Thursday, May 7, 2020

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

குறள் 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.
செய்யாதுஇயற்றாமல் இருத்தல்

இவறி - கைவிடாது; ஆசைப்பட்டு, விரும்பி
இவறியான்  -  கைவிடாதவர்; ஆசைப்பட்டோர்.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

உயற்பாலது - உயர்தல் - uyar-   4 v. intr. [M. uyar.] 1.To rise, as water; to ascend, as a body in theair; to move toward the meridian, as a heavenlybody; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 2. To be high, elevated,tall, lofty; உன்னதமாதல். உயர்ந்த மலை 3. Togrow, increase, expand; வளர்தல் நெல்லுயரக்குடியுயரும். 4. To be excellent, exalted, eminent,dignified, superior; மேன்மையுறுதல். உயர்ந்தவர்க்குதவிய வுதவி (கம்பரா. வேள் 35). 5. To vanish,disappear, to be removed; நீங்குதல் இனிவரினுயருமற் பழியென (கலித். 129, 17). 

உயர்-தல் - உயர்ச்சி உயரம்; 

அன்றிக் - அல்லாமல்

கெடும் - கெடும்; கேடு விளைவிக்கும்
கேடு - தீயவை, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை

முழுப்பொருள்
செல்வம் நிலையில்லாதது என்பதை நிலையாமை அதிகாரத்தில் பார்த்தோம். அத்தகைய செல்வத்தை ஒருவர் சேர்த்துவைத்து இருப்பர். அல்லது அவரது பெற்றோர்கள், முன்னோர்கள் சேர்த்துவைத்து இருப்பர். ஒரு நிர்வாகத்திலும் பல ஆண்டுகளாக பாடுபட்டு லாபத்தை சேர்த்துவைத்து இருப்பர். அரசாங்கமும் நாடுகளும் அதுபோல செல்வத்தை சேர்த்து வைத்திருக்கும். 

ஒருவர் செயல்புரியாது (சோர்ந்தோ அல்லது சோம்பி) இருந்தால் - அதாவது செயலை செய்ய - தவறினால் அவன் வறியவனாவான். 

ஏனெனில் அவனுடைய செல்வம் பெருகாமல் குன்றிவிடும். இக்காலகட்டத்தில் பணத்தை வீட்டில் வைத்தால் நமது செலவுகளுக்கு ஆட்பட்டு குன்றி விடும். அதுவே வங்கிகளில் நிரந்தர வைப்பில் (Fixed  Deposit) வைத்தால் குறைந்தது அதற்கான வட்டியை ஈட்டி அது வளரும் (ஆராய்ந்து நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்தால் லாபம் தரும்). ஆனால் வங்கியில் போடுவது கூட செயல். வங்கியில் வைப்பது ஒருவித தற்காப்புச் செயல்தான். ஆனால் அன்றாட செலவுகளுக்கு ஒருவர் செல்வம் ஈட்டியே ஆக வேண்டும். இல்லையேல் சேர்த்துவைத்த செல்வத்தைச் செலவுச் செய்ய நேர்ந்து ஒருகட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து வறியவர் ஆகிவிடுவார். 

இது பொருட்செல்வத்துக்கு மட்டும் பொருந்துவது அல்ல. அறிவிற்கும் பொருந்தும். ஒரு மருத்துவர் 10 ஆண்டுகள் படித்துவிட்டு ஒரு சில வருடம் செயல்புரியாமல் இருந்தால் அவர் படித்ததில் பலவற்றை மறந்துவிடுவார். இது எத்தொழிலுக்கும் பொருந்தும். செயல்புரிந்து கொண்டு இருந்தால் தான் நாம் பெற்ற அறிவைக்கூட பாதுகாக்க முடியும். இல்லையேல் குன்றும்.  மேலும் அறிவை தன்னிடம் மட்டுமே வைத்துக்கொண்டால் அது குன்றிக்கெடும். அது பிறரிடம் பகிர்ந்துக்கொண்டால் நமக்கும் நமது கற்றலில் உள்ள கசடுகள் தெரியும் தெளிவுப் பிறக்கும் தன்னபிக்கை கிடைக்கும். அறிவும் வளரும். நாம் பிறரிடம் பகிரும் பொழுதும் நாம் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் நாம் பகிர்ந்தால் தான் மற்றவர்கள் நம்மிடம் பகிர்வார்கள். பிறரிடம் இருந்து கற்கும் பொழுது நமது அறிவும் வளரும். 

