Posts

Showing posts with the label Index 117 படர்மெலிந்திரங்கல்

117 படர்மெலிந்திரங்கல்

பால்  - காமத்துப்பால் இயல்  - கற்பியல் அதிகாரம்  -  படர்மெலிந்திரங்கல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் குறள் 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் குறள் 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து குறள் 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் குறள் 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் குறள் 1166 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது குறள் 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் குறள் 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை குறள் 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் நெடிய கழியும் இரா குறள் 1170 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண் பதிவு வரிசை