குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
[பொருட்பால், நட்பியல், நட்பு]
பொருள்
முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம்.
நக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்
நட்பது - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்
நெஞ்சத்து - நெஞ்சம் - நெஞ்சு; அன்பு; மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.
நக - நகுதல்- சிரித்தல்; மகிழ்தல்; மலர்தல்; கட்டவிழ்தல்; ஒளிவிடுதல்; புள்ளிசைத்தல்; அவமதித்தல்; தாழ்த்துதல்.
நட்பது - நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு.
நட்பு - சிநேகம்; உறவு; சுற்றம்; நண்பன்; யாழின்நாலாம்நரம்பு; காதல்; அரசாங்கம்ஆறனுள்ஒன்றாகியநட்பரசர்; கையூட்டு; மாற்றரசரோடுநட்புச்செய்கை.
முழுப்பொருள்
மற்றொருவரை நேரில் பார்க்கும் பொழுது சிரித்து பேசி மகிழ்வது மட்டுமே நட்பென்று ஆகாது. மற்றொருவரை கண்ட மாத்திரமே மனதால் மலர்ந்து மகிழ்ந்து உள்ளத்திலும் உதட்டிலும் புன்னகை உண்டானால் அதுவே நட்பாகும்.
புறத்தால் பேசி மகிழ்வது மட்டும் நட்பாகாது. அகத்தால் பேசி மகிழ்வதே நட்பாகும். ஒருவரை கண்டால் கண்டதற்காக ஒரு பொது நாகரீகத்துக்காக பேசுவோர் இருப்பர். ஆனால் உள்ளத்தால் அவர்களை ஏசுவர். அல்லது உள்ளத்தால் விலக்கம் கொள்வர். அது நட்பாகாது.
நண்பனை கண்ட உடன் உள்ளம் உவகை கொள்கிறதா? அதுவே நட்பு. நண்பனை நினைத்த மாத்திரம் உள்ளம் புன்னகை புரிகிறதா? உள்ளம் அவரை காண ஏங்குகிறதா? அதுவே நட்பு.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது. (நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார்.இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான் இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.).
மணக்குடவர் உரை
முகத்தோடு முகமகிழக் கொள்ளும் நட்பு நட்பன்று; மனத்தோடு மனமகிழக் கொள்ளும் நட்பே நட்பாவது.
மு.வரதராசனார் உரை
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.
No comments:
Post a Comment