பொதுவாக பள்ளிநாட்களிலும் கல்லூரிகளிலும் படிக்கும் பொழுது மாணவர்கள் தங்களது பாட குறிப்புகளை, பயிற்சி பிறருடன் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களது பள்ளியோ (அல்லது tuition centre) அதனை பிறருடன் பகிரக்கூடாது என்பர் அல்லது மாணவர்களே அதனை ரகசியமாக காப்பர். அப்படி இல்லாமல் உண்மையாக கற்கும் ஆர்வம் இருப்பவர்களிடம் பகிர்ந்தால் அவர்களுடன் சேர்ந்து நாமும் கற்கலாம். அறிவை பூட்டி வைத்து என்ன ஆகப்போகிறது. ஏனெனில் நாம் இந்த ரகசிய பாடங்களை மற்றவர்களிடம் பகிர்ந்தாலும் உண்மையில் நூறில் பத்துப்பேர் தான் படிக்க துவங்குவார்கள். அதில் ஒன்று அல்லது மூன்று பேர் தான் படிப்பார்கள்.

ஆதலால் செயல் புரியாது இருப்பது குற்றம் என்கிறார் திருவள்ளுவர் 

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது ஔவையார் வாக்குதான்.

 நாலடியார் இக்கருத்தை அழகாக இவ்வாறு செல்வம் நிலையாமை என்னுமதிகாரத்தில் கூறுகிறது:
“உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்
துன்னருங் கேளிர்துயர் களையான் – கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ
இழந்தா னென்றெண்ணப் படும்” (நாலடி 9)

மேற்கண்ட வெண்பாவில் அஆ என்பது ஒரு சீராகக் கொள்ளப்படும், வெறும் “நிரை” என்றிராமல். அஆ, இஈ போன்றவை விட்டிசைக்கும் சீர்கள் என்பதை, “அஇ உஎ ஒஇவை குறிய மற்றைய” என்ற சூத்திரப்பாடல் குறிக்கிறது. நாலடியார் பாடலின் கருத்தும் இன்றியமையாதஉணவுகளைஉண்ணாமலும், மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும்,  இரப்பவர்க்குஉதவாமலும், ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, கருதப்படுவான்.

கார்காலப்படலத்தில் 108 வருகிற கம்பரின் இராமகாதைப்பாடலொன்று, 
“மேகா மலைகளின் புறத்து வீதலான்
மாகயா றியாவையும் வாரி யற்றன
ஆகையாற் றாககவிழந்து அழிவினன் பொருள் 
போகவாறொழுகலான் செல்வம் போன்றவே” 
என்று சொல்வது இதைத்தான்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
(செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படு மவற்றைச் செய்து கொள்ளாது. அதன்கண் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம் பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.

மு.வரதராசனார் உரை
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா உரை
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

Thirukkural - Management - Corporate Social Responsibility
Wealth with a person who spends that neither on himself nor on charity or philanthropic activities will disappear without any use. Wealth accumulates wealth. There is joy in sharing. The practice of sharing wealth with others brings back more wealth.

Use your organization's wealth to improve the lives of people so that that practice will add further wealth to your organization. This practice will put your organization on virtuous cycle since the shared wealth will be further useful to the society as suggested by Valluvar in Kural 437.

A miser's wealth unused does not increase
But is lost

When the society in which your business operates prospers, your business will prosper further. 

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

குறள் 425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு
[பொருட்பால், அரசியல், அறிவுடைமை]

பொருள்
உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

தழீ  - ஓர்ஒலிக்குறிப்பு (clamoming, rattling, roar, as of a drum)

து - இயைவு -  இணக்கம்; பொருத்தம் சேர்க்கை
இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை

மலர்தலும் - மலர்தல் - பூவின்மொட்டவிழ்தல்; பரத்தல்; மனமகிழ்தல்; தோன்றல்; எதிர்தல்; அகலுதல்; மிகுதல்

கூம்பல் - குமிழமரம்
கூம்பலும் - கூம்புதல் குவிதல்; ஒடுங்குதல்; ஊக்கம்குறைதல்.

இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

முழுப்பொருள்
இவ்வுலகம் (உயர்ந்தோர்) அறிவினை (அறிவுடையோரை) நட்பாக இனைத்துக்கொள்ளும். அதுவே அறிவின் பெருமையாகும். உயர்ந்தோர்தம் உறவே ஒருவரை உயர்வில் சேர்ப்பதாகும். அதுவே அறிவுடையோர்தம் செய்கையுமாம். அவ்வறிவினால் ஏற்பட்ட நட்பு மலரினை போன்று துவக்கத்தில் மலர்ந்து மகிழ்ச்சியை தந்து பின்பு வாடி வருத்தத்தை தருவது அன்று. நேரத்திற்கு ஏற்றார்போல் மாறாதது. இவ்வறிவு என்றும் சீராகவே சமநிலையுடன் இருக்கும். 

ஔவையின் மூதுரைப் பாடல்.
நல்லோரைக் காண்பதுவும் நன்றே
நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உலகத்தோ டொட்ட ஒழுகல்” (குறள் 140)
“தேசத்தோ டொத்துவாழி” 
“நாடொப்பனசெய்” (ஆத்திசூடி)

இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது. ” என்றது.

இளம்குரங்குகள் அதை நோக்கின. கும்போதரன் “முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. “ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. “ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அழிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து “மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. “ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி “ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.

மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன. பீதகர்ணி தொடர்ந்தது “அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் “ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. “அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

“ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. “ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் “மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. “விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.”

“அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.”

சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது “பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி “எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. “இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.”

அதன் குரல் ஓங்கியது. “இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

“அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன். “நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.”

“இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.

பரிமேலழகர் உரை
உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது

மு.வரதராசனார் உரை
உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.

சாலமன் பாப்பையா உரை
உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

Wednesday, May 6, 2020

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா

குறள் 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
பிழைத்து - பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.

உணர்ந்தும்  - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை

சொல்லார் -சொல்லமாட்டார்கள் 

இழைத்து - நுட்பமாக
இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்

உணர்ந்து - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல்

ஈண்டிய - நிறைந்த

கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்

அவர் - அவர் 

முழுப்பொருள்
கேள்வி ஞானம் ஒரு மிக சிறந்த செல்வம். அதனை பிறரிடம் இருந்து நாம் பெறுகிறோம். ஆனால் அக்கேள்வி பிழையாக உணர்ந்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. அப்படி பிழையாக உணர்ந்ததை வெளியே பேசினால் நமது பேதைமை வெளிப்பட்டுவிடும். ஆனால் கேள்வியை பெற்றவர் கேள்வியோடு நில்லாமல் நுணுகி ஆராய்ந்து தன்னிடமோ அல்லது பிறரிடமோ தருக்கம் செய்து அல்லது நூல்களை ஆராய்ந்து கற்று தனது அறிவை செம்மைப் படுத்துவார் எனில் அவர் வெளியே பிழைப்பட பேசி தனது பேதைமையை காட்டமாட்டார். 

இன்றைய காலகட்டங்களில் பல சொற்பொழிவுகளை பல தளங்களில் (உதாரணமாக Whatsapp, Youtube, Facebook) அரைகுறையாக கேட்டுவிட்டு வெளியே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் பேசுபவர்கள் மிக மிக அதிகம். அவரிடம் அவர் கேள்வியாக கேட்டதை தாண்டி ஒரு விஷயம் அதிகம் கேட்டாலோ அல்லது ஒரு புள்ளிவிவரம் கேட்டாலோ கூறமாட்டார். ஒன்றும் இல்லை உதாரணமாக கோவிலில் ஆகம முறைப்படி பூஜை செய்யவில்லை என்று நொட்டை சொல்லுவோரிடம் எத்தனை ஆகம முறைகள் உள்ளன என்று கேட்டால் கூட கூற திராணி அற்று இருப்பார்கள். இவர்கள் குறைக்கூடம். கூத்தாடத்தான் உதவும். 

கேள்வியாக ஒரு செய்தியை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அது என்றோ ஒருநாள் நமக்கு உதவும். அல்லது பிறருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவும் உதவும். ஆனால் ஆராய்ந்து அறிந்துக்கொள்ளாமல் அதில் வித்தகன் போன்று பேசினால் நம் பேதைமை வெளிப்பட்டுவிடும். 

மேலும் கேள்வியாக பெரும் அறிவை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமல் தன்னுடைய அறிவையும் பயன்படுத்தி ஆராயவேண்டும். "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பது கேள்விக்கும் பொருந்தும். அப்பொழுது தான் பிழையாக  கற்றிருந்தால் அவற்றை நீக்க முடியும்.

சொல்லிக்கொடுக்காமலேயே, ஒர் இசைச்சூழலில் வளரக்கூடிய சிலருக்கு இசைத் தானாகவே அவர்களிடத்தில் ஊறிவிடுகிறது. கல்வி கற்பிக்கப்படும் இடங்களில் இருப்பவர்களும் கூட தாமாகவே சில செய்திகளை அறிந்திருப்பதை பார்க்கலாம்.

“கல்வியில் பெரியன் கம்பன்” என்ற வழக்கு இருப்பதினாலேதான், “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வழக்கும் வந்தது. இந்த வழக்கிலே காணவேண்டியது,  அஃறிணைப் பொருளுக்கும் அறிவு இருக்கும், கற்றவர்களை அணுகி இருந்தால் என்பதுதான்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உறழா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியோர்வாய்ச் சொல்” (பு.வெ.167)


இந்திய மரபினைப் பொறுத்தவரை கற்றலுக்கான இடத்தினை விடக் கேட்டலுக்கான இடம் முக்கியமானது.கற்றலைக் கொண்டு கேட்டலை நிலைநிறுத்தும் பணியையே மரபு முன்னர் பெரும்பாலும் செய்தது.கேட்டல் என்பது தன் தரப்பினைப் பற்றிய அனைத்தும் அறிந்த தகுதியுடைய சீடனிடம் கற்றறிந்த குரு உரைப்பது.கேட்பவனின் தகுதியும் சொல்பவரின் தகுதியும் சரியான பாதையினைத் திறந்து விடும். மாறாகக் கற்றல் என்பதோ அதைச் செய்ய முயலும் அனைவருக்குமான பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பது.அதற்கான நெறிமுறைகளை மட்டுமே கொண்டது.கற்றலுக்குத் தேவையான தகுதிகள் கேட்டலுக்குத் தேவையான தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அறிவு என்பதே கேட்டலின் வழியாகவே நிலைநிறுத்தப்பட்ட காலம் சென்ற நூற்றாண்டில்தான் மாறியது.அதுவரை கேட்டலின் வழியாக வந்தடைந்த அறிவினைக் கற்றலின் வழியாக பயில முயன்று இரண்டுக்கும் உரிய வேறுபாடுகளைக் கைக்கொள்ளாமல் சொற்பொருட்பேதத்தால் அதன் மாளாச் சுழலுக்குள் சிக்கிய நபர்கள் உண்டு.

பரிமேலழகர் உரை
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.

மு.வரதராசனார் உரை
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

சாலமன் பாப்பையா உரை
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

English Meaning - As I taught a kid - Rajesh
Listening and learning from others is important and valuable. At the same time, when we listen and learn from others, we might have learnt it wrongly or we might have been taught wrongly. Hence, irrespective of what we have learnt, we will not talk or teach something wrong/stupid to others and expose our ignorance/stupidity. Hence, when we learn from others, we should go beyond that. We should analyze it, question it, read it, verify the facts if required, debate and achieve the true understanding and sharpen our knowledge. Because that is the process of listening from others and learning.

Questions that I ask to the kid
1) What should you do and not do after you listen and learn from others? Why?
2) Can you trust what you learn from others by listening? If so, what should you do and what you should not do? Why?

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

குறள் 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
(For English meaning scroll to the bottom of this post)

பொருள்
நுண் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம்.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

நுழை - சிறுவழி; பலகணி; குகை; துளை; நுண்மை; புத்திநுட்பம்.

புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்; பொறி; பொறியுணர்வு; அறிவு; கூர்மதி; துப்பு; நூல்; வேதம்.

இல்லான் - illāṉ   n. இல்². Poor man, onein want; வறியவன். இல்லானை யில்லாளும் வேண்டாள் (நல்வ. 34). 

எழில் - அழகு; இளமை; வண்ணம்; தோற்றப்பொலிவு; உயர்ச்சி; பருமை; குறிப்பு; சாதுரியவார்த்தை; வலி.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

மண்நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.

மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

புனை - அழகு; பொலிவு; அலங்காரம்; அணிகலன்; கால்விலங்கு; சீலை; புதுமை; நீர்

பாவை - பொம்மைபோன்றஅழகியபெண்; பதுமை; அழகியஉருவம்; கருவிழி; பெண்; குரவமலர்; காண்க:பாவைக்கூத்து; நோன்புவகை; திருவெம்பாவை; திருப்பாவை; இஞ்சிக்கிழங்கு; மதில்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது

முழுப்பொருள்
கூர்மையாக நூல்களை நுணுகி ஆராய்ந்து நுட்பமான அறிவு இல்லாதோர் மண்ணினால் செய்து வண்ணம் பூசி காட்சிக்கு வைக்கப்பட்ட பொம்மை ஆகும். அப்பொம்மைக்கு வேறு பயனேதுமில்லை. அது ஒரு உயிர் அற்ற ஜடம். 

இது கல்லாதவர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அதே போல் அலங்காரத்திற்காக படித்தவர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக பி.எச்.டி (PhD), எம்.பில் (M.Phil), எம்.பி.ஏ (MBA), மற்றும் இதர பல படிப்புகளை வெறுமென பட்டத்திற்காக படித்துவிட்டு அப்பட்டங்களை வெளியே தகவல் பலகையில் அலங்காரத்திற்காகவும் வெளியே கர்வத்திற்காக கூறிக்கொள்ளவும் கூறிக்கொள்வதில் எப்பயனும் இல்லை. நுணுகி ஆராய்ந்து படித்து அதற்கு ஏற்றவாரு செயல்புரிந்தால் தான் அதற்கு பயன்.  

முக்கியமான இரண்டு விஷயங்கள் 
1. அலங்காரத்திற்காக படிக்காமல், நுணுகி ஆராய்ந்து பெறுவதே அறிவாகும் 
2. கல்லாதவர் மண்ணினால் செய்து வண்ணம் பூசப்பட்ட பொம்மை. அலங்காரத்திற்கு மட்டுமே உதவும். வேறு பயனேதுமில்லை.

நாலடியார் பாடல் ஒன்று புற அழகு அழகல்ல என்றும் கல்வியே அழகென்று கூறுகிறது:
“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு.” (நாலடியார் 131)

சிறுபஞ்சமூலம், சங்ககாலத்தையொட்டிய பதினெண்கீழ்கணக்கின் படைப்பு, இக்குறளை அடியொட்டியிடும் பாடலிது:
மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு (சிறுபஞ்சமூலம் 36)

எளிமையான சொற்களின் அமைப்பில் சொல்லப்பட்ட இப்பாடலே கல்வி தரும் வனப்பைச்சொல்லி, நூலறிவின்மையை வனப்பல்ல என்கிறது.

மற்றொரு கீழ்கணக்கு நூலான ஏலாதியிலும் இக்கருத்து சொல்லப்படுவதைப் பார்க்கலாம்
இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி 74)
இரண்டு பாடல்களும் ஒரேபோல் இருப்பதைப் பார்க்கையில் ஒரு புலவரை அப்படியே மற்றொருவர் பிரதி எடுத்தாற்போல இருக்கிறது. ஒருவரின் நுண்மாண் நுழைபுலமும், மற்றொருவரின் களவாடலும் தெரிகிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம் - நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண், மாண் புனை பாவை அற்று - சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.

மு.வரதராசனார் உரை
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

English Meaning - As I taught a kid - Rajesh
A person who has understood the concept and has gained knowledge can use the knowledge for something. A person who has a diploma but hasn't learnt it well or forgotten what they learnt is similar to a clay doll and his or her diploma is like doll in a showcase.

Questions that I ask to the kid
How should we study? 
What comes to your mind when you see a well dress doll?
Does a Degree certificate hold a value if you didn't practice what you studied?

Tuesday, May 5, 2020

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).

