைந் தற்றால் புலவி

குறள் 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது  மிக்கற்றால் நீள விடல். [காமத்துப்பால், கற்பியல்,  புலவி] பொருள் உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல், இனிமை, பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு அமைந்து -  அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. (கந்தபு.உருத்திரர்கே. 6.)--v. Is like, of the same kind,impers. sing. finite appellative verb; அதுபோன்றது.--part. An adverbial word of comparison; ஒர் உவமவுருபு (தொல். பொ 286, உரை ) அமைந்தற்றால் - உணவின் அளவிற்கேற்ப / சுவைக்கேற்ப அமைவது போன்றது புலவி - ஊடல்; வெறுப்பு; பிணக்கு அது - அதானது சிறிது - சிறிய அளவு,சிறுமை, சின்ன மிக்க - மிகுந்த; உயர்ந்த. மிக்கற்றால் நீள - நெடுந் தொலைவாக; நெடுங் காலமாக; வெகு தொலைவில். விடல் -  முற்றும் நீங்குகை (Leaving;renunciation) ; ஊற்றுகை; குற்றம். முழுப்பொருள் நாம் அன்றாடும் வாழ்வதற்கு உணவை உண்ணுகிறோம். உண...

ஊடல் உணங்க விடுவாரோடு

குறள் 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. [காமத்துப்பால், கற்பியல், புலவி] பொருள் ஊடல்  - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு உணங்க-  உணங்கு-தல் - uṇaṅku-   5 v. intr. [K.oṇagu, M. uṇaṅṅu.] 1. To dry, as grain,vegetables or fish; உலர்தல் தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154). 2. To become gaunt,as the body by fasting; to be emaciated; tobecome reduced; மெலிதல் ஊடலுணங்க விடுவாரோடு (குறள், 1310). 3. To be dejected in mind;to languish; சிந்தை வாடுதல் உணங்கிய சிந்தையீர்(கந்தபு. மோன. 21). 4. To shrink, shrivel; சுருங்குதல் உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 5.To pine away, droop, become listless; செயலறுதல் உணங்கிடுங் கரணமென்னில் (சி. சி 4, 7).   உணங்கல் - உலர்ந்தபொருள்; உலர்த்தியதவசம்; வற்றலிறைச்சி; உணவு; உலர்ந்தபூ. உணங்கு - உலரு, வாடு, சுருங்கு, சிந்தைவாடு விடுதல் -...