Posts

Showing posts with the label Index 064 அமைச்சு

064 அமைச்சு

பால்  - பொருட்பால் இயல்  - அமைச்சியல் அதிகாரம்  - அமைச்சு சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்  அருவினையும் மாண்டது அமைச்சு குறள் 632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு குறள் 633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு குறள் 634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு குறள் 635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை குறள் 636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் குறள் 638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன் குறள் 639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் குறள் 640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் பதிவு வரிசை