உடையவர் - ஆன்மாக்களை அடிமையாக உடையவர்; சுவாமி ஆன்மார்த்தலிங்கம்; செல்வர் இராமானுசர்;

உடையவர் - uṭaiyavar   n. உடைமை Hon. pl. 1. Master, lord; சுவாமி உடையவர்கோயில் (பெரியபு. திருஞான. 664). 2. Šiva-liṅgaused in private worship; ஆன்மார்த்த லிங்கம் 3. Rāmānuja, the Guru of Šrī Vaiṣṇavas; இராமானுசர் (ஈடு, 10, 7, 1.) 

உடைமை - உடையனாகும்uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58).  தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை.

முன் - முன்பு; முன்னே; இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.

இல்லார் - இல்லாதவர்

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

ஏக்கற்றும் ஏக்கறுதல் - இளைத்துஇடைதல்; ஆசையால்தாழ்ந்துநிற்றல்; விரும்புதல்.

கற்றார் - கற்றவர்கள் ;சான்றோர்

கடையரே - கடையர் - கீழானவர், இழிந்தோர்; மருதநிலத்தவர்; வாயிற்காப்போர்; பள்ளருள்ஒருவகுப்பார்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி

கல்லாதவர் - கற்காதவர்

முழுப்பொருள்
செல்வந்தர்கள் முன்பும் கொடையாளிகள் முன்பும் தன் தேவைக்காக யாசகம் செய்யும் வறியவர்கள் போல அறிவிற்சிறந்த சான்றோர்களிடம் கற்க விரும்பி ஆசையாக அவர்களிடம் தாழ்ந்து/பணிந்து நின்று கற்பவர் கற்றார் எனப்படுவார்கள். மாறாக விரும்பியும் பணிந்தும் கற்காதவர்கள் கீழோர் ஆவர். 

கற்காதவர்கள் யாசித்தாவது கற்க வேண்டும். அப்படி தான் தன்னுடைய அறியாமை என்னும் இருளில் இருந்து வெளிவர முடியும். அப்படி கற்கவில்லையென்றால் அறியாமை என்னும் இருளில் துன்பப்படும் கீழோர் எனவே கருதப்படும்.

மேலும் எல்லா பொதுக்கல்வியும் சராசரி ஞானத்தையே அளிக்கின்றன. தற்கல்வி மட்டுமே தனியான ஞானத்தை அளிக்கிறது. தற்கல்வி என்பது பொதுக்கல்விக்கு மேலதிகமாகவே கற்கப்படும். ஒருவரின் பள்ளிப்படிப்பு பட்டப்படிப்பு படிப்பது பொதுக்கல்வி. ஓர் குருவிடமிருந்து அல்லது நீங்களே முயன்று பலவற்றை கற்றுக்கொள்வது தற்கல்வி. பொதுக்கல்வி பெற்று அதன் மேல் கூடுதல் தேடல்கொண்டுதான் நாம் தற்கல்வியைச் சென்றடைகிறோம்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கினை நினைவில் கொள்ளவும். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
(உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்.

இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

மு.வரதராசனார் உரை
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா உரை
செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

English Meaning - As I taught a kid - Rajesh
When in extreme poverty, one would beg for food from people who can provide food. When a person (irrespective of any factors such as age, experience, titles etc) is having knowledge, experience, ideas, suggestions, etc then listen to and learn from him/her as though you don't have the knowledge. All it matters is 1) having ears to listen 2) having the appetite to learn. Such persons are learned person or learners. However, the person would be considered stupid if he/she lives within his/her shell (and in darkness) and has an attitude of why should I learn from the other person. Also, remember schools and universities can only teach a limited knowledge. Self education through reading, listening to people, debates, discussions only would help a person for the long run.

Questions that I ask to the kid
How should knowledgeable people learn? When is a literate people is considered stupid ?

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

குறள் 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

ஆல்  - அகற்சட்டி; மரவகை; நீர் வெள்ளம் கார்த்திகை நஞ்சு ஆமெனல்; வியப்பு இரக்கம் தேற்றம்இவற்றைக்குறிக்கும்இடைச்சொல்; ஓர்அசைநிலை; மூன்றாம்வேற்றுமையுருபு; தொழிற்பெயர்விகுதி; எதிர்மறைவியங்கோள்விகுதி; எதிர்காலவினையெச்சவிகுதி.

சொலால் - சொற்களால்

ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல்

அளிக்க - அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல்

வல்லாற்குத் - வல்லார் - வலிமையுடையவர்; திறமையுள்ளவர்; வலுக்குறைந்தோர்; திறமையில்லாதவர்.

தன் - தன்னுடைய

சொலால் - சொற்களால்

தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

கண்டுகாணுதல் - கவனமாய்ப்பார்த்தல்.
அணைத்து - aṇai-   11 v.tr. caus. of அணை¹-.1. To join, put close to, as earth to a tree;அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான். 2.To embrace, hold, clasp in the arms; தழுவுதல்அண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும் (கல்லா. 44). 3.To tie, fasten, as animals; கட்டுதல் களிறணைக்குங் கந்தாகும் (நாலடி. 192). 4. To quench, extinguish; அவித்தல் விளக்கணைத்தல். 5. To tie up ina bunch; கூட்டிமுடித்தல் அணைத்த கூந்தல் (திருமுரு.200). 6. To produce; உண்டாக்குதல் மம்மரேயணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).

இவ் - இந்த

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
பிறர் வாடா இனிய (கனிவான) சொற்களைப் பேசித் தேவையானவர்களுக்கு பொருட்களையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல அரசருக்கு/தலைவருக்கு தன்னுடைய சொற்களை போல் இவ்வுலகம் தான் கருதியதுப் போல் புகழுடன் அமையும். ஏனெனில் இனியவராகவும், கொடை தன்மை பெற்றவராகவும் இருக்கும் அரசர்/தலைவர் சொல்லை கேட்டு அதன் படி நாட்டிற்கு உழைத்து முன்னேற்ற மக்கள் தயாராக இருப்பர். ஆதலால் நாடு செழிப்படையும். அதுவே அரசர்/தலைவர் விரும்பியது.

“செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற வாக்கின்படி, ஆள்வோர்க்கு தங்கள் குடியெல்லோருமே செழுங்கிளையென்பதும் (உறவினர்கள்) அவர்களை காப்பாற்றவேண்டியது (ஈகையினால்) ஆளுமையாகிய செல்வம் படைத்தவர்களுக்கும் கடனே.

கம்பராமாயணப்பாடலொன்றில் (மந்தரை சூழ்ச்சிப் படலம்:18), கம்பன் அரசனைப்பற்றி இவ்வாறு கூறுகிறான்:
இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?
இப்பாடலின் முதல்வரிகளே இக்குறளின் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்

ஈயுநர் இன்மொழிக் கம்பலும்” (பெருங் 2.2:75)
இன்னுரை அமிழ்தமொசு மன்னவன் ஈத்து” (பெருங் 4.3:31)
.....இனிய கூறல்
மெய்சொலல் வழங்கல்” (கம்ப.அரசியல்.31)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.).

மணக்குடவர் உரை
இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.


மு.வரதராசனார் உரை
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

Monday, May 4, 2020

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்

பரியினும் -  வருந்தினாலும்

ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.

ஆகாவாம் - ஆகாது

பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.

அல்ல - இல்லை ;  அது மட்டும் அல்ல

உய்த்துச் - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்; சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்; அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.

சொரியினும் - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.

போகா - போகாமல் - நீங்காமல்

தம - தமக்கு என்று ஊழால் விதிக்கப்பட்ட செல்வமானது

முழுப்பொருள்
நாம் எவ்வளவு வருந்தி செல்வம் (உடல் ஆரோக்கியம் உட்பட) ஈட்டி வைத்தாலும் அதனை எவ்வளவு பாடுபட்டு காத்தாலும் அது நம்மிடம் தங்கவில்லையென்றால் அதற்கு நமது ஊழ் காரணமாக இருக்கலாம் அல்லது அச்செல்வத்தின் கணிக்க முடியாத இயல்பாகவும் இருக்கலாம். அதுப்போல நாம் எவ்வளவு பாடுபட்டலாம் நாம் வெளியே தள்ளினாலும் நம்மை விட்டு நீங்காத செல்வங்களும் இருக்கலாம். அதற்கும் ஊழ் அல்லது செல்வத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.

ஆதலால் செல்வம் இழந்தாலோ செயல்களில் தோற்றாலோ அதற்கு நாம் வருந்தி கழிவிரக்கத்தில் உழன்றுக்கொண்டு இருக்க கூடாது. ஏனெனில் ஊழிற் சரணடைவது கோழைத்தனம்.

