Skip to main content

Posts

Showing posts with the label W - இனியவன்

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய்

குறள் 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் படர் - செல்லுகை; ஒழுக்கம்; வருத்தம்; நோய்; நினைவு; பகை; மேடு; துகிற்கொடி; படைவீரர்; எமதூதர்; ஏவல்செய்வோர்; இழிமக்கள்; தேமல்; தூறு; வழி; தறுகண்மை படர் - (வி)தொடர், படர்என்ஏவல்.படர் மெலிந்து - மெலிதல் - வலிமைகுறைதல்; உடல்இளைத்தல்; வருந்துதல்; அழிதல்; எளியதாதல்; வல்லினம்தனக்கினமானமெல்லினமாகமாறுதல்; ஓசையில்தாழ்தல். இரங்கல் - அழுகை; நெய்தல் உரிப்பொருள் ஒலி யாழ்நரம்போசை. கரத்தலும் - கரத்தல் - மறைத்தல்; கவர்தல்; கெடாதிருத்தல்; அழித்துமுதற்காரணத்தோடுஒடுக்குதல்; கெடுதல். ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றேன் - செய்யமுடியுமோ இந் - இந்த நோயை - நோய் நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. செய...

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து

குறள் 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு [பொருட்பால், நட்பியல், நட்பு] பொருள் அழிவினவை -அழிவு -  கேடு; தீமை செலவு வறுமை வருத்தம் மனவுறுதியின்மை; தோல்வி கழிமுகம் அழிவு  -  கேடு; தீமை; செலவு; வறுமை; வருத்தம்; மனவுறுதியின்மை; தோல்வி; கழிமுக அழிவின்  - அழிவில் இருந்து அவை  - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம்; புலவர்; நாடகஅரங்கு;  பன்மைச்சுட்டு [ pronoun (அவ்) plural of அது, they, those things.]; அப்பொருள்கள். நீக்கி - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல். ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை உய்த்து - உய்த்தல் -  செலுத்துதல்;  கொண்டுபோதல் ;  சேர்த்தல் ; நடத்துதல்; அமிழ்த்தல்; நுகர்தல்;  கொடுத்தல் ; அனுப்புதல்;  குறிப்பித்தல் ;  அறிவித்தல் ; ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல். ஆறு உய்த்து  -  நல் அற வழ...

ஊடி இருந்தேமாத் தும்மினார்

குறள் 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை  நீடுவாழ் கென்பாக் கறிந்து. [காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்] பொருள் ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல் இருந்தேமா  - இருக்கும் பொழுது தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய் வழியாய் வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல். தும்மு -கிறேன், தும்மினேன், வேன், தும்ம, v. n. To sneeze. 2. To arise, revive, உயிர்க்க. 3. v. a. To emit, let go, leave, விட. (c.) தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர். இந்த பழக்கம் இந்தியப்பழக்கமாக மட்டும் இல்லாமல், மேற்கத்திய நாடுகளிலும், “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” (God bless) என்று கூறுகிறார்கள். இது கலாச்சாரங்களைத் தாண்டி வரும் பழக்கம்தான் தும்மினா...

ஓஒ இனிதே எமக்கிந்நோய்

குறள் 1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்  தாஅம் இதற்பட் டது [காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்] பொருள் ஓ - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல். ஒ - பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து ஓஒ ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு இனிதே! - மகிழ்ச்சியானதே, இனிமையானதே, விருப்பத்திற்கானதே, நன்றானதே எமக்கு -  இந் நோய் - இந்த நோய் செய்த - செய்து கொடுத்த கண் - இந்த கண்களும் தாம் இதற்பட்டது -  உறங்காமல் அழுதுக் கொண்ட இருக்கும்  முழுப்பொருள் தலைவி கூறுகிறாள் தலைவனின் பிரிவால் நான் வாடுகிறேன். துன்ப படுகிறேன். இல்லை இல்லை. அவரை காண முடியாமல் நான் துன்ப படுகிறேன். என்னால் நிம்மதியாக உறங்க முடியவ...

