Posts

Showing posts with the label PublicSpeaking_Diction

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்

குறள் 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. [பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சொல்லுக - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல்லைப் - சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். சொல்லுக சொல்லைப் - நாம் பேச்சில் இடம் பெரும் சொல் ஆனது  பிறிது - வேறானது ஓர் - ஒன்று பிறிதோர்சொல் - வேறொரு சொல்  வெல்லுதல் -  வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். அச்சொல்லை வெல்லுஞ்சொல் - அந்தச் சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல் இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. அறிந்து - அறிதல் - உ...