ஊழின் செயல்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஆதலால் ஊழை ஒரு பொருட்டாக எண்ணலாகாது. ஏனெனில் அது ஊழுக்கு அடிபணிவதாகும். தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்.

இது செல்வம் என்றில்லை. நமக்கு நடக்கும் செயல்களுக்கும் பொருந்தும்.

குறிப்பு: ஆயினும் இதற்காக உடற்பயிற்சி செய்யாது இருப்பதோ அல்லது அளவற்று உணவு உண்பதோ அல்லது வீண் செலவுகள் செய்வதோ அல்லது சோம்பி செயல்கள் செய்யாது இருப்பதோ தவறு. நாம் ஆரோக்கியமாய் இருக்க வாழ்வில் முன்னேற செய்யவேண்டியவனவற்றை செய்யவேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாதவையை எண்ணி நாம் செய்வனவற்றை குறைக்கவோ செய்யாது இருந்தாலோ கூடாது.

ஒப்புமை
ஊழென்பது பொருள் சேராமல் செய்தலுக்கும்,  உரியவை போகாமல் செய்தலுக்கும், நாலடியார், பழமொழி, கம்பராமாயணப் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டலாம்.

நாலடியார் பாடலொன்று,
“மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் 
விடுக்கும் வினையுலந்தக்கால்” (நாலடி 93) என்கிறது.  

கம்பர் மாரீச வதைப் படலத்தில், 
“தருவது விதியே என்றால் தவம்பெரி துடையரேனும் 
வருவது வருநாளன்றி வந்து கைகூடவற்றோ” (கம்ப.மாரீசன் 80) என்பார்.

“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி.103)
“ஈண்டுநீர் வையத்துள்.. நல்லதை
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால்
தீண்டாவிடுதல் அரிது” (நாலடி.109)

”உறற்பால யார்க்கும் உறும்” (நாலடி 117)

பழமொழி நானூறு பாடல் ஒன்று, ஊழால் உரியவை போகாமையை, 

“விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும் உறர்பால 
தீண்டாவிடுதல் அரிது” (பழமொழி 15, 62) என்கிறது. 

நாட்டுங் கால்நெடு நல்லறத்தின்பயன்
ஊட்டுங்காலத்திகழ்வ துறுங்கொலோ” (கம்ப.நிந்தனைப்.34)

இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும் பழமொழிப்பாடல் ஒன்று:
“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.” (பழமொழி 127)


”ஆம் பொருள்கள் ஆகும் அவை யார்க்கும் அழிக் கொண்ணாப்
போம்பொருள்கள் போகும் அவை பொறியின்வகை வண்ணம்” (சீவக.848)

“பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணியுறினும்
திருமுயங்கல் இல்லையெனில் இல்லைபொருளீட்டம்
ஒருமுழமும் சேறலில ரேனும்பொருளூர்க்கே
வரும்வழிவினாயுழந்து வாழ்கதவம் மாதோ” (சிவக.2556)

“ஆகுவ தாகுங்காலத்தழிவதும் அழிந்து சிந்திப்
போகுவதயலே நின்று போற்றினும் போதல் செய்யும்” (கம்ப.கும்பகர்ணன்.165)


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.

மு.வரதராசனார் உரை
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

சாலமன் பாப்பையா உரை
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Thirukkural - Management - Ethical Behavior
Wealth obtained through improper means, ill-gotten wealth, cannot be protected from going away from that person, even if he creates the best possible protections or measures to keep or hoard the wealth with him, predicts Kural 376.

What is not naturally ours cannot be got,
Nor what is, ejected.

On the contrary, wealth obtained through proper means, well-gotten wealth, will remain with him, even if he does not take the protections or measures to keep them with him. Well- gotten wealth remains with him despite his spending recklessly. The implied meaning is that a person who gets wealth through proper means will not squander his wealth. A person who gets his wealth through improper means is always reckless with his wealth.

திருக்குறள்

Annoucement - Ask and Kural Shall Answer - கேள், குறள் பதில் சொல்லும்

வாசகப் பெருமக்களே இதோ ஒரு நற்செய்தி, இத்தளத்தில் ஒவ்வொரு வாரமும் கேள்விகள் மூலம் திருக்குறளில் இருந்து பதில் பெறும் பதிவுகள் இடலாம் என்று எண...