கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
குறள் 870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
[பொருட்பால், நட்பியல், பகைமாட்சி]
பொருள்
கல்லான் - கல்வியில்லாதவன்; கற்காதவன்; கல்லாத மூடன்
வெகுளும் - வெகுளுதல் - சினத்தல்; பகைத்தல்
சிறு - சிறிய - ciṟiya சிறு, (adj.) (சிறுமை) little, small, inferior, சின்ன, Note:- Before a substantive beginning with a vowel சிறு becomes சிற்று.
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை
எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்
ஒல்லானை - ஒல்லாதவர் - பகைவர்
ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல்.
ஒல்லாது - பொருந்தாது ; உடன்படாது; தகாது, இயலாது, ஆற்றாது
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.
முழுப்பொருள்
கற்காதவனை சிறுமையான செய்கைகளுக்கு எல்லாம் சினந்து எழுவோரை பகைத்து ஒரு பகைவர் இருந்தால் அப்பகைவரை என்றும் புகழ் சேராது. அதாவது கற்காதவன் சிறுமையான செய்கைகளுக்கு சினப்பவன் தகுதியற்றவன் மாட்சிமை அற்றவன். அத்தகையவனை பகைப்பதுக்கூட பகைவருக்கு மாட்சிமை அற்ற செயலாகும்.
”உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்” ஏனெனில் உன் எதிரியின் பலம் வைத்து தான் உனது பலம் என்னவென்று கூறமுடியும். ஆதலால் பலமற்றவனை எதிர்த்து நின்றால் எதிர்த்து நின்றவனுக்கு பலம் இல்லை என்று ஆகிவிடும். ஆதலால் பலம் அற்றவனை எதிர் நின்றால் மாட்சிமை கிடையாது.
கற்காதவனை சிறுமையான செய்கைகளுக்கு சினப்பவன் மாட்சிமையற்றவன். அத்தகையவனை பகைவர் கூட ஒரு பொருட்டாக கருதி பகைக்கொள்ள மாட்டார்கள். இத்தகையவனிடம் பகைக்கொள்வது இழுக்கு என விலகி இருப்பார்கள்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கல்லான் வெகுளும் சிறுபொருள் ஒல்லானை - நீதிநூலைக் கல்லாதானோடு பகைத்தலான் வரும் எளிய பொருளை மேவாதானை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - எஞ்ஞான்றும் புகழ் மேவாது. (சிறு பொருள் - முயற்சி சிறிதாய பொருள். நீதி அறியாதானை வேறல் எளிதாயிருக்கவும், அது மாட்டாதானை வெற்றியான் வரும் புகழ் கூடாது என்பதாம், ஆகவே இச்சிறிய முயற்சியாற் பெரிய பயன் எய்துக என்றவாறாயிற்று. இதற்குப் பிறரெல்லாம் அதிகாரத்தோடு மாறாதன் மேலும் ஒரு பொருள் தொடர்பு படாமல் உரைத்தார். இவை மூன்று பாட்டானும் அதனினாய பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
கல்லாதானுமாய், வெகுளியுடையனுமாய்ச் சிறு பொருளனுமாகிய பகைவனை எல்லாநாளும் ஒளி பொருந்தாது.
மு.வரதராசனார் உரை
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.
Comments
Post a Comment