குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]
பொருள்
பரி-தல் - pari- 4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்
பரியினும் - வருந்தினாலும்
ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன்.
ஆகாவாம் - ஆகாது
பால் - குழவி, குட்டிமுதலியவற்றைஊட்டத்தாய்முலையினின்றுசுரக்கும்வெண்மையானநீர்மப்பொருள்; பிணத்தைஅடக்கம்பண்ணினமறுநாள்அவ்விடத்திற்பாலும்நவதானியமும்சேர்த்துத்தெளிக்கும்சடங்கு; மரம்முதலியவற்றிலிருந்துவடியும்நீர்மப்பொருள்; வெண்மை; சாறு; பகுதி; அம்மைமுதலியவற்றிலிருந்துகசியும்சீழ்; பிரித்துக்கொடுக்கை; பாதி; பக்கம்; வரிசை; குலம்; திக்கு; குடம்; குணம்; உரிமை; இயல்பு; ஊழ்; தகுதி; ஐம்பாற்பிரிவு; ஒருமைபன்மைஎன்றஇருவகைப்பாகுபாடு; அகத்திணைபுறத்திணைஎன்றபாகுபாடு; இடையர்குறும்பர்களின்வகை.
அல்ல - இல்லை ; அது மட்டும் அல்ல
உய்த்துச் - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல்; சேர்த்தல்; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்; கொடுத்தல்; அனுப்புதல்; குறிப்பித்தல்; அறிவித்தல்; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்.
சொரியினும் - சொரிதல் - உதிர்தல்; மழைபெய்தல்; மிகுதல்; பொழிதல்; கொட்டுதல்; மிகக்கொடுத்தல்; காண்க:சொறிதல், சுழலுதல்.
போகா - போகாமல் - நீங்காமல்
தம - தமக்கு என்று ஊழால் விதிக்கப்பட்ட செல்வமானது
முழுப்பொருள்
நாம் எவ்வளவு வருந்தி செல்வம் (உடல் ஆரோக்கியம் உட்பட) ஈட்டி வைத்தாலும் அதனை எவ்வளவு பாடுபட்டு காத்தாலும் அது நம்மிடம் தங்கவில்லையென்றால் அதற்கு நமது ஊழ் காரணமாக இருக்கலாம் அல்லது அச்செல்வத்தின் கணிக்க முடியாத இயல்பாகவும் இருக்கலாம். அதுப்போல நாம் எவ்வளவு பாடுபட்டலாம் நாம் வெளியே தள்ளினாலும் நம்மை விட்டு நீங்காத செல்வங்களும் இருக்கலாம். அதற்கும் ஊழ் அல்லது செல்வத்தின் இயல்பாகவும் இருக்கலாம்.
ஆதலால் செல்வம் இழந்தாலோ செயல்களில் தோற்றாலோ அதற்கு நாம் வருந்தி கழிவிரக்கத்தில் உழன்றுக்கொண்டு இருக்க கூடாது. ஏனெனில் ஊழிற் சரணடைவது கோழைத்தனம்.
ஊழின் செயல்பாடுகள் நமக்கு அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஆதலால் ஊழை ஒரு பொருட்டாக எண்ணலாகாது. ஏனெனில் அது ஊழுக்கு அடிபணிவதாகும். தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்.
இது செல்வம் என்றில்லை. நமக்கு நடக்கும் செயல்களுக்கும் பொருந்தும்.
குறிப்பு: ஆயினும் இதற்காக உடற்பயிற்சி செய்யாது இருப்பதோ அல்லது அளவற்று உணவு உண்பதோ அல்லது வீண் செலவுகள் செய்வதோ அல்லது சோம்பி செயல்கள் செய்யாது இருப்பதோ தவறு. நாம் ஆரோக்கியமாய் இருக்க வாழ்வில் முன்னேற செய்யவேண்டியவனவற்றை செய்யவேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாதவையை எண்ணி நாம் செய்வனவற்றை குறைக்கவோ செய்யாது இருந்தாலோ கூடாது.
ஒப்புமை
ஊழென்பது பொருள் சேராமல் செய்தலுக்கும், உரியவை போகாமல் செய்தலுக்கும், நாலடியார், பழமொழி, கம்பராமாயணப் பாடல்கள் சிலவற்றை மேற்கோளாகக் காட்டலாம்.
நாலடியார் பாடலொன்று,
“மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக்கால்” (நாலடி 93) என்கிறது.
கம்பர் மாரீச வதைப் படலத்தில்,
கம்பர் மாரீச வதைப் படலத்தில்,
“தருவது விதியே என்றால் தவம்பெரி துடையரேனும்
வருவது வருநாளன்றி வந்து கைகூடவற்றோ” (கம்ப.மாரீசன் 80) என்பார்.
“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி.103)
“உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா” (நாலடி.103)
“ஈண்டுநீர் வையத்துள்.. நல்லதை
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால்
தீண்டாவிடுதல் அரிது” (நாலடி.109)
”உறற்பால யார்க்கும் உறும்” (நாலடி 117)
பழமொழி நானூறு பாடல் ஒன்று, ஊழால் உரியவை போகாமையை,
”உறற்பால யார்க்கும் உறும்” (நாலடி 117)
பழமொழி நானூறு பாடல் ஒன்று, ஊழால் உரியவை போகாமையை,
“விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும் உறர்பால
தீண்டாவிடுதல் அரிது” (பழமொழி 15, 62) என்கிறது.
“நாட்டுங் கால்நெடு நல்லறத்தின்பயன்
ஊட்டுங்காலத்திகழ்வ துறுங்கொலோ” (கம்ப.நிந்தனைப்.34)
இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும் பழமொழிப்பாடல் ஒன்று:
“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.” (பழமொழி 127)
”ஆம் பொருள்கள் ஆகும் அவை யார்க்கும் அழிக் கொண்ணாப்
இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும் பழமொழிப்பாடல் ஒன்று:
“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல்.” (பழமொழி 127)
”ஆம் பொருள்கள் ஆகும் அவை யார்க்கும் அழிக் கொண்ணாப்
போம்பொருள்கள் போகும் அவை பொறியின்வகை வண்ணம்” (சீவக.848)
“பெருமுழங்கு திரைவரைகள் நீந்திப்பிணியுறினும்
திருமுயங்கல் இல்லையெனில் இல்லைபொருளீட்டம்
ஒருமுழமும் சேறலில ரேனும்பொருளூர்க்கே
வரும்வழிவினாயுழந்து வாழ்கதவம் மாதோ” (சிவக.2556)
“ஆகுவ தாகுங்காலத்தழிவதும் அழிந்து சிந்திப்
போகுவதயலே நின்று போற்றினும் போதல் செய்யும்” (கம்ப.கும்பகர்ணன்.165)
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
மு.வரதராசனார் உரை
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா உரை
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.
மு.வரதராசனார் உரை
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.
சாலமன் பாப்பையா உரை
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.
Thirukkural - Management - Ethical Behavior
Wealth obtained through improper means, ill-gotten wealth, cannot be protected from going away from that person, even if he creates the best possible protections or measures to keep or hoard the wealth with him, predicts Kural 376.
What is not naturally ours cannot be got,
Nor what is, ejected.
On the contrary, wealth obtained through proper means, well-gotten wealth, will remain with him, even if he does not take the protections or measures to keep them with him. Well- gotten wealth remains with him despite his spending recklessly. The implied meaning is that a person who gets wealth through proper means will not squander his wealth. A person who gets his wealth through improper means is always reckless with his wealth.
No comments:
Post a Comment