பசந்தாள் இவள்என்பது அல்லால்

குறள் 1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல் [காமத்துப்பால், கற்பியல்,  பசப்புறுபருவரல்] பொருள் பசந்து - நேர்த்தி, Elegance; beauty; attractiveness; fineness பசந்தாயிருத்தல் , v. noun. Being pleasing, attractive, engaging to the sight. பசலை -  அழகுதேமல்; பொன்னிறம்; காமநிறவேறுபாடு; தலைவன் பிரிவால் வேறுபட்ட நிறம்; வருத்தம்; மனவருத்தம்; இளமை; கவலையின்மை; கீரைவகை. 'பசந்தாள் இவள்' - தலைவனின் பிரிவால் தலைவி வருத்தம் கொண்டு உடல் வேறு நிறம் பூண்டது என்பது - என்று கூறுவாட் அல்லால் - மற்றபட்டி ‘இவளைத் - இந்த அழகு தலைவியை  துறந்தார் அவர்’  - விட்டு விட்டு பிரிந்து இந்த வருத்த நிலைக்கு கொண்டு வந்த அந்த தலைவனை என்பார்  இல் - என்று பழிப்போர் யாரும் இல்லையே முழுப்பொருள் இவள் அழகினால் தலைவன் மேல் காமம் கொண்டாள். இப்பொழுது பிரிவைக்கூட தாள முடியாமல் மற்றவர்கள் அறிந்துக்கொள்ளும் அளவிற்கு வாடியுள்ளாள் (தேக நிறம் மாறியுள்ளதாம்). அதாவது பிரிவால் வாடி இருக்கிறாளாம். என்று ஏசூவார்களாம் சுற்றத்தில் உள்ளவர்கள். ஆனால் ...

காமம் விடுஒன்றோ நாண்விடு

குறள் 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் காமம்  -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை விடு  -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள. ஒன்றோ  -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682). நாண்  -  வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண். விடு  -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4...

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே

குறள் 1088 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்  நண்ணாரும் உட்குமென் பீடு [காமத்துப்பால்,  களவியல்,  தகையணங்குறுத்தல் ] பொருள் ஒள் -  adj. Good, excellent, நல்ல. 2. Beautiful, அழகுள்ள. 3. Bright, glitter ing, luminous, பிரகாசமான. 4. Knowing, அறிவுள்ள. 5. Abundant, மிகுதியான. The ள் of this word is changed into ட் and ண் before appropriate letters, whence the nouns ஒட்பம், and ஒண்மை. ஒள்ளழல்கண்ணிற்கால. His eyes emitting bright sparks of fire through rage நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம். நுதற்கு - நெற்றி நுதற்குறி - n. நுதல்³ +.Sacred marks on the forehead; புண்டரம் திலகம்முதலிய நெற்றிக்குறிகள். (திவா.) ஓ  - பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடை...

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

குறள் 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா  என்னல்லது இல்லை துணை [காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்] பொருள் மன்னுயிர் - நிலைபெற்றஉயிர்; விலங்குச்சாதி; மானிடச்சாதி; ஆன்மா. மன்னுயிர் -  மானிடச்சாதி; மிருகசாதி / விலங்குச்சாதி, ஆத்துமா / ஆன்மா, நிலைபெற்றஉயிர்;  மன்னில் உள்ள அனைத்து மானுட மற்றும் மிருக உயிரினங்கள் எல்லாம்   - எல்லாம், முழுதும் துயிற்றுதல் - உறங்கச்செய்தல்; தங்கப்பண்ணுதல். துயிற்றி - துயில், நித்திரை செய்வித்தல் அளித்தல் - காத்தல்; கொடுத்தல் படைத்தல் ஈனுதல் அருள்செய்தல்; விருப்பம்உண்டாக்குதல்; சோர்வைநீக்குதல்; செறித்தல் சொல்லுதல் அளித்து - அளிசெய்யத்தக்கது இரா - இரவு என் - என்னை அல்லது   - தவிர இல்லை - வேறு யாரும் இல்லை இல்லை - உண்டு என்பதன் எதிர்மறை; இன்மைப் பொருளை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று; சாதலை உணர்த்தி ஐம்பால் மூவிடத்திலும் வரும் ஒருகுறிப்பு வினைமுற்று. துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவ...