Posts

Showing posts with the label W - வெண்முரசு

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

  குறள் 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பொருள் அறிது -  உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் அறியாமை  - அறியாத்தன்மை; மடமை கண்டு - கற்கண்டு; நூற்பந்து; கண்டங்கத்தரி; கட்டி; கழலைக்கட்டி; ஓர்அணிகலஉரு; அக்கி; வயல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் -  தன்மை அறிந்து காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. செறி -  நெருக்கம் தோறும் -  தோறு -  ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர்இடைச்சொல் சேயிழை - cēy-iḻai   n. செம்-மை + இழை Woman, as wearing beautiful ornaments;[அழகு திருந்திய அணியுடையாள்] பெண் சேயிழைகணவ (பதிற்றுப். 88, 36).  cēyiẕai   s. Splendid ornaments, நல் லணி. 2. A richly adorned lady, one of the fair sex, பெண். (p.) ...

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

  குறள் 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் [பொருட்பால், குடியியல், பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை. இன்மை -  இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. சிறுமை -  இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; பிறர்மனத்தைவருத்துகை; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை. பெருமிதம் - பேரெல்லை; மேம்பாடு; தருக்கு; உள்ளக்களிப்பு; கல்விமுதலியபெருமைகளில்மேம்பட்டுநிற்கை. ஊர்தல் - நகருதல்; பரவுதல்; தினவுறுதல்; நெருங்குதல்; வடிதல்; ஏறிச்செல்லுதல்; கழலுதல்; ஏறுதல். விடல்  -   விடு, முற்றும் நீங்குகை சமந்தமம் விடல்(கைவல். தத்துவ 9);  ஊற்றுகை (Pouring); குற்றம். முழுப்பொருள்  சாதனைகள் பல புரிந்து பெருமைக்கு உரியவராக இருப்பினும் அதற்காக பெருமிதம் கொள்ளாமல் உள்ளத்தில் களிப்பு கொள...

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

  குறள் 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின் [பொருட்பால், குடியியல், பெருமை] பொருள்  இறப்பு -  அதிக்கிரமம்; மிகுதி போக்கு இறப்பு உலர்ந்தபொருள்; வீடுபேறு வீட்டின்இறப்பு; இறந்தகாலம் இறப்பே - இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் புரிந்த -  புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை போலுமிவ ளின்னல்புரிகின்றாள் (கம்பரா. சூளா. 1). 8. To gaze at,watch intently; உற்றுப்பார்த்தல். பயத்தாலே புரிந்துபார்க்கிறபோது (திவ். திருநெடுந். 21,...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

  குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் [பொருட்பால், நட்பியல், மருந்து] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. நாடி - நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். நோய்  - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம். நாடி - நாடுதல்  - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். அது - அஃது; அஃறிணைஒரு...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

  குறள் 786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். நக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல் நட்பது -  நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு. நட்பு -  சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை. அன்று -  அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல் நெ...

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

Image
குறள் 666 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம். எண்ணிய - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம். எண்ணியாங்கு - எண்ணியப்படி;  தாம் கருதியவாறே எய்துப- எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எண்ணியார் - எண்ணியவர், நினைத்தவர் திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை. திண்ணியர் - செயல்களில் உறுதியும் திண்மையும் ஆகப்பெறின் -  உடையவராக இருப்பின் முழுப்பொருள் முன் குறிப்பு: ( @14:58  https://youtu.be/iQnyTQAmvs4?t=898 ) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயத...