126 நிறையழிதல்
பால் - காமத்துப்பால் இயல் - கற்பியல் அதிகாரம் - நிறையழிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு குறள் 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் குறள் 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் குறள் 1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும் குறள் 1255 செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று குறள் 1256 செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் குறள் 1257 நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் குறள் 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை குறள் 1259 புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு குறள் 1260 நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் பதிவு வரிசை