101 நன்றியில்செல்வம்
பால் - பொருட்பால் இயல் - குடியியல் அதிகாரம் - நன்றியில்செல்வம் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல் குறள் 1002 பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும் மருளானா மாணாப் பிறப்பு குறள் 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை குறள் 1004 எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன் குறள் 1005 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடிஉண் டாயினும் இல் குறள் 1006 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான் குறள் 1007 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று குறள் 1008 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று குறள் 1009 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் குறள் 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து பதிவு வரிசை