102 நாணுடைமை
பால் - பொருட்பால் இயல் - குடியியல் அதிகாரம் - நாணுடைமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1011 கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற குறள் 1012 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு குறள் 1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு குறள் 1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை குறள் 1015 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு குறள் 1016 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர் குறள் 1017 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர் குறள் 1018 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து குறள் 1019 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை குறள் 1020 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று பதிவு வரிசை