Posts

Showing posts with the label Index 087 பகைமாட்சி

087 பகைமாட்சி

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - பகைமாட்சி சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை குறள் 862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு குறள் 863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு குறள் 864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது குறள் 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது குறள் 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும் குறள் 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை குறள் 868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து குறள் 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின் குறள் 870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி பதிவு வரிசை